இரண்டு
நாட்களுக்கு முன்பு மருத்துவர் தினம்!
இணைய
வழக்கப்படி பொத்தம்பொதுவாய் அனைத்து மருத்துவர்களையும் காசுக்காக அலையும் பீடைகள் என்று திட்டித்
தீர்த்து கவன ஈர்ப்புப் பெற்றாயிற்று!
கலகக்காரர்
என்று பெயர் பெறுவது எவ்வளவு சுலபம் -
புனிதபிம்பம்
உடைப்பதும், பிறந்த நாளில், சிறந்த நாளில் தூற்றுவதும் என!
எனக்கும்
இப்படி ஏதாவது உளறி கைதட்டல் பெற ஆசைதான்!
இரண்டு
நாட்களாக கொஞ்சம் இடைவிடாத ஆணிகள்!
அலுவலக,
சொந்த வேலை காரணமாக ராப்பகல் பயணங்கள்!
இப்படி
அலைவது பிடித்தமானது என்றாலும், கொஞ்சம் அலுப்பாகத்தான் இருக்கிறது!
வரவரஎங்கே சுற்றினாலும்
சொந்தக்கதையில்
வந்து
நின்றுவிடுகிறேன்
- உ
நா
போல!
இன்றைக்கு
கொஞ்சம் சுவாசிக்க நேரம் கிடைத்ததில், நானும் கொஞ்சம் அந்த மருத்துவப் பண்ணாடைகளை போட்டுப் பிளக்கலாம் என்று உட்கார்ந்தேன்!
எதை
எழுதினாலும் கொஞ்சமாவது சொந்த அனுபவம் கலக்காமல் எழுதுவதில்லை என்ற பெருமைப் பீற்றல் காரணமாக, நமக்குத் தெரிந்த மருத்துவர்களையே வசைபாடுவோம் என்றுதான் எழுத ஆரம்பித்தேன்!
ஆனால்
பாருங்கள், எனக்கு வாய்த்த உதவாக்கரைகளை!
எல்லா
புரட்சியையும் ஈரோட்டில் ஆரம்பிப்பது ஒரு சம்பிரதாயமாகிப்போனாதால் அங்கிருந்தே ஆரம்பிப்போம்!
இந்த
மருத்துவர் பற்றி ஏற்கனவே எழுதியதுதான்!
அராஜகம்
என்றால் அப்படி ஒரு
அராஜகம்!
ஆறு
வருடம் குழந்தைப்பேறு இல்லாமல், சில அபார்ஷன்களை அனுபவித்து, உலகப்புகழ் பெற்ற மருத்துவரே உனக்கு இயற்கையாக குழந்தை பெற வாய்ப்பே இல்லை என்று சொன்ன பேஷண்ட் கையில் கிடைத்தால், உருப்படியான டாக்டராய் இருந்தால் என்ன செய்யவேண்டும்?
பரம்பரை சொத்தை
விற்றுவந்து
அட்வான்ஸ்
கட்ட
சொல்லவேண்டாமா?
மாதாமாதம்
செக்கப்புக்கு காசு வாங்காததைக்கூட மன்னித்துத் தொலைக்கலாம்!
ஆனால்,
பிரசவ வலி தாங்காமல் சிசேரியன் செய்துவிடச் சொல்லி, கணவன் மனைவி இரண்டுபேரும் கெஞ்சிக் கேட்டபோது,
எவ்வளவு திமிர் இருந்தால்,
“இது
என் மருத்துவமனை! என்ன செய்யவேண்டும் என்று எனக்குத் தெரியும்” என்று எடுத்தெறிந்து பேசியது மட்டுமல்ல, சுகப் பிரசவம் பார்த்து மூன்றாவது நாளே டிஸ்சார்ஜ் பண்ணுவது எந்தவிதமான மருத்துவ தர்மம்?
வீட்டுக்குக்
கூட்டிப்போக ஆட்டோ
பிடித்துவருகிறேன் என்று சொன்னால்,
“ஏன்,
இவ நடக்க மாட்டாளா? எடுடி குழந்தையை கையில்!”
என்று அதிகாரம் செய்து இரண்டு தெரு தள்ளியிருந்த வீட்டுக்கு நடத்தியே கூட்டிப்போய், மிரட்டி ஒரு கப் காஃபி வாங்கிக் குடித்துவிட்டுப் போன அதிகாரத் திமிரை என்ன சொல்லித் திட்ட?
படிக்கும்
காலத்தில் விளையாட்டாய் உன் மனைவிக்கு நான்தான் பிரசவம் பார்ப்பேன் என்று சொன்னதை மறக்காமல்,
டெலிவரிக்கு சேர்த்த தகவல் அறிந்ததும் சொந்த க்ளீனிக்கை மூடிவிட்டு ஓடிவந்து முதல் குழந்தையை எடுத்து என் கையில் கொடுத்ததோடு மட்டுமல்லாமல்,
இரண்டாவது பிரசவத்தின்போது
அவர் க்ளீனிக்கிலேயே சேர்த்து,
பொறுப்பில்லாமல் நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்த என்னை நள்ளிரவில் எழுப்பி பையன்
பிறந்த தகவலை சொன்னதோடு,
டெலிவரிக்கு
சார்ஜ் என்ன என்று கேட்டதற்கு கெட்ட வார்த்தை பேசி அடிக்காத குறையாக துரத்திவிட்ட பணப்பேயை என்ன செய்ய?
இதெல்லாம்
டாக்டருக்குப் படித்து என்ன பிரயோஜனம்?
உன்
இன்றைய நிதிநிலை எனக்குத் தெரியும் என்று வாய் வார்த்தையாய் சொல்லாமல்
அரசு மருத்துவமனையில் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்கவைத்து,
இலவசமாய் மருத்துவம் பார்த்து அனுப்பிய இன்னொரு சகோதரியையாவது இன்றைக்கு ஏசலாம் என்றால் வார்த்தைதான் கிடைக்க மாட்டேன் என்கிறது!
இவையெல்லாம்
ஏன் இப்படி வந்து வாய்க்கின்றன?
இருபது
வருட காலம் ஒரு அர்த்தமற்ற பகையை,
உட்கார்ந்து
பேசி ஒரு நிமிடத்தில் தீர்க்கக்கூடிய விஷயத்தை
வெட்டி
ஈகோ காரணமாக தணல் அணையும்போதெல்லாம் எண்ணெய் ஊற்றி பகையை ஊதி வளர்த்துவரும் இரண்டு கூட்டத்தில்
எதிர்
துருவத்திலிருந்து வந்து தன்னிடம் டெலிவரிக்கு சேர்ந்த பெண்ணை கண்ணும் கருத்துமாய் பார்த்து, பிரசவத்தில் சிக்கலாகி, குழந்தை பிழைப்பதற்கு ஒரு சதவிகித வாய்ப்பு மட்டுமே இருந்த நிலையில்,
கையிலிருந்த
அத்தனை காசையும் உடனே அள்ளிக்கொடுத்து கோவைக்கு அனுப்பி,
ஓயாது
அங்கிருந்த மருத்துவர்களை தொடர்பு கொண்டு, குழந்தையை பிழைக்கவைத்து
பழையபடி
பகையை விட்ட இடத்திலிருந்து தொடரும் கிறுக்கனை பேராசைக்காரன் என்று தூற்றத்தான் ஆசையாக இருக்கிறது!
சரி,
இவர்கள்தான் இப்படி என்றால்,
ஒரு வாரமாக தலைவலி என்று அழுத மகனை அழைத்துச் சென்றபோது,
நீதான்
நல்லா இங்கிலீஸ் பேசறியே, நான்லாம் மெடிக்கல் காலேஜ் சேர்ந்தபோது மத்த பசங்கள்லாம் இங்கிலீஸ்லயே பேசிக்கிட்டு ஜாலியா இருப்பாங்க, பொண்ணுங்க என்னை திரும்பிக்கூட பார்க்கமாட்டாங்க என்று சிரிக்கச் சிரிக்கக் கதை சொல்லி மருந்தே கொடுக்காமல் திருப்பி அனுப்பிய இன்னொரு உதவாக்கரை!
இவரிடம்
மருந்து சீட்டு வாங்கப் போராட வேண்டியிருக்கும்!
"விடுங்க,
ரெண்டு நாள்ல சரியாகிடும், இல்லைன்னா பார்ப்போம்" - இதுதான் எப்போதுமே அவரோட டெம்ப்ளேட் ஓப்பனிங் வசனம்!
இவர்களெல்லாம்
கொஞ்சம் பழைய கிழங்கள் என்றுகூட வைத்துக்கொள்ளலாம்!
காசே
குறியாக பிழைக்கத் தெரிந்த இந்த ஜெனரேஷன் டாக்டர் ஒருத்தர்!
முப்பது வயதுதான்
இருக்கும்!
விஜயசேதுபதி
சாயலில்
ஒரு
கறுப்புப்
பேரழகன்!
ஆர்த்தோ!
அந்த
மருத்துவரோடு நடந்த சின்ன உரையாடல்!
“அம்மா, உடம்புன்னு இருந்தா அப்பப்போ கொஞ்சம் வலி வரத்தான் செய்யும்!”
இல்லை
டாக்டர், முட்டி ரொம்ப வலிக்குது!
‘சரி, ஒரு எக்ஸ்ரே, இல்லைன்னா ஒரு MRI எடுத்துப் பார்த்துடலாமா?”
சரி
டாக்டர்!
ஏன், உங்க வீட்டுக்காரர் நிறைய பணம் வெச்சிருக்காறா?
ஒரு வாரம் சுடுதண்ணி ஒத்தடம் கொடுங்க, வலி குறையும். இல்லைன்னா அப்புறம் ஏதாவது மாத்திரை தர்றேன்!
அதை
இப்போவே கொடுத்துருங்களேன்!
உங்க உடம்பு என்ன குப்பைத் தொட்டியா? தேவையில்லாத கெமிக்கலையெல்லாம் கொண்டுபோய் கொட்ட?
ஒரு வாரம் பார்க்கலாம்! இல்லைன்னா, மாவுக்கட்டு போட்டு இருபத்தொரு நாள் படுக்கவைத்துடலாமா?
கிண்டல்
பண்ணாதீங்க, ரொம்ப வலிக்குது டாக்டர்.
உடம்பைக் குறைங்க,
அசையாம உட்கார்ந்து
டிவி பார்க்கற நேரம், நூறு தடவை, இருநூறு தடவை காலை மெதுவாக உயர்த்தி இறக்குங்கள். தானாக அந்த ஸ்டிஃப்னெஸ் குறைஞ்சு போகும்!
ஒரே
இடத்தில் நின்னு பாத்திரம் தேய்க்க முடியல டாக்டர்!
தேய்க்காதீங்க, சாரை தேய்க்க சொல்லுங்க, அவர் நல்லாத்தானே
இருக்கார்?
அப்போ,
நீங்க மாத்திரை தர மாட்டீங்க?
நீங்க சண்டையே போட்டாலும் முதல் விசிட்ல நான் மாத்திரை தரமாட்டேன்!
போய் சுடுதண்ணி, இல்லைன்னா ஐஸ் ஒத்தடம் கொடுங்க!
நமக்கு வாய்க்கிற இந்த ஜெனரேஷனும் இப்படித்தான் இருந்து தொலையுதுக!
இதையெல்லாம் வச்சுக்கிட்டு எங்கத்த புரட்சி பண்ண!
வெள்ளைச்
சுவற்றிலிருக்கும் ஒற்றைக் கரும்புள்ளியை மட்டுமே உற்றுப் பார்த்து மிரளும் குணமோ,
அன்றி
அத்தனை
நல்லதும் மறந்துபோகும் மறதி வியாதியோ வராமல் இதில் பொங்கலுக்கோ புரட்சிக்கோ வாய்ப்பே
இல்லை!
பி.கு:
1. பொதுவாக
நல்லதை சொல்லும்போது பேரையும் ஊரையும் சொல்லுவது வழக்கம்!
ஆனால்
இதில் ஒருவர் வேறு காரணத்தால் வெகுகாலமாய் முரண்பட்டு நிற்பவர்,
இன்னொரு
சகோதரி ஏனோ சில காலமாய் விலகி நிற்பதே நல்லதென்று தள்ளி நிற்பவர்.
அவர்களைக்
குறிப்பிடுவது சமாதானத் தூதென புரிந்துகொள்ளப்படும். அவர்களைத் தவிர்த்து மற்றோர் பெயரை மட்டும் குறிப்பிடுவது நியாயமில்லை!
2. குடும்பத்தில்
இருக்கும் மருத்துவரை இந்தக் கேட்டகிரியில் அடக்க முடியாதென்பதால் அவர் பற்றி எந்தக் குறிப்பும் இங்கே இல்லை!
Nicely written. These doctors deserve it!
பதிலளிநீக்கு