வெள்ளி, 24 ஜனவரி, 2020

நாய் வாலும் குருதிக் கொடையும்

அன்றைக்கு ஓயாத அலைச்சல்!
அப்போதுதான் வந்து ஓய்ந்து உட்கார,

புது எண்ணிலிருந்து வந்த அழைப்பை கொஞ்சம் யோசித்தே எடுத்தபோது, கொஞ்சும் மலையாளத் தேன் குரல்!

“ஞான் ....ஹாஸ்பிடல் ப்ளட் பேங்க்கிலிருந்து விளிச்சு”

காலையிலிருந்து அலைந்து திரிந்துவந்து அக்கடான்னு உட்கார்ந்தால்,
காது வழி இப்படி ஓர் ஒத்தடம்!

”சொல்லுங்க!”

“நீங்க இங்க வந்துபோய் நாலு மாசம் ஆச்சு! இப்போ நீங்க ஃப்ரீயா?”

பார்றா!

தன்னிச்சையாக குனிந்து பார்த்துக்கொண்டதில், Not a bad dress it was for a date!

“சொல்லுங்க! பொண்ணுங்களுக்கு நான் எப்பவுமே ஃப்ரீதான்!”

“தெரியுமே! அதான் கால் பண்ணினேன். கொஞ்சம் உடனே வரமுடியுமா? O+ve blood ஒரு யூனிட் வேணும்!”

புஸ்ஸுன்னு காத்தப் புடிங்கினமாதிரி ஒரு ஃபீலிங்!

ரொமான்டிக்கா கொஞ்சம் ஜொல்லுவிட நினைச்சா...

சரி, சும்மா போய் கொஞ்சம் வழிஞ்சுட்டாவது வருவோம்ன்னு மனசைத் தேர்த்திக்கிட்டு,
“சொல்லுங்க, எப்போ வரணும்?”

“ஒரு அஞ்சு மணிக்குள்ள!”

மணி மூணேமுக்கால்!

”சரிதான்! நான் இருக்கும் இடத்திலிருந்து ராக்கெட் புடிச்சு வந்தாலே ஆறு மணியாகும்!
இன்னொரு நாள் பார்த்துக்கலாம்!”

“ஒரு கேன்சர் வந்த குழந்தைக்கு வேணும்! ப்ளீஸ்!”

நமக்கு சேச்சிங்க சும்மா பேசினாலே... இதில் இப்படிக் குழைந்தால்..

“வர்றேன் தாயே! பெட்டெல்லாம் ரெடி பண்ணி வைங்க!”

“ச்சீய்ய் .. தேங்க்ஸ்!”

சரி! எடுடா வண்டியன்னு கிளம்பும்போதுதான், ஏழு காலேஜ் பதினாறு ஸ்கூல் தாண்டி இந்த வேளைல போனா விடிஞ்சுடும்ன்னு புரிஞ்சுது!

“யப்பா, யாராச்சும் நல்லா பைக் ஓட்ற ஆளுங்க இருக்கீங்களா, கொஞ்சம் அவசரமா ஏர்போர்ட் பக்கத்துல அஞ்சு மணிக்குள்ள போகணும்”

ஒரு ஆபத்பாந்தவன் வந்தான்!
“சார், நான் வர்றேன்! ஆனா, வண்டி கொஞ்சம் ஒயரமா இருக்குமே!”

“பரவால்ல! எனக்கு உயரமான வண்டிங்கதான் புடிக்கும்!”

என்ன புரிஞ்சுக்கிட்டானோ!
வாயே தொறக்காம வண்டியை எடுத்தான்!

ஏறி உட்கார்ந்தா, உண்மைலயே ஃபஸ்ட் ஃப்ளோர்ல உட்கார்ந்திருக்கற ஃபீலிங்!

சந்துபொந்தெல்லாம் பூந்துபோய் சேச்சி முன்னால நிக்கும்போது மணி நாலு ஐம்பது!

வழக்கமான ஃபார்ம் நிரப்பும் ஃபார்மாலிட்டி!

மூணாவது பக்கத்தில் முதல் கேள்வி
நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா?

“தெரியலையே, யூரின் டெஸ்ட் எடுத்துப் பார்த்துடலாம்!”

சரக்கென்று பிடுங்கப்பட்டது பேப்பர்!

“மூடிக்கிட்டுப் போய் படுங்க! டைம் ஆச்சு!
ஏன்னா, அடுத்த கேள்வி அதைவிட வில்லங்கம்!

கையில் கொடுத்த ballஐ என்ன செய்யணும்ன்னு அப்பாவியா ஒரு கேள்வி, “இதை என்ன பண்ணனும்?”

தோள்பட்டையில் ஒரு அடி!
“அடங்கவே மாட்டீங்களா!”

ஒருவழியா குருதிக்கொடை முடிஞ்சு, ஜூஸ்!

“இங்கேயே பத்துத்தடவைக்கு மேல கொடுத்திருக்கீங்க, வேற எங்காவது டொனேட் பண்றீங்களா?"

"ம்.. ... ஹாஸ்பிடல்ல இதைவிட அதிகதடவை!"

“ஏன்?”

“அங்க நர்ஸ், டாக்டர் எல்லோருமே உண்மைலயே அழகா இருப்பாங்க!”

“சரி! அங்கேயே போங்க! இந்த சாட்டர்டே என்டே கேரளம் போலாமான்னு கேட்கலாம்ன்னு இருந்தேன்! வேண்டாம்!”

அடப்பாவி! போச்சா!
நமக்கு நாக்குல சனி!
இது புரியணும்னா கொஞ்சம் முன்கதை!


வெளியே வந்தால், நம்ம பைக் சாரதி!

“யாருக்கு சார், உங்க ரிலேட்டிவ்க்கா?”

“இல்ல! யாருக்கோ!”

“அதுக்கா இப்படி பறந்தடிச்சு வந்தீங்க?”

“நம்ம பண்ற பாவத்துக்கெல்லாம் ஒரு சின்ன பரிகாரம் இதெல்லாம்!
அதுசரி, நீங்க ப்ளட் டொனேட் பண்ணியிருக்கீங்களா?”

“இல்ல சார்! எனக்கு ரத்தத்தை பார்த்தால் பயம்!”

“கல்யாணம் ஆய்டுச்சா?”

“இல்ல சார்! பார்த்துக்கிட்டிருக்காங்க!”

“சீக்கிரம் பண்ணிக்குங்க!
இந்தமாதிரி சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பயம் போய்டும்!”

ஆஃபீஸ் வரவரைக்கும் பேச்சே இல்லை!😂கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக