96 க்குப் பிறகு ஜானுவும் ராமும்!
எத்தனை
நேரம் நின்றுகொண்டிருக்கிறோம் என்ற உணர்வே இல்லாமல் நீர்த்திரையிட்ட விழிகளோடு நின்றுகொண்டிருந்தான் ராம்!
திருச்சி
செல்லும் விமானத்துக்கு ஃபைனல் கால் என்று ஒலிபெருக்கி அலறியது அவன் காதிலேயே விழவில்லை! முதலில் தான் ஏர்போர்ட்டில் நின்றுகொண்டிருப்பதாவது அவனுக்கு உறைக்கின்றதா என்றே தெரியவில்லை!
நான்
ஏன் இப்படி அதீத கோழையாகவே இருந்து தொலைக்கிறேன்?
என்னதான்
வேண்டும் எனக்கு?
போகாதே ஜானு என்று ஒற்றை வார்த்தை சொல்லியிருந்தால் நின்றிருப்பாளோ?
அப்படி
நின்றிருந்தால் மட்டும் என்ன செய்திருக்கப் போகிறேன்?
படிக்கும்போது
இளமையில் வராத தைரியம் இப்போது மட்டும் வந்துவிடவாபோகிறது?
கல்லூரி
வாசலில் மறைந்துநின்று பார்த்தபோது, கல்யாணத்தில் கும்பலோடு நின்று கலங்கியபோது வராத தைரியம் இப்போது மட்டும் வந்திருக்கப்போகிறதா என்ன?
நான்
ஒரு கடைந்தெடுத்த கோழை, கையாலாகாதவன் என்பதுதான் உண்மை!
இதை
காதல் என்று நான்தான் உருவகப்படுத்தி தொலைக்கிறேன்! கோழைகள் காதலிக்க தகுதியற்றவர்கள்!
நேற்று
அவ்வளவுபேர் கூடியிருக்கும் இடத்தில் சட்டென்று மயங்கி விழுமளவுதான் இந்தக் காதலோ கருமமோ எனக்கு வாய்த்திருக்கிறது!
என்னதான்
வேண்டும் எனக்கு?
நான் ஜானுவிடம் எதிர்பார்த்துதான் என்ன?
நேற்றிரவு
தப்பித்தவறி அவள் கொஞ்சமே கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு ஒரு முத்தம் கொடுத்திருந்தாலும் நான் மாரடைத்து செத்திருப்பேன்!
இப்படி
தனியே நின்று அழுவதற்கும் துப்பட்டாவை திருடி பூட்டிவைப்பதற்கும் உண்மையிலேயே காதல் என்றுதான் பெயரா?
எப்போதும்,
யாராவது என்னை உந்தித் சென்று இடம் சேர்க்கும் சவலைப் பிள்ளையாகத்தான் வளர்ந்திருக்கிறேனோ?
நினைக்க
நினைக்க மீண்டும் தலை சுற்றி மயக்கம் வருவதுபோல் இருந்தது ராமுக்கு!
“ஆர்
யூ ஆல்ரைட்?”
கடந்துபோன
யாரோ அவன் நிலை கண்டு கேட்க, அனிச்சையாக தலை மட்டும் ஆடியது!
மெதுவாக
கார் ஏறியவன் எப்போது எப்படி ரூமுக்கு வந்தான் என்று தெரியாமல் படுக்கையில் போய் விழுந்தான்!
இன்றைக்கு
எங்கும் வெளியே போகப்போவதில்லை!
அடித்துப் பிழிந்து காயவைத்ததுபோல் துவண்டு கிடந்தது மனமும் உடலும்!
மொபைலை
ஆஃப் செய்து போட்டுவிட்டு கட்டிலில் விழுந்தவனுக்கு அந்த நிலையிலும் இது ஜானு படுத்திருந்த இடம் என்ற நினைவே தாங்கமுடியாததாக இருந்தது!
பேசாமல்
வெறும் தரையில் சுருண்டு படுத்துக்கொண்டான்!
விமான
படிக்கட்டில் ஒருமுறை தவறி விழப்போய் சுதாரித்துக்கொண்டாள் ஜானு!
ஏன்
நான் இவ்வளவு முட்டாளாக இருந்திருக்கிறேன்?
எனக்காக
ஒருவன் உருகுகிறான் என்ற போதை மட்டுமே எனக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது!
