முதலில்
ஒரு டிஸ்க்ளைமர்!
நான்
இந்த நிகழ்ச்சியை பார்ப்பதில்லை!
அதிர்ஷ்டவசமாக
ஏனோ இதை பார்க்கவேண்டும் என்று தோன்றவேயில்லை!
ஆனால்
இணையத்தை திறக்கும்போதெல்லாம் இதுதான் வந்து கண்ணில் அறைகிறது!
அரசியல்,
பொருளாதாரம், உளவியல் என்று அத்தனையும் பிரித்து மேயும் அறிவுஜீவிகள் என்று அறியப்படுவோர் முதல்,
தன்னை
அரைகுறை என்று அறிவித்துக்கொண்டோர் வரை,
இதைப்
பற்றியே பேச்சு!
தவிர்க்கமுடியாமல்
வீட்டிலேயே முடங்கிக்கிடக்க நேர்ந்த இந்த சில நாட்களில் இது எத்தனை தூரம் டிவி சீரியல்களை திரும்பிக்கூடப் பார்த்திராத குடும்பத்தைக்கூட ஈர்த்திருக்கிறது என்று புரிகிறது!
காரணம்
வெகு எளிமையானது!
விஜய்
டிவியின் விளம்பர உத்தி,
மற்றும் கமல்ஹாசன்!
தமிழ்
திரை உலகில் மட்டுமல்ல, அரசியல், இலக்கியம், பகுத்தறிவு என்று எல்லாத் தளங்களிலும் கேள்வியே கேளாமல் அறிவுஜீவி என்று கொண்டாடப்படும் ஒரே நபர்!
அரசியல்
இருள் போக்க வந்த அறிவார்ந்த கைவிளக்கு!
அவர்
தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சி, மற்றும் தமிழ் சினிமாவின் மாறுபட்ட இயக்குனர்களில் ஒருவரான சேரன் பங்கேற்கும் நிகழ்ச்சி!
இந்த
வாரம் சனி, ஞாயிறு இரண்டு நாட்களிலும் கொஞ்ச நேரம் (அதற்குமேல் சத்தியமாக முடியவில்லை) உட்கார்ந்து பார்த்தது, வீட்டிலுள்ளோரைக் கேட்டு அறிந்த பின்னூட்டம்!
இவையே
போதுமானதாக இருந்தது - இந்த நிகழ்ச்சி எவ்வளவு கேவலமான ரசனையோடும் செயல் திட்டத்தோடும் கட்டமைக்கப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்கள் மீது ஏவப்படும் வன்முறை என்பது!
இதில்
பங்கேற்போர் எல்லோருமே ஓரளவு பிரபலமான, சமூகத்தில் அறிமுகமான முகங்கள்!
அரை
நூற்றாண்டு காலத்துக்கு மேலாக பெரிய திரையிலும், கால் நூற்றாண்டு காலமாக சின்னத்திரையிலும் ஒன்றிப்போய் தன் ரட்சகர்களை அவற்றில் மட்டுமே தேடும் ஒரு அறிவார்ந்த சமூகத்துக்கு இந்த நிகழ்ச்சி சொல்ல வருவது என்ன?
பிரபலமான
சிலர் ஒரு வீட்டில் தங்கி, தங்கள் வாழும் முறையை இரவும் பகலும் வெளிச்சம் போட்டுக் காட்டுவதும், அதை வாரம் தோறும் ஒரு அறிவுஜீவி ஆராய்ந்து அலசுவதும் பார்வையாளர் மனத்துக்குள் கடத்தும் சேதி என்ன?
இதை
வியாபாரமே குறியான ஒரு வர்த்தக சேனல் யோசிக்கவேண்டிய அவசியம் இல்லை!
ஆனால்,
இந்த
சமூகத்தை சீர்திருத்த, வழிநடத்த, டார்ச் லைட்டோடு கிளம்பியிருக்கும் உலக நாயகன் கண்டிப்பாக யோசிக்காமலா இருப்பார்?
இதுவரை
அவர் சம்பாதிக்காத காசையும் புகழையும் இந்த நிகழ்ச்சி தந்துவிடப் போகிறதா என்ன?
எனில்,
இந்த நிகழ்ச்சி மூலம் அவர் நிச்சயம் தான் தூய்மைப்படுத்த விரும்பிய சமுதாயத்துக்கு ஒரு நல்ல சேதியை சொல்லாவிட்டாலும், சீரழிவை விதைக்கமாட்டார் என நம்பலாமா?
சில
ஆண்களும், சில பெண்களும் ஒரு வீட்டுக்குள் வாழும்போது,
வேறு
வேலையே இல்லாமல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருபத்துநான்கு மணி நேரத்தையும் தள்ள நேரும்போது சில உளவியல் சிக்கல்கள் வரத்தான் செய்யும்.
ஆனால்
அது இத்தனை மட்ட ரகமாகவா?
ஒரு
ஆணும் பெண்ணும் சந்தித்து பழக ஆரம்பிக்கும்போதே அவர்களின் உடல்தான் முதலில் உறுத்த ஆரம்பிக்குமா?
பாலியல் ஈர்ப்பு தவிர ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே வேறு எந்தக் கருமமுமே இல்லையா?
இதையெல்லாம்
எங்கள் தலைமுறையிலேயே தாண்டி வந்துவிட்டதாய் நினைத்துக் கொண்டிருக்க,
எங்களைவிட
சிந்தனை செயல் அறிவு எல்லாவற்றிலும் மேம்பட்டுவிட்ட அடுத்த தலைமுறை இளைஞர்களும் யுவதிகளும் இதை இடதுகையில் புறம் தள்ளிப் போவார்கள் என்று நம்பியதை மூடநம்பிக்கை என்று நிறுவ இத்தனை மெனக்கெடல் தேவையா?
வந்த
நாள் முதல் ஒரு ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் ஒருவர் மாற்றி ஒருவராக காதல் தளும்பி வழிகிறது!
சமுதாயத்தில்
ஒரு நல்ல நிலையையும் அங்கீகாரத்தையும் அடைந்துவிட்ட இளம்பெண்கள்
அங்கிருப்பவர்கள்!
குறைந்தபட்சம்
நூறு நாட்கள் கோடிக்கணக்கானோர் பார்க்கத் தேர்ந்தெடுக்கப்படுமளவு ஒரு நிலையை தங்கள் ஏதேனும் ஒரு திறமை மூலம் அடைந்தவர்கள்!
- இன்னுமே
இதெல்லாம் எட்டாக் கனவு - படித்த, தன் வாழ்க்கையை தானே உழைத்துக் கட்டமைத்துக்கொள்ள வேண்டி பணியிடங்களில் போராடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான பெண்களுக்கு.
அந்தக்
கேவலமான அணுகுமுறையை, இந்த வீட்டுக்கு வெளியே தாங்கள் கட்டமைத்து வைத்திருக்கும் வாழ்க்கை, இனி வெளியே போய் தாங்கள் எதிர்கொள்ளவேண்டிய அடுத்த படிநிலைகள் என எதையுமே யோசிக்காமல்,
உடனே அங்கீகரித்து உருகுகிறார்கள் அந்தப் பெண்கள்!
இந்த
அளவுக்கு ஒரு அறிவு முதிர்ச்சியை வைத்துக்கொண்டா இவ்வளவு பிரபலமானார்கள் இவர்கள்?
அந்தக்
"காதலுக்கு"
ஆணும் பெண்ணும் மாறிமாறி உருகுவதும், அந்த அமர காதல் கைவிட்டுப் போனதும் இன்னொரு அமரதீபம் உடனே ஏற்றுவதும்...
அருமை!
இந்தக்
கருமத்தையா காதல் என்று இத்தனை யுகங்களாகக் கொண்டாடினோம்?
உருகி
உருகிக் கவிதைகள் எழுதினோம்?
ஆயிரம்
ஆயிரம் காதல் காவியங்கள் படைத்தோம்?
காதல்
புனிதமானது என்ற மாயையை உடைப்பதுதான் இந்த ஷோவின் நோக்கம் என்றால் அது கட்டாயம் நிறைவேறியிருக்கிறது!
காதல்
கண்றாவி எல்லாம் அந்தந்த சமயத்துக்கு உடல் தேவைக்கு மட்டுமே என்பதுதான் இந்த காதல் ஜோடிகள் நமக்குச் சொல்லும் கதை!
ஆனால்,
அந்த ஆணுக்கு இருக்கும் பெண்கள் மீதெல்லாம் மாறிமாறிப் பொங்கிவழியும் காதல் ஏனோ அந்தப் பெண்களுக்கும் எல்லா ஆண்களின்மீதும் பொங்கிப் பிரவாகம் எடுக்கவில்லை?
இது
ஏன் இன்னும் பெண்ணுரிமைப் போராளிகள் கண்ணில் படவில்லை?
கன்ஃபெஷன்
ரூம், கக்கூஸ் என்று காதல் வளர்க்க இத்தனை இடங்கள் அந்த வீட்டில் இருக்கும்போது ஏன் அந்தப் பெண்கள் மட்டும் உடனே முளைத்து உடனே அழிந்த அந்தக் காதலை நினைத்து உருகி அழுது கொண்டிருக்க வேண்டும்?
அவருக்கு
வேறு பெண்கள் உடனே தயார் நிலையில் கிடைக்க, ஏன் இந்தப் பெண்களுக்கு உடனே வேறொரு இன்ஸ்டன்ட் காதலன் கிடைக்கவில்லை?
ஒருவேளை
பெண்ணின் பெருமைக்கு இழுக்கு என்று சொல்லியிருக்குமோ அந்தப் புனிதமான ஸ்க்ரிப்ட்?
இதெல்லாம்
முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு நடிப்பு என்பது அவர்களுக்கு வேண்டுமானால் புரிந்திருக்கலாம்!
திரையில்
பார்க்கும் நாயக நாயகிகளை தங்கள் ஆதர்ஷம் என்று கொண்டாடும் எங்கள் சமூகத்துக்கு அது தெரிந்திருக்க வாய்ப்பில்லைதானே?
இதுதான்
தாங்கள் ரசித்துக் கொண்டாடும் பிரபலங்களே வாழும் முறை என்று புரிந்துகொள்ளும் எங்கள் இளமைப்படை இனி இந்தப் பாதையில் புரட்சிநடை போடாது என்று எப்படி நம்புவது?
ட்விட்டரில்
புரட்சி பேசும் ஒரு அறிவுஜீவி நடிகை, உள்ளே போனதும், அப்படி ஒரு
ஜோடிக்கு மாலை மாற்றி வழிநடத்திய வைபோகம் வேறு நடந்ததாம்!
நல்லது!
விஜய்
டீவி எந்த எல்லைக்காவது இறங்கி சம்பாதித்துத் தொலையட்டும்!
ஏற்கனவே
சீரியல்கள் மூலம் பல குடும்பங்களில் ஏற்பட்டுக்
கொண்டிருக்கும் உறவுச் சீர்கேடுகள் ஊரறிந்தது!
இதில்
இப்படி ஒரு கலாச்சாரச் சீர்கேடு வேறு வலிமையாகப் புகுத்தப் படுகிறது!
அது
ஒரு வியாபார நிறுவனம்!
நடப்பது நாய்ப் பந்தயம்!
அதில் எதைச் செய்தாவது வென்றாகவேண்டிய நிர்பந்தம் அவர்களுக்கு இருக்கலாம்!
நாளைக்கே
கஞ்சா விற்றுக்கூட பிழைப்பை நடத்த அது முனையலாம்!
எதிக்ஸ்
என்பது அவர்கள் வியாபார அகராதியில் கெட்டவார்த்தை!
அதை
செய்ய அவர்களுக்கு கமல்ஹாசன் கருவியானதுதான் உறுத்துகிறது!
இந்தக்
கட்டுரையை மிஞ்சிப்போனால் ஒரு பத்துப்பேர் பொறுமையாகப் படித்தால் பெரிய விஷயம்!
ஆனால்,
இதையே ஒரு பிரபலம் எழுதியிருந்தால், எழுத எழுதவே ஆயிரம்பேர் படித்திருப்பார்கள்!
இந்நேரம்
லட்சக்கணக்கானோரை எட்டியிருக்கும்!
அதுதான்
இப்போது உலகநாயகன் செய்வது!
என்ன
கஷ்டம் வந்தாலும் கஞ்சா விற்கப் போகக்கூடாது என்பதுகூடவா அவருக்குத் தெரியவில்லை?
இது
கமல்ஹாசன் நடத்தும் நிகழ்ச்சி!
கமல்ஹாசனே
வாரவாரம் வந்து நேரிடையாக இவற்றையெல்லாம் அங்கீகரித்துப் பேசுகிறார்!
தவிர்க்கமுடியாத நேரத்தில் மயிலிறகால் அடிப்பதுபோல் வருடுகிறார்!
இது
போதாதா இதெல்லாம்தான் எலைட் வாழ்க்கைமுறை என்று அங்கீகாரக் கனவில் வாடும் நடுத்தர வர்க்க இளசுகளுக்கு?
இது
எத்தனை பெரிய கலாச்சார சீரழிவு என்பது அறிவுஜீவி கமல்ஹாசனுக்குத் தெரியாதா?
தெரியாதெனில்,
ஒரு சின்ன காமெடி - அவர் செய்ததுதான் - அதை நினைவுபடுத்துவோம்!
இருபது
ஆண்டுகளுக்கு முன்பு தான் வாலிபனாக இருந்தபோது பேருந்தில் பெண்களை உரசியதுண்டு என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார் ஒருவர்!
அதை
அப்போது கூடியிருந்த கூட்டம் கைதட்டி ரசிக்க, தானும் சிலாகித்து சிரித்தார் உலகநாயகன்!
வீட்டுக்குப்போய்
ஏதோ ஞானோதயம் வந்ததோ, அன்றி பெண்ணுரிமைப் போராளிகள் அழுத்தம் தந்தார்களோ தெரியவில்லை!
சரவணன்
கொடுத்த ஒப்புதல் வாக்குமூலம் இளைஞர்கள் மனதில் அது சரி என்ற எண்ணத்தை ஏற்படுத்தும், ஒரு மிகப்பெரிய கலாச்சார சீரழிவுக்கு வழிவகுக்கும் என்று சொல்லாமல் கொள்ளாமல் பெட்டிபடுக்கையைக் கட்டக்கூட அவகாசம் தராமல் புறவாசல் வழியே துரத்தியடித்தார் அகம் டிவி வழியே அறம் போதிக்கும் ஆண்டவர்!
அவர்
இரண்டு மனைவிகள் மூலம் தன் "ஆண்மையை" நிரூபித்த கதையை பெருமை பொங்கச் சொன்னபோது அதை ஏன் செய்யவில்லை என்பது மில்லியன் டாலர் கேள்வி!
எனில்,
இதுதான் மேட்டுக்குடி வாழ்க்கை முறை என்று ஸ்தாபிக்கும் கவின் உறுப்பை அறுத்து காக்கைக்குப் போட்டிருக்க வேண்டாமா அதே அறச்சீற்றத்தோடு?
ஒருவேளை
வரும் வாரங்களில் அதற்கான கத்தியோடு வருவாரோ மாற்றத்துக்கான விதையோடு புறப்பட்டிருக்கும் மய்யத்தின் ஸ்தாபகர்?
காத்திருப்போம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக