அப்துல்
கலாம் இறந்ததும் ஒரு ஆறுமாத காலம், கலாம் சொன்னதாய் தத்துவ முத்துக்களும், அவரது அசுரசாதனைகளுமாய் இணையம் நிரம்பி வழிந்தது!
இப்போது
கலைஞர் காலம்!
கல்லணையைக்
காட்டியது கலைஞர் என்பதிலிருந்து, தமிழர் நலன் ஒன்றே குறிக்கோள் என வாழ்ந்து மறைந்தவர்
எனபது வரை!
உண்மையில்
அப்படித்தானா?
மக்கள்
நலனுக்காக மட்டுமே நடத்தப்படும் இயக்கம்தான் திமுகவா?
இருக்கும்!
பெரும்பான்மை
சொன்னால் உண்மையாகத்தானே இருக்கும்?
அதிலும்
காலம் காலமாக கட்சியில் இருப்பவரெல்லாம் கூசிப்போகுமளவு புது திமுகவினர் அள்ளிவிடுபவை அத்தனை மிகை!
ஊரறிந்த
பிராமண வீட்டில் சர்க்கரைப்பொங்கல் பாத்திரம் கழுவிக்கொண்டிருந்தவனுக்கு இன்று திடீர்
ஞானோதயம் வந்து,
கலைஞரைப்பற்றி சின்னக் குறை சொல்பவனும் பிராமணன்!
இவர்களெல்லாம்
இப்போது வந்து சேர்ந்த ஒட்டுண்ணிகள்!
அடுத்து
கழக ஆட்சிதான் என்பதை மோப்பம் பிடித்துக்கொண்டு எதையோ எதிர்பார்த்து இப்போது வந்து கண்ணைமூடி கோஷம் போடும் காக்கைக் கூட்டம்!
இவர்கள்
விளைவிக்கப்போகும் கேடு மிகப்பெரியது!
இதை
என்றேனும் கழகத் தலைமை உணரக்கூடும்!
சரி!
அது உட்கட்சிப் பிரச்னை!
நமக்கெதற்கு!
போதாக்குறைக்கு
ஒரே பதவியில் ஓஹோவென்று உயர்ந்த உத்தமர் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் மாண்புமிகு செந்தில் பாலாஜி வேறு புதிதாக ஞானஸ்நானம் பெற்றிருக்கிறார்!
கேசி
பழனிசாமி இவரை இன்னொரு சின்னசாமி ஆக்குவாரா இல்லை, மணல்கோட்டையில் புதைவாரா என்பதை பொறுத்துப் பார்ப்போம்!
சரி,
கொஞ்சம் பழைய கதையிலிருந்து வருவோம்!
தேர்தல்
அரசியலில் ஈடுபடுவது என்ற கொள்கை வேறுபாடு காரணமாக பெரியாரைப் பிரிந்துவந்த கண்ணீர்த் துளிகளை 1967 பொதுத் தேர்தலில் எதிர்த்துப் பிரச்சாரம் செய்தவர் பெரியார்!
முழுமூச்சாய்
ஆதரித்தவர் குலக்கல்வி
நாயகர்
ராஜகோபாலாச்சாரியார்!
தன்
சொந்தப்பகை காரணமாக காமராஜரை ஒழிக்க ராஜாஜி வேலை செய்ய, தனித்து நின்ற காங்கிரசை எதிர்த்து அப்போதே மெகா கூட்டணி அமைத்தது திமுக!
காமராஜரின்
சாதியை மறைமுகமாய் குறிப்பிட்டு காமராஜ் அண்ணாச்சி என்று கோஷங்கள்!
நிறைவேற்ற
முடியாத தேர்தல் வாக்குறுதிகளை அள்ளித் தெளிப்பதில் முன்னேர் திமுக!
அந்தத்
தேர்தலில் அரிசி விலை முக்கிய பிரச்சார சாதனம்!
ரூபாய்க்கு மூன்றுபடி
அரிசி
என்ற
சாத்தியமே
இல்லாத
வாக்குறுதியை
கூச்சமே
இல்லாமல்
வழங்கியது
திமுக!
பிறகு
அதே வாக்கு சாதுர்யத்தால், மூன்றுபடி
லட்சியம்,
ஒரு
படி
நிச்சயம்
என்று சாமார்த்தியமாக (அதுவும் சாத்தியமற்றது என்று தெரிந்தும்)
மாற்றிக்கொள்ளப்பட்டது!
வாய்
ஜாலத்தில் மயங்கிக்கிடந்தது தமிழினம்!
தேர்தல்
களம் சூடு பிடித்து தேர்தல் நெருங்கும்போது நடந்தது அந்த சம்பவம்!
சொந்தப்
பகை காரணமாக ஒரு நடிகர் இன்னொரு நடிகரைச் சுட,
அடித்தது
அதிர்ஷ்டம் திமுகவுக்கு!
சினிமாவால்,
அடுக்குமொழி வசனங்களால் மட்டுமன்றி, அந்த நடிகரின் பிரச்சாரத்தால் உருவாகி வளர்ந்த கழகம் அந்தப் பொன்னான வாய்ப்பை தவறவிடுமா என்ன?
பட்டிதொட்டியெங்கும்
கழுத்தில் கட்டுப்போட்ட எம்ஜியாரின் ராயப்பேட்டை அரசு மருத்துவமனை புகைப்படங்கள் போஸ்டராய் அலற, அண்ணாவின் இதயக்கனி அந்த வெற்றிக்கனியை பறித்துத் தந்தது!
காந்தி
சுடப்பட்டார், மக்கள் திலகம் பொன்மனச் செம்மலும் சுடப்பட்டார்! அவ்வளவே!
ஏன் சுடப்பட்டார்
என்ற
வேறுபாடு
ஆட்டு
மந்தைக்கு
அனாவசியம்!
அனுதாப
அலை காங்கிரஸை சுருட்டி வீசியது!
சொன்ன
வாக்குறுதியை நிறைவேற்ற கஜானாவில் ஏது காசு?
மக்கள்
பணம் கருவூலத்துக்கு வர என்ன வழி?
உதித்தது லாட்டரி
டிக்கெட்!
திமுக
அறிமுகம் செய்த இன்னொரு மகத்தான தீமை!
பல
குடும்பங்களின் ஒட்டுக்கோவணம் வரை உருவி வீசிய உன்னத திட்டம்!
மாநிலச்
செய்தி அறிக்கைகளில் லாட்டரி முடிவுகள் அறிவிக்கப்பட, பேனாவும் கையுமாய் ஒரு கூட்டமே பொதுவெளி வானொலிப்பெட்டிகளில்
காதை வைத்துக் காத்திருந்தது!
விழுந்தால் வீட்டுக்கு
இல்லாவிட்டால்
நாட்டுக்கு
என்று
கவர்ச்சி
கோஷம்
ஊட்டிய
நாட்டுப்பற்றில்,
நாட்டிலேயே
அதிக
லாட்டரி
சீட்டு
விற்கும்
மாநிலமாக
சாதனை
படைத்தது
தமிழகம்!
உழைப்பை
மறக்க அன்று விதைக்கப்பட்ட விஷவிதை இன்று பட்டி தொட்டியெங்கும் வடவர் வேலைக்கு வந்து குவியுமளவு விருட்சமாக வளர்ந்து நிற்கிறது!
இலாகா
இல்லாத மந்திரி பதவி கொடுத்து காலடியில் வைத்திருக்கக்கூட மனமில்லாமல் எம்ஜியாரை ஒழிக்க பிள்ளையோ பிள்ளை என ஒரு தொல்லை
சொந்த வீட்டிலிருந்து கொம்புசீவி களமிறக்கப்பட்டது!
எம்ஜியாரை
நகலெடுத்த நடையுடை பாவனையோடு களமிறங்கிய அந்த வான்கோழி, பிற்காலத்தில்
"அட
முக முத்து, உங்க அப்பனுக்கேது சொத்து" என்று அதே எம்ஜியார் ஆரம்பித்த கட்சி கோஷமிட்டு வெல்ல உதவியது இயற்கை முரண்!
அதன்பின் எம்ஜியார்
சாகும்வரை
முதல்வர்
பதவி
எட்டாக்கனி
என்றானது!
திமுகவுக்கு
நேர்ந்த தீமை இது எனில்,
இந்த ஒருகொடியில் பூத்த இரு மலர்கள் போட்டுக்கொண்ட பங்காளி சண்டையில் தேசியக் கட்சிகள் தமிழகத்தில் ஃபேட் அவுட் ஆனது நாட்டுக்கு விளைந்த தீமை!
சினிமாவில்
ஒரு ஹீரோ, அவனுக்கு ஒரு வில்லன் என்று பார்த்துப்பார்த்து வளர்ந்த தமிழ் சமூகம், ஹீரோ எம்ஜியாரையும் மெயின் வில்லன் திமுகவையும் மட்டுமே கொண்டாடியது!
தேசிய
நீரோட்டம் கொஞ்சம் கொஞ்சமாக விலகி, வறண்டே போனது!
தேர்தலில்
வெல்ல நடைமுறை சாத்தியமற்ற வாக்குறுதிகள் மட்டுமல்ல, மார்ஃபிங் செய்த புகைப்படங்களையும் உபயோகிக்கலாம் என்று ஜனநாயக மாண்புகளை பள்ளத்தில் இறக்கிய பெருமையும் திமுகவுக்கே!
எப்படியாவது
வெல்லவேண்டும் என்ற உந்துதலில், எம்ஜியார் இறந்துவிட்டார்! தேர்தல் முடிந்ததும் அவர் பிணம்தான் அமெரிக்காவிலிருந்து வரும் என்று ஒரு பிரச்சாரம் 1984 தேர்தலில் திமுக மேடைகளில் முடுக்கிவிடப்பட்டது!
ப்ரூக்ளின்
மருத்துவமனையில் எம்ஜியார் சிகிட்சை பெரும் புகைப்படங்கள் அதிமுக சார்பில் வெளியிடப்பட,
அந்த
வரலாற்றுச் சிறப்புமிக்க மார்ஃபிங் புகைப்படங்களை வெளியிட்டது முரசொலி!
அக்டோபர்
31ம் தேதியே இறந்துபோன இந்திரா எம்ஜியாரை ப்ரூக்ளின் மருத்துவமனையில் சந்திப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு இதுபோல் அந்தப் புகைப்படமும் போலி என்று வாதிட்டது திமுக!
மக்கள்
இதை சற்றும் ரசிக்கவில்லை என்ற உண்மை முகத்தில் அறைய, எதிர்வினை தகிப்பைத் தாங்கமுடியாத திமுக தலைவர் இன்னொரு அற்பமான பிரச்சாரத்தில் ஈடுபட்டார்!
“இந்த ஒருமுறை
எனக்கு
வாக்களியுங்கள்!
என்
நண்பர்
நலமுடன்
திரும்பிவந்தால்,
நானே
என்
பதவியை
அவருக்குத்
தந்துவிடுகிறேன்!”
மக்கள்
அந்தத் தியாகம் செய்யும் கஷ்டத்தை அவருக்கு வழங்கவில்லை!
1987ல்
எம்ஜியார் சாகும்வரை முதல்வர் நாற்காலி கனவாகவே இருந்தது திமுகவுக்கு!
தேன்
எடுத்தவன் புறங்கையை நக்கினான் என்ற ஊழல் செய்தோம் என்பதற்கான விபரித வாக்குமூலம் உட்பட, எதுவுமே பலன்தரா கையறு நிலை!
ஒருவழியாக
1989 தேர்தல் நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது!
பதவிசுகத்துக்கு
காத்திருந்த திமுகவின் வட்ட, மாவட்டச் செயலாளர்களுக்கு கோரைப்பல் முளைத்தது அப்போதுதான்!
காவல்
நிலையங்கள் கட்டப்பஞ்சாயத்துக் கூடங்கள்ஆனதும்,
கரைவேட்டி கட்டியவனே நீதிபதி ஆனதும் அப்போதுதான் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பம்!
அதன்பின்
மாவட்டக் குறுநில மன்னர்கள் எப்படி செழித்தார்கள் என்பதற்கு இரு சோற்றுப்பதம்!
அதற்குமுன்
ஒரு சின்ன விஷயம்!
உட்கட்சி
ஜனநாயகத்தில் உண்மையிலேயே தேசிய அளவில் சிறந்து விளங்கிய கட்சி திமுக!
ஆனால்,
காலம் அதையும் புரட்டிப்போட்டது!
எல்லாவகையிலும்,
தன்னை நிரூபித்து தலைமைக்கு வந்தவர் ஸ்டாலின்!
நெருக்கடி
நிலையின்போது தந்தை வழியனுப்ப தானாக சரணடைந்து சிறை சென்றவர் ஸ்டாலின்!
எந்தக்
குற்றச்சாட்டும் இல்லாமல் கருணாநிதியின் மகன் என்ற ஒற்றைக்காரணத்தால் சிறையில் அடித்துத் துவைக்கப்பட்டார்!
சிட்டிபாபு
மட்டும் இல்லாவிட்டால், பிணமாகத்தான் வெளியே வந்திருப்பார்!
அப்படி
வேர்வையும் ரத்தமும் சிந்தி, முறைப்படி தலைமைக்கு உயர்ந்தவர் ஸ்டாலின்! அவரை வாரிசு என்று விமர்சிப்பது உண்மையிலேயே கேவலமான வரலாற்றுப்பிழை!
ஆனால்,
அதை கேலிக்குள்ளாக்கும் விஷயம் அவர் குடும்பத்திலேயே நடந்ததுதான் பெரும் சாபம்!
துணைவியார்
நச்சரிப்பில், சிங்கப்பூரில் நிம்மதியாக கவிதை எழுதிக்கொண்டிருந்த கனிமொழி அரசியலில் இறக்கப்பட்டதும், உதவாக்கரை மகன் எந்த நிர்பந்தத்தாலோ மதுரைக்கு மகுடம் சூட்டப்பட்டதும், அடிப்படை அறிவற்ற ஒரு மத்திய கேபினெட் அமைச்சர் ஆனதும், ஸ்டாலின் என்ற உழைப்பாளிக்கும் களங்கம் சேர்த்த பிழை!
அதை
சாதகமாக்கிக்கொண்டன திமிறித் திரிந்த சில மாவட்டத் தலைகள்!
அரசியல்
என்பது நோகாமல் காசு கொழிக்கும் வியாபாரம் என்றானபின், தன் தொழிலுக்கு யாரோ மாவட்டத் தலைமையாவதை விரும்பாமல், தன் வாரிசுகளை களமிறக்கினார்கள் குறுநில மன்னர்கள்!
ராமதாஸின்
சாதி ஓட்டைப் பிரிக்க சேலத்தில் களமிறக்கப்பட்ட அரசியல் அசிங்கம் அதில் ஒன்று!
பட்டப்பகலில்,
சகோதரன் மகனை நடுத்தெருவில் ஓடஓட விரட்டி சுட்டுக்கொன்ற மாவீரர், தன் வாரிசை களமிறங்கினார்!
தட்டிக்கேட்ட
கலைஞரையே பொதுக்குழுவில் ஸ்டாலினை காரணம் காட்டி விரலுயர்த்தி எச்சரித்தது அந்த சிங்கம்!
வாய்ப்புக்
கிடைப்பவர்கள் சேலம் பேருந்து நிலையத்துக்குப் போய் சற்றே அண்ணாந்து பாருங்கள்! அண்ணாரின் பெயர் சொல்லும் மாளிகைகள் உங்களை சூழ்ந்து நிற்கும்!
அங்கம்மாள்
காலனி அராஜகங்கள் முதல் அரசு மருத்துவமனை செவிலி உட்பட விடியவிடியக் கேட்க பல கதைகள் கிடைக்கும்!
வரக்கூடாத
வியாதிவந்து வாரிசு இறக்க, திண்ணையில் சீட்டாடிக்கொண்டிருந்த அடுத்த வாரிசு அரியணை ஏறியது!
கூடவே
ஒட்டித் திரிந்த சிங்கத்தின் தம்பி மகன் சுரேஷ், பதினாறடியெல்லாம் பாயவில்லை!
ஆரம்பமே, அறுபதடி!
ரியல்
எஸ்டேட் விவகாரத்தில் ஒரு போலீஸ்காரரின் ஏழுபேர் கொண்ட குடும்பத்தையே ஒட்டுமொத்தமாக போட்டுத் தள்ளி சிறை சென்றவரை,
அரசு
காரில், அமைச்சராகவே சென்று சிறையில் சந்தித்தது சிங்கம்!
அந்த
அளவு நெறிமுறைகள் போற்றப்படும் ஊரானது சேலம்!
சற்றும்
சளைத்ததல்ல கொங்கு மண்டலம்!
ஈரோட்டுக்
குறுநில மன்னர் பெரியசாமியின் வாரிசு ராஜா!
ஸ்டாலினின்
ஆப்தர் என்பது உப தகுதி!
நிலத்தைக்
கொடுக்க மறுத்த பெருந்துறை சிவபாலனை விடியவிடிய கட்டிவைத்து வெளுத்ததும், பெருந்துறை வீட்டிலும் தோட்டத்திலும் புல்டோசர்களை விட்டு கஜா புயலின் மாடலை செய்து காட்டியதும் ராஜ சாதனைகளின் டீஸர்!
அத்தனை
தென்னை மரங்களும் மண்ணோடு மண்ணாக சில மணித்துளிகளே தேவைப்பட்டன!
அதைத்
தொடர்ந்து அரங்கேறிய காட்சிகள் ஒரு மிகப்பெரிய த்ரில் தொடர்!
எல்லா
சிவபாலன்களுக்கும் கைகொடுக்க ஜி கே வாசன்கள்
வருவதில்லை! பெருந்துறை சிவபாலனுக்கு அந்த அதிர்ஷ்டம் இருக்க,
விஷயம்
வெளிச்சத்துக்கு வந்து நீதிமன்றப் படியேறியது!
சிலநாள்
தள்ளிவைக்கப்பட்ட ராஜா மீண்டும் இப்போது மகுடாதிபதி!
முத்துசாமி போன்றோர்
கட்சியில்
இருந்தும்
ஈரோட்டில்
கட்சி
தள்ளாட
ராஜா
ஒற்றைக்காரணி!
இவை
இரண்டும் நான் அறிந்த உதாரணங்கள்!
திமுகவின்
அராஜகங்கள் எழுதத் தீராத காவியங்கள்!
நடைப்பயணம்
போய் கத்தியால் வெட்டிக்கொண்டு தற்கொலை செய்துகொண்ட தா கிருட்டிணன், அலுவலகத்துக்கு
தீ வைத்து தற்கொலை செய்துகொண்ட மதுரை தினகரன் ஊழியர்கள் என்று சில கதைகள் அந்தக் காவியத்தின் ஏடுகளில்!
தேர்தலுக்குத்
தேர்தல் அணிமாறுவதில் மருத்துவருக்கு முன்னோடியும் கழகம்தான்!
நெருக்கடி
நிலையில் ஆட்சியை இழந்து, மகனை ஏறத்தாழ இழந்து வீறுகொண்டு எழுந்து இந்தியாவுக்கே முன்மாதிரியாய் நின்ற இரும்பு மனிதர்,
“நேருவின் மகளே
வருக,
நிலையான
ஆட்சி
தருக!”
என்று
அடுத்த தேர்தலில் அடுக்கு மொழி பேச நாட்டு நலனே காரணமா என்பது அறியவொண்ணாத மஸ்டர்ரோல் ரகசியம்!
மாறன்
மீது வைத்த மலர்வளையம் வாடுமுன்பு ஐந்து வருடம் பதவி சுகம் அனுபவித்த கூட்டணியைவிட்டு காரணமே சொல்லாது வெளியே வந்தது வெற்றி மட்டுமே நோக்கம் எனும் சாணக்கியம்!
இதனை
இவன் முடிப்பான் என்றறிந்து அதனை அவன் கண் விடுவதில் தலை சிறந்தவர் கலைஞர்!
மாறன்
இருக்கும் வரை டெல்லி கலைஞரின் கோட்டை!
அதன்பின்
பாலு, சிவா என்ற ஜாம்பவான்களை விட்டு, பால்குடி மாறா பாலகன் என்று நம்பி, மாறனுக்கு கைமாறு செய்வதாய் தயாநிதியை டெல்லிக்கு அனுப்பியது மாபெரும் சறுக்கல்!
டெல்லியில்
இருந்த மொத்தப்பிடியும் கைநழுவியது!
ஆக்டோபஸ்ஸாய்
நீண்ட மாறன் சகோதரர்களின் பிடியில் சிக்கி சின்னாபின்னமாகி
கலைஞரை
கொண்டாடித் தீர்த்த திரையுலகமும், ஊடகங்களும் முழுப் பகையாயின!
திரை
மறை ஊழல்கள் வெளிச்சம்போட்டு செய்யப்பட்டன!
பால்
குடி மறவாப் பாலகன் மொத்தமாய் பாலூற்றிவிட்டார்!
சன்
டிவி சொத்து பிரச்னையில், தாத்தா தாத்தா என்று சொல்லியே, எதிர்க்கட்சிகளும் கேட்காத கேள்விகளை வெட்டவெளிப் பேட்டியில் கேட்டு தன் நன்றியைக் காட்டினார் மாறன் மகன்!
இப்போது மீண்டும்
அவர்
அதிகார
மையத்தில்!
சரி, இத்தனை குறையுள்ள திமுகவை முற்றாக நிராகரித்துவிடலாமா?
முடியாது என்பதைவிட,
கூடாது என்பதுதான் இப்போதைக்கு
உண்மையான, நேர்மையான பதில்!
மேற்சொன்ன அத்தனை
குறைகளிலும்
திமுகவைவிட
பல
படிகள்
முன்னேறி
அராஜகத்தின்,
ஊழலின்,
நிர்வாகம்
சீர்கேட்டின்,
அடிமைத்தனத்தின்
உச்சமாக
இருக்கிறது
ஆளும்
கட்சி!
மூக்கணாங்கயிற்றை
எஜமானர்களிடம் கொடுத்துவிட்டு இறுதி வாய்ப்பில் கிடைத்தவரை மேய்ந்துகொண்டிருக்கிறது ஆளும் கூட்டம்!
இன்னும் மிச்சமிருக்கும் கால மேய்ச்சலுக்குப்பின் முழுக்க மொட்டையடிக்கப் பட்டிருக்கும் தமிழகம்!
இன்றுவரை,
தேனெடுத்து புறங்கையைத்தான் நக்கியிருக்கிறது திமுக!
மக்களுக்கும்
கொஞ்சம் தேன் கிடைத்திருக்கிறது!
இன்று
தேனையும் குடித்து, அடையையும் மென்று சக்கையை மக்கள் முகத்தில் துப்பிக்கொண்டிருக்கிறது அரசு!
இதிலிருந்து மீட்க
கிளம்பியிருக்கும்
நாளைய
முதல்வர்களின்
கூட்டத்தில்
ஒரே
நம்பிக்கை
விளக்கு
ஸ்டாலின்
என்பதில்
எந்த
மாற்றமும்
இல்லை!
சில
அணுகுமுறைகள் தவிர்த்து,
பெரும்பாலும் அவர் செயல்பாடுகள் நேர்மையாகவே இருக்கின்றன!
ஊழல் சேற்றில்
ஊரே
குளிக்க,
இன்றுவரை
ஊழல்
கரை
படியாது
இருக்கும்
ஒரு
தகுதி
போதும்
அவருக்கு
ஒரு
வாய்ப்புக்
கொடுத்துப்
பார்க்க!
எனில், எதற்கு இத்தனை குறை சொல்லி ஒரு பதிவு?
பழைய கதைகளை
இன்றைய
தலைமுறை
மட்டுமல்ல,
தலைமையும்
மறக்காது
இருக்கவே
ஒரு
நினைவூட்டல்
இந்தப்
பதிவு!
எப்போதும்
நல்வழித் திரும்ப வாய்ப்பு இருந்துகொண்டேதான் இருக்கிறது! ஸ்டாலின் அந்தப் பாதையை தேர்ந்தெடுப்பார் என்று நம்புவோம்!
நம்பிக்கைதானே
வாழ்க்கை!
போலித் துதிபாடிகளை
ஒதுக்கி,
தன்னிலை
அறிந்து
வழிநடத்த
ஸ்டாலினுக்கு
இறை
அருளட்டும்!
அன்றி,
என் பாட்டனுக்கு
நான் சுருட்டும் கறிக்குழம்பும் வைத்துப் படையல் போட்டதை மூடநம்பிக்கை என்று பரிகாசம் செய்துகொண்டே,
கலைஞர் சமாதியில்
தயிர்வடை படையல் போடுவதும்,
பஜனை பாடுவதும் மட்டுமே பகுத்தறிவு என்று
போலிவேஷம் போடுவதும்,
கடைக்கோடி தொண்டனுக்கும் பின்னால் நிற்கும்
மூன்றாம் கலைஞருக்கு முடி சூட்டுவதும்
என்று
பழகிய பாதையை தேர்ந்தெடுப்பாரெனில்,
இடிப்பார் இல்லா மன்னனுக்கு என்ன நடக்கும் என்பதை
கலைஞர் உரை படித்துத் தெளியட்டும்!
No comments:
Post a comment