"நாளைக்கு பதில் சொல்றேன் ரவி!"
சொல்லிவிட்டு மொபைலை அணைத்த சுதாவுக்கு ஒரு காஃபி குடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது!
ஸ்கூட்டியை எடுக்கும்போது நானும் தானும் வருவதாய் ஒட்டிக்கொண்டாள் மைதிலி!
சுதாவுக்கும் இப்போது யாராவது பேச்சுத் துணை இருந்தால் நல்லது என்றே பட்டது!
நல்லவேளையாக காஃபி ஆர்டர் செய்ததும், மைதிலியே பேச்சை ஆரம்பித்தாள்!
'என்னடி முடிவு செய்திருக்கிறாய்?"
"எதைப்பற்றி?"
"ம்ம்ம், இடஒதுக்கீடு பற்றி!, நீ முடிவு செய்றதுக்குள்ள ரஜினியே அரசியலுக்கு வந்துடுவார் போல!"
"இல்லை மைது, நாளைக்கு, காதலர் தினத்தில் என் முடிவை சொல்றதா சொல்லியிருக்கேன்!"
"இதில் யோசிக்க என்னடி இருக்கு? எஸ் சொல்ல வேண்டியதுதானே!"
"பார்ப்போம்!" சொல்லிக்கொண்டே எழுந்தவள் முகத்தில் குழப்ப ரேகைகள்!
மைதிலி சொல்வது உண்மைதான்! நான் ஏன் இவ்வளவு குழப்பவாதியாக இருக்கிறேன்?
ரவியோடு ஏறத்தாழ ஒரு வருடமாக நடந்துவரும் உரையாடல் இப்போது ஒரு பதிலை நோக்கி!
ஏன் இந்த பாழாய்ப்போன ரவி என் வாழ்வில் வந்து தொலைத்தான்?
இத்தனைக்கும் அவன் கேட்பது தனக்காக அல்ல என்பதுதான் இதில் மகத்தான ஜோக்!
பள்ளி நாட்களிலிருந்தே ராகுலையும் ரவியையும் அவளுக்கு நன்கு தெரியும். ஒரே பள்ளி, அதன்பிறகு சொல்லிவைத்ததுபோல் அண்ணா யூனிவர்சிட்டியில் ஒரே டிபார்ட்மெண்ட்!
ராகுல் பெரிய இடத்துப்பிள்ளை!
ஆனால், அதற்கான அலட்டல் ஏதும் இருக்காது!
அவன் அம்மாவைக்கொண்டு பிறந்த அழகன்!
பெண் சாயலில் இருக்கும் ஆணை ஏனோ எல்லாப் பெண்களுக்குமே சட்டென்று பிடித்துப்போகும்!
ஆனால், வலிய வந்து பேசும் பெண்களிடம்கூட ஒரு மரியாதையான தூரத்தில் நின்று சிறு புன்னகையோடு ஒரு வார்த்தை பேசி நகர்ந்துவிடுவான்!
தான் உண்டு, தன் படிப்பு உண்டு என்று மிக அமைதியான பையன்.
பெண்கள் இருக்கும் திசைப்பக்கமே திரும்பமாட்டான்!
அதிசயமாக ஏனோ சுதாவோடு மட்டும் பேசுவான். அதுவும் முழுக்க படிப்பு சம்பந்தப்பட்டதே!
ஒருவேளை ரவி அவனுக்கும் சுதாவுக்கு இடையே ஒரு இணைப்புப் பாலமாக இல்லாவிட்டால் அவளிடமும் பேசியிருக்கமாட்டானோ என்னவோ!
ரவி அவனுக்கு நேர் எதிர்!
ஒரு சராசரி மிடில்க்ளாஸ் பையன்!
கொஞ்சம் கறுப்போ என்று தோன்றுமளவு மாநிறம்!
எந்நேரமும் ஒரு அலட்சிய பாவம் இயல்பாகவே!
பெரிய நண்பர்கள் பட்டாளம்- அதில் பாதிக்குமேல் பெண்கள்!
இரண்டாவது சந்திப்பிலேயே, வாடி போடி என்று பேசுமளவு வேகம்!
சுதாவுக்கு எப்போதும் அவன் பெண்களிடம் பேசும்போது கொஞ்சம் மட்டம் தட்டும் தொனி இருப்பதுபோல் படும்!
இதை கேட்டபோதும், 'உன்னை மட்டம் தட்டுவதை விட எனக்கு வேறு வேலை இருக்கு சுது!" என்று மண்டையில் எத்திவிட்டு போவான்!
ராகவி அடிக்கடி சொல்வதுண்டு - "அவன் எப்போதுமே என்னை மாரைப் பார்த்துத்தான் பேசறான்டி! அவன் யாரையுமே கண்ணைப் பார்த்துப் பேசறதை நான் பார்த்ததே இல்லை!"
அதற்கும்,
"என்ன பண்ண, அவகிட்ட பார்க்கறமாதிரி வேற என்ன இருக்குன்னு அவதான் சொல்லணும்! அவளை முதலில், தான் ஒரு பெண் அப்டிங்கறத அண்டர்லைன் பண்ணாம பேசச் சொல்லு, அதுக்கப்புறம் எங்க பார்த்துப் பேசணும்னு நான் முடிவு பண்ணிக்கறேன்!"
ஏன், இப்பக்கூட அதோ அந்த ஆண்ட்டி இடுப்பைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியல! பர்பசிவ்வா காட்டுனா பார்க்கத்தான் செய்வாங்க!"
"ஏன் உன்னைமாதிரி பெண்களை நான் கண்ணைப் பார்த்துப் பேசறேன்? நீங்க யாரும் நான் அழகா இருக்கேன் அப்படின்னு நினைச்சுக்கிட்டு சுத்தறதோ, எந்நேரமும் ஒரு போலி கூச்சத்தோடு பேசறதோ இல்லை!
விடு, இன்னைக்கு ஏதாவது சினிமாவுக்கு போலாமா?
மாப்பிள்ளைல அந்த ஹன்சிகா வெண்ணைக்கட்டி மாதிரி அத்தனை அழகு!"
எப்படியோ படிப்பை முடித்து ஆளுக்கு ஒரு பக்கம் போயும், அப்பாவின் தொழிலைப் பார்க்கப் போன ராகுலும், ஒரே அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்த ரவியும், சுதாவும் மட்டும் பழைய நட்பை விடாமல் தொடர்ந்து வருகிறார்கள் - இன்றுவரை!
வாரம் தவறாமல் சனிக்கிழமை மாலைகளில் ராகுலின் கடல் மாதிரி பங்களாவிலோ அல்லது அவர்களது ஈஞ்சம்பாக்கம் கெஸ்ட் ஹவுஸிலோ ஒரு காஃபி, கொஞ்சம் தீனி என்று ஆரம்பிக்கும் அரட்டை டின்னர்வரை நீளும்!
சுதாவும் ரவியும்தான் ஓயாமல் பேசிக்கொண்டிருப்பார்கள்!
ராகுல், தன் வழக்கமான அரைச்சிரிப்போடு ஓரிரு வார்த்தைகள்!
ரவியின் எல்லாக் கலாய்ப்புக்கும் புன்னகை மாறாமல் பதிலடி கொடுப்பான், ஆனால், சுதாவோடு மட்டும் ஒரு மிக மரியாதையான தொனியோடுதான் உரையாடல்!
திரும்பி வரும்போது சுதா கேட்பாள், “ஏன்டா அவன் இன்னும் இப்படியே இருக்கான்? நான் என்ன அவனைக் கடிச்சு தின்னுடுவேனா?”
இடையில் ஒரு மாதம் ராகுல் வரவே இல்லை!
"என்னடா ஆச்சு?"
"போகச் சொல்லுடி அந்த லூசை! ஒருநாள் அவனுக்குத் தெரியாம லிம்கால கொஞ்சம் ஜின் ஊத்திக் கொடுத்துட்டேன்! அதையும் நான் சொன்னதுக்கு அப்புறம்தான் தெரிஞ்சது அவனுக்கு!
ஏதோ அவன் அம்மாவுக்கு செஞ்சு கொடுத்த சாத்தியமாம்! அதை என்னால இன்னைக்கு மீறிட்டானாம்! ஒரே புலம்பல்! கோபமா மூஞ்சியை திருப்பிக்கிட்டு போய்ட்டான்!"
"நீ ஏன்டா அப்படி செஞ்சே?"
"இப்போ என்ன, ஒரு சின்ன கட்டிங் ஜின் குடிச்சதுல அவன் கற்பு பறிபோய்டுச்சா? ஓவர் ஸீனுடி!"
அதுக்கப்புறம், அப்பா தாயேன்னு வீடுபோய் கெஞ்சிக் கூப்பிட்டுத்தான் வந்தான்!
அதுக்கே அவங்க அம்மாகிட்ட ஆயிரம் ஸாரி ஆண்ட்டி சொல்லவேண்டியிருந்தது!
"போடா, அப்படியே நேரா சொர்க்கத்துக்குப் போய் அந்த மஹாலட்சுமி மடில தாச்சுக்கோ!
நீயெல்லாம் சாகறவரைக்கும் அம்மாஞ்சிதான்!”
அடுத்தவாரம் கொஞ்சம் சுதியேத்திக்கிட்டு ரவி திட்டித் தீர்த்தபோதும் புன்னகைதான் பதில்!
"இருக்கட்டும் ரவி, ஆனா அதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி இருக்கு!"
இப்படியே போய்க்கிட்டிருந்த வாழ்க்கைல ராகுலுக்கு காதல் வந்ததுதான் ட்விஸ்ட்!
அதுவும் சுதா மேல!
ஐரனி என்னன்னா, அதையும் ரவிதான் வந்து சொன்னான்!
"ராகுல் உன்னை லவ் பண்றான்டி!"
குடித்துக்கொண்டிருந்த காஃபி புரையேறிவிட்டது சுதாவுக்கு!
“வாட்? அந்த அம்மாஞ்சிக்கு லவ் பண்ணக்கூடத் தெரியுமா? அதுவும் என்னையா? எப்படிடா இது?
அதையும் உன்னை விட்டு சொல்லச் சொன்னானா?"
"இல்லை சுது. ஹீ இஸ் சீரியஸ்!"
என்னடா பொடலங்கா சீரியஸ்?
ஒரு பொண்ண லவ் பண்றேன்னு கூட நேரா வந்து சொல்லத்தெரியாத அம்மாஞ்சித்
தனத்தை நீதான் மெச்சிக்கணும்!
அம்மா கோவிச்சுக்குவாங்கன்னு அழறது, அப்பாகூட போனில் பேசும்போதுகூட
ஏந்திருச்சு நின்னு பேசறது, இதெல்லாம் போன செஞ்சுரிலயே வழக்கொழிஞ்சு போச்சு ரவி!
இவனெல்லாம் மியூசியம் பிறவி!"
"டேய் வெண்ணெய், நான் இங்க சீரியஸா பேசிக்கிட்டிருக்கேன், அங்க என்ன பாக்கறே?"
இல்லடி, அந்தப்பொண்ணு கையைத்தூக்கி தலையை முடியும்போது ப்ரொபைல் அள்ளுது!
எந்த டிபார்ட்மெண்ட்டி அவ?"
"தூ! நான் என்ன பேசிக்கிட்டிருக்கேன், நீ என்ன பார்த்துக்கிட்டிருக்கே!
டிஸ்கஸ்டிங் ஃபெல்லோ!"
"ஸாரி! சொல்லு! இப்போ, நான் அவன்கிட்ட போய் என்ன சொல்லட்டும்?"
"போ! மொதல்ல, அவனை ஒரு ஆம்பளையா நேர்ல வந்து ப்ரொபோஸ் பண்ணச் சொல்லு!"
