ஜானுவும் மைதிலியும்!
How can you identify a blind man in a nudist colony?
தெரியலையே,
சொல்லித்தொலை! எப்படியும் ஏதாவது வக்கிரமாத்தான் சொல்லப்போறே!
It won’t be hard!
சொல்லிவிட்டு
சுத்தமாக சிரித்த ஜானுவை கோபமாகப் பார்த்தாள் மைதிலி!
என்ன
எழவுடி இது? எங்கிருந்து புடிக்கறே இந்தக் கருமத்தையெல்லாம்!
கீர்த்தி
சொன்னான்.
நெனைச்சேன்!
அந்த தடியன் பார்வையும் மீசையும்! எனக்கென்னவோ ஒருநாள் அவன் உன்னை தினத்தந்தி பாஷைல கதறக்கதற கற்பழிக்கப்போறான்
சான்ஸே
இல்லடி, அவன் என் ஃப்ரண்ட். அப்படிப்பார்த்தா, சுப்ரீம் கோர்ட் சேம் ஜெண்டர் செக்ஸ் தப்பில்லைன்னு சொல்லிடுச்சுன்னு நீயே ஏன் என்னைக் கற்பழிக்கக்கூடாது? நான்வேற உன்னோட பத்தாத நைட்டியைப் போட்டுக்கிட்டு அரைகுறையா தளும்பத் தளும்ப உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்!
சீ!
ரொம்ப அனாச்சாரமா பேசறடி நீ வரவர ..
மைது,
கற்புன்னா என்ன? அது கால் சந்துலதான் ஒளிஞ்சிருக்குன்னு இன்னுமாடீ நம்பறே?
தாயே!
இன்னைக்கு எனக்கு இதுபோதும்! நல்லவேளை நீயெல்லாம் பட்டணத்துல பிறந்திருந்தா என்ன ஆகியிருக்குமோ!
ஜானு
அலியாஸ் ஜானகி பிறந்து வளர்ந்தது எல்லாமே ஈரோடு பக்கத்து குக்கிராமம்! படித்தது திருச்சி!
அப்பா
அம்மாவின் ஒரே செல்லப்புத்திரி!
கராத்தே,
வீணை, ஃபிரெஞ்ச், ஃபோட்டோகிராஃபி என்று கலவையாய் ரசனை! புல்லட் ஓட்ட ரொம்பப் பிடிக்கும்!
இப்போதைக்கு
சென்னையில் ஒரு எம்என் சியில் வேலை! மைதிலிக்கு தூரத்து சொந்தம்!
மைதிலி,
பிறந்து, வளர்ந்து வாழ்வது சென்னையில்!
என்ஜினீயரிங்
முடித்த கையேடு அரசாங்க வேலை!
தயிர்சாதம்,
ஊறுகாய் சகிதம் குனிந்த தலை நிமிராமல் ஆபீஸ், வீடு என்று செக்குமாடு வாழ்க்கை!
கபாலீஸ்வரரும்
கற்பகாம்பாளும் அப்பா அம்மாவும் நல்ல பையனாகப் பார்த்துச் சொன்னால் நாளைக்கே தலையாட்ட சம்மதம்!
அதுவரைக்கும்
ரமணிச்சந்திரன்தான் அறிந்த இலக்கியம்!
சென்னைக்கு
வேலை தேடி வந்தபோதே எத்தனை வற்புறுத்தியும் வீட்டில் தங்க மறுத்துவிட்டு தோழிகளோடு ஜாகை ஜானுவுக்கு! மாதத்தில் ஒருநாள் தூரத்து அத்தை வீட்டில் தங்கல் - ஒரே ஏஜ் க்ரூப், சுலபமாகத் தோழிகளான இருவர்!
சொல்ல
மறந்துவிட்டேனே, அறைத்தோழிகள் பார்க்கும் சீரியல்கள் வெறுத்து, இப்போது ஜானு அலுவலக நண்பன் கீர்த்திவாசனோடு இரட்டைப் படுக்கையறை ஃபிளாட்டில் வாசம்!
இது
அவள் அப்பாவுக்கும் மைதிலிக்கும் மட்டுமே சொல்லப்பட்ட ரகசியம்!
கீர்த்தி
யாருடி உனக்கு?
மைதிலி
பலமுறை கேட்டதற்கு ஒரே பதில்!
ஃப்ரெண்ட்!
டூ
யூ லவ் ஹிம்?
நோ!
நாட்
யெட்! ஒருவேளை உன்னோடு ஷேர் பண்ணிக்கிட்டா அவனோடையும் பண்ணிப்பேனோ என்னவோ!
தூ!
புத்தி போகுது பாரு!
அதை
நான் சொல்லணும்டி! ஒரு ஆம்பளை பிரெண்டா இருந்தா அவன்கூட படுக்கைல உருளணும்ன்னு எந்த சாஸ்திரம் சொல்லுது?
இதோ,
இந்த ஞாயிறு அத்தை சமையலை ஒருகை பார்த்துவிட்டு படுக்கையறையில் உருண்டுகொண்டே வெட்டிக்கதை!
என்னடி,
அப்பா ஏதாவது சொன்னாரா?
ம்,
ஊர்ல ஏதோஒரு பையன்! ஐப்பசில பார்க்க வர்றாங்களாம்! போகணும்!
என்ன
பண்ணப்போற?
பிடிச்சிருந்தா
ஓகேதான்!
அப்போ
கீர்த்தி?
அவன்
என் ஃப்ரண்டுடி முண்டமே!
அவன்
வருவானா கல்யாணத்துக்கு?
நீ
வருவதானே? அப்போ அவனும்!
என்னமோ
பண்ணு! இதெல்லாம் எனக்கு சரின்னு படலை!
சரி
பாட்டி, தூங்கு!
ஜானு,
சொல்ல மறந்துட்டேன், நாளைக்கு பிளைட்ல டெல்லி! ஒரு டெண்டர் விஷயமா, நானும் எங்க ஆபீஸர் ரகுவும்! ரெண்டுநாள் கேம்ப்!
என்ஜாய்!
எப்படிடீ இருப்பான் ஆளு?
புத்தி
போகுது பாரு! நாற்பது வயசு, ரெண்டு குழந்தைக்கு அப்பன்!
சரி,
டெல்லி குளிருக்கு அனுபவஸ்தன்தான் கரெக்ட்!
தூ!
மூடிட்டு படுடி
சிரித்துக்கொண்டே
தூங்கிப்போனாள் ஜானு!
மறுநாள்,
மதியமே தலைவலி என்று ஆபீஸை விட்டு கிளம்பிப்போய்விட்டான் கீர்த்தி!
வழக்கம்போல வேலை முடிய மணி ஏழு!
நல்லவேளை கீர்த்தி பைக்கைவிட்டுவிட்டு கேப் பிடித்துப்போயிருந்தான்!
பிளாட் கதவைத் திறந்தால், லைட்டைக்கூட போடாமல் இருளோடிக்கிடந்தது!
கோபமாக
கீர்த்தி ரூம் கதவைத் திறந்து பார்க்க, காய்ச்சல் தாளாமல் அனத்திக்கொண்டு படுத்திருந்தான்!
என்ன
எழவுடா இது, ஒரு காய்ச்சலுக்கு தாங்காம இப்படி பொலம்பறே! சொல்லிக்கொண்டே கொஞ்சம் ரசம் சூடுபண்ணி சாதம் பிசைந்து ஸ்பூன் போட்டு எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தாள்!
நாலுவாய்
சாப்பிட்டுவிட்டு வாய் கசக்கிறது என்று மாத்திரை போட்டுப் படுத்துட்டான்!
கொஞ்சநேரம்
பால்கனியில் உட்கார்ந்து இரா.முருகன் நாவல் படித்துக்கொண்டிருந்தவளுக்கு
திஜா படித்தே ஆகவேண்டும் என்று தோன்ற, மோகமுள்ளை எடுத்துவைத்து பத்தாவதுமுறை வாசிக்க ஆரம்பித்தாள்!
ஜமுனாவின்
கையைப்பிடித்துக்கொண்டு
நடந்ததில் நேரம் போனதே தெரியாமல் இடையில் தண்ணீர் குடிக்க எழுந்தபோதுதான் கீர்த்தி ஹாலில் உட்கார்ந்தவாக்கில் தூங்கிக்கொண்டிருந்தது தெரிந்தது!
கிட்டே
நெருங்கவிடாமல் அனலடித்தது!
ஒரு
பாராசிட்டமால் கொடுத்து கைத்தாங்கலாக கொண்டு படுக்கையில் சாய்த்தபோது வாய்விட்டுக் கேட்டான்,
“ஜானு,
தலை ரொம்ப பாரமாயிருக்கு! கொஞ்சம் பிடிச்சுவிடேன்!”
படுக்கையிலேயே
உட்கார்ந்து பிடித்துவிட ஆரம்பித்தவள், எப்போது என்றே தெரியாமல் தூங்கிப்போனாள்!
காலையில்
காஃபியும் கையுமாக கீர்த்தி வந்து எழுப்பும்போது மணி ஏழு!
நல்லா
இருக்கு நீ வைத்தியம் பார்த்த
லட்சணம்!
அவன்
சொன்னபோதுதான் உறைத்தது தான் அவன் படுக்கையில் படுத்திருந்தது
என்னடா,
இங்கேயா நைட்டு ஃபுல்லா தூங்கினேன்?
எழுப்பமாட்டே?
அப்படியே
என் கைமேல் படுத்தவ நல்லா தூங்கிட்டே, சரி, தொந்தரவு பண்ணவேண்டாம்ன்னு விட்டுட்டேன்!
தேங்க்ஸ்
கீர்த்தி!
சொல்லியவாறே
எழுந்துபோனாள்!
கொஞ்சம்கூட
ஆடை குலையாமல் இருந்தது சொன்னது அவன் கண்ணியத்தை!
ப்ரேக்ஃபாஸ்ட்
சாப்பிடும்போது தயங்கித் தயங்கி கேட்டாள் டேய், நீ ஒன்னும் தப்பா
எடுத்துக்கலையே!
போடி
லூசு, நீ என் ஃப்ரெண்ட்!
போய் கிளம்பு, நேரமாச்சு!
அதானே
பார்த்தேன், தப்பா நெனைச்சிருந்தேன்னா மூஞ்சிய ஒடச்சிருப்பேன்!
சிரித்துக்கொண்டே
அவன் முதுகில் தட்டிவிட்டுப்போனாள் ஜானு!
டெல்லி
போகும்போது தவிர்க்கமுடியாமல் பக்கத்து இருக்கையில் உட்கார்ந்திருந்த ரகு மீது சேலை நுனிகூட பட்டுவிடாமல் ஜாக்கிரதையாக இருந்ததில் இரண்டுமணிநேர பயணம் ஒரு யுகம் போவதுபோல் இருந்தது மைதிலிக்கு!
எத்தனை கெஞ்சியும் இந்தப் பாழாய்ப்போன அம்மா கூட வரமாட்டேன்னுட்டா! நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் இவனோட தனியா இருக்கணும்! பகவானே!
ரகுநந்தன்
உட்கார்ந்த உடனே தூங்க ஆரம்பித்தவன் டெல்லி வந்துதான் இவள் பக்கமே திரும்பினான்!
அதுவரைக்கும் பக்கத்தில் இவள் இருந்ததே அவனை பாதிக்கவில்லை! கொஞ்சம் ஏமாற்றமாகக்கூட இருந்தது மைதிலிக்கு!
ஏர்போர்ட்டை
விட்டு வெளியே வந்தபோதுதான் குளிர் உறைத்தது!
பல்லெல்லாம் தந்தியடிக்க ஓட்டலுக்கு வந்தபோதுதான் ஸ்வெட்டர் எடுத்து வைக்க மறைந்துபோனது ஞாபகம் வந்து தொலைத்தது!
மூன்றாவது
மாடி, பக்கத்து பக்கத்து ரூம்!
தன்
ரூமுக்கு போகுமுன் ரகு கேட்டான், "நாளைக்கு காலைல பதினொருமணிக்குத்தான் வொர்க்! இப்போ சும்மா வெளியே போறேன், வர்றீங்களா?"
எவ்வளவு
தைரியம், தனியா தன்னோட ஊர் சுத்த வருவேன்னு நெனைக்குது பார் குரங்கு!
முறைத்துப்
பார்த்தவாறே சொன்னாள் "நோ, நீங்க போயிட்டு வாங்க!"
ஓகே!
நான் வர லேட் ஆகும்,
டின்னர்?
நான்
ரூமுக்கு வாரவெச்சு சாப்பிட்டுக்கறேன்! காலைல பார்க்கலாம், குட்நைட்!
மணி
மதியம் நாலு! குட் ஈவினிங்!
சொல்லிக்கொண்டே
கதவை சார்த்திக்கொண்டான் ரகு!
அவசரமா
ரெஸ்ட்ரூம் போய்ட்டு பைப்பில் கையை வைத்தபோது ஐஸ் கத்தி!
போனவருஷம்
கொடைக்கானல் போனபோதுகூட இத்தனை குளிர் இல்லை!
அம்மா
வரலைன்னு சொன்ன கோபத்துல படிக்க புத்தகம்கூட எடுத்துக்கிட்டு வரலை! நாளைக்கு மாத்திக்க ஒரு செட் துணி, நைட்டுக்கு ஒரு நைட்டி! மேக் அப் சமாச்சாரங்கள்! அவ்வளவுதான் மொத்த லக்கேஜ்!
கொஞ்சநேரம்
டிவி பார்த்துக்கொண்டு படுத்திருந்தாள்! ரஜாயை நல்லா இழுத்து போர்த்தி சுருண்டு படுத்தாலும் தூக்கம் வராமல் கட்டிக்கொண்டது குளிர்!
பேசாமல்
ரகுநந்தன் கூட வெளியே போயிருக்கலாமோ?
மோட்டுவளையைப்
பார்த்துக்கொண்டே படுத்திருந்தவளுக்கு பசி வயிற்றைக் கிள்ள, ஆறு மணிக்கே டின்னர் ஆர்டர் பண்ணி சாப்பிட்டு முடித்தபிறகு என்ன செய்வதென்றே தெரியவில்லை!
பக்கத்து
ரூம் சலனமில்லாமல் இருந்தது!
கொஞ்சநேரம்
தூங்கி, விழித்தபோது மணி பத்து!
குளிருக்கு
காட்டன் நைட்டி எந்தவிதத்திலும் காவல் இல்லை என்பது ரொம்ப லேட்டா புரிஞ்சது!
ஹீட்டர்
வேற வேலை செய்யலை! சூடா ஏதாவது குடிக்கலைன்னா செத்துப்போய்டுவோம்!
காஃபி சொல்லலாம்ன்னு
இண்டர்காமை எடுத்தபோது டின்னர் கொண்டுவந்தவன் மாரையே பார்த்தது நியாபகம் வர, பத்துமணிக்கு அவனை ரூமுக்கு கூப்பிடுவது சரிவராது என்று தோன்ற, கம்மென்று விட்டுவிட்டாள்!
மணி
பத்தரை ஆச்சு!
குளிர்
தூங்கவிடவில்லை
சரி,
ஆபத்துக்கு பாவமில்லை, ரகு முழிச்சிருந்தா அவர் ரூமுக்குப் போய் காஃபி ஆர்டர் பண்ணி குடிச்சுட்டு வந்து படுத்துக்கலாம்ன்னு தோண,
பக்கத்துக்கு
ரூம் வாசலுக்கு வந்து உள்ளே ஏதாவது சத்தம் கேட்கிறதான்னு பார்க்க, நல்லவேளை சத்தமா டிவி பாட்டு காதில் விழுந்தது!
தயக்கமாக
கதவை தட்ட,
எஸ்,
கம் இன்! - ரகு குரல்!
கதவை
தள்ளித் திறந்து உள்ளே நுழைந்தவள் சத்தியமாக அவனை அந்தக் கோலத்தில் எதிர்பார்க்கவில்லை!
அந்தக்
குளிரில் வெறும் ஷார்ஸும் வெற்று மார்புமாய் உட்கார்ந்திருந்தவன் எதிரில் பொன்னிற திரவம் ஒரு க்ளாசில்!
அவனும்
அவளை எதிர்பார்க்கவில்லை என்பது அவன் கண்களில் தெரிந்த அதிர்ச்சியில் புரிந்தது!
ஏற்கனவே
குளிரில் விறைத்துப்போகும்படி நடுங்கிக்கொண்டிருந்தவளுக்கு
இன்னும் உடம்பு நடுங்க ஆரம்பித்தது!
பின்னால்
கதவுவேறு தானாக சார்த்திக்கொண்டது!
குளிர்,
காஃபி என்று ஏதோ உளறியவளை விநோதமாகப் பார்த்தபடி எழுந்தான் ரகு!
எஸ்,
மைதிலி, என்ன வேணும்?
ஆறடி
உயரம், அசாத்தியமான உடல்கட்டு, கையில் கோப்பையும் சின்ன ஷார்ட்ஸுமாய் நின்ற ஆண் வடிவம் ஏதோ செய்ய, எப்போது அவன் கைகளில் விழுந்தாள், எப்படி இருவரும் படுக்கைக்குப் போனார்கள் என்பது புரியவே இல்லை.
டெல்லி
குளிருக்கு அவன் உடம்பு சூடு தேவைப்பட்டதும், அவன் கைகள் பட்ட இடங்கள் சிலிர்த்து துடித்ததும், அவன் செய்ததெல்லாம் இன்னும் இன்னும் என்று மனத்துக்குப் பிடித்ததும் தன் கைகள் அவன்மேல் போட்டி போட்டு ஊர்ந்ததும் ..
மைதிலிக்கு
அன்று தூங்கா இரவு!
காலை
தன் அறைக்கு மைதிலி வந்தபோது மணி எட்டு!
பத்து
மணிக்கு கிளம்பி மத்திய அரசு அலுவலகம் போனபோதும், மாலை ஊர் திரும்ப ஃபிளைட் ஏறியபோதும் எதுவும் நடக்காததுபோல் இயல்பாய் இருந்தான் ரகு!
ஏர்போர்ட்டிலிருந்து
டாக்ஸி பிடித்து வீடு வந்து அம்மா முகத்தைப் பார்க்க மட்டும் கொஞ்சம் தயக்கமாக இருந்தது!
அந்த
ஞாயிறு ஜானு வந்து வழக்கம்போல் அரட்டை!
கீர்த்திக்கு
காய்ச்சல் வந்த கதையை சுவாரஸ்யமாகச் சொன்னாள் ஜானு- அவன் படுக்கையில் படுத்து தூங்கிவிட்டது உட்பட!
ஸோ,
அட்லாஸ்ட் யூ ஹேட் செக்ஸ்!
நோ!
வி ஜஸ்ட் ஸ்லெப்ட்!
நம்பறமாதிரி
ஏதாவது சொல்லுடி!
திடீரென்று
ஞாபகம் வந்தவளாய் கேட்டாள் " எப்படி இருந்தது டெல்லி ட்ரிப்?
ஹவ்
வாஸ் ரகு?"
மைதிலி
நிதானமாகச் சொன்னாள்
" எல்லா
ஆம்பிள்ளைகளும் சில்லறைகள்! வெறிச்சு பார்த்துக்கிட்டே வந்தது ஃபிளைட்டில்!
பெரிய
மன்மதக்குஞ்சுன்னு நினைப்பு!
ரூமுக்குள்
போய் கதவை சார்த்தியவள் மறுநாள் ஆபீஸ் போகும்போதுதான் அந்த ஆளைப் பார்த்தேன்!"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக