கலைஞரும் பப்பாளிப்பழமும்!
நான் பப்பாளிப்பழம் சாப்பிடுவதை நிறுத்தி ஒன்றரை வருடமாகிவிட்டது!
போட்டிக்கு ஆளில்லாத எதையும் செய்ய மனம் ஒப்புவதில்லை!
யோசித்துப் பார்த்தால், இந்த ரெண்டு விஷயங்கள்தான் எங்கள் இருவருக்கும் பொதுவான இணைப்புச் சங்கிலிகளாய் இருந்திருக்கின்றன!
போட்டிக்கு ஆளில்லாத எதையும் செய்ய மனம் ஒப்புவதில்லை!
யோசித்துப் பார்த்தால், இந்த ரெண்டு விஷயங்கள்தான் எங்கள் இருவருக்கும் பொதுவான இணைப்புச் சங்கிலிகளாய் இருந்திருக்கின்றன!
இன்று
சந்தையில் அழகாய் அடுக்கிவைத்திருந்த பப்பாளிப் பழங்களைப் பார்த்தபோது அவர் நினைப்பு கண்ணைக் கசியவைப்பதை தவிர்க்கமுடியவில்லை!
இத்தனை ஆண்டு
பந்தத்தை
வெறும்
ஒரு
வருடப்
பிரிவா
மறக்கவைத்துவிடமுடியும்?
உடலுக்கு
எவ்வளவு நல்லது என்று சொல்லித்தந்தபோதும் பப்பாளிப்பழம் ஏனோ வீட்டில் யாருக்குமே பிடிக்காது!
ஆனால்
எனக்கும் அவருக்கும் மட்டும், ஒரு முழு பழத்தையும் சாப்பிட்டால்கூட திருப்தி வந்ததில்லை!
துண்டுதுண்டாக
நறுக்கி ஒரு முள்கரண்டி போட்டு வைத்துவிட்டால் அன்றைக்கு அவருக்கு சாப்பாடே வேண்டாம்!
ஆனால்
மிகச் சரியாக பாதிப்பழம் சாப்பிட்டதும்,
"கொண்டுபோய்
ஃப்ரிட்ஜில் வை. அவன் வந்தால் பிரியமாக சாப்பிடுவான்!"
எத்தனை
வற்புறுத்தினாலும், பழம் எவ்வளவு சுவையாக இருந்தாலும், அதற்குமேல் அவர் சாப்பிட்டதே இல்லை!
சமயங்களில்
வீட்டுக்கு வந்து நானும் சத்தம் போடுவதுண்டு
"இது
என்ன கிடைக்காத சரக்கா? நாளைக்கு நான் வாங்கிக்க மாட்டேனா?"
கேட்டால்தானே?
இதில்
இன்னொரு விஷேசம், நான் சாப்பிடுவேன் என்று அவரும், அவர் சாப்பிடுவார் என்று நானும் கடைசி சில துண்டுகளை வைத்து அது வீணாகப் போவது தவிர்க்கவே முடியாத நடைமுறை!
இன்னொன்று,
கலைஞர்!
ஏறத்தாழ
முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே,
"போய்
துரை டெய்லரிடம் நான் கேட்டேன்னு ஐம்பது ரூபாய் வாங்கிகிட்டு வா!"
நான்
போய் கேட்டவுடனே, துரை ஆரம்பித்துவிடுவார்!
“என்ன,
இந்த மாசமும் சம்பளம் கட்சி நிதிக்கு போயாச்சா?”
வருடத்துக்கு
ஒரு மாத சம்பளமாவது, முரசொலி கடிதம், ‘ நிதி நிறைந்தவர் …’ என்று ஆரம்பிக்கும்போது கட்சி நிதிக்கு போய்விடும்!
“ஏம்ப்பா
இப்படி?”
எப்போது கேட்டாலும்
ஒரே பதில்தான்!
“இன்னைக்கு
நான் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியனாக இருக்க கருணாநிதிதான்டா காரணம்!”
“என்னப்பா
இது லூசுத்தனமான பேச்சு?
நீங்க
படிச்சீங்க அதுக்கு அவர் என்ன செஞ்சார்?”
“நானோ,
உங்க பெரியப்பாவோ, சித்தப்பாவோ இத்தனை படிக்க முடியும்ன்னு எங்க அப்பா கூட நம்பியிருக்கமாட்டார்!
இதை
சாத்தியமாக்கியது கலைஞர்!
நாம்
சாப்பிடும் ஒவ்வொரு வாய் சோறும் அவர் போட்டது!”
அந்த
வயதில் எனக்கு அது புரிந்ததில்லை!
கொஞ்சம்
கொஞ்சமாக விபரம் புரிய ஆரம்பித்தபோது விளங்கியது!
இருந்தும்,
நான் அதை அவரிடம் ஒத்துக்கொண்டதில்லை!
அதற்கு
வேறொரு காரணமும் இருந்தது!
எல்லாப் பிள்ளைகளைப்போல
நானும்
அப்பாவின்
கொள்கைகளுக்கு
முரண்பட்டது
இயற்கை!
எனவே,
எங்கள் கருத்து எதிலுமே ஒத்துப்போனதில்லை - அதனால், எந்தப் பேச்சுவார்த்தையும் வாக்குவாதமாகாமல் முடிந்ததில்லை - இதைத்
தவிர!
அவரோடு
பேச்சை வளர்த்தவாவது விவாதம் வளர்த்துவேன்!
“யார்
வந்திருந்தாலும் இதைத்தான் செய்திருப்பார்கள், இதில் கலைஞருக்கு என்ன ஸ்பெஷல் க்ரெடிட்?
அவரை
ஆட்சியில் உட்காரவைத்தோம், அவர் பதிலுக்கு நமக்கு இதை செய்தார்.
யார்
வந்திருந்தாலும் இதைத்தானே செய்திருப்பார்கள்?”
“நீ
படித்தவன்தானே? பக்கத்துக்கு மாநிலங்களிலும் வடக்கிலும் இருக்கும் நிலைமை இதுபோலத்தானா?
யார்
வந்திருந்தாலும் செய்திருப்பார்கள் என்பது ஹைப்பதடிக்கல்!
ஆனால்,
சம காலத்தில் இவர் செய்ததை வேறு யாரும் முயலக்கூட இல்லை!”
“சரி,
அதற்குத்தான் எமெர்ஜென்சி காலத்தில் நீங்கள் உங்கள் வேலையைப் பணயம் வைத்து உதவி செய்துவிட்டீர்களே?”
“அது
ஒரு சின்ன நன்றிக்கடன்! பிள்ளையாருக்கு பத்துப்பைசா சூடம் ஏற்றுவதுபோல!
அதோடு
கோவிலுக்குப் போவதை நிறுத்திக்கொண்டுவிடுவோமா?”
எனக்கும்
அவர் நியாயம் புரியாமல் இல்லை!
ஆனால்,
பேச்சை வளர்த்தணுமே?
“அப்போ
கலைஞர் குற்றமே இல்லாதவர்ன்னு சொல்ல வர்றீங்களா?”
"அது
வேறு விஷயம்! என்னைக்கு அவர் முக முத்துவை முன்னிறுத்த ஆரம்பித்தாரோ அப்போதே அவரது நேர்மை கேள்விக்குறியாகிவிட்டது.
ஆனால்,
இது இரு கோடுகள் தத்துவம் மாதிரிதான்!
கலைஞரின்
சமூக நீதிக்குமுன் இவையெல்லாம் மிகச் சிறிய கோடுகள்!”
இதுபோல் கனிமொழி,
அழகிரி
எல்லோரையும்
விமர்சித்தவர்,
ஸ்டாலினை
மட்டும்
மனப்பூர்வமாக
ஆதரித்தார்!
அந்தப்
பையன் அடிபட்டு மேலே வந்தவன்!
கலைஞர்
பையன் என்பதற்காகவே அவர் முதலமைச்சராவது தாமதிக்கப்படுகிறது என்பது அவரது தீர்மானமான எண்ணம்!
சென்றமுறை
கலைஞர் பதவிக்கு வந்தபோது, கட்சித் தலைமையை அவர் எடுத்துக்கொண்டு ஸ்டாலினை முதல்வராக்கியிருக்க வேண்டும் என்று பலமுறை சொன்னதுண்டு!
தெற்கிலிருந்து
ஒரு சூரியன் புத்தகம் வந்தபோது அவர் குணம் தெரிந்து ரெண்டு காப்பி வாங்கிவந்தேன்!
ஒன்று
அவருக்கு, மற்றொன்று எங்கள் எல்லோருக்கும்!
இரண்டு
நாட்கள் அது அவர் கையை விட்டு அகலவில்லை!
எத்தனை
முறை படித்தாரோ!
வாரிசு
அரசியல், அடுத்து உதயநிதி வருவார் என்பது பற்றி ஒருமுறை சூடான விவாதம் வந்தது!
ஒரே
வார்த்தையில் முடித்துக்கொண்டார்!
"இதோ
பார், நான் கலைஞருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்!
அவர்
என்ன தவறு செய்தாலும் நானோ, கலைஞரோ சாகும்வரை என்னோட ஓட்டு திமுகவுக்குத்தான்".
சொன்னபடியே,
கலைஞருக்கு கொஞ்சம் முன்னால் போய்விட்டார்!
எனக்காக
நிச்சயம் காத்திருப்பார்!
என்றைக்காவது
நானும் அவரிடம் போகும்போது,
ஒரு
கிண்ணத்தில் பப்பாளித் துண்டுகளை வைத்துக்கொண்டு பழையபடி ரெண்டுபேரும் கலைஞரைப்பற்றி கண்டிப்பாகப்
பேசுவோம்!