காலா திரைப்படமும் அதைச் சுற்றும் அரசியலும் - ஒரு பார்வை!
சமீபகாலமாக
பார்க்க நேர்ந்த படங்களில் இத்தனை நெஞ்சுக்கு நெருக்கமாய் உணர்ந்த படம் வேறு எதுவும் இல்லை!
கபாலி
ஒரு கலவையான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில் காலா நிச்சயம் அதன் திருத்தப்பட்ட மேம்பட்ட வடிவமாக இருக்கும் என்று நம்பியது வீண் போகவில்லை!
முதல்
பாதி கொஞ்சமே கொஞ்சம் மெதுவாக நகருவதுபோல் தோன்றினாலும், ஹுமா குரோஷி, ரஜினி காட்சிகள், அதிலும் அந்த ரெஸ்ட்டாரண்ட் சந்திப்பு - அணு அணுவாய் செதுக்கிய காட்சியமைப்பு!
ஜானகிராமனை
நூறாவது முறை வாசித்தாலும் அன்றைய மனநிலைக்கேட்ப நம்மை பாபுவாகவோ, ஜமுனாவாகவோ உணரவைப்பதுபோல் அந்த சந்திப்புக் காட்சி! இரு
நாற்காலிகளிலும் நம்மை மாறிமாறி உட்காரவைக்கும் கவிதை!
ஒரு
அட்டகாசமான இண்டர்வெல் பிளாக்குக்குப் பிறகு பரபரவென்று நகரும் காட்சிகளை அந்த திடுக் க்ளைமேக்ஸ் தவிர வேறு எதுவும் நியாயப்படுத்தியிருக்காது!
ஒருவகையில்
அந்த க்ளைமாக்ஸை நம்மை எதிர்கொள்ள நன்றாகவே தயார் செய்யும் காட்சியமைப்புக்களும் திரைக்கதையும் படத்தின் மிகப்பெரிய பலம்!
படத்தில்
ஆர்ட் டைரக்டர்
இந்தப்படத்துக்கு விருது வாங்கும் சாத்தியக்கூறு மிக அதிகம்!
தாராவிக்குள்
ஒன்றரை மணிநேரமும் உட்கார்ந்திருக்கும் ஃபீலிங்!
கைகோர்த்துக்கொண்டு பயணிக்கும் ஒளிப்பதிவும் இசையும்!
சந்தோஷ்
நாராயணனின் பாடல்களைவிட பின்னணி இசைக்கோர்ப்பு அட்டகாசம்!
காலாவின்
ஒவ்வோர் மூடுக்கும் ஒவ்வொரு இசைக்கோர்வை - சில
இடங்களின் இரைச்சலை தாராளமாக மன்னிக்கச் செய்கிறது!
ஈஸ்வரி ராவ்!
இவருக்கு
இது ஒரு வாழ்நாள் சாதனைப்படம்!
கொஞ்சம்
சத்தம் குறைத்திருந்தால் இன்னும் இயல்பாக இருந்திருக்குமோ?
திலீபன் (ஏ ஆர் முருகதாஸின்
தம்பியாமே?),
சமுத்திரக்கனி
இருவருக்கும்கூட
இது ஒரு முக்கியமான படம்! லெனினாக வருபவர் வெகு இயல்பாக வந்துபோகிறார்!
அஞ்சலி பாட்டீல்!
- அருமை!
உண்மையான
புயல்!!
ஒரு
குப்பத்து வாயாடிப்பெண்ணை அப்படியே கண்முன் நிறுத்துகிறார்! அதுவும் பாலத்தில் போலீஸ்காரர்களுடன் மோதும் இடம் காட்சி அழகியலின் உச்சம்!
நானா படேகர்!
நன்றாக
நடிக்கிறார் என்று சொல்வது அபத்தம்!
அவர்
படத்தில் இருப்பதே தெரியவில்லை என்பதுதான் நிஜம்!
ஹரிதாதா
மட்டும்தான் ரஜினிக்கு இணையாக வாழ்கிறார்!
ஒரு
அரை சிரிப்பில் கொடூர வில்லத்தனம் காட்டுவது வெறுமனே நடிப்பில் சேராது!
ஹூமா குரேஷி!
என்ன
சொல்ல? வெண்ணைக்கட்டி போல ஒரு அழகு!
விஜய்
டீவி உபயத்தால் தற்போது பாப்புலராகியிருக்கும் ஒரு பழைய பாடலை நியாயப்படுத்தும் அழகு!
கண்களில்
வழியவிடும் காதலும் மெல்லிய விரக்தியும்!
குப்பத்தில்
பிறந்து வளர்ந்தபோதும் உலகம் முழுவதும் சுற்றிவந்த தோரணையை அலட்சியமாகக் காட்டும் உடல்மொழி!
கரிகாலன்
என்று கூப்பிட்டுப் பார்க்கும் பார்வை ஐஸ் கத்தி!
ரஜினி!
ரொம்பநாளைக்கு
அப்புறம் பழைய போக்கிரிராஜா!
தன்னுடைய
களம் என்ன என்பது புரிந்து இறங்கி அடித்திருக்கிறார்!
ஸ்க்ரீன்
ப்ரெசென்ஸில் இன்னும் பல காலத்துக்கு யாரும்
நெருங்கமுடியாத கரிஷ்மா!
பாஷாவுக்கு
அடுத்து ஒரு முழு ரஜினி படம் பார்த்த திருப்தி!
அறிமுகக்
காட்சியில் இரண்டு ரன் எடுக்கமுடியாமல் போல்டு ஆனவர், அதற்குப்பிறகு சிக்கும் பந்தெல்லாம் சிக்ஸர்!
ஈஸ்வரி
ராவிடம் குழைவதும், ஹீமா குரோஷியிடம் நெகிழ்வதும் இயல்பான கவிதைக் காட்சிகள்!
டைரக்டர் ரஞ்சித்!
இவருக்கு
என்று ஒரு தனி கதை சொல்லும் பாணி!
புதுமைப்பித்தனின்
தவளைப் பாய்ச்சலைப்போல்!
வழக்கமான
சினிமா இலக்கணங்களை அலட்சியமாக மறுதலித்து தனக்கென ஒரு ஸ்டைல்!
ஆனால்,
ரஞ்சித் படத்துக்கென்று ஒரு குறிப்பிட்ட ஸ்டைல் முத்திரை விழுவதை அடுத்த படத்தில் மாற்றியே ஆகவேண்டியது நிர்ப்பந்தம்!
பல
இடங்களில் கபாலி படம் பார்ப்பதுபோலவே தோன்ற வைப்பது மிகப்பெரிய மைனஸ்!
அந்த
ராப் டீமுக்கு அடுத்த ரெண்டு படங்களில் கட்டாய ஓய்வு தருவது அவசியம்!
கதையை
முதல் ஃபிரேமில் இருந்தே நகர்த்த ஆரம்பிக்க கற்பது நல்லது! கொஞ்சம் பெரிய ஸ்டார்ட்டிங் ட்ரபிள்!
இனி,
முக்கியமான விவாதப்பொருளான விஷயம்!
இது ரஜினி
படமா,
ரஞ்சித்
படமா?
எத்தனை
மறுத்தாலும் இது ரஜினி படம்தான்!
வசனங்கள்
ஒவ்வொன்றும் தோட்டாவாய் பாய்வதும்,
ஆங்காங்கே
ராவண
காவியம், காமராஜ், பெரியார், அம்பேத்கார் சிலைகள்,
கருப்பு,
நீலம்
என்று
(இந்தப்படத்தில் ரேஷன் கடை வாசலில் சிந்தியிருக்கும் அரிசியைப்போல அவ்வளவு வெளிப்படையாக குறியீடுகள் இல்லாதது ஒரு ஆறுதல்!)
ரஞ்சித்
படம் என்பதை அழுத்தமாக அடிக்கோடிட்டாலும்,
ரஜினி
என்ற பந்தயக்குதிரையை கட்டிப்போட இன்னும் மெனக்கெடவேண்டும் ரஞ்சித்!
ஒரே
ஒரு கோணல் வாய் சிரிப்பில் இது என் படம் மட்டும்தான் என்று சொல்லிவிட்டுப் போய்விடுகிறார் ரஜினி!
அடுத்த
சூப்பர் ஸ்டார்களெல்லாம் இன்னும் கொஞ்ச வருடங்கள் அமைதியாகக் கற்றுக்கொள்வது நலம்!
ரஜினி
படம் இல்லை, இது ரஞ்சித் படம் என்போர், வேறு யாரைப்போட்டிருந்தால் இந்தப்படம் சொல்லும் செய்தி இவ்வளவு உரக்கப் பேசப்பட்டிருக்கும் என்று சொல்வது நலம்!
ராமன்
- ராவணன், கருப்பு - வெளுப்பு என்று புராணமும் நவீனமும் கலந்து கதை நகர்த்தினாலும், எனக்கென்று சில கேள்விகள் உண்டு!
புராணங்கள்
பொய் என்பதை நிறுவ, அதன் எல்லாக் கதாபாத்திரங்களும் பொய் என்று பேசுவதுதானே முறை?
அதைவிட்டு
தலைகீழாக நிறுவ முயல்வது என்ன வகை மறுதலிப்பு?
ராவணனுக்கு
நான்கு மகன்கள் என்பதுவரை எடுத்துக்கொள்ளும்போது, அவன் மிகப்பெரிய சிவ பக்தன் என்பதும், பிறப்பால் அவன் ஒரு ...
விடுங்கள்!
பிறகு இது வைணவ சைவ மோதல் படமாக மாறிவிடும்!
இதற்குமேல்
இதைக் கிளறினால் சாதி மறுப்பாளர்கள் ரஞ்சித் சாதிதான் என்னைப் பேசவைக்கிறது என்று ஆரம்பிப்பார்கள்!
ரஞ்சித்
தானாக முன்வந்து சில விஷயங்களைக் களைவது அவர் படங்களை ஆக்கப்பூர்வமாக எந்தத் தயக்கமும் இல்லாமல் விமர்சிக்க உதவும்!
அரசியல்!
பொதுவாக
அரசியலும் சினிமாவும் கலப்பது எனக்கு அவ்வளவு சம்மதமில்லை இத்தனை
நாள் அடிபட்டுத் தெரிந்துகொண்ட அரசியல் பாடம் அது!
ஆனால்
இந்தப்படம் ஏற்கனவே அந்தத் தளத்தில் மட்டுமே பெரும்பான்மையாக விமர்சிக்கப்படுகிறது!
எனவே,
ரஞ்சித் ரஜினியை
உபயோகித்துக்கொண்டார்!
ரஜினி
தான்
பேசுவது
என்ன
என்பதே
தெரியாமல்
பேசி
நடித்துவிட்டார்!
- எவ்வளவு பெரிய அபத்தம் இது?
வயிற்றெரிச்சலின்
உச்சம் இந்த விமர்சனம்!
ரஜினியை
முட்டாள் என்று நிறுவும் அவசரத்தில் தங்களைத் தாங்களே முட்டாள்களாக வெளிப்படுத்திக்கொள்ளும் மூடத்தனம்!
படையப்பா
படத்தில் சவுந்தர்யா ஜோடி என்பதை தெலுங்கு மார்க்கெட்டை வைத்து முடிவு செய்யுமளவு வியாபார மூளை ரஜினிக்கு!
தன்
படம் என்ன பேசவேண்டும்,படத்தின் கதை என்ன என்பதை கத்துக்குட்டிகள் கூட முடிவு செய்யும் காலத்தில் நாற்பது ஆண்டு காலம் யாருக்கும் எட்டாத உயரத்தில் அசைக்கமுடியாமல் உட்கார்ந்திருக்கும் ரஜினி, வசனம் புரியாமல் பேசி நடித்துவிட்டார் என்பது ஆற்றாமை, வயிற்றெரிச்சலின் உச்சம்!
தன்னை
வைத்து யாரோ எடுத்த படத்துக்கு எந்தவித பாதிப்பும் வராத அளவு முன்ஜாக்கிரதையாக காய்களை நகர்த்தும் ரஜினி,
தன்
குடும்பம் பணம் போட்டு எடுத்த படத்தை பாதிக்கும் என்பது தெரிந்தும் பிறகேன் தூத்துக்குடி விஷயத்தில் அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்தார்?
தன்
படம் சொல்லும் செய்தி தனதல்ல!
தன் அரசியல் நிலைப்பாடு படங்களில் காட்டும் தன் நிலைப்பாட்டை ஒட்டியே இருக்கும் என்பது தவறான எதிர்பார்ப்பு என்பதை அடிக்கோடிட்டு சொல்லியிருப்பதாகவே அதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது!
ராணுவம்
வந்தாலும் சந்திப்போம் என்று மைக்கில் கூச்சல் போட்டுவிட்டு, மன்னிப்புக்கேட்டு ஈமு கோழியாய் குறுகி நிற்காமல்,
அடுத்து
வரும் படங்களுக்கு பாதிப்பு வந்துவிடக்கூடாது என்று அதிகாரம் இல்லாதவரிடம் சொம்பைத் தூக்கிக்கொண்டுபோய் தண்ணீர் கேட்டு நாடகம் போடாமல்,
மேலாண்மை
வாரியம் வேண்டாம் என்று நேரிடையாகச் சொல்லாமல் சட்டப்போராட்டம் வேண்டாம், ஆலமரத்தடியில் உட்கார்ந்து அன்பாய் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று மறைமுக கதை சொல்லாமல்,
கேள்விகேட்டால்
காந்தி தோளில் கைபோட்டு இழுத்துவந்து உளறாமல்,
நான்
எதுவும் தவறு செய்யவில்லை என்று சொல்லிவிட்டு அடுத்த வேலையை பாக்கப்போனவர் அரசியல் களத்தில் வியூகம் புரிந்து வைத்திருப்பதாகவே உணர்கிறேன்!
அது
மூடநம்பிக்கையா என்பதை அவரது அடுத்த நடவடிக்கை சொல்லட்டும்!
மெர்சல் படத்தை
விமர்சித்து
கூச்சலிட்டு
ஆர்ப்பாட்டம்
செய்த
பாஜக
ஏன்
இந்தப்படத்துக்கு
ஏதும்
சொல்லவில்லை?
என்றொரு
சந்தோஷமான விமர்சனம்!
ரஞ்சித்
புத்திசாலி!
ஜிஎஸ்டி,
வரிவிதிப்பு என்று மட்டைக்கு ரெண்டு கீற்றாய் வசனம் வைத்தால் முட்டாள் கூட்டம் ஆடித் தீர்த்துவிடும் என்பது அவருக்குத் தெரியாததல்ல!
நேரிடை
விமர்சனம் இந்தப் படத்தில் எங்கு வருகிறது?
க்ளீன்
மும்பை திட்டமும், ராம
பக்த ஹரிதாதாவும் தங்களைத்தான் சொல்கிறது என்று தாங்களே வலிய வந்து எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று குதிக்க எல்லோருமே ஹெச் ராஜாவோ சுனா சாமியோ இல்லை!
செருப்பால்
அடித்ததுபோல் வலித்தாலும் பொத்திக்கொண்டு இளித்துக்கொண்டே போவதைத் தவிர வேறு வழி என்ன இருக்கிறது அவர்களுக்கு?
இதுதான்
ரஞ்சித்துக்கும் கார்பன் பேப்பர் அட்லீக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம்!
அடுத்தது,
மிக முக்கியமானது!
ரஜினி கதை
முடிந்துவிட்டது!
படம்
ஃபிளாப்!
இது
இன்னொரு சந்தோஷக்கூவல்!
பொதுவாக
ஒரு படத்தின் வெற்றி தோல்வி பற்றி அலட்டிக்கொள்ளுமளவு நான் யாருக்கும் வெறிபிடித்த ரசிகன் இல்லை!
ஆனால்,
இந்த இணையதள வெறுப்புப் பூனைகள் கண்ணை மூடிக்கொண்டு உலகமே இருண்டுவிட்டது என்று போடும் கூச்சல் எத்தனை அபத்தம் என்பது நேற்று படம் பார்க்கப்போனபோது புரிந்தது
கோவை KG தியேட்டரில்
நேற்றிரவு
10.40 ஷோவிற்கு
போனபோது
பார்த்த
காட்சி
இது!
மூன்று
ஸ்க்ரீனிலும் காலா!
மூன்றும்
ஃபுல் என்பது செய்தி அல்ல!
படம்
பார்க்க வந்திருந்த நடுத்தர வர்க்கம், படித்தவர்கள், படிக்காதவர்கள், பணக்கார வர்க்கம் என்ற பேதம் ஏதும் இல்லாமல் ஆண் பெண், இருபாலரும் ஏறத்தாழ 75 % கருப்பு உடை!
அதில்
பலரும் கருப்பு வேட்டி, கருப்பு சட்டை- சில பெண்கள் உட்பட!
இது
எனக்குத் தெரிந்து வேறு எந்த நடிகருக்கும் இதுவரை நடக்காதது!
ஆளுயர
ரஜினி பேனரோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள க்யூ வரிசை!
ரஜினியை
முட்டாள் என்றும் தோற்றுப்போனவர் என்றும் விமர்சித்து தன்னைத்தானே ஏமாற்றிக்கொள்பவர்களை பார்த்தால் பாவமாக இருக்கிறது!
எதிரியின்
பலம்
உண்மையில்
என்ன
என்பது
தெரிந்தவனே
அரசியலில்
வெல்லமுடியும்
என்பது
பாலபாடம்!
தொட்டுக்கொள்ள
இன்றைய ஹிண்டு நாளிதழ் செய்தி!
இன்னும் மணலுக்குள்
முகம்
புதைத்துக்கொள்ளும்
நெருப்புக்கோழிகள்,
இழப்புக்கும்,
அடுத்த
கார்த்திக்
சுப்புராஜ்
படத்தில்
மேலும்
வீரியமாய்
கோஷம்
போடவும்,
தங்களை
தயார்படுத்திக்கொள்ளட்டும்!
No comments:
Post a comment