குருதிக்கொடை ஒன்றும் அவ்வளவு கடினமல்ல!
சகோதரி
அக்கறை - (Sister Concern க்கு அதுதானே அர்த்தம்?) அலுவலகத்தில் திடீரென்று ஒரு கிளை தொடங்க ஒரு பூஜை நடப்பதாக அழைப்பு!
இங்கே உட்கார்ந்து ட்விட்டரை வெறித்துக்கொண்டிருப்பதைவிட
போனால் ஒரு ஸ்வீட் காரமாவது சாப்பிட்டு வரலாமே என்றுதான் போனேன்!
எதிர்பார்த்தது
போல பூஜை முடிந்ததும் கொடுத்த முந்திரிகேக்கும் மிக்ஸரும் வாங்கிக்கொண்டு உட்கார்ந்தபோதுதான் அந்த இளைஞரைப் பார்த்தேன்!
பரபரப்பாய்
அங்கிருந்த நண்பர்களிடம் இன்னும் ஒருவர் வேண்டுமே என்று கேட்டுக்கொண்டிருந்தார்!
க்யூரியாசிட்டி
நாட் ஆல்வேஸ் கில் த கேட் என்பதால்,
"என்ன
விஷயம்?"
"நாலு யூனிட் ரத்தம் வேணும் ஸார், மூணு பேர்தான் இருக்காங்க"
"என்ன
க்ரூப்?"
எதுவா
இருந்தாலும் பரவால்ல, தட்டணுக்கள் பிரித்து எடுத்துக்குங்க!
சரி,
அப்போ நான் வரேன், Donating blood is in my blood!
எந்த ஹாஸ்பிடல்?
.... சார்!
நல்லவேளை!
.... ஆஸ்பத்திரியோன்னு
நினைச்சேன்!
ஏன்
சார் அங்கே ஏதாவது பிரச்னையா?
இல்ல,
அங்க ஸ்டாஃப் நர்ஸ் எல்லாமே சுமார்தான்!
ஸார்,
ப்ளீஸ்! ஒரு வயசுக் குழந்தைக்கு டெங்கு! இப்போ போய் ஜோக் வேண்டாமே!
ஜோக்கா?
.. அடப்பாவி நான்
சீரியஸாத்தான் சொன்னேன்னு நெனச்சுக்கிட்டு
"நீங்க
போங்க, நான் என் வண்டியில வர்றேன்!"
ஃபன்
மால் பக்கத்து ரைட்ல போனா ஆஸ்பத்திரி இருக்கு சார். நாங்க வாசல்ல நிக்கிறோம்!
சரின்னு
ஆஸ்பத்திரிக்குப் போய் இருந்ததிலேயே அழகான ஹவுஸ் சர்ஜன் பொண்ணைப்பார்த்து, “ பிளட் பாங்க் எங்க இருக்கு?”
அழகுக்கும்
அறிவுக்கும் என்னைக்கு ஒத்துப்போச்சு?
“தெரியல
சார்!”
பக்கத்துல
சேச்சிகிட்ட கேட்கப்போனா, அதுக்குள்ளே கூடவந்த அவசரக்குடுக்கை "சார் எனக்குத் தெரியும், பேஸ்மெண்ட்ல இருக்கு!"
அது ஏன் பெரும்பாலான பிளட் பாங்க் பேஸ்மெண்ட்ல இருக்கு? யாருக்காச்சும் தெரியுமா?
ப்ளட்
பாங்க் வாசல்ல தேர் கூட்டம்!
என்னடா
விஷயம்ன்னு கேட்டா, ஒவ்வொரு டெங்கு பேஷண்டுக்கும் லிட்டர் கணக்குல ரத்தம் வேணும்போல!
ஜே
ஜேன்னு கூட்டம்!
அடுத்த
சந்தேகம், ஏன் பெண்கள் அதிகம் ரத்தம் கொடுக்க வர்றதில்ல?
ஒவ்வொருத்தரா
எந்த பேஷண்டுக்குன்னு கேட்டு, ஸ்லிப் கொடுத்தாங்க!
கூட
வந்த பையன் என்னை எங்கேயோ உண்மையாவே வேலை செய்யும்போது பார்த்திருப்பார் போல!
“சார்
பயங்கர பிஸி, ரொம்பநேரம் வெய்ட் பண்ண முடியாது! அவர்கிட்ட மொதல்ல எடுத்திருங்க”!
சாப்பிட்ட
ஸ்வீட், காரமெல்லாம் எப்போதோ கரைந்துபோன நல்ல பசி வேளை!
ஏசப்பரோ,
அல்லாவோ, முருகரோ, நல்ல மனசோட அனுப்பிய நர்ஸ் அத்தனை அழகு!
ரைட்டு!
கையில்
நாலு பக்கத்துக்கு சி ஏ கேள்வித்தாள்
போல ஒரு பேப்பர்! அதில் எங்க தாத்தாவுக்கு டிபி இருந்ததா உட்பட ஆயிரம் கேள்விகள்!
ஏம்மா
என்னைக் கல்யாணமா பண்ணிக்கப்போறீங்க, இத்தனை கேள்வி!
ஃபார்மாலிட்டி
சார்!
ஃபில்
பண்ணிக் கொடுத்ததில் ஆயிரம் சந்தேகம் வேறு!
வெய்ட்
64 கிலோன்னு போட்டிருக்கீங்க, இங்க செக் பண்ணீங்களா?
இல்லை.
எனக்குத் தெரியும்!
வேரியேஷன்
வராதா?
மிஸ்,
மிஸ்தானே நீங்க? Your high neck uniform reveals nothing much to find! Do one thing,
வேணும்னா
காலைல சாப்பிட்ட தோசை அரைக்கிலோ சேர்த்து அறுபத்து நாலரை கிலோ போட்டுக்கோங்க!
தப்புதான்
சாமி, வாங்க, பிளட் எடுக்கலாம்!
அதுக்கு
முன்னாடி குரூப்பிங் பண்ணணுமே?
வேண்டாம்,
ஒரு நாளைக்கு ஒரு பங்ச்சர்தான் அலௌட்!
சார்,
ப்ளீஸ் விளையாடாதீங்க, இட் ஈஸ் மேன்டேட்டரி!
ஓகே.
குத்துங்க தாயே!
அந்த
விரல் இல்லை! நடுவிரல்!
பொண்ணுகிட்ட
நடுவிரல் காமிக்கறது நல்ல மேனர்ஸ் இல்லையே!
அதுனாலதான் சுட்டுவிரலை காட்டினேன்!
ஏதாவது
சொல்லிடப்போறேன்! உள்ளே வந்து உட்காருங்க!
இந்த
பாலை கையில் பிடிங்க, மேற்கொண்டு நானும் எதுவும் சொல்லலே, நீங்களும் கொஞ்சம் வாய மூடிக்கிட்டு சாஞ்சமாதிரி படுங்க! இன்னும் ஆறு டோனர்கிட்ட ப்ளட் எடுக்கணும்! ப்ளீஸ்!
ஒருவழியா
குருதிக்கொடை முடிஞ்சா,
போய்டாதீங்க, அந்த சேர்ல உட்காருங்க!
தயவுசெஞ்சு
எனக்கு இந்த பிஸ்கட் ஒன்னு போதும். பாக்கெட் ஜூஸ் நான் குடிக்கறதில்ல!
ஃபுல்லா
சாப்பிட்டுட்டுத்தான்
போகணும்! இது ரூல்ஸ்!
பசி
வேளைல என்னமோ பிரியாணி குடுத்தமாதிரி விருந்தோம்பல் வேற, சாப்பிட்டுட்டுத்தான் போகணும்ன்னு!
ஏன்
நீங்கதான் வாங்கிக்கொடுங்களேன்!
வாங்கித் தர்றேன், வாங்க
போலாம்,
டூட்டி
இருக்கு, இன்னொரு நாளைக்கு
போலாம்! பேச்சு மாறமாட்டீங்களே?
பொண்ணுங்ககிட்ட பேச்சு மாறும் பழக்கம் பரம்பரைக்கே கிடையாது! வாங்க, என்டே கேரளம் போலாம்!
ஏன்,
அங்கே என்ன விசேஷம்?
சாப்பாடு சுமார்ன்னாலும் சர்வ்
பண்ற பொண்ணுங்க அழகா இருக்கும்!
சிரிச்சுக்கிட்டே
கும்பிடுபோட்டு முதுகில் கை வைத்து
வெளியே தள்ளுமுன்,
“அடிக்கடி வாங்க!”
அது சரி!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக