புதன், 13 ஜூன், 2018

ரீமேக் ஆஃப் 16 வயதினிலே! - எ ஃபிலிம் பை பாரதிராஜா!அறுபத்தாறு வயதினிலே!


"இன்னும் எத்தனை நாட்களுக்குத்தான் நீட்டிய மைக்குக்கு முன்னால் போராடிக்கொண்டே இருப்பது, பேமெண்ட் வேறு முன்புபோல வருவதில்லை! என்ன செய்வது, சே வாட் டு டூ!"

தான் உருவாக்கிய மண்ணின் மைந்தன் சூப்பர்ஸ்டார் கனோஜிடம் புலம்பிக்கொண்டிருந்தார் சாரதி ராஜா!

அப்போது திடீரென்று ஃபோன் அடிக்க,

சாரா: யப்பா சீ ஹூ தட் இஸ், யாருன்னு பாரு!

கனோஜ்: அப்பா, சைக்கா ப்ரொடக்சன்ல இருந்து பேசறாங்க!

சாரா: எஸ், சாரதி ராஜாதான் ஸ்பீக்கிங்! என்னது, 16 வயதினிலே ரீடேக் பண்ணனுமா, டைட்டில்  66 வயதினிலேவா
யாரு, அதே நிமலும் கஜினியுமா?
ஒய் நாட், நல்லா பண்ணலாமே
எஸ், வீ கேன் டூ!
சரி, பத்து மணிக்கு வந்துடறேன்
என்னது, நிமலும் கஜினியும் வர்றாங்களா, ஓகே, அவங்க என் இனிய பசங்கதானே வரட்டும்!

கனோஜ்: அப்பா, எனக்கு ஒரு ரோல் குடுப்பா, எத்தனை நாளைக்கு நானும் சும்மாவே இருக்கட்டும்!

சாரா: போடா நீ ஒரு வேஸ்ட் லோன், தண்டக்கடன்! குருவம்மா சாகாம இருந்தா, அதுக்கு உன்னை ஜோடியா போடலாம்! வேற எதுக்கும் நீ லாயக்கு இல்லை! யூ ஆர் மிஸ்ஃபிட்!

சொல்லிக்கொண்டே காரை எடுத்துக்கொண்டு சைக்கா ஆஃபீஸ்க்கு போக, 
வாசலில் நின்று கை கூப்பி வரவேற்கிறார் கஜினி!


கஜினி: வாங்க ஜி! நீங்க இந்தப்படம் பண்ண ஒத்துக்கிட்டதுக்கு மகிழ்ச்சி!

சாரா: வாட் கஜினி, நீ நம்ம பையன்! எஸ், யூ ஆர் அவர் பாய்! யூ ஆர் கோயிங் டு வின் எவெரிதிங்! நீ நான் வளர்த்த தமிழ்ப் பிள்ளை!

அப்போது வேகமாக வந்து இறங்குகிறார் நிமல்!

நிமல்: அப்போ நான் யாரு? இப்படித்தான் காந்தியை ..

சாரா: யப்பா, ரொம்பநாளைக்கு அப்புறம் ஜீன்ஸும் டீ சர்ட்டும் போட சான்ஸ் கிடைச்சிருக்கு, ஆட்டைய கலைச்சறாதீங்க சாமிகளா! யு போத் ஆர் மை ஐஸ்! வாங்க உள்ள போவோம்!

இருவர் தோளிலும் கை போட்டுக்கொண்டு உள்ளே நுழைகிறார் இயக்குனர் உச்சி!

சைக்கா மேனேஜர் மூவரையும் வரவேற்க, டிஸ்கஷன் ஆரம்பமாகிறது!

சை.மே: அதே படம், ஆனா படத்துல நிறைய குறியீடு இருக்கணும். இப்போ அதுதான் ட்ரெண்ட்!

சாரா: லவ் ஸ்டோரில என்னய்யா குறியீடு? இந்த சாரதி ஒரு சாங் வெச்சா தமிழ்நாடே அலறும்! வழக்கம்போல கோரியோகிராஃபி நான்தானே!

சை.மே: இல்ல ஸார், நீங்க இந்த சஞ்சித் படமெல்லாம் பாக்கறதில்லையா? அதுல படம் முடிஞ்சு ஸ்க்ரீன் போட்டதும்கூட நாலஞ்சு குறியீடு கீழ சிந்திக்கிடக்கும்!

கஜினி: சாரதி ஜி, நீங்க ஒன்னும் கவலைப்பட வேண்டாம்! நாம பாட்டுக்கு குருவம்மாவே ஒரு குறியீடுதான்னு ஒரு பேட்டியை தட்டிவிடுவோம், மீதியை ட்விட்டர்ல பாத்துக்குவாங்க! குறியீடு கண்டுபிடிக்க வெறி கொண்டு அலையறாங்க அங்கே!

நிமல்: வெல், இதை நான் ஒத்துக்கறேனா இல்லையான்னு இப்போ சொல்லமுடியாது. எதுக்கும் நாளைக்கு ஆந்திரா போய் முதலமைச்சரை பார்த்துட்டு கூட்டா ப்ரெஸ் மீட் வெச்சு சொல்றேன்!

கஜினி: நிமல் ஆந்திர முதல்வரை சந்திப்பது தப்பில்லை!

சாரா: யப்பா, நீங்க ரெண்டுபேரும் வேற லெவலுக்கு போய்ட்டீங்கடா! நான் இன்னும் அந்த நண்டுக்கறி தம்பி பின்னாடி சுத்தி அப்டேட் ஆகாம இருக்கேன் போல!
சரி, மயிலுக்கு என்ன குறியீடு, சீ, என்ன ரோல்!

நிமல்: அது, அந்த மயிலை பீக்காக்ன்னு சொன்னா நான் கோபிச்சுக்க மாட்டேன், ஆனா நான் அதை மயூரின்னுதான் சொல்லுவேன்! அதை கஜினி எதிர்த்தால் அவர் எனக்கு எதிரிதான்!

கஜினி: சமூகவிரோதி மாதிரி பேசாதீங்க நிமல்! எனக்கு நீங்க எதிரி கிடையாது. சாப்பிடாம இருக்கற சைக்கா வாட்ச்மேன் பசிதான் எனக்கு எதிரி..
ஹாஹாஹா !

சாரா: ஓகே, மயிலுதான் தமிழக ஆட்சி. அதை பிடிக்கப்போறது சப்பாணி நிமல் பரட்டை கஜினி இதில் யாருங்கறதுதான் கதை!

கஜினி: நீங்க வன்முறையை தூண்டற மாதிரி பேசறீங்க! வேறெ, வேற கதை இருக்கா?

நிமல்: ஏன், இதுக்கென்ன குறை, ரெண்டு லிப் கிஸ் ஸீன் வெச்சுக்கலாம். வேணும்னா ஹிந்தியில மயிலுக்கு ஃபாத்திமா மயிலுன்னு பேர் வெச்சுக்கலாம்!

கஜினி: இல்லை, இதுல எங்கேயோ தப்பு இருக்கு. நான் எதுக்கும் ஒரு வார்த்தை குருமூர்த்தியை கேட்டு சொல்றேன்! நாம ரொம்ப பேசிட்டோம். நான் ஒருவாரம் இமயமலைக்கு போயிட்டு வர்றேன்!

எழும் கஜினியை பதறி உட்கார வைக்கிறார் சாரதிராஜா!

கஜினி, சிட் டௌன் சே, உட்காருங்க சொல்றேன்! இந்தப் படத்துல டாக்டர் ரோலுக்கு யார் தெரியுமா?


கஜினி, நிமல் கோரஸாக: யாரு?

சாரா: குருவம்மா செத்ததும் நியாயமா மயிலுக்கு பிடிச்ச டாக்டருக்குத்தான் அவ கெடச்சிருக்கணும்! அவருக்கு அது எத்தனை வருட கனவு பாவம்!
ஆனா, எங்கிருந்தோ வந்த பொடிப்பசங்க ரெண்டுபேர் மயிலை கூட்டிக்கிட்டு போயிடறாங்க! ஆனா அவங்க எதுவும் செய்யாம அவங்களை அனுப்பிவெச்ச தாடி பார்த்துக்கறார்!

இப்போ சொல்லுங்க, டாக்டர் ரோலுக்கு யாரு?கஜினி: நோ, அவரா, அவருக்கு இது செட்டாகாது! அவங்க அப்பாவுக்கு நான் வாக்கு கொடுத்ததாலதான் இத்தனை நாள் எனக்கு வேஸ்டா போச்சு! இனி இவர் வேறையா!

நிமல்: எனக்கு மேடையில் பேசும் தைரியம் இருக்கிறது, தற்காப்புதான் இப்படி தள்ளி உட்கார்ந்து வேடிக்கை பார்க்கும்!

சாரா: நான் வரும்போதே அவருக்கு போன் பண்ணிட்டுதான் வந்தேன்! கூடவே துரையழகனையும் கவுண்டர் ரோலுக்கு கூட்டிக்கிட்டு வரச் சொல்லியிருக்கிறேன்! இதோ, வந்துட்டாங்களே!

வாங்க!

கஜினி: வாங்க ஜி! வாங்க, இப்போதான் உங்களை நினைச்சேன்!

துரையழகன்: நீங்கதானே, நெனைச்சிருப்பீங்க.. நெனைச்சிருப்பீங்க..

லெனின் முகத்தை திருப்பிக்கொண்டு போய் உட்கார, நிமல் அவர் பக்கத்தில் ஓடிப்போய் உட்கார்ந்துகொள்கிறார்!

சாரா: வணக்கம் தம்பி. உங்களுக்கு என்ன வசனம்ன்னா..

லெனின்: காத்திருந்த கருவாடு பூனையை தூக்கிக்கிட்டு போனமாதிரி மயிலை யார் யாரோ கூட்டிக்கிட்டு போறாங்க!

துரையழகன்: தம்பி, அந்த துண்டு சீட்டை ஒழுங்கா படிங்க. வாத்தியார் பிள்ளை மக்குங்கறது உங்களுக்குத்தான்! உங்களை யாரு இப்போ பழமொழி கேட்டது?

லெனின்: சே. பேசாம நாம ஊரூரா போய் மயிலு கல்யாண மாதிரி நாடகம் போடலாம், தினசரி நாலு காட்சி. ஜூன் 32ம் தேதி ஆரம்பம்!

துரையழகன்: கருமம் தம்பி! தேதியை மாத்தி சொல்றதே உங்களுக்கு பொழப்பா போச்சு! கொஞ்சநேரம் வெளிய போயிட்டு சட்டையை கழட்டி போட்டுக்கிட்டு வாங்க!

கஜினி:  இல்லை, இது சரிப்பட்டு வராது. இங்கே சிஸ்டமே இல்லை! அதுக்காக அந்த ரெண்டு பசங்களை உடனே விரட்டணும்ன்னு சொல்றது தப்பு!

நிமல்: இங்கே எல்லாம் ஒழுங்கு கெட்டுக் கிடக்கிறது! யாரும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது! பெரியார் மண்ணில் இதையெல்லாம் அனுமதிக்கவே முடியாது! நான் இப்போதே மீசையை வளர்த்துக்கொண்டு தெற்கே போகிறேன்!

கஜினி: கண்ணா, நான் இன்னும் வரவே இல்லை. அதனால இதுபத்தி நான் இப்போ கருத்து சொல்லமுடியாது! ஆனா மயிலு எனக்குத்தான்!

லெனின்: நேத்து வந்தவன் பெண்டாட்டியை காத்திருந்தவன் கொண்டுக்கிட்டு போகமுடியாது! நான் வெளிநடப்பு செய்றேன்!

துரையழகன்: எழவுடா, இதை பழமொழி சொல்லாம செய்யலாமல்ல! உங்க அப்பாவை சொல்லணும்!

சாரதி, நான் வரட்டா, தம்பியை பத்திரமா வீட்ல கொண்டு விடணும்! அப்படியே குருவம்மாவை யாரு கொன்னாங்கன்னு பாருங்க! அந்தம்மா அப்படி ஒரு அழகு!

சொல்லிக்கொண்டே லெனின் பின்னாடியே ஓடுகிறார்!

சாரா: என்னடா நீங்க ரெண்டுபேரும் இப்படி ஆகிட்டீங்க! ஒரு பெரிய குடும்பத்து பிள்ளைன்னு ஒரு மரியாதை வேண்டாமா?

கஜினி: நாங்க என்ன செய்ய, குருவம்மா செத்ததும் வலுக்கட்டாயமாகவாவது இந்த டாக்டர் தாலி கட்டியிருக்கணுமா வேண்டாமா? அப்படி கட்டியிருந்த நாங்க எதுக்கு இப்படி வம்புக்கு வர்றோம்!
சரி இப்போ சொல்லுங்க, மயிலு யாருக்கு?

சாரா: அது உங்க ரெண்டுபேரையும் மந்திரிச்சு அனுப்புன தாடிகிட்ட கேளு! ஏன்னா மயிலு அவங்களுக்கு வரணும்ன்னுதான் ஸ்க்ரிப்ட்டே!

நிமல்: அதெப்படி நீங்க இப்படி மய்யமா சொல்லமுடியும்? அந்த ரெண்டு பசங்களும் சரியில்லைன்னுதானே எங்களை தயார் செய்திருக்கறாங்க

சாரா: யோவ். உளறாதய்யா. லெனினை விரட்டத்தான் சப்பாணியும் பரட்டையும்!

உங்க ரெண்டுபேர் சண்டைல லெனின் காணாமல் போனதும் உங்க ரெண்டுபேருக்கும் சுளுக்கெடுக்க சந்தான பாரதி வேற வழி வெச்சிருக்கார்!

அந்தப் பசங்களே ஒத்துவந்தா மயிலு அவங்ககூடவே இருக்கட்டும், ஏன்னா இப்போவே மயிலுக்கு ஓனர் டீக்கடைக்காரர்தானே!

இல்லாட்டி அப்போதைக்கு உங்கள்ள யாரு ஓரளவுக்கு ஜெயிக்கறீங்களோ அவங்கதான் ஆக்டிங் ஓனர்!

சரி, கதைக்கு வருவோமா?

கஜினி: எனக்கு ஒரு நிமிஷம் தலை சுத்திடுச்சு! நான் போயிட்டு ஒரு மாசம் கழிச்சி வர்றேன்!

நிமல்: நான் நாயுடுவையும் கையோட முடிச்சுட்டு அப்புறம் வர்றேன்!
சாரா: அப்போ நான்?

இருவரும்: நீங்க அதுவரைக்கும் உங்க கூட்டாளிகளோடவே இருங்க!

சாரா: இதுக்குதான் இந்த வந்தேறியையும் பார்ப்பனனையும் நம்பக்கூடாது! நம்ம தமிழ் தம்பிக்கு போனை போடுவோம்!

ஃபோனில் காதில் விழும் கெட்டவார்த்தை தாங்கமுடியாமல் மயங்கி விழுகிறார் சாரதி ராஜா!

திரை - தற்காலிகமாக!பி.கு: பகிரப்பட்ட படங்களுக்கும், இந்த நாடகத்துக்கும் ஏதாவது சம்பந்தம் இருப்பதாய் தோன்றினால் அது தற்செயலே! 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக