தூரத்தில் நான்
கண்ட
உன்
முகம்…
என்ற பெரும் புதையலை தோண்டியெடுக்கச் செய்தமைக்கு!
பாலச்சந்தர்
நினைவேந்தல் விழாவில் கவிப்பேரரசர் உரை கவனம் பெறாவிடில், இன்னும் எத்தனை ஆண்டுகள் கழித்தும் இந்தப் பாடலை இத்தனைஆழ்ந்து கேட்டிருக்கமாட்டேன்!
அன்று
திரையுலகம் அந்த இசையமைப்பாளர் கட்டுப்பாட்டில் இருந்தது என்று தூற்றியதோடு,
"திறமையும்
இருந்தது"
என்று போகிறபோக்கில், போனால்
போகிறது என்று அந்த இமையம் பாராட்டிய அந்த இசையமைப்பாளரிடம் அப்படி என்னதான் "திறமையும் இருந்தது" என்று கண்டறிய அந்த மஹாகவி பெரும்புகழ் பெற்ற பாடல் இடம்பெற்ற நிழல்கள் படப்பாடலில் ஆரம்பித்தேன்!
வழக்கம்போல ஊரோடு
ஒட்டாததுதான்
வாய்த்தது!
அந்தப்
படத்தில் அத்தனை பாடல்களும் இன்றுவரை நினைவில் நிற்க,
படத்தில்
இல்லாத இந்தப்பாடல் என் கண்ணில் முதலில் பட்டுத் தொலைத்தது!
இனி
இதை விட்டு நகருவது கடினம்!
இது கௌரி
மனோஹரியா,
தர்மாவதியா
என்ற
டெக்னிக்கல்
ஆராய்ச்சி
செய்வது
மாபாதகம்!
காதல் தோல்வி,
விரக்தி,
எனினும் எதிர்கொண்டு வாழ்ந்தே ஆகவேண்டிய வாழ்வியல் சூழல்
இது எல்லாவற்றையும் எப்படி ஒற்றைப்பாடலில் தருவது?
எப்படியோ
அந்த “திறமையும் இருந்த” இசையமைப்பாளருக்கு அது வசப்பட்டிருக்கிறது!
மனதைப்
பிசையும் ஹம்மிங்கோடு ஆரம்பிக்கும் பாடல் ஒரு சின்ன வீணை இசையோடு ஆரம்பிக்கிறது!
ஜானகி
முதல் பத்தி பாடி முடிக்க, எங்கிருந்தோ ஆரம்பிக்கிறது அந்த ஒற்றை வயலின் (செல்லோ?)
அதற்குப்பிறகு
ஆர்க்கெஸ்ட்ரேஷனும் கோரஸும் அப்படியே வானத்தில் தூக்கி மிதக்க வைக்க,
இரண்டாம் இண்டர்லூடில்
வீணை
கழிவிரக்கம்
பாட,
வயலின்
எதிர்கொண்டே
ஆகவேண்டிய
எதார்த்தம்
சொல்கிறது!
கோரஸ்
எப்போதும் ராஜாவின் தாய்ப்பண்!
அது
மிகச்சரியாக மிகத் தேவையான ஆறுதலையும் வேகத்தையும் தர,
ஒரு
கலவையான மனோநிலையில் கேட்பவனை நிலைகுலைய வைக்கிறது!
ஒரு மிகச்
சிறந்த
சிம்பொனி
ஆர்க்கெஸ்ட்ரேஷன்
எப்படி
இருக்கவேண்டும்
என்பதை
இவ்வளவு
அழுத்தமாக
எந்தஒரு
பாடலும்
சொன்னதை
நான்
கேட்டதில்லை
- ராஜா
பாடல்கள்
உட்பட!
நிச்சயம் ராஜாவின் தலைசிறந்த பத்துப் பாடல்களில் முதல் இடத்தில் சிம்மாசனம் இட்டு உட்காரத் தகுதி வாய்ந்தது இந்தப் பாடல்!
ஆடும் காற்றிலே,
புது
ராகம்
தோன்றுமோ..
என்று பின்னணி இசையே இல்லாமல் பாடலின் நடுவே ஜானகி உருக,
நம்மை
அறியாது திரளும் கண்ணீர்,
இசையோடு
இசைந்து அவர்
உன்
முகம்ம்ம்ம்ம் .. என்று முடிக்கும்போது
கன்னத்தில்
உருளுகிறது.
நல்லவேளையாக
இந்தப்பாடலை படத்தில் வைக்கவில்லை பாரதிராஜா!
புத்திசாலி!
வெறும்
மான்டேஜ்களாலோ, அன்றி பாவங்களாலோ நிரப்பவே முடியாத பாடல் இது!
இது என்றைக்கேனும்
இப்படி
ஒரு
மனோநிலையில்
மின்னலைப்போல்
தாக்கி
முற்றாக
ஆக்கிரமிக்க
உண்டான
இசை!
மூன்று
நாட்கள் வண்டியில் திரும்பத் திரும்பக் கேட்டும் அலுக்காத நிலையில்
நேற்று மனைவியோடு பயணிக்கையில் மறுபடி கேட்க, சட்டென்று
கலங்கிய கண்ணைப்பார்த்து ஏனென்று கேட்டபோது
தூசி
விழுந்திருக்கும் என்றுதான் சொல்லமுடிந்தது!
ஏற்றிவிடப்பட்ட
கதவின் கண்ணாடியைப் பார்த்துவிட்டு என் பக்கம் திரும்பியவர் நம்பவில்லை என்றுதான் நினைக்கிறேன்!
ஆனால்
ஏனோ அவரும் மௌனமாக இருந்துவிட்டார்!
இத்தனை
காலம் கூடவே பயணிக்கும் அவருக்கும் புரிந்திருக்கும்!
இளையராஜா பாடல் சட்டென்று நெகிழ்த்த, வெறும் காதல், அதில் தோல்வி என்ற ஒற்றைக்காராணி மட்டும்தானா என்ன?
வாழ்வின் எல்லா ரணங்களையும் வருடிப்போகும் மயிலிறகு அது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக