பொருளாதார
ரீதியாக பின்தங்கிய உயர்சாதியினருக்கு அரசின் “உயர்கல்வி நிறுவன சேர்க்கை”, வேலைவாய்ப்பில் பத்து
சதவிகிதம்
இட ஒதுக்கீட்டுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளதாக இந்த செய்தி குறிப்பிடுகிறது!
அருமை!
மேலும்,
“இப்பிரிவில்” பொருளாதார ரீதியாக பின்தங்கியுள்ளோருக்கான அளவீட்டையும் அந்த செய்திக்குறிப்பு சுட்டியுள்ளது!
இது
இன்னும் சிறப்பு!
அப்பிரிவில்
ஏழைகளுக்கான வரையறை:
1. ஆண்டு வருவாய் 8 லட்சத்துக்கும் கீழ்!
2. விவசாய நிலம் 12.5 ஏக்கருக்குக்கீழ்!
3. ஆயிரம் சதுர அடிக்கும் குறைவாக சொந்த வீடு
4. 1900 சதுர அடி வீட்டு மனை!
அற்புதம்!
இந்த
நாட்டில் ஏழை என்பதற்கு இப்படி ஓர் வரையறை இருப்பது நம் நாடு பொருளாதார வளர்ச்சியில் எத்தனை பெரிய உச்சத்தில் இருக்கிறது என்பதை பொட்டிலடித்தாற்போல் கூறுகிறது!
2017 - 18க்கான
சராசரி தனிநபர் வருமானம் இந்தியாவில் 1,12,835 ரூபாய் என்கிறது அரசின் அதிகாரப்பூர்வமான ஆய்வறிக்கை! (இது 2016 -17க்கான வருமானத்தைவிட 8.6 சதவிகிதம் அதிகம் என்ற பெருமிதம் வேறு!)
இப்போது
அரசு அந்தக் குறிப்பிட்ட மேல்சாதியினரில், ஏழை என்பதற்கு வைத்திருக்கும் வரையறையைக் கொஞ்சம் ஒப்பிட்டுப் பார்ப்போம்!
அந்த
சாதி ஏழைகள் என்போர்,
ஆண்டுக்கு
ஏறத்தாழ 90000 ரூபாய் வருமானவரி கட்டுவோர் - அதாவது ஏறக்குறைய இந்திய சராசரி தனி நபர் வருமானத்தை வரியாக மட்டுமே கட்டுமளவு வசதியானவர்
- அந்த சாதி ஏழை!
பெரும்பான்மை
இந்தியரின் உச்சகட்ட கனவே, ஒண்டிக்கொள்ள ஒரு சிறு வீடு - ஆனால், 999 சதுரஅடி வீடு, 1899 சதுர அடி வீட்டுமனை வைத்திருப்பவன்
- அந்த
சாதி ஏழை!
காவிரிக்கரையில்
எரிக்க ஊருக்கே பொதுவான ஆறடி நிலத்தை மட்டுமே சொந்தம் என்று வைத்துக்கொண்டு, ஓரளவு வசதியானவன் என்று என்னை நானே தேற்றிக்கொண்டு வந்த நிலையில் அடுத்த அளவீடு!
ஐந்து
ஏக்கர் விவசாய நிலம் வைத்திருப்பவன்
- அந்த சாதி ஏழை!
இது மத்திய
அரசு
கொடுத்த
மிகச்சிறந்த
ஒப்புதல்
வாக்குமூலம்!
இதைவிட
ஒரு மிகச் சரியான அளவீட்டை வாழ்நாள் முழுக்க சமூக நீதிக்குப் போராடிய யாருமே கொடுத்ததில்லை!
மத்திய
அரசின் நேர்மைக்கு நான் மண்டியிட்டுத் தலை வணங்குகிறேன்!
உயர்சாதியினருக்கு
சாதகமான கட்சி பாஜக என்று முட்டாள்தனமாக இன்றுவரை நினைத்ததற்கு வெட்கப்படுகிறேன்!
இன்றைய பாஜக அரசுதான் இவ்வளவு வெளிப்படையாக, அந்த சாதியினர் நம்மைவிட எத்தனை படிகள் உயர்நிலையில் இருக்கிறார்கள் என்று தெளிவான வரையறையோடு விளங்கியிருக்கிறது!
சராசரி இந்தியனைவிட
பல
மடங்கு
உயர்ந்த
நிலையில்
இருப்பவன்தான்
அந்த சாதி ஏழை!
அந்த சாதி ஏழை!
எனவே,
அந்த ஏழ்மை நிலையையாவது மற்ற சாதியினரும் அடையும்வரை அவர்களுக்கு எந்த சலுகையும் தேவையில்லை என்று மட்டைக்கு இரண்டு கீற்றாய் சொல்லியிருக்கிறது மத்திய அமைச்சரவை!
உண்மையை
உரக்கச் சொன்ன மோடி அரசுக்கு உளமார்ந்த நன்றி!
இனி,
இதை நீதிமன்றங்கள் தெளிவாகப் பார்த்துக்கொள்ளும்!
அரசியல்
சாசனத்தில் இது குறித்து திருத்தம் கொண்டுவருவதோ, ஏற்கனவே உச்ச நீதிமன்ற வரைமுறைகள் இருக்கையில் சட்டப்போரில் வென்று நடைமுறைப்படுத்துவதோ சாத்தியமே இல்லை என்று தெரிந்தும், தேர்தல் பிரச்சார கூச்சலுக்கு இதை ஆயுதமாக்க நினைத்து, தன்னையறியாமல் உண்மைகளை உடைத்துச் சொல்லியிருக்கிறது அரசு!
இந்த
உயர்கல்வி நிறுவன சேர்க்கையில் ஒதுக்கீடு என்பதன் பொருள் என்ன தெரியுமா?
ஒரு
எளிய புரிதலில், அறுபது ஆண்டுகளுக்கு முன், எல்லாத் துறையிலும் உயர்நிலைப் பதவியில் இருந்தோரை மீண்டும் அதே நிலையில் உட்காரவைத்து அழகு பார்க்க நேர்வழி!
அதை
விடுவோம்,
இனி,
இட ஒதுக்கீடு சதவிகிதம் பற்றிய புள்ளிவிபர நிபுணர்கள் இதைப் பார்த்துக்கொள்வார்கள்!
ஆனால், அந்த
செய்தியில்,
கட்டம்
கட்டி
ஒரு
வியப்பான
தகவல்!
அண்டை மாநிலத்தை மருத்துவக் கழிவுகளை கொட்டிவைக்கும் குப்பைக் கிடங்காக உபயோகித்துக்கொண்டே, அந்த மாநிலத்து அறிவுஜீவிகளால் முன்மாதிரி முதல்வர் என்று போற்றப்படுமளவு மச்சக்கார காம்ரேட் இந்த அறிவிப்பை ஆதரித்து வரவேற்றிருக்கிறார் என்பதுதான் அது!
இதையும்
ஒரு விபரீத
வியாக்கியானத்தோடு சப்பைக்கட்ட இணைய பிரணாய் ரசிகர்மன்றம் கொடுக்கப்போகும் விளக்கங்களைப் படித்துத் தெளிய ஆவல்!
இதை "ஏற்கனவே
மார்க்சிஸ்ட்
கட்சி
வைத்த
கோரிக்கை"
என்று
குறிப்பிட்டு,
அதை
வரவேற்கும்
அவருக்கு
அதில்
இருக்கும்
ஒரே
ஆட்சேபணை,
இதை
பாஜக
தேர்தலுக்கு
பயன்படுத்தும்
என்பது
மட்டும்தான்!
அற்புதம்!
கம்யூனிசம் இந்தியாவில் இன்னும் எத்தனை வடிவம் மாறும் அமீபா என்பது அந்த அறிஞர்களுக்கே வெளிச்சம்!
No comments:
Post a comment