வாய்ச்சொல்லால் யாது பயன்?
அலை ஓய்ந்தபிறகு சொல்லலாம் என்று காத்திருந்தால், அடுத்தடுத்த அலைகள்!
ஒருவழியாக எல்லோரும் கருத்துச் சொல்லி முடித்துவிட்டார்கள்!
பழம் தின்று கொட்டை போட்ட அரசியல்வியாதிகளும், புதிதாய் அரசியலில் நுழைந்தவரும், முதல்வர் கனவில் திளைக்கும் மகா நடிகர்களும் தங்களுக்கு எந்த அளவு மைலேஜ் தேர்ந்த முடியும் என்று முழுமனதாக முயன்று பார்த்துவிட்டார்கள்!
சூடு ஆறப்போகும் நேரத்தில் இதில் எதிலுமே சேராத சுயநலவியாதி பிரேமலதா தன் பங்குக்கு உளறிப்போய்விட்டார்!
அநேகமாக அந்தப் பேச்சுக்கான மறைமுகப் பலன் அவருக்கு கிடைத்திருக்கும்!
நல்லது!
இனி கொஞ்சம் எதார்த்தம் பேசுவோமா?
இரண்டு விஷயங்கள்!
கடந்த சில நாட்களாக துவைத்துக் காயவைக்கப்பட்ட இரண்டு விஷயங்கள்!
முதலாவது, சுபாஷிணி!
பேனர்
விழுந்து சுபாஷினி என்ற பெண் இறந்தபோது மாளாத கூக்குரல்கள்!
அத்தனை நாளும்
நம்
ஊரில்
எங்கேயுமே
பேனர்
கலாச்சாரமே
இல்லாததுபோலவும்,
அன்றுதான்
முதன்முதலாக
பேனர்கள்
வைக்கப்பட்டதாகவும்
பாமரன்
முதல்
பேரறிஞர்கள்
வரை
ஓயாத
கூக்குரல்!
குழந்தை பிறந்தால்
பெயர் சூட்டினால்
காது குத்தினால்
அதன்பிறகு ஒவ்வொரு
பிறந்தநாளிலும்
பூப்படைந்து சடங்கு
செய்தால்
திருமண நிச்சயதார்த்தம்
திருமணம்
(முதலிரவுக்கு
வைக்கிறார்களா
என்று
தெரியவில்லை!)
கடைசியில் செத்தால்,
அதன்பின்
ஒவ்வோராண்டு நினைவு
தினத்திலும்
இத்தனைக்கும் பேனர்
வைப்பது
எழுதாத
சட்டங்களில்
ஒன்று!
இதில் மறக்காமல்
தங்கள்
திருமுகத்தை
முடிந்தவரை
ஒரு
அடைமொழியோடு
பதிவு
செய்து
அதைப்பார்த்து
புல்லரித்துத்
திரிவது
நம்
வாடிக்கை!
விதிவிலக்குகள் அத்திப்பூ!
சில நாட்களுக்கு
முன்,
செத்துப்போன உன்
தலைமை
நினைவுநாளுக்கு
இத்தனை
பேனரே
இல்லை!
என்
தலைமைக்கு
எத்தனை
பார்,
இதுதான்
உண்மையான
ஆளுமை
என்று
எக்காளம்
இங்கேயே
உரக்கக்
கேட்டது!
உன் நடிக
ரட்சகனுக்கு
வைத்த
பேனரைவிட
என்
தலைவனுக்கு
வைத்த
பேனர்
பெருசு
என்று
இங்கேயே
எத்தனை
புல்லரிப்புகள்!
ஃப்ளெக்ஸ் வைப்பது சுற்றுச்சூழலுக்குக் கேடு, பொதுமக்களுக்கு இடையூறு என்று இதே நீதிமன்றம் எத்தனைமுறை கடிந்திருக்கும், கையாலாகாது புலம்பியிருக்கும்?
அப்போதெல்லாம் பேனர்
வைப்பதை,
இரும்புத்தடியில்
கட்டிய
கொடிகளை
வழியெங்கும்
சாலைத்தடுப்பில்
கட்டுவதை,
நடைபாதைகளை
மறித்து
கட்
அவுட்
வைப்பதை
இப்போது
கூவும்
போராளிகள்
எத்தனைபேர்
தவிர்த்தார்கள்?
இந்த யோக்கிய
சிகாமணி
அரசியல்வியாதிகளும்,
ஆளத்துடிக்கும்
நடிக
சிரோமணிகளும்
அதை
ஏன்
தடுக்கவில்லை?
சுபஸ்ரீ சாகட்டும்
என்று
காத்திருந்தார்களா
அன்றி ஹெச்
ராஜா
சொன்னதுபோல்
உயர்நீதி
மன்றமாவது
மயிராவது
என்று
அலட்சியம்
செய்தார்களா?
போனமுறை கோவையில் ரகு செத்தபோதும் இதே ஞானோதயம் இதே அறிஞர்களுக்கு வந்ததே அது என்ன ஆயிற்று?
இந்த புது
ஞானோதயமும்
அதேபோல்
அல்பாயுசில்
கரைந்து
அடுத்து
ஒரு
உயிர்ப்பலி
நடக்கும்வரை
காணாமல்
போகும்!
பேனர் விழுந்த
கட்சிக்காரன்மேல்
கொலை
வழக்குப்
பதியவேண்டும்
என்று
வேறு
திடீர்
சட்ட
நிபுணர்கள்
கூக்குரல்!
சரி, விழாத
பேனர்
வைத்தவர்கள்
மேல்
அதே
அளவுகோலில்
தோற்றுப்போன
கொலைமுயற்சி
வழக்குப்
போடலாமா?
எல்லா நியாயவான்களும்
கொலை
முயற்சி
வழக்கில்
சரணடையட்டும்!
சட்டப்படி அந்த
பேனர்
வைத்தவர்
மேல்
கொலைமுயற்சி
வழக்குப்
பதிந்தால்,
நீதிமன்றத்தில்
காவல்துறை
எத்தனை
ஏச்சு
வாங்கி
அசிங்கப்படவேண்டியிருக்கும்
என்பதை
யாராவது
உணர்ச்சிவசப்படாத
சட்டம்
தெரிந்தவரிடம்
கேட்டுப்பாருங்கள்,
சொல்லுவார்!
அதிகபட்சம், அனுமதியின்றி
பேனர்
வைத்தது,
பொதுமக்களுக்கு
இடையூறு
செய்தது
என்ற
இரு
பிரிவுகள்
மீது
மட்டும்தான்
வழக்குப்
பதியமுடியும்!
அந்த ஏழை
கவுன்சிலர்,
கல்லுடைத்தாவது
ஆயிரம்
ரூபாய்
சம்பாரித்து
அபராதம்
கட்டிவிட்டு,
நூறு
கார்கள்
புடைசூழ
தன்
ஃபார்ச்சூனரில்
ஏறிப்போவார்!
அதற்கும் இந்தமுறை
அனுமதி
பெற்று நீதிமன்றம் நீந்திவந்த அன்னமே என்று சில
பேனர்களை
வைப்பார்!
Section 304-A of the Indian
Penal Code, 1860:
Whoever causes the death of any person by doing any rash or
negligent act not amounting to culpable homicide, shall be punished with
imprisonment of either description for a term which may extend to two years, or
with fine, or with both.
Rash or negligent
act is an act done not intentionally or designedly. A rash act is primarily an
over-hasty act. Negligence is the breach of duty caused by omission to do
something which a reasonable man is guided by those considerations to regulate
the conduct of human affairs.
இதுதான் நம் சட்டம் சொல்வது!
அந்த லாரி
டிரைவர்
இந்நேரம்
ரெண்டாயிரம்
ருபாய்
கட்டிவிட்டு
வேலையைப்
பார்க்கப்போயிருப்பார்!
கூடிய சீக்கிரமே, பேனர், ஃப்ளக்ஸ் தொழில் நசிந்ததென்று இதே முதலைகள் கண்ணீர் வடிக்கும்!
உபரியாக இன்னும்
ஒரு
சுற்றுச்சூழல்
கேடு
பற்றி
ஒரு
சின்ன
சந்தேகம்!
இந்த பாழாய்ப்போன
விநாயகர்
விஸர்ஜனம்
என்றொரு
கூத்து
நடந்ததே,
அதை
தடை
செய்யவேண்டும்
என்று
ஏன்
நம்
சமூக
ஆர்வலர்களான
நடிகர்களும்
அரசியல்வாதிகளும்
இவ்வளவு
தீவிரமாக
கொடிபிடிக்கவில்லை?
பக்தி என்பது
அந்தரங்கமான
விஷயம்,
அதை அடுத்தவனுக்கு
இடைஞ்சலாகவோ,
சூழலை
மாசுபடுத்தியோ
விளம்பரம்
செய்யவேண்டாம்.
அது
தமிழன்
கலாச்சாரமே
இல்லை
என்று
ஏன்
இதே
தீவிரத்தோடு
போராடவில்லை
இவர்கள்?
அந்த வகையில்
ஏதாவது
இழவு
விழக்
காத்திருக்கிறார்களா?
அடுத்தது, தேசத்துக்கு ஒரு இணைப்பு மொழி!
இந்தி தின
விழாவில்
அந்த
மொழியை
புகழ்ந்து
பேச
நம்
உள்துறை
மந்திரிக்குக்
கிடைத்த
கரு
அது!
இப்போதைக்கு அவர்
பதுங்கியிருக்கிறார்.
மீண்டும் பாய்வது
நிச்சயம்!
அதை
அவரது
கடந்தகால
வரலாறு
சொல்லும்!
ஒரு தேசத்துக்கு ஒரே இணைப்பு மொழி இருப்பது என்ன கெடுதல்?
அது ஹிந்தியாக
இருக்கவேண்டும்
என்பது
வடக்கர்களின்
அபிலாஷை!
இணைப்பு மொழி ஏன் தமிழாக இருக்கக்கூடாது?
கல்தோன்றி மண்தோன்றும்
முன்
தோன்றிய
மூத்த
குடியின்
மொழி
உலகாள்வது
இருக்கட்டும்,
ஏன் முதலில்
நம்
நாடாளக்கூடாது?
ஐம்பது ஆண்டுகள்
தமிழ்
நாட்டை,
தமிழ் எங்கள்
உயிர்,
தமிழுக்காகவே எங்கள்
மூச்சும்
பேச்சும்,
தமிழைப் பழித்தவனை
தாய்
தடுத்தாலும்
விடேன்
என்று போர்முனைக்குப்
போகத்
துடிக்கும்
தலைமையின்
விழுதுகள்தானே
ஆண்டுவருகின்றன?
இத்தனை ஆண்டுகால ஆட்சியில், தமிழை இந்தியாவின் ஒற்றை ஆட்சிமொழியாக, இணைப்பு மொழியாக முன்னிறுத்த இந்தக் கட்சிகள் எடுத்த முயற்சிகள் என்னென்ன?
தமிழகத்தில் மட்டுமே
இவர்கள்
ஆளவில்லை!
மத்திய அரசிலும்
ஆட்சிகள்
மாறிமாறி
அமைந்தபோதும்,
வளமான
துறைகளை
போராடிப்பெற்று
வளமடைந்த
வரலாறு
படைத்த
தமிழ்ப்
போராளிகள்
நம்
தலைவர்கள்!
முத்தமிழ்க் காவலர்கள், தமிழுக்கு ஓர் ஆபத்து என்றால் தலையைத் தரத் துடிக்கும் தளபதிகள் தமிழை உலகளவில் உயர்த்திப்பிடிக்க ஏதும் செய்யாமலா இருந்திருப்பார்கள்?
யாராவது தெரிந்தால்
சொல்லுங்கள்
ப்ளீஸ்!
எனக்குத் தெரிந்த,
நான்
எதிர்கொள்ளும்
தமிழின்
"வளர்ச்சி"
இது!
தமிழே தெரியாமல், தமிழ் ஓரெழுத்தும் படிக்காமல், தமிழகத்தில் மருத்துவர்களும், பொறியாளர்களும், விஞ்ஞானிகளும், கணினி விற்பன்னர்களும் உருவாகமுடியும்.
தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத, தமிழ் பேசுவது அவமானம் என்று நினைக்கக்கூடிய பெரும்பான்மை உள்ள ஒரு தலைமுறை ஏற்கனவே உருவாகிவிட்டது!
வெறும் பேச்சுமொழியாக மட்டுமே எந்த மொழியும் தலைமுறைகள் தாண்டி வளர முகாந்திரமே இல்லை!
இதுவரை ஆங்கிலம்
கொன்றொழித்த
உலக
மொழிகள்
எத்தனை?
அதில் தானாகப்
போய்
பெருமையோடு
இணைந்துகொள்வது
தவிர
தமிழுக்கு
வேறு
வழி
இல்லை
என்ற
நிலை
வர
யார்
காரணம்?
இதே நிலை
நீடித்தால்,
பழம்பொருமை
பேசித்
திரியும்
இந்தத்
தலைமுறை
அழிந்தபின்,
தமிழ்
இலக்கின்றி
அலையும்.
இன்றே, நம்
அடுத்த
தலைமுறைக்கு
சண்டே
மண்டே
தெரியுமேயன்றி,
ஞாயிறு
திங்கள்
தெரியாது!
பிஹாரி உட்பட
இந்திய
மொழிகளை
தின்று
கொழுத்த
ஹிந்தியோ,
ஆயிரக்கணக்கான
உலக
மொழிகளை
கபளீகரம்
செய்த
ஆங்கிலமோ,
தமிழை
தின்று
ஜீரணிக்கும்!
இப்போதே, எப்படித்தான்
தமிழில்
எழுதுகிறாயோ
என்று
எனக்கு
மூத்தோரும்
இளையோரும்
ஆச்சரியமாகக்
கேட்கிறார்கள்!
இந்தக் கட்டுரை
எழுத
எனக்கு
ஒருமணி
நேரம்
ஆனது
என்றால்
நம்ப
என்
வட்டாரத்தில்
ஆட்கள்
இல்லை!
அவர்களுக்கு இதைப்
படிக்கவே
அரைநாள்
ஆகும்!
இதுதான் உண்மை
நிலவரம்!
ஓரளவு படித்த
தலைமுறை
பெற்றோர்கள்
இருக்கும்
வீட்டில்
நாளிதழ்
என்று
ஒன்று
வாங்கினால்,
அது
ஹிண்டு
ஆங்கில
இதழ்
மட்டுமே!
மற்றபடி, தமிழ் படிக்க அவர்களுக்கு வாய்ப்பே இல்லை!
இதைப் படிக்கச்
சொன்னால்கூட
அவர்கள்
படிக்கப்போவதில்லை!
தமிழில்
எழுதியிருக்கிறாயே
என்று
ஒதுங்கித்தான்
போவார்கள்!
இணையத்தில் தமிழ்
வளர்ப்பது,
நீரில்
வெண்ணெயெடுக்கும்
வேலை!
காதில் கேட்கும்
டிவி
சீரியல்களால்
தமிழ்
வளராது!
எனக்கே, இணையம்
வந்து
கொஞ்சநேரம்
வம்பளப்பது
தவிர,
பிடிவாதமாக
மேயும்
தமிழ்
நாளிதழ்
தவிர,
தமிழ்
படிக்கவோ,
எழுதவோ
வேறு
வாய்ப்பே
இல்லை!
சோறு போட, தொழிற்கல்வி பயில, அன்றாட அலுவலக நடைமுறைக்கு, தமிழ் தேவையே இல்லை என்பதுதான் இன்றைய தமிழக நிலவரம்!
எனில், தமிழ் கற்க அவர்களுக்கு என்ன கட்டாயம்?
அந்த நேரத்தில்
பயாலஜியோ,
மேத்ஸோ
அக்கவுண்ட்ஸோ
படித்தால்
இன்னுமொரு
அரை
சதவிகிதம்
மதிப்பெண்
கூடப்பெற்று
வாழ்க்கை
ஓட்டப்
பந்தயத்தில்
கொஞ்சம்
முன்னேறலாம்.
தமிழ் படிப்பதால்
பத்துப்பைசா
பிரயோஜனம்
உண்டா?
இதுதான் இன்றைக்கு
தமிழ்ப்
பெற்றோர்களின்
போதனை!
தமிழில் திரைப்படத்துக்குப்
பெயர்
வைத்து
தமிழை
வளர்க்கமுடியாது
என்பது
ஆட்சியாளர்களுக்கும்,
தமிழ்
போராளிகளுக்கும்
தெரியாதா
என்ன?
அவர்கள் உங்களை உணர்ச்சிவசப்பட வைத்து தாங்கள் வளர்கிறார்கள். அது மட்டுமே அவர்கள் நோக்கம் - தாய்மொழி வளர்ப்பாவது மயிராவது!
இதைப்படித்து எதிர்வினை
ஆற்றுமுன்,
தங்களுக்கு நன்கு
தெரிந்த,
நன்கு படித்து
முன்னேறிய,
தமிழன்
யாரையாவது
ஒரு
இரண்டு
வாக்கியம்
தமிழில்
தடுமாறாமல்
எழுதச்
சொல்லி
வாங்கிப்பாருங்கள்!
கட்சி அபிமானங்களை
தாண்டி,
உண்மை
நிலவரம்
உங்களுக்கே
புரியும்!
கீழடியில் ஒருவேளை
சீமான்
சொல்வதுபோல்
ஐயாயிரம்
ஆண்டு
வரலாறு
புதைந்து
கிடைக்கலாம்
அல்லது
இன்னும் தோண்டத்
தோண்ட
ஐம்பதாயிரம்
ஆண்டுகள்
மூத்தது
எங்கள்
மொழியும்
கலாச்சாரமும்
என்று
நிரூபணம்
ஆகலாம்!
ஆனால், அடுத்த நூற்றாண்டுக்கு அதை எடுத்துச்செல்ல உண்மையில் என்ன செய்திருக்கிறோம் என்று சிந்தித்துப் பாருங்கள்!
கீழடியில் தோண்டியெடுத்து, ஹிந்தியிலோ, ஆங்கிலத்திலோ புதைத்துவிடாதீர்கள்!
அடுத்த தலைமுறை
சிந்திப்பதே
ஆங்கிலத்தில்
என்றானபின்
தமிழை
எங்கு
போய்
வளர்க்கப்போகிறோம்
என்று
உங்கள்
தலைவர்களைக்
கேளுங்கள்!
பதில்
சொல்லுவார்கள்!
உங்களை தற்காலிகமாக
அவ்வப்போது
உசுப்பிவிட்டு
வயிறு
வளர்க்கும்
அந்த
சுயநலக் கூட்டத்துக்கு கண்டிப்பாக
பதில்
தெரியாது
என்ற
நம்பிக்கையோடு.....
உங்கள் பார்வைக்கு ஒரு இணைப்பு!
ஆங்கிலத்தால் அழிந்த, அழியப்போகும் மொழிகள் பற்றிய ஆய்வின் ஒரு சிறு பகுதி!
English's 339 million native speakers are outnumbered by those who speak Spanish (427 million)
and Mandarin Chinese (897 million). What's more, English's native speaking
population has been decreasing steadily. While this situation seems to suggest
that English is on the way out, globally, it's actually ascending. That's
because 510 million people from all over the world have elected to
learn English as a second language, and more start learning every day. No other
language comes close.
In
science, business, and the media, English dominates. Learning the language is a
cheap price of admission to join an increasingly interconnected world.
A side effect is that other languages are
starting to fall by the wayside. Prominent linguist David Graddol estimates that as many as 90
percent of the world's 6,000 to 7,000 languages will go extinct this century.
His learned guess is echoed by John McWhorter, a linguistics professor at Columbia
University. Backing them both is evidence from a study published in 2014. Researchers modeled declines in hundreds
of languages and found that, on average,
a language is going extinct every two weeks. If this trend continues to
play out over the next century, 2,600 languages will be gone. The researchers
suggested that a burning desire to benefit from economic growth is what's
causing lesser-spoken languages to go up in smoke. More and more, education and
employment hinges upon being able to communicate in modern society. This means
that parents are not passing on rarer, obsolete languages to their children.
ஆங்கிலமும், ஹிந்தியும்
இணைந்தோ, தனித்தனியாகவோ அழித்த
இந்திய மொழிகள் பற்றி
ஆய்வுக்குறிப்பின் ஒரு பகுதி!
According to UNESCO, 197 languages in India are
reported to be endangered of which 81 are vulnerable followed by definitely
endangered (63), severely endangered (6), critically endangered (42) and
already extinct (5). Andaman and Nicobar tops the list with 11 critically
endangered languages, mainly tribal dialects.