ஆணின் அதிகாலைகள் பேரழகு!!
"தூரத்துல
கூவுதொரு
குயில்
தோட்டத்துல அடிக்குது
வெயில்"
கம்மோட்ல
உட்காந்துக்கிட்டு ட்விட்டரும் இன்னொன்னும் ரெண்டு காலைக்கடனையும் ஒருசேர முடிக்கறதுக்குல்ல,
கீஈஈஈ
ன்னு ஒரு நாராசமான ஹார்ன் சத்தம்,
கூடவே,
"ஸார் பாஆஆல்"
கேட்கவே
வேண்டாம்- மணி விடிகாலை அஞ்சரை!
பால்
பாத்திரத்தை எடுக்கப் போகும்போது போர்வைக்குள்ள இருந்து
"சாப்பாட்டுக்கு
அரிசி
ஊறவச்சுருங்க!"
சரி
தாயே!
அவசரஅவசரமா
பாலை வாங்கி, அடுப்புல வெச்சிட்டு,
அரிசி
ஊறவெச்சு,
டிகாஷன்
போட ஆரம்பிக்கையில மொபைல்
- பெட்ரூம்ல
இருந்து பரதேவதை
"மோட்டார்
போட்டு விடுங்க!"
மோட்டார்
ஸ்விட்சை தட்டிவிட்டு, பாலும் டிகாஷனும் இறக்கி வெச்சுட்டு நிமிரும்போது
மூத்தது
- "அப்பா, எனக்கு பூஸ்ட் கலக்கு!"
பூஸ்ட்
ஆத்திக்கொடுக்கும்போது
அடுத்த இன்ஸ்டரக்சன்
"நீ
என்னை
யோகா
க்ளாஸ்ல
இறக்கி
விட்டுட்டு
வந்து
காஃபி
குடிச்சுக்கோ,
லேட்
ஆச்சு!”
டிகாஷன்
வாசம் மூக்கை துளைக்குது.
என்ன
பண்ண, மகளைவிட காஃபியா முக்கியம்னு மனசை தேத்திக்கிட்டு ஸ்கூட்டரை உதைத்தால், கோல்ட் ஸ்டார்ட் மக்கர்!
பத்துத்தடவை
மிதிச்சதும் போனா போகுதுன்னு ஸ்டார்ட் ஆகுது சனி!
யோகா
க்ளாஸ்ல இறக்கிவிடும்போது உள்ளே போன பெண்வடிவம் கொஞ்சம் சலனப்படுத்த,
“நானும்
நாளைல
இருந்து
யோகாவுக்கு
வரட்டுமாடா?”
“நீ
எதுக்கு வர்றேன்னு எனக்குத் தெரியும். போய் சமையலைப் பாரு! இது லேடீஸ் பேட்ச். “
“அப்புறம்,
உன்
பொண்டாட்டிக்கு ஊழியம் பண்ணிக்கிட்டு இருந்துட்டு லேட்டா வராதே, ஏழுமணிக்கு ஷார்ப்பா வந்துடு!”
“சரி
தாயே”ன்னு கையெடுத்து கும்பிட்டு வீட்டுக்கு வந்தால், வாசல்ல வழிஞ்சு ஓடுது தண்ணீர்!
“மோட்டாரை
போட்டுட்டு எங்கே போனீங்க?” - இது ரெண்டாவது!
“அப்பா
சாமி, அக்காவை கொண்டுபோய் விடப்போனேன்.”
“சரி,
வந்து எனக்கு காஃபி ஆத்திக்கொடு”
“உங்க
அம்மா வந்தா என்னைத்தான் திட்டுவா, மரியாதையா பூஸ்ட் குடி!”
சொல்லிக்கிட்டே
அவனுக்கு பூஸ்டும் எனக்கு காஃபியும் கலந்து எடுத்துக்கிட்டு வரும்போது டிகாஷன் ஆறித் தொலைஞ்சிருந்தது!
விதியேன்னு
குடிச்சுக்கிட்டே ட்விட்டரில்
“அதிகாலை
ஃபில்டர்
காஃபி
பேரானந்தம்”ன்னு ஒரு ட்விட் தட்டிவிட்டு ஜனநாயக கடமையை ஆத்தும்போதே,
மாடிப்
படிக்கட்டுல பூகம்பம்!
“மொபைலை
நோண்டிக்கிட்டே தண்ணிய வழிய விட்டாச்சா?”
எஜமானி விஜயம்
எப்போதுமே
இப்படித்தான்
- மேனேஜர் எண்ட்ரி
மாதிரி!
“இல்லை
தாயே, உங்க மகளை யோகா க்ளாஸ் கூட்டிக்கிட்டுப் போனேன்! அந்த கேப்புல..”
“சரி,
செடிக்கெல்லாம் தண்ணி ஊத்திட்டீங்களா?
நேத்து
சரியா ஊத்தல போல, செடியெல்லாம் வாடியிருந்தது.”
சொல்லிக்கிட்டே
சமையலறை விஜயம்!
முறைச்சுட்டதா மனசுக்குள்ள
நினைச்சுக்கிட்டு
தோட்டத்துப்பக்கம் ஒதுங்குன கொஞ்சநேரத்தில்,
“அப்பா,
அம்மா பூவெல்லாம் பறிச்சுக்கிட்டுவந்து சாமி செல்ஃப்ல வைக்கச்சொன்னாங்க!”
“சரி!”
“செம்பருத்தியை
பறிக்கவேண்டாமாம்!”
“சரி!”
அந்தக்
கடமையும் முடிச்சுட்டு, இடையே எடுத்த ஃபோட்டோ ட்விட்டரில்
"இன்றைய
வண்ணம்"
ஐயோ,
மணி ஏழு!
வண்டி
எடுத்துக்கிட்டு போனபோது அஞ்சு நிமிஷம் லேட்!
“ஏன்
லேட்டு?”
“ஏன்,
கொஞ்சநேரம் வெய்ட் பண்ண முடியாதா?”
“இல்லை,
காலைல விடவரும்போது பார்த்து நீ ஜொள்ளு விட்டியே
அந்த ஆண்ட்டி இந்நேரம் வரைக்கும் நின்னுட்டு இப்போதான் போறாங்க!”
பரம்பரைக் குசும்பு!
வீட்டில்
போய் இறக்கிவிடும்போதே கண்ணில் பட்டது அது!
“என்னடி
இது வாசல்ல?”
“ம்ம்?
வீரா டாய்லெட் போய் வெச்சுட்டான்!
சிவா லேட் ஆச்சுன்னு குளிக்கப்போய்ட்டான்!
நீங்க வந்ததும் கிளீன் பண்ணச்சொன்னான்!”
“ஏன்
நீ பண்ணக்கூடாதா?”
“பிள்ளைங்க
கேட்டுச்சுன்னு நீங்கதானே நாய் வாங்கிக் குடுத்தீங்க,
நீங்களே க்ளீன் பண்ணுங்க!”
இதைப்படிக்கும் புண்ணியவான்கள்/வதிகள் யாராவது நியூஸ் பேப்பரில் நாய் ஆயை எடுத்து, ஆல்ரெடி அதே ஐட்டம் பொக்கிஷம் மாதிரி கட்டி வெச்சிருக்கும் கார்பேஜ் கவரில் போட்டிருக்கிறீர்களா? (அப்படி கட்டி
வைத்தால்தான்
குப்பைக்கார
அம்மா
கையில்
தொடும்). குடல் வாய்வரைக்கும் வந்து போகும்
- அப்படி ஒரு சுகந்தம்!
ந்யூஸ்
பேப்பரை கிழிக்கும்போதுதான் தினமலர் வாங்காததுக்கு கொஞ்சம் வருத்தமாக இருந்தது!
ஒருவழியா
அந்த வேலை முடிஞ்சு,
“நான்
போய் குளிச்சுட்டு வர்றேன்!”
“அதுக்கு
முன்னாடி கொஞ்சம் ரசப்பொடி வாங்கிட்டு வந்து குடுத்துட்டுப் போங்க!”
“சரி!”
“சக்தி
மசாலா வாங்குங்க!”
“சரி!”
மறுபடி
வண்டியை எடுக்கும்போதுதான் பெட்ரோல் டேஞ்சர் ஜோனில் இருப்பது கண்ணில் பட்டது!
கொஞ்சம்
பக்கத்தில் இருக்கும் கடைல
“ரசப்பொடி
இருக்கா?’
“இருக்கு.”
“சக்தி
மசாலாதான் வேணும்.”
பத்து
நிமிஷம் தேடியபிறகு,
“ஆச்சிதான்
இருக்கு!”
“சரி
சின்ன பாக்கெட் கொடுங்க!”
நமக்கும்
ஜோதிகாவுக்கும் செட்டே ஆகறதில்லை!
வீடு
வந்து கிச்சன்ல நீட்டுனா,
“என்ன
இது?”
“ரசப்பொடி.
நீதானே கேட்டே?”
“நான்
சக்தி மசாலா வாங்கிட்டு வாங்கன்னு படிச்சு படிச்சு சொன்னேன்! இதைப்போய் வாங்கிட்டு வந்திருக்கறீங்க!”
“இதுக்கு
கால் மணிநேரம் வேற!”
மனசுக்குள்ளயே
திட்டிக்கிட்டு குளிக்கக் கிளம்பினால்,
"உள்ள
போய்
செல்ல
நோண்டிக்கிட்டு
இருக்காதீங்க,
தம்பிக்கு
எட்டு
மணிக்கு
ஸ்பெஷல்
க்ளாஸ்!"
ஆஹா!
“அன்பான
மனைவி
அமைவது
வரம்” ன்னு ட்விட்டை
தட்டிக்கிட்டே பாத்ரூமில் போய் சிரைக்க ரேஸரை எடுக்கும்போதுதான் புது
பிளேடு
வாங்க
இன்னைக்கும்
மறந்தாச்சுன்னு நியாபகம் வந்து தொலைச்சுது!
மொதல்லையே நம்ம
மொகரை
அழகு!
இதில்
ரெண்டுநாள்
தாடி
வேற
இருந்தா
டிபி
பேஷண்ட்
மாதிரி
இருக்கும்!
எரிய
எரிய ஷேவ் பண்ணிட்டு ஒரு காக்காய் குளியல் போட்டு வெளியே வந்து ஆஃப்டர் ஷேவ் லோஷனை கையில் கவிழ்த்தால் காத்துதான்
வருது!
அது
தீர்ந்து ஒரு மாசமாச்சு!
தினசரி
மறந்து தொலையுது!
அவசர
அவசரமா துணியை மாட்டிக்கிட்டு இருக்கற நாலு முடியை தேடி சீவறதுக்குள்ள அஞ்சு தடவை
"அப்பா
லேட்டாச்சு!"
ஏழு
அம்பத்தொம்பதுக்கு பையனை ஸ்கூல் வாசல்ல இறக்கிவிடும்போதா அந்த மிஸ் நியாபகம் வந்து தொலைக்கணும்?
“நான் வேணும்னா
உள்ளே
கொண்டுவந்து
விடட்டுமா?”
“வேண்டாம்ப்பா, வேஸ்டு! காஞ்சனா மிஸ் எட்டரைக்குத்தான் வருவாங்க!”
கள்ளப்பயல்!!
விதியேன்னு
பெட்ரோல் பங்க் போய் அனுமார் வால்ல கடைசி மயிரா நின்னு, முறை வந்து பெட்ரோல் போடறதுக்குள்ள நாக்கு தள்ளிப்போச்சு!
சரியா
வீடு இருக்கற ரோடு திரும்பும்போது அந்தக் கருப்பு நாய் கண்ணில் பட்டது.
அதுவும்
என்னை பார்த்து தொலைச்சிடுச்சு!
என்னைக்கோ யாருக்காகவோ
ஸீன்
போட
கல்லெடுத்து
துரத்துனதுக்கு
கரம்
வெச்சுக்கிட்டு
மூணு
ஜென்மமா
தொரத்துது
- நம்ம ராசி அப்படி!
எதுக்கு
வம்புன்னு நாலு தெரு சுத்தி வீட்டுக்கு வந்தா ஒரு நாளே முடிஞ்சுபோன அலுப்பு!
ஒரு
சின்ன நப்பாசை!
செகண்ட் டோஸ்
காஃபி
குடிச்சா
நல்லா
இருக்குமே!
“சூடா
ஒரு அரை டம்ளர் காஃபி கொடேன்!”
ஃபுல்
ஸ்பீட்ல ஃபேனை ஓடவிட்டு சேரில் சாய்ந்திருந்த சகதர்மிணி
“ஹூம்! இப்போதான்
ரசம்
வெச்சுட்டு
வந்து
உட்கார்ந்தேன்!
அது பொறுக்கலையா
சாமி?”
முனகிக்கிட்டே
எழுந்துபோனபோது தோனுச்சு,
அது
என்னவோ சொல்லுவீங்களே?
ம்ம்ம் ...
வாழ்வினிது!!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக