7.3.2018. புதன்!
காலை
அலுவலகம் வரும் வழியில் மருத்துவமனையில் மனைவியையும் துணைக்கு தம்பி மனைவியையும் விட்டு வரும்போது ரவி நினைக்கவில்லை இந்த நாள் இப்படிப் போகும் என்று!
இதற்கு
பிள்ளையார் சுழி மூன்று மாதங்களுக்கு முன்னால்!
அலுவல்
வேலையாக திருப்பூர் போயிருந்த ஒரு மாலையில் மனைவியிடமிருந்து ஃபோன் வந்தது!
"எனக்கொரு
சின்ன ஆக்சிடெண்ட் ஆகிடுச்சு, பெரிய காயம் ஒன்றும் இல்லை, வேலையை சீக்கிரம் முடித்துக்கொண்டு …… ஆஸ்பத்திரிக்கு வாங்க!"
வந்து
பார்த்தபோது, ஆஸ்பத்திரி ரிஷப்சனிஸ்ட்
"அவங்களை லேபர் வார்டுக்கு கொண்டுபோயிருக்காங்க!"
"அட,
நான் அப்பா ஆகப்போறேனா!"
சின்னதாக
ஒரு அடி வைத்த ரிஷப்சனிஸ்ட் " உங்களுக்கு புத்தி போகுது பாரு! காயத்தை க்ளீன் பண்ண போயிருக்காங்க!"
"இப்போ
நான் என்ன பண்ண? சினிமால வர்ற மாதிரி லேபர் வார்டு வாசல்ல போய் உலாத்தவா?"
"ஒன்னும்
வேண்டாம், ரூம் நெம்பர் 204ல வெயிட் பண்ணுங்க,
ஆல்ரெடி உங்க சிஸ்டர்ஸ் ரெண்டுபேரும் வந்துட்டாங்க!"
பையனை
ஸ்கூலில் இருந்து கூட்டி வரும்போது ஒரு பைக் இடித்துவிட்டு நிறுத்தாமல் போய்விட்டதும், பையனுக்கு ஒன்றும் அடி இல்லை என்பதும் உபரி தகவலாய் தெரிந்துகொண்டு ரெண்டு மணிநேரம் காத்திருந்தபோது,
"சிசேரியன்
போல, அதுதான் லேட்!"
காலில்
பெரிய கட்டோடு ஸ்ட்ரெச்சரில் வந்த மனைவிக்கு அரை மயக்கத்தில் கொழந்தை எங்கடி என்று கேட்டது புரியவில்லை பாவம்!
"ஏன்
இவ்வளவு நேரம் சிஸ்டர்?"
"ம்ம்!
எட்டு தையல் போட்டிருக்கு!"
எம்ப்ராய்டரியா
போட்டீங்க, இவ்வளவு நேரம்?"
கடந்த
சில நாட்களில் நன்கு பரிச்சயமாகியிருந்த (அந்தக்கதை இப்போது வேண்டாம்!) நர்ஸ், “உங்களுக்கு வேற வேலை என்ன”ன்னு சிரிச்சுக்கிட்டே போய்ட்டாங்க!
மறுநாள்
டிஸ்சார்ஜ் பண்ணும்போது டாக்டர் சொன்னார்!
"எனக்கென்னவோ
இந்தக் காயம் கூடும்ன்னு தோணலை! ஒருவாரம் பார்ப்போம்! இம்ப்ரூவ்மெண்ட் இல்லைன்னா க்ராஃப்டிங் பண்ண வேண்டியிருக்கும்!"
ஒரு
மாசம் வரைக்கும் காத்திருந்தும் அடமாய் ஆறமறுத்த காயத்துக்கு தயக்கங்களை மீறி க்ராஃப்டிங் பண்ண ஒப்புக்கொண்டபோது காயம் இன்னும் கொஞ்சம் பெரியதாகி இருந்தது!
ஒருவழியாக
எல்லாம் முடிந்து, ஒருமாதம் தினசரி வந்து கட்டு போடும் நர்ஸ் வராத ஒரு சுபதினத்தில், ரவியே அந்த வேலையை செய்யும்போது பார்த்தால், இன்னும் அகற்றப்படாத ஒரு ஸ்டேப்ளர் பின் காயத்தில்!
மறுநாள்
மருத்துவமனைக்குப் போய் செக் பண்ணியதில் இரண்டு பின்களை எடுத்துவிட்டு, கட்டுப்போட்டு அனுப்பியபோதே மனைவியின் புலம்பல் "என்னங்க இவ்வளவு கேர்லெஸ்ஸா இருந்திருக்கறாங்க! நாம் ஒரு எக்ஸ்ரே எடுத்து பாத்துடலாம்!"
“அதுதான்
பின்ன எடுத்தாச்சில்ல, சும்மா ஏதாவது இமாஜின் பண்ணிக்காதே!”
இருந்தும்
ஒரு சின்ன உறுத்தலில் ஆறாம் தேதி மாலை எக்ஸ்ரே எடுத்து பார்த்தால், உள்ளே
இன்னும்
நாலு
ஸ்டேப்ளர்
பின்!!
அதை
எடுத்துவிடுவதாய் டாக்டர் சொன்னதால், ஏழாம் தேதி காலை மனைவியை ஆஸ்பத்திரியில் விட்டுவிட்டு, ஆபீஸில் கலெக்டர் வேலை பார்க்க வந்தாச்சு!
பதினோரு
மணிக்கு ஒரு போன் மனைவியிடமிருந்து!
" டாக்டர்
பின் ஒன்னும் பிரச்னை இல்லை, எலும்பு வீங்கியிருக்கு! உடனே CT ஸ்கேன் MRI ஸ்கேன்
ரெண்டும் எடுத்து பார்க்கச் சொல்றாரு!”
“:இப்போ
எங்கே இருக்கே?”
“வீட்டுக்கு
வந்துட்டோம்!”
“சரி
விடு, அப்புறம் பார்த்துக்கலாம்!”
மீட்டிங்
அவசரத்தில் ஃபோனை கட் பண்ணிவிட்டு ஓட, அடுத்த சில நிமிடங்களில் தம்பி மனைவியிடமிருந்து ஃபோன்!
“மாமா,
நான் அக்காவுக்கு தெரியாம மாடிக்கு வந்து பேசறேன்! டாக்டர் எலும்புல கேன்சரா இருக்கும்ன்னு சந்தேகப்படறாரு!
என்னை
தனியா கூப்பிட்டு உடனே போய் ஒரு ஆர்த்தோ சர்ஜனை பார்த்துட்டு ஸ்கேன் எடுக்க சொன்னாரு!”
ஒரு
நிமிடம், காதில் கேட்டது என்ன என்றே புரியாமல் திகைத்துப்போனான் ரவி!
மறுமுனையில்
தம்பி மனைவியின் விசும்பல் மட்டும்!
விற்பனை
பிரதிநிதிகள், எம்டி, சேர்மேன் என்று ஆல்ரெடி மீட்டிங் ரூமில் கூடி, ரவிக்காக வெயிட்டிங்!
“சரி,
நீ அவளை கூட்டிக்கிட்டு ஆர்த்தோ கிட்ட போ, நான் மீட்டிங் முடிச்சுட்டு கால் பண்றேன்!”
மீட்டிங்கில்
என்ன நடந்தது என்பது மனசில் ஒட்டவே இல்லை!
அப்படி
ஏதாவது ஒன்று என்றால் என்ன செய்வது?
இத்தனை
வருடமும் கிண்டலும் கேலியும் நையாண்டியுமாக இயல்புப்படி வாழ்க்கையை ஓட்டியபின் இது என்ன புது விபரீதம்!
எத்தனை
கொடூரமான இடையூறுகள் வந்தபோதும் தாண்டிவந்த மனது, இந்த சேதியை கொஞ்சமும் ஏற்றுக்கொள்ள மறுத்து சண்டித்தனம் பண்ணியது!
இடையே
ஒரு ஃபோன் " ஆர்த்தோவும் அப்படித்தான் சந்தேகப் படறார்! இன்னும் அக்காகிட்ட சொல்லலை! எனக்கு ரொம்ப பயமா இருக்கு! ஸ்கேன் எடுக்க உள்ளே கூட்டிப் போயிருக்காங்க!"
எப்படா
முடிஞ்சு தொலையும் இந்த மீட்டிங்!
முடிந்து
வெளியே வரவர மனைவி ஃபோனில்!
“வீட்டுக்கு
வந்துட்டோம்ங்க! ஸ்கேன் ரிப்போர்ட் வர ஏழு மணி
ஆகும்! நீங்க நேரா போய் வாங்கிக்கிட்டு அப்படியே டாக்டரை பார்த்துட்டு வாங்க! இப்போ வந்து ஒரு பிரயோஜனமும் இல்லை!”
“எதுக்கு
ஸ்கேன் அப்படின்னு உன்கிட்ட சொன்னாங்களா?”
“இன்னும்
எத்தனை பின் இருக்குன்னு பார்க்கத்தான்! ஏன்!”
ஆண்டவா!
நன்றி! இந்த அளவு கருணையாவது இருக்கிறதே உனக்கு! நல்லவேளை அவளுக்கு தெரிஞ்சிருந்தா பயத்திலேயே ஏதாவது ஆகியிருக்கும்!
கிழிந்த
துணியாய் சேரில் சரிந்தான் ரவி!
முள்ளின்மேல்
கழிந்த அடுத்த ஐந்து மணி நேரங்கள்!
இது
எந்த ஜென்மத்தில் செய்த தப்புக்கு தண்டனை?
இனி
என்ன செய்யப்போகிறோம் நானும் பிள்ளைகளும்?
இத்தனை
வருட தாம்பத்தியத்தில் வெளிப்படையாக எதையும் காண்பித்துக் கொண்டதில்லை!
வெறும்
கேலியும் கிண்டலும்தானே ஒழிய ஒருநாளும் கொஞ்சமும் ரொமான்டிக் டயலாக் எதுவும் பேசியதாய் நியாபகமே இல்லை!
வாழ்க்கை,
குடும்பம் இதெல்லாம் வெளியே தெரியாமலே ஒருவரை மற்றொருவர் எவ்வளவு சார்ந்து இருக்க வைக்கிறது!
திடீரென்று
இப்படி ஒரு செய்தி மொத்த குடும்பத்தையும் எப்படி குலைத்துப் போடும்?
“உன்னை
மாதிரி யாராலும் இவ்வளவு தைரியமாக இருக்க முடியாது!”
சொந்தத்தில்
அனைவரும் ரவியிடம் அடிக்கடி
சொல்லும் வார்த்தை!
அவன்
இயல்பே அப்படி!
எதையும்
விளையாட்டாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் - கடவுள் நம்பிக்கை உட்பட!
அழுதுகொண்டோ
வருத்தப்பட்டோ உட்கார்ந்தால் மட்டும் என்ன சாதிக்கப்போகிறோம்? வருத்தத்தை வெளிக்காட்டுவதால் யாருக்கு லாபம்?
அதேதான்
கோவிலுக்குப் போகும்போதும்!
எனக்கென்ன
வேணும்ன்னு தெரியலைன்னா அது என் கடவுள் இல்லை! ஏதாவது கொடு என்று கேட்க நான் கோவிலுக்கு வரவில்லை! சும்மா ஒரு மாறுதலுக்கு வரும் இடங்களில் ஏனோ எனக்கு கோவிலைப் பிடித்திருக்கிறது! தட்ஸ் ஆல்!
எப்போதாவது
மருதமலை போக நேரும்போதுகூட ஏதும் வேண்டியதில்லை!
உன்னால
ஆனதை நீ பாரு, என்னை
நான் பார்த்துக்கொள்கிறேன் என்று ஒரு மிதப்பாகவே முருகனை வேடிக்கை பார்த்து வருவதுதான் வழக்கம்!
ஒரு
சாதாரண மாம்பழத்துக்கே அத்தனை அடம் பிடித்த முருகன் நம்ம attitude பிடிக்காமல்
இப்படி பண்ணித் தொலைத்துவிட்டானோ?
இல்லை,
சாயிபாபா கோவிலுக்கு போனபோதெல்லாம் பெரும்பாலும் பிரசாதத்தை (சாம்பார் சாதம்) வாங்கிக்கொண்டு வெளியேவே உட்கார்ந்துகொள்வதால் வடக்கத்திய சாமி பழிவாங்கிவிட்டதா?
போதாக்குறைக்கு
முன் ஜென்மத்தில் செய்த தவறுகள் எல்லாம் வரிசை கட்டி நிற்க ஆரம்பித்தது மனசில்!
ரெண்டாங்கிளாஸ்
படிக்கையில் மிட்டாய் பங்கீட்டில் காக்கா கடி கடிக்கையில் வாய்க்குள்ளேயே ஒரு துண்டை ஒளித்துவைத்துக்கொண்டு கிரிஜாவை ஏமாற்றியது,
மாடிப்படி
வளைவிலும் தண்ணீர் தொட்டிக்குள்ளும் அறியாப்பருவத்தில் செய்த சின்ன அத்துமீறல்,
பள்ளிக்கூடத்தில்
தமிழய்யா பெண்ணை சைட் அடித்தது,
பக்கத்து
வீட்டு மலையாளியை திருட்டுப் பார்வை பார்த்தது,
ஆபீஸ்
ரிஷப்சனிஸ்ட் கூட சின்னச்சின்ன ஃப்ளிர்ட்,
போனவாரம்
உழவர் சந்தைக்குப் போகையில் கீரைக்காரி இடுப்பை கொஞ்சநேரம் உற்றுப்பார்த்தது,
இதெல்லாம்
இத்தனை பெரிய தண்டனைக்குரிய குற்றமா என்ன?
கருடபுராணத்தில்
வருவதெல்லாம் உண்மைதானா?
ஆண்டவா,
அப்படி எதுவும் இல்லை என்று ரிசல்ட் வரட்டும், இனி கோவிலுக்கு வந்தால் உனக்கொரு கும்பிடு போட்டுவிடுகிறேன்!
இனி யாரிடமும் கோபமாக எதுவுமே பேசமாட்டேன்!
'அதற்குமேல் இறைவனிடம் ஏதும் வேண்டிக்கொள்ளவும் தோன்றவில்லை!
எப்போது
மணி ஏழாகும் என்று ஸ்கேன் சென்டருக்கு ஓடினால்,
“ரிப்போர்ட்டில்
ஏதோ
பிரச்னை,
டாக்டர்
பார்த்துக்கொண்டிருக்கிறார்!
அரைமணிநேரம்
ஆகும்
வெய்ட்
பண்ணுங்க!”
இருந்த
கொஞ்ச நம்பிக்கையும் அந்த வாக்கியத்தில் தொலைந்துபோக, இடிந்துபோய் உட்கார்ந்துவிட்டான்!
ஏறத்தாழ
செத்துப்போய் உட்கார்ந்திருந்த முக்கால் மணி நேரம்!
“ரிப்போர்ட்
வந்துடுச்சி! இந்தாங்க!”
உலுக்கப்பட்டு
எழுந்த ரவி,
“ஒரே
ஒரு நிமிடம் டாக்டரை பார்க்கலாமா ப்ளீஸ்!”
“சாரி
சார் அவர் பிசியா இருக்கார்!”
“ஒரே
ஒரு கேள்வி கேட்கணும், ப்ளீஸ்!”
ரவி
முகத்தைப் பார்க்க என்ன தோன்றியதோ,
“கொஞ்சம்
வெய்ட் பண்ணுங்க!”
உள்ளே
போன ரிஷப்சனிஸ்ட் பின்னாடியே வெளியே வந்தார் ரேடியாலஜிஸ்ட்!
“எஸ்?”
“டாக்டர்,
ஐயம் ரவி, சார்ட்டர்ட் அக்கௌன்டன்ட்!”
படிப்பைச்
சொன்னதில் ஒரு சின்ன மரியாதை!
“உள்ளே
வாங்க!”
“டாக்டர்,
எனக்கு உங்கள் நேரத்தை விரயம் செய்ய ஆசை இல்லை, ஒரேயொரு கேள்வி!”
“கேளுங்க!”
“ரிப்போட்ர்ல
ஒன்னும் பிரச்னை இல்லையே?”
உதடு
துடிக்க, குரல் நடுங்குவது ரவிக்கு துல்லியமாய் புரிந்தது!
“இல்லை,
ஏன்?”
“இல்லை
டாக்டர், இது.. இது, கேன்சர்னு ..”
அபசல்யூட்லி
நோ! இது வெறும் டெபாசிஷன் ஆஃப் ஃபேட்!
சூழல் மறந்து,
இடம்
மறந்து,
தான்
ஒரு
ஆண்
என்பதை
மறந்து,
பல ஆண்டுகளுக்குப்பின்
வெடித்து அழுதான் ரவி
No comments:
Post a comment