புதன், 24 அக்டோபர், 2018

சின்மயி, வைரமுத்து, மீ ட்டூ, மற்றும் பலர்!


சின்மயி வைரமுத்து மீது குற்றச்சாட்டு சொன்னதை ஒரு தரப்பும், பிராமணர்கள் மீது சொன்னதை இன்னொரு தரப்பும் கொண்டாடுகிறார்களேதவிர, இருதரப்பும் தங்கள்மீது தவறில்லை என்று சொல்லவே இல்லை! இதுதான் இவர்களின் ஒட்டுமொத்த யோக்கியதை!

குற்றம் சாட்டுபவர், சாட்டப்படுபவர் இருவரின் சாதி, சமூக அந்தஸ்து, அரசியல் தொடர்புகளும் நிலைப்பாடும் - இவையே பலரது பார்வையை நிர்ணயிப்பது நம் சமூக அமைப்பின் சாதனை!

அன்றே ஏன் சொல்லவில்லை என்று கேட்பவர்கள் கொஞ்சம் தங்கள் சுற்றம், சுற்றுப்புறம் இவற்றில் விசாரித்துப் பார்க்கட்டும்!

பல அத்துமீறல்கள் சொல்லப்படாமலே சகித்துக்கொண்டு, சொல்ல முடியாமல் மறைத்துக்கொண்டு சம்பந்தப்பட்டோரோடு சாவில் மடிந்து போவது தெரியும்!

இதற்கு நம் சமூக, குடும்ப அமைப்பின் சில அடிப்படை குறைகளே காரணி!
உள்ளுக்குள் குமைந்துகொண்டே வெளியே உறவாடும் நிர்ப்பந்தம் இன்னும் பெண்களின்மேல் இருப்பது மறுக்கமுடியா உண்மை!

சின்மயி பிரஸ்மீட்டில் நிருபர்கள் என சொல்லிக்கொள்வோரின் அறிவும் புரிதலும் புல்லரிக்க வைத்தது! குறிப்பாக அந்த பாலியல் பலாத்காரம்! அருமை!

கவுன்சிலர் வீட்டுவேலைக்காரனின் நண்பனின் நண்பன் மீது புகார் கொடுத்துப் பார்க்கட்டும் தாம்ப்ராஸ் தலைவன் மீதும் வைரமுத்து மீதும் ஏன் போலீஸ் புகார் தரவில்லை என்போர்!

சின்மயி விவகாரத்தில்  மேலும் இரண்டு பேட்டிகளைப் பார்க்க நேர்ந்தது!முதலில் - ஆர் ரைஹானா - இவர் ரகுமான் சகோதரி என்பது தெரியும்! ஆனால், "பிரபல" இசையமைப்பாளர் என்பது பேட்டி எடுத்தவர் சொல்லித்தான் தெரியும்.

ஒரு கம்ஃபோர்ட் ஜோனில் உட்கார்ந்துகொண்டு பேட்டியளிப்பது எவ்வளவு சுலபம்!

எனக்கு சிறுவயதிலிருந்தே சோசியல் சர்விஸ் செய்வது பிடிக்கும்! - இது அவர் கூற்று!

வைரமுத்து விஷயம் எனக்கொன்றும் புதிதில்லை! இது இண்டஸ்ட்ரியில் ஓப்பன் சீக்ரட்!” இப்படிச் சொல்பவர் தன் சகோதரன் பெயரைத்தான் அவர் தன் இச்சைகளுக்கு பயன்படுத்திக்கொள்வார் என்பதையும் கட்டாயம் அறிந்திருப்பார்!

சமூக நல அக்கறையுள்ளவர், அன்றே ஏன் சின்மயி சொல்லவில்லை? சொல்லியிருந்தால் பல பெண்களின் வாழ்வை காப்பாற்றியிருக்கலாமே என்று அங்கலாய்ப்பவர், ஏன் தான் இதை முன்னெடுத்து தன் சகோதரனிடம்கூட சொல்லவில்லை?

காஸிப்களை விரும்பாத ரகுமான், சின்மயிசொல்வது உண்மையாக இருக்குமா என்று கேட்டிருக்கமாட்டார்.

பொதுவாக கான்ட்ரவர்ஸியலான ஆட்களுக்கு வாய்ப்புக் கொடுக்காத ரகுமான், சின்மயிக்கு இனி வாய்ப்பு கொடுப்பது கடினம் என்று சொல்பவர், வைரமுத்துவுக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி ஏன் பேசவில்லை?

ரகுமான் சகோதரியான "என்னிடமே" தகராறு செய்த சின்மயி என்று ஒரு விஷயத்தை சொல்கிறார்
அதில் சின்மயிக்கு நன்மை செய்யவே அவருக்கு தான் வாய்ப்பளித்ததாகவும், ஆனால் அவர் ஒப்புக்கொள்வார் என்ற நம்பிக்கையில் அவர் சம்மதம் கேட்காமலே அவர் பெயரை அறிவித்தேன் என்று பெருமையாய் சொல்கிறார்!

அது நன்மையோ தீமையோ, தான் கலந்துகொள்வது பற்றி சின்மயி சம்மதம் கேட்கவோ, ஜஸ்ட் அவருக்கு அறிவிக்கவோகூட அவசியம் இல்லை என்கிறார்! - இது ரகுமான் சகோதரி என்ற தைரியம்தானே

சின்மயி ரவுடி என்பதால் வைரமுத்துவுக்கு லைசென்ஸ் கிடைத்துவிடுகிறதா?

வைரமுத்து விஷயத்தை முன்பே வெளியில் சொல்லாததால் சின்மயி, அவர் தாயார் இருவரையும் சைக்கோ என்று சொல்லும் உரிமை இவருக்கு யார் கொடுத்தது

எனில் அந்த ஓப்பன் சீக்ரட்டை வெளியே சொல்லி சோசியல் சர்விஸ் செய்யாத இவரை என்ன சொல்ல?

சின்மயி விவகாரத்தில் நான் பார்த்த இன்னொரு பேட்டி - ட்விட்டர் பிரபலம், எழுத்தாளர் ராஜன்!

பழைய விவகாரம் எனக்கு முழுமையாகத் தெரியாத நிலையில் அதுபற்றி கருத்து சொல்வது நியாயமில்லை!

ஆனால், அந்த கொலைமிரட்டல் வழக்கு வெறும் வேறொருவர் ட்விட் ஆதாரத்தை மட்டும் வைத்துக்கொண்டு ஆறு வருடங்களாக தொடருவதாக சொல்வது கொஞ்சம் உறுத்துகிறது!

சின்மயி விஷயத்தில் வர்க்கவேறுபாடு பற்றி அவர் பேசுவது முழுக்க சமுதாயத்தில் பண, அந்தஸ்து வேறுபாடு பற்றி மட்டுமே என்று நேர்மையாக சொன்னாலும் பேட்டி எடுப்பவர் அதில் சாதியை நுழைத்தே தீருவது என்று கங்கணம் கட்டி ஆடி, கடைசியில் கொஞ்சம் வெற்றியும் பெற்றுவிட்டார் (ரேட்டிங் நிர்பந்தம்?)

எல்லோரும், ஏதோ ஓர் இடத்தில் தன் சாதியை உபயோகித்தே ஆகவேண்டும் என்பது ஒரு திணிக்கப்பட்ட நிர்ப்பந்தம் போலும்! 

வர்க்க வேறுபாடு என்பது எல்லாத் தளங்களிலும் எப்போதுமே தன் கோரமுகம் காட்டித் திரிவது நம் சாபக்கேடு!

அரசு அலுவலர்கள் என்றொரு வர்க்கம் சாமானிய மக்களிடம் காட்டும் ஆதிக்க வர்க்க முகம் கண்டிப்பாக ராஜனுக்கு தெரிந்திருக்கும்!
அதுதான் சின்மயி ராஜன் மீதும், வைரமுத்து சின்மயி மீதும் வெற்றிகரமாக உபயோகிப்பது!

பிராமண லாபி சின்மயிக்கு உதவும் என்று தோன்றவில்லை!

தாம்ப்ராஸ் தலைவர் சின்மயியை ஐயங்கார் தேவடியா என்று அன்போடு அழைப்பதை அது ரசித்துக்கொண்டிருக்கும்!

சின்மயிஒரு ஆளுமையின் பெயரை” உபயோகித்து ராஜனை பழிவாங்கினார் என்பது நம்பத்தக்கதே!

ஆனால், வைரமுத்து ஒரு ஆளுமையை எந்த அளவு உபயோகித்துக்கொண்டு வருகிறார் என்பது கேள்விகளுக்கு அப்பாற்பட்ட உண்மை!

சொல்வது சின்மயி என்பதால் இந்தக் குற்றச்சாட்டு குவியத்தை இழந்தது எனில், கங்கை அமரன் மருமகள், ஆர் ரெஹைனா சொன்னபோதும் விளைவற்று இருக்க அந்த வர்க்க வேறுபாடுதான் காரணம்!
பல பாடலாசிரியர்கள் வெளிச்சம் இழந்து போகமட்டும் வைரமுத்து காரணம் அல்ல! தான் சார்ந்திருக்கும் ஆளுமையின் கட்சி விவகாரங்களில் அவர் அறுவடை செய்ததும் ஊரறிந்த ரகசியம்தான்!

இந்த மீடூ விஷயம் வைரமுத்து மீது மட்டுமே தாக்குதல் என்று முடிந்துபோவது வருத்தத்துக்குரியதே! சபா செக்ரட்டரி மாமா உட்பட உப்பைத் தின்றவர்கள் எல்லோரும் தண்ணீர் குடித்தே தீர நேர்வதே இந்த வர்க்க வேறுபாட்டின்மீது விழும் முழு அடியாக இருக்கமுடியும்!

சின்மயி ரவுடி என்றும், ஐயங்கார்.. என்றும் சொல்வதால் மட்டும் அவருக்கு குற்றம் சாட்ட அதிகாரம் இல்லை என்பது இன்னொருவகை வர்க்க வேறுபாடுதானே!