பொருட்பாலுக்கு ஒரு சின்ன முன்னுரை!
காமமும் அறமும் அடுத்தடுத்து முடிந்தாலும் பொருளுக்கான தேடல் மட்டும் நீண்டுகொண்டே போவது திருக்குறளிலும்தான்!
முதற்பாலும் கடைப்பாலும் ஏற்படுத்தா தாக்கத்தை இடைப்பால் ஏற்படுத்தியது!
முதலீடு பற்றிய குறளெல்லாம் இன்றைய மேனேஜ்மேண்ட் தியரி வகுப்பில் மணிக்கணக்கில் விரித்துரைக்கத் தக்க மெட்டீரியல்!
மற்ற இரண்டு பால்களிலும் வராத பிரமிப்பு இதில்!
திருவள்ளுவர் காலகட்டம் என்ன என்பதை ஆராயுமளவு வரலாற்று ஆர்வம் இல்லாத செம்மறியாடு நான்! இதுவரை எல்லாமே நுனிப்புல் மேய்ச்சல்தான்!
இன்னும் இருக்கும் காலமும் அப்படியே போகட்டும்!
ஆனால் இதில் இருக்கும் வெர்சடாலிட்டி வியக்கவைக்கிறது!
வியாபாரம், முதலீடு, நல்லாட்சி, கொடுங்கோன்மை, கற்பு, பரத்தை, பிறன் மனை உறவு, ஒழுக்கம், நட்பு, கூடா நட்பு செல்வம், வறுமை, நேர்மை, பணிவு, கயமை, தலைகனம் இத்தனை குறித்தும் இந்த ஒருபால் பேசுகிறது!
இன்றைக்கு உயிர்ப்போடு பேசுபொருளாக இருக்கும் அத்தனை விஷயமும் அன்றும் இதே வீரியத்தோடு இருந்திருக்கிறது என்பதுதான் ஆச்சர்யம்!
உண்மையிலேயே கல்தோன்றி மண் தோன்றாக்காலத்து முன் தோன்றிய இனம்தான் போலும்! இடையில் எங்கே, ஏன் தேங்கிப்போனது என்பதுதான் புரியவில்லை!
சரி! அதெல்லாம் அறிஞர்கள் படவேண்டிய கவலை!
நானாக ஏற்படுத்திக்கொண்ட ஒரு கட்டாயம் இத்தோடு முடிந்தது!
இனி, கீச்சுலகம் எனக்கு நிச்சயம் ஆயாசம் தரும்!
பார்ப்போம்!
அறமும், காமமும் ஒற்றைப் பதிவு!
பொருளுக்கு மட்டும் எப்போதும் போல் என்னுடன் தகராறு!
ஏனோ ஒரு இடத்தில் ஒரு அளவுக்குமேல் ஒட்டமாட்டேன் என்று பிடிவாதம்!
பிரித்துப்பிரித்து இணைத்திருக்கிறேன்!
குறளுக்கான என் புரிதலை பந்தி வைத்துவிட்டேன்!
கொள்ள நினைப்போர் கொள்க!
நன்றி!
அத்தியாயம் 54 முதல் 66 வரை
http://www.indiavaasan.com/2018/09/blog-post_15.html?m=1 …
அத்தியாயம் 67 முதல் 78 வரை
http://www.indiavaasan.com/2018/09/blog-post_51.html?m=1 …
அத்தியாயம் 79 முதல் 93 வரை
http://www.
அத்தியாயம் 94 முதல் 101 வரை
indiavaasan.com/2018/09/blog-post_66.html?m=1 …
அத்தியாயம் 102 முதல் 108 வரை
No comments:
Post a comment