இறுதிப்பதிவு!
முதல்வர்
நாற்காலிக்கு வேட்பாளரை வைத்திருக்கும் பிற கட்சிகள்!
இந்தப்பதிவே
ஒரு தேவையில்லாத ஆணி!
திமுக, அதிமுக என்னும் இரண்டு சமுத்திரங்களின் கரையில் கரையக் காத்திருக்கும் மண் கலச நீர்த்துளிகள் பற்றி ஒரு தேவையற்ற அலசல்!
தங்களிடம் முதல்வர் வேட்பாளர் என்றொருவர் இருப்பதாய் உறுதியாக நம்பும் கட்சிகள் பற்றி ஒரு மீச்சிறு அலசல்!
சீனியாரிட்டி
அடிப்படையில் முதலில்
தேமுதிக:
அது
ஒரு கனாக்காலம்!
2011 தேர்தலில்
அதிமுகவோடு கூட்டணி!
29 தொகுதிகளில்
வென்று சட்டமன்றத்தில் திமுகவை புறம்தள்ளி பிரதான எதிர்க்கட்சியாக அமர்ந்த காலம்!
கை
நீட்டி நாக்கைத் துருத்தி கேப்டன் சீறியபோது நினைத்துக்கூடப் பார்த்ததில்லை கட்சி இப்படி முற்றாய்த் தேய்ந்து போகும் என்று!
அடுத்த
தேர்தலில் போட்டியிட கட்சி இருக்குமா என்பதே தெரியாமல் நாமும் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்ச வேண்டாம்!
ரிப்
தேமுதிக!
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்:
மன்னார்குடியின்
புன்னகை மன்னன், ஆர்கே நகரின் இருபது ரூபாய் சித்தர், சின்னம்மாவின் நேரடி வாரிசு ஆரம்பித்து நடத்தும் கலகக் கழகம்!
பணம்
கொழிக்கும் மர்மதேசம்!
சின்னம்மா
சிறை மீண்டபின்பு தாய்க்கழகத்தை கபளீகரம் செய்யக்கூடும் என்பதே இதன் ஒரே எதிர்பார்ப்பு!
அப்படி
நடந்தால், அதிமுக இதில் கரையும், அன்றேல், இது விரைவில் சிதறும்!
பாமக:
அடுத்து, அன்புமணி என்னும் நான் என்று போன தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வரே ஆன கட்சி!
எப்போதுமே,ஆற்றின் இரு கரைகளுக்கும் மாறிமாறிப் போகும் பரிசல்!
அம்மாவீட்டு
வாசலில் பூங்கொத்தும், ஐயா வீடு வாசலில் சால்வையுமாக ஒரே நேரத்தில் காத்திருந்து எந்தக் கதவு திறந்தாலும் காற்றைப்போல் நுழையும் கட்சி!
ஆண்டபரம்பரை
என்று பெருமை பேசி, ஆளத் துணிந்த கட்சி!
இவர்களின்
முதல்வர் வேட்பாளர் மீதான சிபிஐ வழக்கு முடியட்டும், தர்மபுரி, கிருஷ்ணகிரி தாண்டி தென் தமிழகம் பக்கம் வரட்டும்,
அதுவரை அவர்களின் ஃபாண்டஸி கனவுகளை நாம் ஏன் சிதைக்கவேண்டும்!
நாம் தமிழர் கட்சி:
234 தொகுதிகளையும்
வென்று, ஆடு மேய்ப்பதை அரசு வேலையாக்கப்போகும் கட்சி!
ஆமைக்கறி,
அரிசி கப்பல், ஏகே 74, பெரியாரின் பேரன், முப்பாட்டன் முருகன், இலங்கைத் தமிழ்ப் பெண்ணை மணக்க நினைத்த தெலுங்கு மருமகன், தீவிரவாதி பிரபாகரனை போராளியாக நம் மனதில் பதியவைத்த மகான்!
இந்திய கிரிக்கெட் அணியோடு மோதி வெல்லப்போகும் தமிழ் நாட்டு பிரதமர்!
இப்படி
புன்னகைக்க ஏராள விஷயங்கள்!
கூடவே,
இதைக் கேட்டு திசைமாறும் அறியா வயது இளைஞர்களின் சீரழியும் எதிர்காலம்!
விபத்தாகக்கூட
வளர விடக்கூடாத ஈழம் விற்று வயிறு வளர்க்கும் வியாபாரியின் முனையில்லா ஆயுதம் இந்தக் கட்சி!
மக்கள் நீதி மய்யம்:
எல்லா
சிறந்த முதல்வர்களின் கொள்கையும் என் கட்சியின் கொள்கை என்ற அண்ணாயிசத்தை விஞ்சும் அசரடிக்கும் கொள்கை முழக்கத்தோடு அவசர கதியில் ஆரம்பித்த கட்சி!
ஒத்து
ஊதுபவரையும் விட்டுவைக்காமல் தன் மொத்த கரகாட்ட கோஷ்டியையும் செயற்குழுவில் அமரவைத்த வித்வானின் கட்சி!
கூட
நடித்த நடிகை, பாட்டெழுதிய கவிஞர், கதை வசனகர்த்தா என்று யாரையும் விட்டுவைக்காத ஸ்தாபகர்!
ரிபப்ளிக்
டிவி விவாதத்தில், கிழிந்த சட்டையை கோட்டுப்போட்டு மறைக்க முயன்று அறிவுஜீவி முகமூடியை தொலைத்த தலைமை!
மே
பீ என்றால் எஸ் என்று அர்த்தம் இல்லை என்று சொன்னவர் இனி சொல்லப்போகும் அர்த்தங்கள் சுவாரஸ்யமாக இருக்கும்!
முதல்வர்
கனவை காணும் முந்நூறாவது தமிழ் நடிகரின் கட்சி!
அடுத்த
தேர்தலில் இருந்தால் பார்ப்போம்!
கிங் மேக்கர்களும் தேசியக் கட்சிகளும்:
முதல்வர்
கனவில் ஆரம்பித்து கிங் மேக்கர்களாகவாவது உருவாகப்படுத்திக்கொள்ள முயன்று ஆசுவாசப்படுத்திக்கொள்ள முயலும்,
மேடை அழுகையில் விஜய் டிவிக்கு முன்னோடி வைகோ,
திருமா,
காம்ரேட்டுகள்
பந்தயத்திலேயே இல்லாதபோது அவர்களை விமர்சிப்பது வீண் வேலை!
தேசியக்கட்சிகள்:
பக்தவட்சலத்தின்
வாய்க்கொழுப்பில் கரைந்துபோன காங்கிரஸ், தெற்கே தலைவைத்தும் படுக்காத பாஜக இவை இந்தத் தேர்தலிலும் முறையே திமுக, அதிமுகவின் எக்ஸ்டரா லக்கேஜ்!
ஆனால்
சமீபத்தில் தமிழிசை சொன்னதில் எனக்கு மிகுந்த உடன்பாடு!
தமிழகத்துக்கு
மிகுந்த நன்மை செய்தவர் மோடி!
ஹெச்
ராஜாவை பேசவைத்து, நோட்டாவுக்கும் கீழேயே கட்சியை அழுத்தி வைத்திருப்பதைவிட நமக்கு வேறென்ன நன்மை செய்துவிடமுடியும் பாஜக!
வரூம்... ஆனா வராது:
யானைக்
கர்ப்பத்தை மீறிய கர்ப்பகாலம்!
இது
கர்ப்பமா தொப்பையா என்பதே புரியாப்புதிர்!
நெஞ்சில்
பட்டதை நேர்மையாகப் பேசும் குணம் என்ற ஒற்றை எதிர்பார்ப்பையும், யார் பலசாலி என்ற பேட்டியில் சிதைத்து சின்னாபின்னமாக்கிய எதிர்காலத் தலைவர்!
பாஜக
எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சி என்று சொன்னேன் என்று வார்த்தை விளையாட்டு வேறு!
டைரக்டர்களின்
நடிகருக்கு அரசியல் டைரக்டர் சரியாக அமையவில்லை!
இந்தக்
கட்சி என் காலத்துக்குள் ஆரம்பமானால்...
சரி,
அத்தைக்கு மீசை முளைக்கட்டும், அப்போது பார்த்துக்கொள்ளலாம்!
அதுவரைக்கும்,
திமுக அதிமுக இரண்டும் ஆடும் கள்ளன் போலீஸ் விளையாட்டை கைகொட்டி ரசிப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக