சக்கரவர்த்தி வருகையும் குறுநில மன்னனின் கோமாளித்தனமும்!
கல்
தோன்றி மண் தோன்றா முன் தோன்றிய மூத்த குடியின் தலைநகரம்!
சிங்காரத்
தொன்னை!
ஒரு அதிகாலை நேரம்!
பரபரப்பாகக்
கூடுகிறது மண்ணின் மைந்தன் திருப்பதி சாமியின் அமைச்சரவை!
முன்கூட்டியே
வந்து காத்திருக்கிறார்கள் நல்லூராரும், ராஜேந்திர கிருஷ்ணனும், ஜெயபாஸ்கர் மற்றும் ஏனைய முகம் தெரியாத அமைச்சர்களும்!
இத்தனை
அதிகாலையில் வரச்சொல்லி அழைப்பு வந்ததும், என்னவோ ஏதோ என்ற பதட்டம் அனைவர் முகத்திலும்!
அதோ,
திருப்பதி சாமியின் ரதம் வந்துவிட்டது!
ராஜாதி
ராஜ, ராஜமார்த்தாண்ட, புன்னகை அரசன், பொன்மனச்செம்மலே வருக வருக என்று பதாகை வைத்திருப்பதை கவனித்துக்கொண்டே இறங்குகிறார் எளிய மன்னர்!
பேனர்
வைத்த வட்டச் செயலாளரை அழைத்து "எனக்கு இந்தப் புகழ்ச்சியெல்லாம் பிடிக்காது! ஆமாம், ஏன் ராஜகுல திலக வை விட்டுவிட்டாய்?" கேட்டுக்கொண்டே அவைக்குள்
நுழைகிறார்.
ஓரமாக
உட்கார்ந்து இறுக்கமான முகத்துடன் இதை பார்த்துக்கொண்டிருக்கிறார்
துணை அரசன் என்று தன்னைத்தானே சொல்லிக்கொள்ளும் ரோஜா செல்வம்!
"உங்களையெல்லாம்
என்னத்துக்கு வரச்சொன்னேன்னு தெரியுமா?"
"தெரியாதே
மன்னா?"
"வரும்
11ம் தேதி டெல்லியிலிருந்து சக்கரவர்த்தி வருகிறார்!"
"அவர்தான்
போனவாரம் வந்தாரே!"
"அப்போது
நாம் சரியானபடி அவரை வரவேற்கவில்லை என்று அப்போதே டெல்லியிலிருந்து மாமன்னர் சந்தானபாரதி அழைத்து கெட்ட வார்த்தையிலேயே கத்தித் தீர்த்துவிட்டார்!
நல்லவேளை,
ஹிந்தியில் திட்டியதால் பாதி புரியவில்லை!"
"இந்தமுறை
சக்கரவர்த்தியோடு, அண்டை நாட்டு அதிபரும் வருவதால், நம் வரவேற்பு எல்லை மீறியதாக இருக்கவேண்டும்!
என்ன
செய்யலாம்?"
நல்லூரார்
எழுந்து, “நம் குலவழக்கப்படி வழியெல்லாம் குப்புறப் படுத்துவிடுவோம்! சக்கரவர்த்தி வண்டிச் சக்கரத்தை முத்தமிடும் முன்னுரிமை மன்னருக்கு!”
“முட்டாள்
தெர்மக்கோலே , அவர் வான் வழியாக பிச்சாவரம் போகிறார்!”
“இன்னும்
வசதியாகப் போய்விட்டது! நம் முன்னாள் பட்டத்தரசி சேடியோடு வானில் பறக்கையில் மேலே பார்த்துக் கும்பிடுவதுபோல, இம்முறை படுத்து உருளுவோம்! மேலிருந்து பார்க்க நல்ல காமெடியாக இருக்கும்!”
“அது
வழக்கமாகச் செய்வது! இந்தமுறை, அரையடிக்கு ஒரு பதாகை கட்டுவோம்!
அதில்
சக்கரவர்த்தியை வெவ்வேறு காஸ்ட்யூமில் பிரிண்ட் செய்து அசத்துவோம்!
கூடவே
என் முகமும், ஒரு ஓரமாக ரோஜாசெல்வன் முகமும் இருக்கட்டும்!”
‘பதாகை
வைப்பதைத்தான் நீதிமன்றம் தடை செய்து தொலைத்துவிட்டதே மன்னா?
அந்தக்
கூறுகெட்ட ... சுபாஷிணி திட்டம்போட்டு செத்துப்போய் பிரச்னை செய்துவிட்டாளே , அவளால் வந்தது இந்த தடை, அவள்
அநேகமாக நம் எதிர்க்கட்சி சதிகாரியாக இருப்பாள்!”
“யப்பா,
ராஜேந்திர கிருஷ்ணா, காலங்கார்த்தால இவ்வளவு கெட்டவார்த்தை வேண்டாமே!”
“என்ன
செய்ய மன்னா, எனக்குத் தெரிந்தது அது மட்டும்தானே!”
“கவலைப்டாதீர்கள்,
நீதிமன்றத்தில் அனுமதி
வாங்கிவிடலாம், ஆனால் அதற்கு என்ன காரணம் செல்வது?
நல்லூரார்
சொல்லட்டும்!”
“சிம்பிள்
மன்னா, மக்கள் வைக்கும் பேனர்தான் விழும், அரசாங்கம் வைக்கும் பேனர் விழாது என்று சொல்லுவோம்!”
“இவ்வளவு
முட்டாள்தனமான காரணத்தை எப்படி நீதிமன்றம் நம்பும் அமைச்சரே?”
“இதைவிட
முட்டாள்தனமான கருத்தை நீதிபதிகளே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் மன்னா, பயலலிதா சொத்தை ஏன் மக்களுக்கு பிரித்துக்கொடுக்கக்கூடாது என்று கேட்டதும் ஒரு நீதிபதிதானே?”
“சபாஷ்!
உங்களுக்கே டஃப் கொடுப்பார்போல!
எனில்,
அவரிடமே இந்த வழக்கை எடுத்துப்போவோம்!
சரி,
எப்படியும் நீதிமன்றம் நமக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு சொல்லப்போகிறது!
மிஞ்சிமிஞ்சிப்
போனால், ‘பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல்’ என்று காமெடியாக ஒரு கண்டிஷன் போடுவார்கள்!
பதாகைகள்
எப்படி வைப்பது என்பதுதான் இப்போது நாம் விவாதிக்க வேண்டியது!”
“மன்னா,
கோபித்துக்கொள்ளாதீர்கள்,
நீங்கள் சிரிக்கச் சொன்னால், கொடூரமாக இளிக்கிறீர்கள்! அது குழந்தைகளை மட்டும் பயப்படுத்துவதில்லை, கொஞ்சம் அந்திவேளையில் பார்த்தால் எங்களுக்கே டவுசர் கழன்றுவிடுகிறது!”
“வேறு
போஸ் என்ன கொடுக்க?”
“பேசாமல்
நீங்கள் படிப்பதுபோல் போட்டோ போட்டுவிடலாம் மன்னா! சமீபத்து சென்சேஷனே அதுதானே,
நீங்கள் நான் அண்ணாவைவிட அதிகம் படித்தவன் என்று சொன்னது!
எப்படி
மன்னா அப்படி கூச்சமில்லாமல் பேசிவிட்டீர்கள்?”
“யோவ்,
நான் உண்மையைத்தானே சொன்னேன், என் அண்ணனைவிட நான்தான் அதிகம் படித்தேன்!”
“அப்போ,
நீங்க அண்ணாதுரையை சொல்லலையா?”
“யாருய்யா
அது அண்ணாதுரை?”
“மன்னா,
என்ன இப்படிக் கேட்கிறீர்கள்? நம் கட்சிக்கொடியில் ஒருவிரல் காட்டிக்கொண்டிருப்பாரே அவர்!”
“ஓ,
அந்த ஆளா, அவர் கருணாநிதியோட க்ளாஸ் மேட்டுன்னு நினைச்சுக்கிட்டிருந்தேன்!”
“நம்ம
கட்சிப்பேரே அண்ணா … தானே மன்னா?”
“அடப்பாவிகளா,
அப்போ அது நம்ம தலைவரோட அண்ணா சக்கரபாணி இல்லையா? யாராவது இதெல்லாம் சொல்லிக்கொடுத்துத் தொலைங்கய்யா!”
“அதை
விடுங்கள் மன்னா, அந்த ஆள் யாரா இருந்தா நமக்கென்ன?
உங்க
அண்ணா எதுவரைக்கும் படித்திருக்கிறார்?”
“அந்த
ஆள் எங்க படிச்சாரு? கைநாட்டுதான்! அப்போவே, நான் குமுதம் விகடன்ல வர்ற சினிமா செய்தியெல்லாம் எழுத்துக்கூட்டிப் படிப்பேன், எங்க அண்ணனுக்கே, சரோஜாதேவி புத்தகமெல்லாம் நான்தான் படிச்சுக் காமிப்பேன்!
ஏய்யா,
இப்போல்லாம் சரோஜாதேவி புக் வர்றதில்லையா?”
“இல்லை
மன்னா, இண்டர்நெட்டில் எல்லாம் ப்ராக்டிக்கலாகவே பாத்துக்கறாங்க!
மன்னா,
பேச்சு வேற எங்கேயோ போகுது! அப்புறம் நான் யாரையாவது மெயின் ரோட்டில வந்து நிக்கச் சொல்லணும்!”
“இந்த
ஆள் வேற!
சரி,
பேனருக்கு வருவோம்.
அவனுக ஊர்ல எல்லாமே சப்பை மூக்குதான். சரியான போட்டோ போடுங்கப்பா. ப்ரூஸ்லீ படத்தை போட்றாதீங்க.
மொத்தம் எத்தனை பேனர் வைக்கலாம்?”
“ஒரு
ஏழாயிரம் வைப்போம் மன்னா, ஏழு அம்மாவுக்கு ராசியான நம்பர்!”
“யாருய்யா
அம்மா, கால் இருக்குதா இல்லையான்னே தெரியாம செத்துப்போச்சே அதுவா?
அதைவிடு.
பேனருக்கு மொத்த செலவும் ரோஜா செல்வம் பார்த்துக்குவார்!
என்னண்ணே,
சரிதானே?”
“அதெல்லாம்
சிறப்பா செஞ்சுறலாம், தம்பிக்கு அந்த மத்திய அமைச்சர் பதவி?”
"நான்
என்ன பண்ணட்டும்? நீங்கதான் பையனுக்கு சிறப்பா பயிற்சி கொடுத்து அனுப்பியிருக்கீங்களே! அவரு உருள்றதைப் பார்த்தா, சீக்கிரமே மந்திரி ஆய்டுவாருன்னுதான் நினைக்கிறேன்!"
“சரி,
விஷயத்துக்கு வருவோம். ஆகாயத்தில் பறப்பவருக்கும் தெரியற மாதிரி எப்படிய்யா பேனர் வைக்கறது?”
“பந்தல்
மாதிரி போட்டு, மேலே பார்த்தமாதிரி கூரையா போட்ருவோம்! சக்கரவர்த்தியும் பூரிச்சுப் போவார்!”
“யோவ்,
ஏற்கனவே கொதிச்சுக்கிட்டு இருக்கானுக, யாராவது வேணும்னே வந்து மோதி செத்தாலும் செத்துத் தொலைப்பானுக!”
“அதை
நம்ம பாஸ்கர் பாத்துக்குவார்! செத்தவன் குடிச்சிருந்தான்னு போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வாங்கிக்கலாம், ராஜேந்திரகிருஷ்ணன் செத்தவனை வண்டைவண்டையா திட்டட்டும். ஒரே என்டர்டைன்மெண்ட்டா இருக்கும்!”
“யோவ்,
எவனாவது சாவான்னே உறுதியா நம்பறீங்களாய்யா?”
“பின்னே,
போர்ன்னு வந்தா பொதுமக்கள் சாகறதும், ஆலமரம் விழுந்தா எறும்புகள் நசுங்கறதும் வழக்கம்தானே?”
“இவன்
கொஞ்சம் விவகாரமா பேசறானே, இவன் வேற கட்சி ஆளோ?
அது
இருக்கட்டும், நம்ம பங்காளி வேற மைக்கைப் பிடிச்சுக்கிட்டு ஆத்த ஆரம்பிச்சுருவாரே?”
“அதை
நம்ம ஈட்டிமணி பாத்துக்குவாரு! பங்காளியோட கொங்கு நாட்டு இன்வெஸ்ட்மென்ட் எல்லாம் அவர் கண்ட்ரோல்தானே! அவரு சும்மா அடிக்கற மாதிரி அடிப்பாரு நீங்க அழற மாதிரி நடிங்க, அது போதும்!
ரொம்ப
பேசினா, நம்ம அன்பு லதா அம்மையாரைவிட்டு தினத்தந்தி ஜோஷ்யன் மாதிரி பேச சொல்லிறலாம்! அந்த ஆளுக்கு விதி முடிஞ்சுது, அவன் செத்தான்ன்னு அதெல்லாம் தெளிவா பேசிடும்!”
“யோவ்,
அந்த அம்மாவுக்கு பேமெண்ட் மாத்திரம் ஒழுங்கா அனுப்பிடுங்கய்யா, அதை பார்த்தாலே, ஜெயில்ல இருக்கற சின்னத்தாயி மாதிரி ஒரு தோரணை!”
“என்னைக்காவது
வேற ஒருத்தன் வந்து தொலைக்கவரைக்கும் நாம ரெண்டு கட்சியும் இப்படியே மோடிவித்தை காட்டிக்கிட்டே காலத்தை ஒட்டிடலாம் மன்னா!”
“வேற
எவன்யா வருவான், இப்போதைக்கு வந்த ஒருத்தனும் டீவி ஷோ நடத்தப் போய்ட்டான்!
வர்றேன்னு பல வருசமா படம் காமிக்கற ஆளையும் நம்ம சக்கரவர்த்தி ஆளுங்க பார்த்துக்குங்க!
அந்த
ஆள் எங்களுக்குத்தான் ஆதரவுன்னு அவங்க மாத்தி மாத்தி சொன்னா போதாதா அந்த ஆள் தெறிச்சு ஓட?”
“மக்கள்
முழிச்சுக்காம இருந்தா போதும் மன்னா!”
“ மக்களா,
யாருய்யா அவங்க? தேர்தலப்போ சாராயவிலையை குறைச்சா போதும், இல்லைன்னா ஆளுக்கு ஒரு கார் இலவசம்ன்னு அடிச்சுவிடுவோம்! நம்மகிட்ட இல்லாத காசா?”
“இந்த
இணையப்போராளிக?”
“அவங்க
ஏசி ரூம்ல உக்காந்துக்கிட்டு பிக்பாஸுக்கு ஓட்டு போட்டுக்கிட்டு இருக்காங்க! இன்னைக்கு தலையாய பிரச்னை அவங்களுக்கு அதுதானே?
இல்லைன்னா,
அஜய்க்கு நடிக்கத் தெரியலைன்னு ஒரு பிட்டை போட்டுவிடுவோம்! அடிச்சுக்கிட்டு சாவாங்க!
தப்பித்தவறி
யாராவது துப்பினா தொடைச்சுக்கிட்டு போவோம். அவங்களை ஹாண்டில் பண்றது ரொம்ப சுலபம்!”
“மன்னா,
அந்தக் கண்ணாடிக்காரன் நாம பேசறதை குறுகுறுன்னு பார்த்துக்கிட்டே இருக்கான். அநேகமா இதை அப்படியே எழுதித் தொலைக்கப்போறான்!”
“யாரு,
அவனா, அந்த ஆள் எல்லாரையும் திட்டுவான்! ஒருகாலத்துல அவனை நம்புன நம்ம பங்காளி கட்சிக்காரனும் அவனை இப்போ மதிக்கறதில்லை! ஒரு நாலுபேர் படிப்பான், அதுல ரெண்டுபேர் சூப்பர்ண்ணே ன்னு கமெண்ட் போடுவான். இவனும் ஏதோ காவியம் எழுதிட்டா மாதிரி ரெண்டுநாள் மெதப்பா திரிஞ்சுட்டு அதுக்கப்புறம் முன்னாடி போற ஸ்கூட்டிப் பொண்ணை தொரத்திக்கிட்டுப் போயிடுவான்! இவனையெல்லாம் ஒரு ஆளாவே மதிக்கக்கூடாது!”
“சரி,
நான் போய் பேனருக்கு ரோட்டை தோண்ட சம்பந்திக்கு காண்ட்ராக்ட் கொடுக்க ஏற்பாடு பண்றேன்! ஆடாத ஆட்டம் ஆடினாலும் காரியத்துல கண் வைக்கணும்!
நீங்க
எல்லாம் போயி இன்னைக்கு வரவேண்டிய வசூலைப் பாருங்க!”
எல்லாம்
மேல இருக்கறவன் பார்த்துக்குவான்!
No comments:
Post a comment