உண்மையில் அவன்மீது எனக்கு காதல் இருந்திருப்பின் அவனைத் தேடி கண்டுபிடிக்க ஏதாவது முயற்சி செய்திருக்கமாட்டேனா?
அவன்
கோழைத்தனத்துக்கு நான் என்ன செய்வது?
அவன்
மட்டுமா கோழை?
என்றாவது அவனிடம் என் காதலை சொல்லியிருக்கிறேனா?
அவனை
டீஸ் பண்ணிக்கொண்டே என் கோழைத்தனத்தை மறைத்துக்கொண்டு சுற்றியிருக்கிறேன்!
அவன்
வருவான் என்று நம்பிக்கொண்டே கல்யாணம் செய்துகொண்டேன் என்பது எத்தனை அபத்தம்?
பிறகு
பிள்ளை கடவுள் கொடுத்ததா?
அவனும்
வேறு யாரையாவது கல்யாணம் செய்துகொண்டிருப்பான் என்று நானாக ஒரு மொண்ணை சமாதானம் செய்துகொண்டு என் வாழ்க்கையை நான் எத்தனை சுயநலமாய் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்?
நினைக்க
நினைக்க அழுகையும் சுய வெறுப்பும் விஸ்வரூபம் எடுத்தது!
திருச்சி
ஏர்போர்ட் எப்போது வரும் என்று முள்ளின்மேல் உட்கார்ந்திருப்பவள் போல் காத்திருந்தாள்!
அந்த அரை மணிநேரம் போவது ஆறு யுகங்களைக் கடப்பதுபோலிருந்தது!
நல்லவேளை
பக்கத்து இருக்கைகளில் யாருமில்லாதது வசதியாகப் போயிற்று!
விமானம்
தரை இறங்கியதும் அவசரமாக அழைக்க, நீங்கள் அழைக்கும் என் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது என்று எந்திரத்தனமாக ஒரு பெண் குரல்!
சிங்கப்பூர்
விமானம் ஏறுவதா அல்லது திரும்ப சென்னை போவதா என்று அல்லாடியாது மனம்!
வழக்கம்போல்
கோழைத்தனமோ, தயக்கமோ, கடமையோ வென்றது!
சிங்கப்பூர்
போய்சேர்ந்து வீட்டுக்குள் நுழையும்வரை ராம் எண் கிடைக்கவே இல்லை!
அம்மா
என்று ஓடிவந்து கழுத்தைக் கட்டிக்கொண்ட மகள் கேட்டாள்
" ஹௌ வாஸ் தி
மீட் அப் மம்மி? மெட் எனி ஆஃப் யுவர் ஓல்ட் க்ரஷ்?'
விகல்பமில்லாத
கேள்வி முகத்தில் அறைந்தது!
தலைவலி
என்று முனகலாக சொன்னவள் படுக்கையில் விழுந்து சுருண்டுகொண்டாள்!
மாலையில்
வந்த கணவனின் அன்பான அணைப்பு முள்ளாக உறுத்தியது!
நாட்கள்
யாருக்காக காத்திருக்கும்?
மெதுவாக
நகர ஆரம்பித்து உருண்டன நாட்கள்!
இந்த
அலும்னி மீட்டுக்கு போயிருக்கக் கூடாதோ?
அது
எப்படி ராம் வரமாட்டான் என்று நம்பினேன்?
உண்மை
இவ்வளவு கொடூரமாக முகத்தில் அறையும் என்று யார் எதிர்பார்த்தது?
அந்த
முட்டாள் இவ்வளவு தீவிரமாக கல்யாணமே செய்துகொள்ளாமல் எதற்காக காத்திருந்து தொலைத்தான்?
ராம்
மீது கோபம்தான் வந்தது!
ஆனால்
நாட்கள் நகர நகர, தான் யாருக்குமே நேர்மையாக இல்லை என்று மனதுக்குள் உறுத்த ஆரம்பித்துவிட்டது!
சென்னை
போய்வந்தது முதல் ராம் அவள் மனதின் மூளை முடுக்கெல்லாம் வியாபித்துக்கொண்டது நிஜம்!
அதுவும்
கணவன் பக்கத்தில் வரும்போதெல்லாம் தன்னை ஒரு அருவெறுப்பான பூச்சியைப்போல் உணர ஆரம்பித்தாள் ஜானு!
பத்தே
நாட்கள்!
குழம்பித்
தெளிந்தது மனசு!
"உங்களோடு
நான் கொஞ்சம் பேசவேண்டும் - தனியாக!"
வாயேன்
மொட்டை மாடியில் உட்கார்ந்து பேசுவோம்!
இல்லை,
எங்காவது வெளியே போவோம்!
மறுநாள்
மகளை பள்ளியில் இறக்கிவிட்டு இருவரும் ஆர்ச்சர்ட் மாலில் தனியான ஒரு மூலையில் வந்து அமரும்வரை இருவருமே எதுவும் பேசிக்கொள்ளவில்லை!
"சொல்லு
ஜானகி!"
ஏனோ
கிருஷ்ணனுக்கு அவளை ஜானகி என்று கூப்பிடத்தான் பிடிக்கும்!
இருவருக்குள்ளும்
அப்படி ஒரு பெரிய நெருக்கம் எதுவும் இருந்ததில்லை என்றபோதும், அவளையும் குழந்தையையும் என்றுமே அன்போடு பார்த்துக்கொள்ள மறந்தவனில்லை!
ஒருவேளை
இந்த ரொமேன்டிக் விஷயங்களெல்லாம் அவனுக்கு அவ்வளவு சம்மதமில்லாதவையோ என்றுகூட தோன்றியிருக்கிறது ஜானுவுக்கு!
சொல்லு
ஜானகி, வாட்ஸ் பாதரிங் யூ? சென்னை போய்வந்ததிலிருந்து நீ ஒரு நிலையில்
இல்லை!
உண்மைதான்.
நான் சொல்லப்போவது உங்களுக்கு அதிர்ச்சியாகக் கூட இருக்கும், ஆனால் இதை
சொல்லாமல் என்னால் இருக்கமுடியவில்லை!
மெதுவாக
பள்ளி நாட்களில் ஆரம்பித்து நேற்றுவரை நடந்தவற்றை கொட்டித் தீர்க்கும்வரை அமைதியாக உட்கார்ந்திருந்தான் கிருஷ்ணன்!
சொல்லி
முடித்து பாரம் இறங்கியவளாய் குலுங்கிக் குலுங்கி அழுதவளை சலனமே இல்லாமல் பார்த்துக்கொண்டிருந்தான்!
அவனது
அமைதி உறுத்தியதாலோ என்னவோ, மெல்ல தலை உயர்த்திப் பார்த்தாள் ஜானு!
என்ன
எதுவுமே சொல்லமாட்டீங்கறீங்க?
என்ன
சொல்ல? இந்த ஃ பேண்டஸி கதையில்
உன் முடிவு என்ன என்பது தெரியாமல்?
மெல்லிய
புன்னகையோடு வந்தது பதில்!
கொஞ்சம்
அடிபட்டது போல் உணர்ந்தாள் ஜானு!
ஃபேண்டஸி
கதையா?
பின்னே,
இது காதல் கதை என்று எனக்குத் தோன்றவில்லை ஜானகி!
உன்
முடிவைச் சொல். பிறகு என் கருத்தை சொல்கிறேன்!
நல்லது,
எனக்கு இந்த இரட்டை வாழ்க்கையில் சம்மதம் இல்லை கிருஷ்ணன், இனி அவனை நினைக்காமல் உங்களோடு வாழ்வது எனக்கு இயலாத காரியம்!
நான்
யாருக்குமே நேர்மையில்லாது வாழ்வதை விட உங்களைவிட்டுப் பிரிவதுதான் எனக்கு நல்லது!
பிரிந்து?
சிறிய புன்னகையோடு கேட்டான் கிருஷ்ணன்!
நான்
எங்காவது தனியாக இருந்துகொள்கிறேன், அதுதான் எனக்கான தண்டனை!
சரி,
மகளை என்ன செய்ய உத்தேசம்?
அதுதான்
எனக்கும் புரியவில்லை கிருஷ்ணன்,
ஆனாலும் நீங்கள் இதை இவ்வளவு இலகுவாக எடுத்துக்கொள்வது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது!
என்னை
என்ன செய்யச் சொல்கிறாய்?
இன்றைக்கு
எனக்கு ஆபீஸில் ஒரு முக்கியமான மீட்டிங். அதை விட்டுவிட்டு வந்து இந்த மொக்கைக் கதையைக் கேட்டுக்கொண்டிருக்கிறேன்!
உனக்கு
ஒரே ஒரு கேள்விதான் ஜானகி. நீ இங்கிருந்து போய்
அந்த ராமச்சந்திரனோடு வாழப்போகிறாயா?
நிச்சயமாக
இல்லை, அது எனக்கு உடன்பாடில்லை. அது என் பெண்ணுக்கு நான் செய்யும் துரோகம்
நீ
என்னோடு வாழ்வது ராமச்சந்திரனுக்கும் எனக்கும் செய்யும் துரோகம். அவனோடு வாழ்வது பெண்ணுக்கு செய்யும் துரோகம்.
பிறகு என்னதான் செய்யப்போகிறாய்? சொல்லு.
பிறகு என்னதான் செய்யப்போகிறாய்? சொல்லு.
இன்னும்
புன்னகை குலையாமல் இருந்தது கிருஷ்ணன் முகம்!
நீங்கள்
என்னை கிண்டல் செய்கிறீர்கள்!
வேறு
என்ன செய்ய?
நீ ஒரு முட்டாள்,
அந்த ராமச்சந்திரன் ஒரு அடிமுட்டாள்!
ஒரு
கன்றுக்குட்டி காதலை அமர காதல் என்று குழப்பிக்கொண்டு தன் வாழ்க்கையை முழு சிக்கலாக்கிக்கொண்டான் ராமச்சந்திரன்!
இப்போது
அலும்னி என்று போய்விட்டு வந்து அந்த முட்டாள்தனத்தை சிலாகித்து உன்வாழ்க்கையை காம்ப்ளிகேட் செய்துகொள்கிறாய்.
உன்னை பரிகாசிக்காமல் என்ன செய்ய?
நீ
சொன்னதில் காதல் என்பது எங்கிருக்கிறது ஜானகி?
இந்த
சொல்லாமலே காதல் எல்லாம் போன நூற்றாண்டோடு முடிந்துபோய்விட்டது!
எனக்கு
உன் பள்ளி நாட்களில் நடந்தவை முக்கியமில்லை. அது அடலசண்ட் வயதில் வரும் இன்ஃபாச்சுவேஷன்!
அதையெல்லாம்
காதலென்று கணக்கெடுத்தால் எனக்கு எங்கம்மாவுக்கு பிரசவம் பார்த்த நர்ஸ் மீது வந்ததுதான் முதல் காதல் என்று நினைக்கிறேன்!
நான்
கேட்கும் ஒரே ஒரு கேள்விக்கு நேர்மையாக பதில் சொல் ஜானகி!
என்னோடு
வாழ்ந்த நாட்களில் நீ சந்தோஷமாக இருந்தாயா
அல்லது ராமச்சந்திரனை நினைத்துக்கொண்டே சகித்து வாழ்ந்தாயா?
நிச்சயமாக
இல்லை.
என்
மனதில் ஆரம்ப நாட்களில் ஒரு சின்ன எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் இருந்தது உண்மைதான்.
ஆனால் உங்களோடு நான் வாழ்ந்த வாழ்வு போலித்தனம் இல்லாதது. இந்தமுறை நான் ஊருக்குப் போயிருக்கவே கூடாது.
போய்வந்தபிறகுதான் என்னால் உங்களோடு ஒட்டமுடியவில்லை!
ஆனால் உங்களோடு நான் வாழ்ந்த வாழ்வு போலித்தனம் இல்லாதது. இந்தமுறை நான் ஊருக்குப் போயிருக்கவே கூடாது.
போய்வந்தபிறகுதான் என்னால் உங்களோடு ஒட்டமுடியவில்லை!
சரி,
ஒருவேளை ராமச்சந்திரன் கல்யாணம் ஆகி தன் மனைவி குழந்தைகளோடு வந்திருந்தால் உன் நிலைமை என்னவாக இருக்கும் ஜானகி?
எதிர்பாராத
இந்தக் கேள்வியில் கொஞ்சம் நிலை குலைந்து போனாள் ஜானு!
வாட்சைப்
பார்த்துக்கொண்ட கிருஷ்ணன்,
ஸாரி ஜானகிக்கு எனக்கு இப்போது ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கிறது! ஒருவாரம் டைம் எடுத்துக்கொள்!
பிறகு சேர்ந்து வாழ்வதா, டைவர்ஸ் வாங்குவதா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்
பிறகு சேர்ந்து வாழ்வதா, டைவர்ஸ் வாங்குவதா என்பதை தீர்மானித்துக் கொள்ளலாம்
அதுவரை இது நம் இருவருக்குள் மட்டும் இருக்கட்டும்!
மெதுவாகத்
தலையசைத்த ஜானுவை தோளோடு அணைத்து நகர்ந்தார் கிருஷ்ணன்!
இரவு
மொட்டை மாடிக்கு அழைத்துப்போய்,
"ஜானகி,
நீ என்னிடம் எதையுமே ஒளிவு மறைவின்றி டிஸ்கஸ் பண்ணலாம்!
நான்
கேட்கும் கேள்விகளுக்கு மட்டும் நீ பதில் சொன்னால்கூட
போதும்!”
ம்ம்ம்!
இந்த
சென்னை பயணத்தில் ராமைப் பார்ப்பது மட்டுமே உன் எதிர்பார்ப்பாக இருந்ததா அல்லது மொத்த நண்பர்களையும் பார்ப்பதா?
உண்மையைச்
சொன்னால் அன்று ராம் வருவான் என்றே நான் நினைக்கவில்லை!
அவனைப்
பார்த்தபோதுகூட அவனை சீண்டிப்பார்க்கத் தோன்றியதேயன்றி வேறேதும் தோன்றவில்லை!
எல்லோரும் கிளம்பும்போது அவன் இன்னுமே கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மை வெளிப்பட்டபிறகே என் காதல் எனக்கே புரிந்தது!
எல்லோரும் கிளம்பும்போது அவன் இன்னுமே கல்யாணம் செய்துகொள்ளவில்லை என்ற உண்மை வெளிப்பட்டபிறகே என் காதல் எனக்கே புரிந்தது!
மன்னிக்கவும்!
இது பைத்தியக்காரத்தனமாகத் தோன்றவில்லையா ஜானகி?
சின்னவயதில்
ஏற்பட்ட ஈர்ப்பை காதல் என்று உருவகப்படுத்திக்கொண்டதைவிட
மடத்தனம் இந்த அனுதாபத்தை காதல் என்பது!
முதலிலிருந்தே
இந்த விஷயத்தில் உங்கள் இருவரிடமும் தெளிவில்லை!
நியாயமாக
சுபாஷிணிதானே அவனோடு அதிக இயல்பாய் நெருக்கமாய் பழகினாள்?
ஏன்
அவளை ராமுக்கு காதலிக்கத் தோன்றவில்லை?
இது
80s 90s கிட்ஸ்க்கு இருந்த இயல்பான குழப்பம்!
அன்று
ஆண் பெண் நட்பென்பது ஓரளவு எட்டாக்கனி! அதில் இயல்பாய் நெருங்கிப்பழக நேரும் நட்பை தக்கவைத்துக்கொள்ள அண்ணா தங்கை என்றொரு புனிதப் பூச்சு!
எட்டாக்கனிக்கு
எப்போதுமே ருசி அதிகம்! எனவே அதன்மேல் ஒரு அதீத ஈர்ப்பு!
அப்போது
உங்களுக்குள் நேர்ந்தது இந்தக் கண்ணாமூச்சி ஈர்ப்புத்தான்!
இதை
அப்போது காதலென்று உருவாக்கப்படுத்திக்கொண்டது
பிழையில்லை!
ஆனால் இத்தனை முதிர்ச்சிக்குப்பின் அதை அப்படி நினைப்பது அபத்தம்! என்மீது உனக்கு நம்பிக்கை இருந்தால் எனக்கு சுபாஷிணி, முரளி இருவரது மொபைல் நம்பரைத் தா!
நான்
கொஞ்சம் அவர்களோடு பேசவேண்டும்!
எனக்கு
ஏனோ இந்தக் காதல், கத்திரிக்காயிலெல்லாம் அத்தனை நம்பிக்கை இருந்ததில்லை!
அரேஞ்ச்ட்
மேரேஜ் என்றாலும், நமக்கிடையில் காதலில் ஏதும் குறைவில்லை என்றே நான் நினைக்கிறேன்!
யோசித்துப்பார்த்தால்,
நாம் இருவரும் இந்தப் பத்து வருடத்தில் ஒருமுறைகூட ஐ லவ் யூ
சொல்லிக்கொண்டதில்லை
அதை
சொல்லிக்கொண்டுதான் தீரவேண்டும் என்றும் எனக்குத் தோன்றவில்லை!
இப்போது
நீ மிகுந்த குழப்பத்தில் இருக்கிறாய்! இந்த வாரம் முழுக்க டைம் எடுத்துக்கொள்!
யோசி!
எப்படி இருப்பினும் உன் வாழ்வை முடிவு செய்வது உன் விருப்பத்தின் பேரிலேயே இருப்பது நல்லது!
நாம்
சரியாக ஒரு வாரம் கழித்து இதைப்பற்றிப் பேசுவோம்! குட் நைட்!
சொல்லிவிட்டுப்போன
கிருஷ்ணனை கண் பார்வைக்கு மறையும்வரை யோசனையோடு பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள் ஜானு!
நாட்கள்
யாருக்குக் காத்திருக்கின்றன?
ஒருவாரம்
குழப்பத்திலேயே நகர்ந்தது ஜானுவுக்கு!
இன்று
இரவு நாம் ஹோட்டலுக்குப் போகிறோம்! அங்கு பேசிக்கொள்ளலாம் - காலையிலேயே சொல்லிவிட்டுப் போயிருந்தார் கிருஷ்ணன்!
பதட்டமாய்
சேலை முந்தானை நுனியை கசக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்த ஜானுவை ஆதுரமாகப் பார்த்தார் கிருஷ்ணன்!
சொல்லு
ஜானகி, என்ன முடிவு செய்திருக்கிறாய்?
எனக்கு
இன்னுமே ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை என்றாலும் ஒரு விஷயம் உறுதி!
நான்
உங்கள் இருவருக்குமே நேர்மையானவளாக இனி இருக்க முடியாது! இது என் முட்டாள்தனத்துக்கான தண்டனையாக இருக்கட்டும்!
நான்
விவாகரத்து வாங்கிக்கொண்டு தனிமையில் வாழ்வதுதான் எனக்கான அந்த தண்டனை!
ஓகே!
லெட் மீ கெட் ஸம்
ஸ்காட்ச் டு செலிப்ரேட் அவர்
லாஸ்ட் சப்பர்!
சொல்லிக்கொண்டே
போனை எடுத்துக்கொண்டு இயல்பாய் எழுந்துபோனார் கிருஷ்ணன்!
இரண்டே
நிமிடத்தில் ஜானகியின் ஃபோன் சிணுங்கியது அவளது ஃபேவரைட் ரிங் டோனில்!
இப்படி
ஓர் தாலாட்டு பாடவா, அதில் அப்படியே என் கதையை கூறவா...
டிஸ்பிளேயை
பார்த்தவளுக்கு இதயம் ஒருகணம் நின்று துடித்தது!
லைனில்
ராம்!
இவன்
எப்படி இப்போது இத்தனை நாள் இல்லாமல்?
குழப்பமாக
ஃபோனை எடுத்து,
ஹலோ
ராம்?
மேம்,
நான் பிரபா பேசறேன்!
உற்சாகமாக கீச்சிட்டது எதிர்முனை!
மேம்,
போனவாரம் தமிழ் மேட்ரிமோனியலில் நான் வழக்கம்போல் ஜாலியாக மேய்ந்துகொண்டிருந்தபோது ஸாருடைய ப்ரொஃபைல் பார்த்து ஷாக் ஆயிட்டேன்!
அதற்கப்புறம்
சார்
வாயைப் பிடுங்கறது எனக்கொன்னும் பெரிய விஷயமா இல்லை!
சுபாஷிணி மேடம், கிருஷ்ணன் சார் எல்லாம் இருக்கும்போது எல்லாமே எனக்கு சுலபமா போய்டுச்சு.
சண்டே எனக்கும் ஸாருக்கும் குன்றத்தூர் முருகன் கோவில்ல கல்யாணம்!
கொஞ்சம் டை அடிச்சு பட்டி
டிங்கரிங் பார்த்து சாரை ஒப்பேத்தி வெச்சிருக்கேன்! சாரோட காஃப் லவ்வை கலைச்சதுக்கு மன்னிச்சுக்குங்க மேடம்!
சொல்ல
மறந்துட்டேனே, ஹனிமூனுக்கு சிங்கப்பூர்தான் வர்றோம்!
உங்ககிட்டயே
சொன்னதுதான் மேடம், சாரை நானே நல்லா பாத்துக்குவேன்!
சடசடவென்று சில மேகங்கள்
விலகியதுபோல் இருந்தது ஜானுவுக்கு!
கையில்
இரண்டு கோப்பையோடு கிட்டே வந்து கண்ணடித்து புன்னகைத்த கிருஷ்ணன் கேட்டார்
என்ன
முடிவு செஞ்சே ஜானகி!
இப்போதான்
எனக்கு ஐ லவ் யூ
சொல்லணும்போல இருக்கு!
ஐ
லவ் யூ கிருஷ்ணன்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக