கணேஷுக்கு வந்த காதல்!
பாஸ்,
பா....ஸ்!!
ஏன்டா
கத்தறே?
அது
சரி!
என்ன
பாஸ் ஆச்சு உங்களுக்கு? ராத்திரி ஃபுல்லா தூங்காம கோர்ட்ல வந்து தூங்கிட்டிருக்கீங்க?
இல்லடா,
அந்த கீர்த்திலால் கேஸ்க்கு நைட் கொஞ்சம் ப்ரிபேர் பண்ண வேண்டியிருந்தது!
கீர்த்திலால்
கேஸுக்கா, உங்க கயல் கேஸுக்கா?
ரெண்டும்தான்டா,
நாளைக்கு அது ஃபைனல் ஹியரிங்!
பாஸ்,
ஒன்னு கேட்டா கோவிச்சுக்க மாட்டீங்களே?
ஆர்
யு இன் லவ்?
உளறாதே
ராஸ்கல்!
பாத்தீங்களா,
கோவிச்சுக்கறீங்க!
ராத்திரி
ரெண்டு மணிக்கு உங்க ஃபோன் எங்கேஜ்ட் ஆ இருக்கு! விடியவிடிய
முழிச்சிருந்தாலும் ஆஷ்டிரே கிளீனா இருக்கு!
டேய்,
ஆஷ்ட்ரே கிளீனா இருக்கறதுக்கும் இப்போ நீ பேசறதுக்கும் எப்படிடா
கனெக்ட் பண்றே? என்ன சங்கித்தனமான லாஜிக் இது?
பாஸ்,
ட்விட்டர்ல ரொம்ப சுத்தாதீங்க, உங்க ஒக்காபிலரியே மாறிப்போச்சு!
இதெல்லாம்
சுஜாதா காலத்து சைக்காலஜி!
புதுசா
கிஸ்ஸடிக்கிற ஆளுக மொதல்ல விடறதே சிகரெட்டைத்தான்! அதுக்கப்புறம்தான் மத்ததை!
எனக்கென்னவோ
உங்களுக்கு ஆல்ரெடி கன்னி கழிஞ்சிருச்சோன்னு சந்தேகமா இருக்கு!
உதை
வாங்கப்போற இப்போ நீ!
பாஸ்,
அப்படி உண்மையிலேயே லவ் பண்ற மாதிரி இருந்தா சொல்லிடுங்க, ஏன்னா அது நம்ம பழைய மாலு! பத்து வருஷம் முன்னால அவங்க அப்பா கொலை கேஸுக்கு வந்திருந்தபோது எப்படி இருந்துச்சோ, அப்படியே கொஞ்சம்கூட ஷேப் மாறாம இருக்கு!
பார்த்தீங்களா,
நான் சொல்லும்போதே உங்க காதுல புகை வருது!
கவலைப்படாதீங்க பாஸ், நான் போட்டிக்கு வரப்போறதில்ல! ரங்காச்சாரி ஆபீஸ்ல ஒரு சின்னக்குட்டி
மலர்ன்னு
பேரு! சும்மா புஷ்பம் மாதிரி!
ஃபேமிலி
கோர்ட்ல பல்லுப்போன மேஜிஸ்ட்ரேட் எல்லாம் ஜொள்ளு மழை! அதுதான் நம்ம லேட்டஸ்ட் டார்கெட்!
நீ
எப்போ உருப்படப்போறே! என்னவோ செய்! எனக்கு இப்போ கேண்டீன்ல ரெண்டு இட்லி மட்டும் வாங்கிட்டுவாடா ரொம்ப பசிக்குது!
பாலும்
கசந்ததடி, படுக்கையும் நொந்ததடின்னு இருக்கேல எப்படி பசிக்கும் பாஸ்?
சொல்றதுன்னா
சீக்கிரம் சொல்லிடுங்க பாஸ்! எனக்கென்னவோ இல்லைன்னா அந்த ரவிப்பயல் தட்டிக்கிட்டுப் போய்டுவானு தோணுது! அப்புறம் நீங்க காலத்துக்கும் இதயம் முரளிதான்! அது என்னவோ சொல்லுவாங்களே இலவு காத்த கிளியோ என்னவோ...
சரி
சரி மொறைக்காதீங்க போறேன்! இந்நேரத்துக்கு கேண்டீன்ல மாமிங்க மாநாடு நடக்கும், கொஞ்சம் சேவிச்சுட்டு வர்றேன்!
விசிலடித்துக்கொண்டே
நடந்தவனை கொஞ்சம் பொறாமையாகப் பார்த்தான் கணேஷ்!
இவன்
சொல்றது உண்மைதானோ? நாம அந்த கயல் கேஸ்ல கொஞ்சம் பொஸசிவ்வா இருக்கோமோ?
தலையை
உலுப்பிக்கொண்டு டவலை எடுத்துக்கொண்டு போனான் கணேஷ்!
அவன்
குளிச்சுட்டு வரதுக்குள்ள ஒரு சின்ன சினாப்ஸிஸ் - வேறென்ன, கயல் பத்தித்தான்!
சரியா
பத்து வருஷத்துக்கு முன்னாடி தொழிலதிபர் ரங்கநாதன் கொலை வழக்கு விஷயமா கணேஷைத் தேடிவந்த க்ளையண்ட்!
கேஸை
ஜெயிச்சு, கல்யாணம் ஆகி, ஒரு பிள்ளையையும் பெத்து, இதோ, இன்னைக்கு விவாகரத்து கேஸ்ல ஃ பைனல் ஹியரிங்!
அந்தப்பொண்ணு
ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்துட்டு வந்துடுச்சு, வஸந்த் பாஷைல சொன்னா ரெண்டுபேரும் இன்னும் மொட்டைப் பசங்களாத்தான் சுத்திக்கிட்டு இருக்காங்க!
என்னதான்
லண்டன்ல எம்எஸ் படிச்சுட்டுவந்த பொண்ணுன்னாலும் அப்பாவின் எதிர்பாராத இழப்பு கொஞ்சம் திகைக்க வைத்தது.
அப்போதுதான் அப்பாவின் பதினெட்டு கம்பெனிகளில் ஒன்றின் விபியாக இருந்த அருணன் அவள்
வாழ்வில் நுழைந்தது!
தொழில்
ரீதியாக பேச ஆரம்பித்தது கொஞ்சம் கொஞ்சமாக அப்பா நினைவில் அயர்ந்து உட்கார்கையில் ஆறுதல் சொல்வது என்று வளர்ந்து அவனது அழகும் இளமை வசீகரமும் புத்திசாலித்தனமான அணுகுமுறைகளும் கொஞ்சம்கொஞ்சமாக வயப்பட்ட வைத்தது!
அப்பாவின்
ஜீன் தொழிலில் சட்டென்று காலூன்றி நிற்க உதவியது என்றாலும் வீட்டில் நிரம்பி வழிந்த தனிமை அவளை அருணன் பக்கம் சாயவைத்தது!
வழக்கம்போல்
காதல் எல்லாக் குறைகளையும் மழுப்பி, மையல் மட்டும் பிரதானமானபோது எடுக்கும் முடிவு தவறாய் போவதன் சாத்தியங்கள் அதிகம்.
கல்யாணம்,
திகட்டத்
திகட்டத் தேனிலவு!
முடிந்து
வரும்போதே வயிற்றில் துருவன்!
வங்கிக்கணக்கில்
அவ்வப்போது குறையும் லட்சங்கள், தேவையற்ற ஆடம்பரம் இவையெல்லாம்கூட உறுத்தவில்லை.
எப்போதாவது
என்றிருந்தது எப்போதுமே வீச ஆரம்பித்த விஸ்கி வாசமும், இப்போதெல்லாம் யார்தான் குடிப்பதில்லை என்ற சமாதானப் போர்வையில் மறைய,
வீட்டுக்கு
வரும் அருணன் மீது வீசும் பெண் வாசம் கொஞ்சம் துணுக்குற வைத்தது!
இயல்பான
சாமர்த்தியம் வெகு சில நாளில் அவனுக்கு இருந்த பெண்களின் சாவகாசத்தின் பட்டியலையே தோண்டி எடுக்கவைத்தது!
முதலில்
மறுத்தவன், பின்பு சீற ஆரம்பித்தான்! அள்ளி அள்ளி இறைத்தாலும் இன்னும் பத்து தலைமுறைக்கு அழியாத சொத்து தந்த மயக்கம் அருணனை ஆட்டம்போட வைத்தது!
புதுப்பணம், புது அந்தஸ்து தந்த போதை, இயல்பிலேயே இருந்த சபலம் வேறு!
நான்
ஆம்பளைடீ அப்படித்தான் இருப்பேன்! உன்னால என்ன செய்யமுடியும்?
என்பதில்
ஆரம்பித்து, மேல்நாட்டில் இதெல்லாம் சகஜம் என்பது தெரியாதா என்றுபோய் சட்டப்படி இது தவறில்லை என்று வாதிடுமளவு வளர்ந்தபோது துருவனுக்கு ஐந்து வயதாகியிருந்தது!
இந்த
சூழலில் குழந்தை வளருவது அவனுக்கு நல்லதில்லை என்பதோடு எவளோடோ படுத்துப் புரண்டவன் பக்கத்தில் வந்து போதையோடு உருளுவதும் உறவுக்கு இழுப்பதும் சகிக்க முடியாதுபோனது!
நிதானமாகவே
பேசிப்பார்த்தாள்! மியூச்சுவல் டைவர்ஸுக்கு அவன் ஒப்புக்கொள்ளவில்லை!
உனக்கு
வேணும்னா நீயும் யாருகூடவோ போ, நான் கேள்வி கேட்கமாட்டேன்! ஆனால் விவாகரத்து தர நான் ஒன்னும்
முட்டாள் இல்லை!
போலித்தனமான
வாழ்க்கையை சகித்துக்கொண்டு வாழ்வது தற்கொலையைவிட கொடுமை!
இதோ,
முடிவெடுத்து, மீண்டும் கணேஷ் வஸந்த் தயவில் இறுதி சுற்று!
அருணன்
அள்ளியிறைத்த காசில் டெல்லியிலிருந்து வந்த வக்கீலை கணேஷ் ஆர்ப்பாட்டமே இல்லாமல் ஆதாரங்களை வைத்து சுருதி இறக்குவதை ஒவ்வொரு ஹியரிங்கிலும் பார்க்கப் பார்க்க பிரமிப்பு கூடிக்கொண்டே போனது!
கேஸ்
விஷயமாக அடிக்கடி சந்திக்க நேர்ந்ததில், இது பிரமிப்பா மரியாதையா காதலா என்று ஒரு குழப்பமான கொலாஜ்!
ஹாய்
வசந்த், என்ன தனியா வந்திருக்கீங்க?
பாஸ்
இப்போல்லாம் ரொம்ப பிஸி ரவி. ஆமாம், என்ன இங்கே உட்கார்ந்துட்டீங்க?
பாஸ்
இப்போ வர்றேன்னாங்க. அவங்க வரதுக்குள்ள ஒரு காஃபி சாப்பிட
ரவியின்
பதில் காதிலேயே விழவில்லைபோல,
யார்
இது, இவங்களை எங்கேயோ பார்த்தமாதிரி இருக்கு?
எதிரில்
உட்கார்ந்திருந்த பெண் "வஸந்த், இது எங்க
தாத்தா காலத்து அப்ரோச்! கொஞ்சமாவது அப்டேட் ஆகுங்க!
மேலும்,
இப்போ உங்களுக்கு அங்கிள் வயசு ஆகிடுச்சு, இனி இதெல்லாம் கொஞ்சம் சிரமம்!"
அடப்பாவிகளா,
என்ன இப்படி ஆரம்பிச்சுட்டீங்க! நான் உங்க பேச்சு கா!
ரவி,
இவங்ககிட்டயும் உன் கட்டிப்புடி வைத்தியத்தை ஆரம்பிச்சுட்டியா?
ரவி?
காலேஜில்
வஸந்த்துக்கு வெகு ஜுனியர்! கயலின் வெள்ளமான கம்பெனிகளுக்கு லீகல் அட்வைஸர்!
படிக்கற
காலத்திலேயே காலேஜில் ரவி ரொம்ப ஃபேமஸ். யாரைப்பார்த்தாலும் கையைப் பிடித்துக்கொண்டு பேசுவது அவனுடைய மேனரிஸம்!
ஆயிரம்
வார்த்தைகள் சொல்வதை ஒரு பார்வை சொல்லும்! ஆயிரம் பார்வைகள் சொல்வதை ஒரு தீண்டல் சொல்லும், ஆயிரம் தீண்டல் சொல்வதை ஒரு அணைப்பு சொல்லும், ஆயிரம் அணைப்பு சொல்வதை ஒரு நெற்றி முத்தம் சொல்லும்!
இது
ரவியின் தியரி!
யாராயிருந்தாலும்
பார்த்ததும் ஒரு புன்னகை! டக்கென்று பால் வேற்றுமைகள் கலந்து பழகிவிடும் தன்மை!
ஆண்
பெண் பேதமில்லாமல், கொஞ்சம் பழகினாலும் ஒரு சின்ன அணைப்பில்தான் வரவேற்பும் பிரிவும்!
கமலுக்கு
முன்பே சட்டக்கல்லூரியில் கட்டிப்புடி வைத்தியத்தை அறிமுகம் செய்தவன்!
ஏன்
ரவி, உனக்கு இது கூச்சமாகவே இல்லையா என்றால்
இதில் கூச்சப்படுமளவு என்ன இருக்கிறது என்று உடனே கேட்பவன்!
விலங்குகள்
கூட வேட்கையின்போதுதான் காமம் சுமந்தலையும்! நாம் ஆறறிவு மனிதர்கள் இல்லையா? ஒரு தீண்டலின் நோக்கம் புரியாத முட்டாள்களா என்ன நாம் என்று திருப்பிக் கேட்பான்!
யாராவது
முகம் சுளித்து நகர்ந்தால் அதன்பின் அவர்களிடம் தள்ளி நின்றே பேசுவான்! ஆனால் அதனால் அந்தக் குரலில் வழியும் நேசம் குறையாது!
எல்லோருமே
டார்லிங்தான் எல்லோருமே டியர்தான் - கல்லூரிப் பேராசிரியர்கள் சிலர் உட்பட!
இருக்குமிடத்தை
கலகலப்பாய் வைத்துக்கொள்வதில் சமர்த்தன் - ஒருமுறை அப்பா இறந்த துக்கத்தில் இருந்த நண்பனை சூழல் மறந்து வெடிச்சிரிப்பு சிரிக்கவைக்குமளவு!
இதோ,
இப்போதுகூட யாரோ ஒரு பெண்ணிடம் சிரிக்கச் சிரிக்கப் பேசிக்கொண்டுதான் உட்கார்ந்திருக்கிறான்!
உட்காருங்க
வஸந்த்,
டியர்,
சாருக்கு சர்க்கரை தூக்கலாய் ஒரு காஃபி - இது சர்வருக்கு!
இவனுமா,
பாண்டி, அப்படியே பாஸுக்கு நாலு இட்லி பார்சல் - இது வஸந்த்!
காஃபியோடு
எதிரில் இருந்தவளை குடித்துக்கொண்டிருந்த வஸந்த் கண்களைப் பார்த்த ரவி கேட்டான்,
என்ன பாஸ் வந்துட்டாங்களா?
வாசலைப்
பார்த்திருந்த அத்தனை கண்களும் சாஸராய் விரிய, கயல் எண்ட்ரி!
முப்பத்தி
ஐந்து வயது என்று சத்தியம் பண்ணினால்கூட நம்ப மாட்டார்கள்!
பத்து வருடம் முன்பு வஸந்த் கேட்ட கேள்வி, கயல், என்ன பேருங்க இது? கண்ணுக்கு மட்டுமா?
கயல்,
உங்களுக்கு வயசே ஆகாதா?
வாங்க
பாஸ், எழுந்த ரவி இயல்பாய் அவள் தோளை அணைத்து உட்காரவைப்பதை கொஞ்சம் பொறாமையோடுதான் பார்த்தான் வஸந்த்!
என்ன
ரவி, மீரா கூட கடலையா?
இல்லை
மேடம், வஸந்த்தான் அவளை எங்கேயோ பார்த்திருப்பதாய் சொல்லிக்கொண்டிருந்தார்!
உங்க
ஸ்ட்ரோக் லைனை மாற்றவே இல்லையா வஸந்த்?
ஆமாம்,
அன்னைக்கு சுஜாதா நினைவுநாள் கூட்டத்துக்கு நீங்களும் கணேஷும் ஏன் வரல?
இல்லை
கயல், அன்னைக்கு மறுநாள் ஒரு கேஸுக்கு ப்ரெப்ரேசன் இருந்துச்சு!
இருந்தும்,
எங்களைவிட நீங்கதானே அவரை ரொம்ப மிஸ் பண்ணுவீங்க?
கிழம்
பழுத்து செத்தார்! அழுகாமல் செத்துப்போனது நல்ல சாவுதானே?
உங்களுக்கு
அவர் இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கலாம்னு தோணலையா? அன்னைக்கு ராஜேந்திரன்கூட வந்திருந்தார்!
அவருக்கென்ன,
ரிட்டையர் ஆனதுக்கப்புறம் இதுமாதிரி நினைவுநாள், பட்டிமன்றம் இதுதானே! யார்தான் இன்னும் கொஞ்சநாள் இருந்திருக்கக்கூடாது? வந்தவரெல்லாம் தங்கிவிட்டால்ன்னு கண்ணதாசனோ வாலியோ சொன்னமாதிரி, ஓலை வந்தால் போகவேண்டியதுதானே?
வாங்க
போலாம்!
கணேஷ்
கூட இப்படித்தானா?
அவர்
இன்னும் மோசம்! எனக்காவது உங்களைமாதிரி அழகான பொண்ணுக கூட ஒரு சின்ன செண்டிமெண்ட் இருக்கும்!
பாஸ் ஞானி!
கயலையும்
மீராவையும் முன்னால் நடக்கவிட்டு கேட்டான்!
என்ன
ரவி, கயலை மடக்கிட்டயா?
அடப்பாவி
வஸந்த், அவங்க எங்க பாஸ், மேலும் என்னைவிட மூணு வருஷம் மூத்தவங்க!
ஓகே!
அப்ப பாஸுக்கு இன்னும் சான்ஸ் இருக்கு!
அன்னைக்கு
கோர்ட்டில் சம்மிங் அப்!
கணேஷ்
பேசிய பத்து நிமிஷத்தில் எதிர்க்கட்சி வக்கீல் அரைமணிநேர விளக்கம் விழலுக்கு நீர்!
விட்டிருந்தால் ஜட்ஜ் அப்போதே தீர்ப்பை சொல்லியிருப்பார்!
அட்ஜர்ன்ட்
அண்ட் போஸ்டட் ஃபார் ஜட்ஜ்மெண்ட் ஆன் பிப்ரவரி 12த்!
கிஸ்
டேல தீர்ப்பு! குழந்தைகூட சொல்லிவிடும் தீர்ப்பு என்னன்னு!
பாஸுக்கு
பீஸோட கிஸ்ஸும் உண்டா?
முறைக்காதீங்க
பாஸ், கத்தரிக்காய் முத்தினா ரிலையன்ஸுக்கு வந்துதானே ஆகணும்!
நீங்களும்
எதையுமே பார்க்காம இப்படி முரட்டு சிங்கிளாவே எத்தனை நாளைக்கு…
டேய்
..
ஓகே,
ஓகே! கயல், அப்போ பார்ப்போம், பன்னண்டாம் தேதி ட்ரீட்டுக்கு தயாரா வாங்க! மறக்காம மீருவையும் கூட்டிக்கிட்டு வாங்க!
ரவி,
அன்னைக்கு உங்களுக்கு வேற வேலை ஏதாவது?
கொஞ்சம்
தள்ளி வந்து கயல் கேட்டாள்,
என்ன
வஸந்த் இது, பாஸ் எவ்வளவு ஜீனியஸ், அவரைப்போய் இப்படி ஓட்டறீங்களே?
இல்லை
கயல், உங்களைப் பார்த்தாலே பாஸ் ஒருமாதிரி உருகறார்!
பசுவும்
கன்னுமாய் வந்தா வேண்டாம்னா சொல்லப்போறார்?
என்னதிது
வஸந்த்? உங்களுக்கு எதுவுமே புனிதமில்லையா?
ஔவையார்
மாதிரி பேசாதீங்க கயல்!
பாஸுக்கு
என்ன பதில் சொல்லப்போறீங்க,
சொல்றேன்,
மொதல்ல ஜட்ஜ்மெண்ட் வரட்டும்!
ட்வெல்த்
அன்னைக்கு பார்ட்டீல சொல்லுங்க பாஸுக்கு சர்ப்ரைஸா!
கயல்
போனதும் கணேஷ் கேட்டான்,
என்னடா பேசிக்கிட்டிருந்தே?
உங்களுக்காக
நான் ப்ரொபோஸ் பண்ணிட்டேன் பாஸ்!
அடிமுட்டாளாடா
நீ? நான் எப்போ அப்படி சொன்னேன்? நீ ரொம்ப லிமிட்
தெரியாம ஆடறே!
போங்க
பாஸ், உங்க காதல் உங்களுக்கு தெரியாது!
ஒருநாள்
உதை படப்போறே
என்கிட்ட!
கோபப்படுவதுபோல்
பேசினாலும் கொஞ்சம் பிடித்திருந்ததோ?
எத்தனை
நாள் இப்படி கோர்ட்டும் கேஸும் வஸந்தனும் ரங்காச்சாரியும்?
இந்த
வயசுக்கு இது கொஞ்சம் முட்டாள்தனமாக இருந்தாலும் கயல் பார்க்கும்போது கொஞ்சம் நெஞ்சுக்குள் ஐஸ் கத்தி நிஜம்தான்!
ஆனாலும்..
பார்ப்போம்!
கணேஷுக்கு
அன்று தூங்க ரெண்டு ஷாட் டகீலா தேவைப்பட்டது!
பன்னிரண்டாம்
தேதி!
ஜட்ஜ்
முதல் வார்த்தையே க்ரேண்டட் என்றுதான் ஆரம்பித்தார்!
எதிர்பார்த்ததுபோல்
துருவன் அவள் கஸ்டடியில்! முறைத்துக்கொண்டு எழுந்துபோனான் அருணன்!
கோர்ட்
ஹால் என்பதை மறந்து, ஜெயிச்சுட்டீங்க பாஸ்ன்னு கட்டிப்பிடித்துக்கொண்டான் ரவி!
அன்றைக்கு
நைட் ரெயின் ட்ரீயில் சின்ன பார்ட்டி. வந்திருந்த அத்தனை பேர் கையிலும் ஏகதேசம் ஷாம்பெய்ன்!
நீலநிற
சூட்டில் கணேஷ் கம்பீரமாக தெரிந்தான்! சிம்பிளான லினன் சாரியில் தேவதைபோல் கயல்!
வெகுநேரம்
ஆனபிறகுதான் உரைத்தது, துருவன் எங்கே?
எல்லோரும்
சிரித்துக்கொண்டும், மெலிதான லைவ் ஆர்க்கெஸ்ட்ராவுக்கு தலையாட்டிக்கொண்டும் கோப்பைகளோடு சிரித்துக்கொண்டிருக்க,
மீராவும்
ரவியும் துருவனும் பலூனில் தண்ணீர் நிரப்பி அடித்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்
- நீச்சல் குளம் அருகில்!
பத்துமணி!
எல்லோரும்
ஒவ்வொருவராய் விடைபெற,
ரொம்ப
தேங்க்ஸ் கணேஷ்! இரண்டாவது முறையாக எனக்கு வாழ்வு கொடுத்திருக்கிறீர்கள்!
அது
இருக்கட்டும், அன்னைக்கு நான் சொன்னது என்னாச்சு?
டேய்,
சும்மா இருடா!
சொல்றேன்,
வஸந்த், எனக்கு துருவன்கூட கொஞ்சம் பேசணும்!
ஒண்ணும்
அவசரம் இல்லை, நாளன்னைக்கு வேலண்டைன்ஸ் டே! அன்னைக்கு சொன்னா போதும்!
ஆமாம்,
துருவன் எங்கே?
அதோ,
வாங்க போலாம்!
என்ன
ரவி, இது சின்னப்புள்ளை மாதிரி பார்ட்டில இப்படி நனைஞ்சு விளையாடிக்கிட்டு?
உங்களுக்கு
ஓகே மீரா, ஒரு அசப்புல நீங்க ஜெனிலியா மாதிரியே இருக்கீங்க!
போங்க
அங்கிள், உங்களுக்கு எப்போதுமே விளையாட்டுதான் - இது மீரா!
கணேஷ்
சத்தமாய் சிரிக்க,முறைத்துக்கொண்டு நகர்ந்தான் வஸந்த்!
காரில்
போகும்போது அவன் முகத்தைப் பார்த்து அடக்கமுடியாமல் சிரித்தான் கணேஷ்!
அந்தப்பொண்ணு
சொன்னது உண்மைதான் வஸந்த்!
நம்ம
அங்கிள் ஆகிட்டோம்!
பிப்ரவரி
14.
அந்த
அறையில் அவர்கள் இரண்டுபேர் மட்டும்!
சொல்லுங்க
கயல்.
அருணன்
தப்பானவன் என்பதற்காக நான் ஏன் வாழ்க்கை முழுக்க தண்டனை அனுபவிக்கணும்?
நேத்து
துருவன்கிட்ட பேசினேன்!
அவனுக்கு
எங்க அப்பா மாதிரி நல்ல மெச்சூரிட்டி!
அவன்கிட்ட
எனக்கு இருக்கிற சாய்ஸ் எல்லாம் சொன்னேன்! வஸந்த் சொன்னது, நான் நினைக்கறது எல்லாமே சொன்னேன்! அவன் சொன்னதுதான் எனக்கும் சரின்னு தோணிச்சு!
ஐ
ஹாவ் டிசைடட் டு மேரி!
இட் இஸ் எ க்ரேட் நியூஸ்!
அவ்வளவுதானா,
எனக்கு கிஸ் இல்லையா?
புன்னகைத்தவாறே
எழுந்துவந்து உட்கார்ந்திருந்தவள் நெற்றியில் முத்தமிடக் குனிந்தபோது
இயல்பாய் நிமிர்ந்தாள்!
கலந்த
உதடுகள் விலக சற்றே தாமதமானது!
மெதுவாகக்
கேட்டாள்
வில் யூ பீ மை வேலண்டைன் ரவி?
Sir, Sujatha still alive. Superb Narration. Thank you.
பதிலளிநீக்குthank you so much
நீக்கு