இணைய
உடன்பிறப்புகளின் உண்மை நோக்கம் என்ன?
தங்கள்
புகழ் வெளிச்சத்தை அரசியல் நுழைவுக்கு துருப்பு சீட்டாக நடிகர்கள் பயன்படுத்துவது எனக்கு உவப்பில்லை!
ஆனால், நடைமுறையில் நடிகர்கள் அரசியலுக்கு வருவது தமிழகத்துக்குப் புதிதில்லை!
இப்போது
ஆளும் கட்சியும், அதற்கு முன் ஆண்ட கட்சியும் வெள்ளித்திரை வெளிச்சம் இல்லாவிடில் இவ்வாவு தூரம் துளிர்த்திருக்கவே முடியாது!
1967 ஜனவரி
மாதம் எம் ஜி ராமச்சந்திரன் குண்டடி பட்டு கழுத்தில் கட்டோடு ராயப்பேட்டை மருத்துவமனையில் இருந்த கோலம் தமிழகத்தின் பட்டி தொட்டியிலெல்லாம் போஸ்டராகி திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு 137 தொகுதிகளை பெற்றுத் தந்த ஆரம்பம் முதல்,
1996ல்
ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்ற விமர்சனம் 173 தொகுதிகளை வாரித்தந்தது வரை நடிகர்களை மிகச் சரியாக உபயோகித்துக்கொண்ட கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்!
இன்று
(சில) நடிகர்கள் (மட்டும்) அரசியலுக்கு வருவதை அந்தக் கட்சியே எதிர்ப்பது ஆச்சரியம் இல்லை!
காலம் எல்லா கோணங்களையும் பார்வைகளையும் மாற்றவல்லது! ஆனால் அதில் வெளிப்படும் வன்மம் எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது!
வரலாறு
அவ்வளவு சீக்கிரமாகவே மறந்துபோகும் விஷயமல்ல நண்பர்களே!
முத்தமிழ்
வித்தகருக்கும் ஸ்டாலினுக்கும் தெரியும் 1996ல் ஒரு ஒற்றைவரிப்
பேட்டி எத்தனை முறை திமுக விளம்பரங்களில் இடம்பிடித்ததென்று!
இன்று
அநாகரீகமாகப் பேசுவோருக்கு தலைமையிடம் சாதிக்க ஏதாவது இருக்கலாம்!
அதற்குமுன்
திருக்குறளின் பதினோராவது அதிகாரம் செய்ந்நன்றியறிதல். அதற்கு கலைஞரின் உரையை மட்டுமாவது கஷ்டப்பட்டு படித்துவிட முயலுங்கள்!
எம்ஜியார்
விஷயத்தில், ஜெயா விஷயத்தில், உங்கள்
ஆத்திரம் என்ன விளைவை ஏற்படுத்தியது என்ற வரலாற்றை உங்கள் கட்சியின் மூத்த உறுப்பினர்களிடம் கொஞ்சம் கேட்டுத் தெளிவு படுத்திக்கொள்ளுங்கள்!
ஸ்டாலினுக்கு
இப்போது காலம் கனிந்திருக்கிறது! குட்டிகளின் குரைப்பு அவரை பாதிக்கவேண்டாம்!
1984 சட்டசபை
தேர்தலின்போது நடந்த சில நாடகங்களை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்திப் பார்ப்போமா?
இப்போது
நடக்கும் கேரக்டர் அசாசினேஷன் முயற்சிகள் எல்லாம் நமக்கு எவ்வளவு பழக்கப்பட்ட பழைய உத்திகள் என்பது பாவம் இன்றைய இணையதள அறிஞர்களுக்கு தெரியாது!
ஏனெனில்
அதில் 90 விழுக்காட்டினர் அப்போது பிறந்திருக்கவே மாட்டார்கள்! ஆனால், மூத்த கழகத் தோழர்களிடம் சற்றே கேட்டு வரலாற்றுத் தேர்ச்சி பெற்றிருக்கலாம்!
டிசம்பர்
24 1984 தேர்தல் தேதி!
அக்டோபர்
31ம் தேதி இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்படுகிறார்!
அப்போது
எம்ஜியார் அமெரிக்காவில் ப்ரூக்ளின் மருத்துவமனையில் சிறுநீரகக் கோளாறு காரணமாக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்!
நாடெங்கும்
அனுதாப அலை! தமிழகத்தில் அது உச்சத்தில்!
இப்போதுபோல்
உடனடி, நேரடி ஒளிபரப்பு வசதிகள் ஏதும் இல்லாத காலம்!
எம்ஜியார்
நலமுடன் இருப்பதாக அதிமுக பிரச்சாரம் செய்கிறது!
இல்லை, அவர் இறந்துவிட்டார் என்று திமுக எதிர் பிரச்சாரம்!
வேறு
வழியின்றி, அதை நிரூபிக்க அதிமுக சில புகைப்படங்களை வெளியிடுகிறது!
அன்றும்
கீழ்மையான முயற்சியைத்தான் கையில் எடுத்தது திமுக!
அந்தப்
படங்கள் போலி என்று நிரூபிக்க, மாண்டுபோன இந்திரா காந்தி எம்ஜியாரை சந்திப்பதுபோல் ஒரு புகைப்படத்தை முரசொலி வெளியிட, விளைவு எதிர்மறையானது!
அப்போது
விரக்தியில் கலைஞர் ஒரு அபத்தமான பிரச்சாரத்தை மேற்கொண்டார்!
எம்ஜியார்
மறைந்துவிட்டார்! அதிமுக அதை மறைத்து நாடகம் ஆடுகிறது என்றவர்,
திடீரென்று,
“அப்படி
என் நண்பர் உயிரோடு திரும்பிவந்தால், நானே அவர் கையில் ஆட்சியை ஒப்படைத்துவிடுகிறேன்! அவர் வரும்வரை என்னை ஆட்சி செய்ய அனுமதித்து எனக்கு வாக்களியுங்கள்!” என்று
கெஞ்ச ஆரம்பித்தார்!
மக்கள்
132 தொகுதிகளை எம்ஜியாருக்கும் வெறும் 24 தொகுதிகளை அவரது நண்பருக்கும் கொடுத்தார்கள்!
அதன்பிறகு
கலைஞருக்கு முதுமையோடு முதிர்ச்சியும் வந்தது!
எம்ஜியார்,
ஜெயலலிதாவை விட கலைஞரே மேல் என்ற நிலைப்பாட்டில் எப்போதும் இருந்த என்போல் நடுநிலைவாதிகளை அது மெதுவாக திமுகவை ஆதரிக்கும் நிலைக்கு இட்டுச் சென்றது!
ஸ்டாலினின்
தெளிந்த, நிதானமான நிலைப்பாடுகள்,
அவரது
நாற்பது ஆண்டுகால அயராத உழைப்பு,
சுற்றியிருந்த
எல்லோர் மீதும் சுமத்தப்பட்ட ஊழல் களங்கத்தின் நிழல் கூட தன்மீது அண்டவிடாத அரசியல்
என,
இன்றைய
தமிழக முதல்வர் வேட்பாளர்களில் கட்சி அபிமானம் தாண்டி யோசிக்கத் தெரிந்த அனைவரின் விருப்பமாக ஸ்டாலின் வளர்ந்துவருவது எதிர்க்கட்சிகளை உறுத்தியது பிழை இல்லை!
ஆனால்
அவரது இணையத் தொண்டர் படைக்கு ஏன் உறுத்தியது என்றுதான் புரியவில்லை!
கடந்த
சில நாட்களாக ரஜினி என்ற தனி மனிதர் மேல் அவர்கள் வாரி இறைக்கும் சேறும், அதற்காக அவர்கள் இறங்கும் தரமும் பலரையும் முகம் சுளிக்க வைக்கிறது!
ஒருவேளை,
கோபாலபுரத்துக்கு ரஜினியின் கடைசி விசிட்டின்போது ஸ்டாலினின் உடல்மொழியும் முகபாவமும் இவர்களுக்கு பச்சைக்கொடி காட்டியதோ,
அல்லது
எத்தனைதான் நாகரீக வேடமிட்டாலும், தாங்கள் இன்னும் வீரபாண்டியார், ஈரோடு ராஜா போன்றவர்கள்தான் என்று நமக்கு உணர்த்தும் முனைப்போ தெரியவில்லை!
திமுக
என்றால் அராஜகம் என்ற பழைய முகத்தை புதுப்பித்துக்கொள்ளும் ஆவல் காரணமாகவும் இருக்கலாம்!
தேவையே
இல்லாமல் ரஜினி பேசினாலும், பேசாவிட்டாலும் இவர்கள் சலங்கை கட்டி ஆட ஆரம்பித்து இப்போது
அது எல்லா எல்லைகளுக்கும் கீழே போய்விட்டது!
மெண்டலான்,
சொட்டையன் என்று ஆரம்பித்த நாகரீகம் இன்று ராதிகா ஆப்தே சொல்வதுரஜினியைத்தான் என்று தீர்ப்பெழுதும்வரை கொண்டு சென்றிருக்கிறது!
எதற்காக
இந்த பதட்டமும் பயமும்?
அவரை
உதாசீனப்படுத்துவது தானாக அவரை இன்னொரு சீமான், சரத்குமார் போல் ஆக்கியிருக்கும்!
இன்னும்
அரசியலுக்கே வராதவர் மீது அனுதாபம் ஏற்படுத்த எதற்காக இந்த வீண் முயற்சி?
ஒருவேளை,
அவர்கள் அழகிரியின் இணைய ஸ்லீப்பர் செல்களோ என்பதை முதலில் ஸ்டாலின் கண்டுபிடிக்கட்டும்!
தாங்கள்
கல்லெறியும் முன் கண்ணாடி வீட்டுக்குள் இருப்பதை ஒருமுறை உணர்ந்துகொள்ளட்டும்!
கஷ்டப்பட்டு
ஸ்டாலின் கட்டமைத்திருக்கும் நாகரீக அரசியல் பிம்பத்தை உடைப்பது நிரந்தரமான தற்கொலைக்கு சமம்!
இலாகா
இல்லாத ஒற்றை மந்திரி பதவி எம்ஜியாரை காலத்துக்கும் கலைஞர் காலடியில் வைத்திருந்திருக்கும்!
ஒருநாள்
பொறுமையாக இருந்திருந்தால் ஜெயலலிதா தானாக ராஜினாமா கடிதத்தை வீசி எறிந்துவிட்டு அரசியலை விட்டே விலகியிருப்பார்!
கலைஞரின்
பிடிவாதமும் அவசர புத்தியும் அவருக்கும் தமிழக மக்களுக்கும் இழைத்த கொடுமையை இன்று இவர்கள் ஸ்டாலினுக்கு உண்டாக்கத் துடிக்கிறார்கள்!
ஸ்டாலின்
விழித்துக்கொள்ளாவிடில்
இந்தக் கொள்ளிகள் அவரை எரித்துவிட்டே ஓயும்!
No comments:
Post a comment