அடுத்தவாரம், பாரதிராஜா படத்து ஹீரோயின் மாதிரி கோணிக்கிட்டு வந்தவனைப் பார்த்து
சிரிப்புதான் வந்தது சுதாவுக்கு!
"யோசிச்சு சொல்றேன்!"
இதைத்தவிர வேறு ஏதும் சொல்லத்தோன்றவில்லை சுதாவுக்கு!
அதற்குப் பிறகு ஏறத்தாழ ஒருவருடமாக ரவிதான் அவனுக்கு வக்கீல்!
"சுதா, உனக்காக இப்போவே நூறு பவுனுக்கு மேல வாங்கி வச்சிருக்கான்டி!"
"எதுக்கு ரவி, நான் நகையே போட்டுக்க மாட்டேன்னு அவனுக்குத் தெரியாதா?"
"தெரியும்டா, ஆனா, நீ கொஞ்சம் நகை போட்டுக்கிட்டு வரணும்னு அவங்க அம்மா எதிர்பார்ப்பாங்கதானே!"
"அதுக்கு?"
"உங்க வீட்டு நிலவரம் அவனுக்குத் தெரியாதா, இதெல்லாம் உங்க அப்பா வாங்கிக்
கொடுத்ததா உன்கிட்ட கொடுத்து போட்டுக்கிட்டு வரச் சொல்ற ஐடியால இருக்கான்! ஹீ இஸ் வெரி
கன்சர்ண்ட் அபௌட் யுவர் இமேஜ் சுது!"
" ஸோ, இதெல்லாம் அவங்க அம்மாவுக்குத் தெரியாம வாங்கிக் கொடுப்பான், நான் அதை எங்க அப்பன் கொடுத்ததா
போட்டுட்டு வரணும்? ஒரு பொய்யிலே என் வாழ்க்கை ஆரம்பிக்கணும் அப்படித்தானே?"
"லூசாடி நீ? பொய்மையும் வாய்மையுடைத்துன்னு வள்ளுவனோ, பாரதியோ யாரோ சொல்லியிருக்காங்கதானே?"
"ஜோக்ஸ் அபார்ட், இதில் அவனுக்கு உன் மேல இருக்கற அக்கறை புரியலையா?"
போடா முட்டாள், அவங்க அம்மாவுக்கு ஏதோ புரிஞ்சிருக்கும்போல!
நீங்க ரெண்டுபேரும்
இல்லாதப்போ ரொம்ப கேசுவலா விசாரிச்சாங்க, உனக்கு எத்தனை நகை போடுவாங்க உங்க வீட்லன்னு! நான் அப்போவே, பத்துப் பவுன் போட்டா அதே அதிகம்
ஆண்ட்டின்னு சொல்லிட்டேன்!"
"அதெல்லாம் பார்த்துக்கலாம், நான் சமாளிச்சுக்கறேன்!"
"அப்போகூட நான் சமாளிக்கறேன்னுதான் சொல்றே! அவன் என்ன, வாலை சுருட்டிக்கிட்டு சோஃபாவுக்கு
அடில பூந்துக்குவானா?"
“ஹார்ஷா பேசாத ப்ளீஸ்! அவன் இயல்பு அது!”
அப்போது பார்த்துத்தானா ரவி ஃபோன் அடித்துத் தொலைக்கவேண்டும்!
பேசியது ஜிஎம்!
"ரவி, கொஞ்சம் அவசரமா ஆபீஸுக்கு வரமுடியுமா? ஒரு சின்ன டிஸ்கசன்!"
"சாரி சார்! ஐயம் ஆன் அ சீரியஸ் திங். லெட் இட் வெய்ட் டில் தி மார்னிங்!"
பதிலுக்குக்கே காத்திருக்காமல் இணைப்பை துண்டித்த ரவியை கோபமாக
முறைத்தாள் சுதா!
"பைத்தியக்காரா, ஜிஎம் கிட்ட அப்படியா பேசவே? வேலைய விட்டு துரத்தப் போறான்"
"போகட்டும்டி! என்னால இருபத்துநாலு மணிநேரமும் ஆபீஸை சுமக்க முடியாது!
என்னோட எட்டுமணி நேரம்தான் அவன் தர்ற சம்பளத்துக்கு!
முடிஞ்சா வெச்சுக்கட்டும், இல்லைன்னா தொரத்திவிட்டுடட்டும்!"
"லூஸு, அன்னைக்கு ராகுல் என்ன பண்ணுனான்னு ஞாபகம் இருக்கா?
அவன்கிட்ட சம்பளம் வாங்கற ஜிஎம் போன் பண்ணுனான்னு அரைமணி நேரம்
பேசினான்! ஹி லவ்ஸ் ஹிஸ் ஒர்க்!"
" அதே! அந்த சீரியஸ்னெஸ் உன் மேல இருக்கற லவ்லயும் அவன்கிட்ட இருக்கு!"
இப்போவே, வீக் எண்ட் ஹைட் அவுட் க்கு ஓஎம்ஆர்ல ஸ்விம்மிங் பூலோட ஒரு அரண்மனையை
வாங்கி வெச்சிருக்கான்!"
"அவனை கல்யாணம் பண்ணிக்கிட்டா வாழ்க்கை சிம்ரன் இடுப்பு மாதிரி
தடையே இல்லாம வழுக்கிட்டுப் போகும்!"
"உதாரணத்தைப்பாரு நாய்க்கு!"
"நீ? இப்படியே மொட்டப் பயலா எங்க ரெண்டுபேருக்கும் வால் பிடுச்சுக்கிட்டே சுத்தப்போறயா?"
" டேய், அவன் லவ்வுக்கு இத்தனை வக்காலத்து வாங்கறாயே, நீ யாரையாவது லவ் பண்றியா?"
"தாயே, நமக்கு இந்த லவ், அதுக்கு உருகறது, ரோஸ் வாங்கித் தர்றது, விடியவிடிய போன்ல வழியறது இதெல்லாம் செட்டே ஆகாது!"
"நடிக்காதடா! உனக்குன்னுட்டு ஒரு பிளான் இல்லாமலா இருக்கும்?"
"இல்லடி, அப்பா அம்மா சொல்ற ஏதோ ஒரு பொண்ண, கொஞ்சம் கண்ணுக்கு லட்சணமா
இருந்தா, கட்டிக்கிட்டு காலத்தை ஓட்டிடுவேன்!
இதெல்லாம் சீரியஸா எடுத்துக்கிட்டு லைஃப்பை சிக்கலாக்கிக்க எனக்கு இஷ்டமில்லை!
அஷ்டே!
கல்யாணம் பண்ணிக்கிட்டு பொண்டாட்டிய காதலிச்சா போச்சு!"
"என்னடா இப்படிப் பேசறே? இன்னைக்கு தேதிக்கு ஃபேமிலி
கோர்ட்லதான் கூட்டமே அள்ளுது!
கல்யாணம் முடிச்ச கையோட மாலையைக்கூட கழட்டாம டைவர்ஸுக்கு வந்து
வரிசைல நிக்கிதுக!
இதுல எப்படிடா முன்னப்பின்ன தெரியாத ஒரு பெண்ணோட வாழமுடியும்? திடீர்ன்னு அம்மாஞ்சி மாதிரி
பேசறே?"
"இல்லை சுது, எனக்கு இந்த காதல் கத்திரிக்கா எல்லாத்திலேயும் நம்பிக்கை இல்லை!
என்னால உன்கூட, ரேவதி கூட, தினேஷ் கூட ராகுல்கூட ஃப்ரெண்டா இருக்க முடியும்னா ஏன் எங்க
அப்பாம்மா சொல்ற பொண்ணு கூட ஃப்ரெண்ட்லியா இருக்க முடியாது?
எல்லாத்துக்கும் மனசுதான் காரணம்!
ஐ பிலீவ் தட் ஐ கேன் மேக் எனி ஒன் ஹாப்பி அண்ட் பீ ஹாப்பி வித்
எனி ஒன்!"
"சரி, அதைவிடு! ராகுலுக்கு என்ன சொல்லப்போறே?"
"ஒருவருஷமாச்சுடி! ஸே யெஸ் ஆர் நோ!
பட் ப்ரெஃப்ரபிளி ஸே எஸ்!
இப்படி அலையவிடாதே! நீ இல்லைன்னா ஒடஞ்சு போயிடுவான் பாவம்!"
"ஓகேடா. நாளைக்கு வேலண்டைன்ஸ் டே! அப்போ சொல்றேன்!"
அன்னைக்கு நைட்டு மறுபடி ரவி போன் பண்ணுனபோதுதான் கதையோட முதல்
வரி!
மறுநாள் ஏற்கனவே பிளான் பண்ணுன மாதிரி அஞ்சுமணிக்கு ராகுல் போன
பர்த்டேக்கு வாங்கித் தந்த ஆலிவ் க்ரீன் புடவையை கட்டிக்கிட்டு கிளம்பியவளை பார்த்து
ரவி மெல்லிசா விசிலடிச்சான்!
" நானே உன்னை லவ் பண்ணிடுவேன் போல!"
பைக்கில் பின்னால் உட்கார்ந்தவள் ஓங்கி அவன் முதுகில் அறைந்தாள் செல்லமாக!
ரெண்டுபேரும் போனபோது ராகுல் முன்னாடியே வந்திருந்தான்!
முகத்தில் அப்பட்டமான பதட்டம்!
அந்த ஏசியிலும் மெல்லிய வியர்வைக்கோடு!
கொஞ்சம் பாவமாகத்தான் இருந்தது பார்க்க!
ஏதுமே பேசாமல் அவள் முகத்தைப் பார்த்தவன் கண்ணில் அத்தனை கேள்விகள்!
அவன் எதிரில் உட்கார்ந்த சுதா, மெதுவாக அவன் கையை தன் கைகளுக்குள்
எடுத்துக்கொண்டாள்!
டேய், ஏன்டா இவ்வளவு பதட்டம்? நான் உன் ஃப்ரெண்டுடா! என்
பதில் என்னவா இருந்தாலும் அது மாறப்போறதில்லை! ரிலாக்ஸ்!"
மெதுவாக எழப்போன ரவியை அதட்டி உட்காரவைத்தாள்!
"நீயும் இரு! எங்கே போறே?""
"ராகுல், நீ ரொம்ப நல்லவன்,
என்ன, இந்த ரொம்பங்கறதுதான் சிக்கல் அதுல!
உன்னைமாதிரி ஒரு அப்பழுக்கே இல்லாதவனை இன்னைக்கு வலைபோட்டுத் தேடினால்கூட பார்க்க
முடியாது!
உன்னை கல்யாணம் பண்ணிக்க நிச்சயம் கொடுத்துவெச்சிருக்கணும்!
வாழ்க்கை, ஹைவேயில மெர்ஸிடிஸ்ல போறமாதிரி அலுப்பே இல்லாம போகும் - சாகறவரைக்கும்!
ஆனா எனக்கு இது ஒத்துவராதுடா! எனக்கு அந்தமாதிரி பயணத்துல தூக்கம்
வந்துடும்!
எனக்கு கொஞ்சம் பைக்ல மலையேற பிடிக்கும்!
அப்படித்தான் வாழ்க்கையும்!
கொஞ்சம் திட்டம் போடாத திருப்பங்களோட கொஞ்சம் கோபம், கொஞ்சம் அழுகை, கொஞ்சம் ஏமாற்றம், கொஞ்சம் பிடிவாதம் இப்படி!
பட்டுப்புடவையும் பென்ஸ் காரும் ஏசி வீடும் எனக்கு சரிப்படாது!
தப்பா எடுத்துக்கலன்னா நான் ஒன்னு சொல்லட்டுமா?
ஐ திங்க், ஐ மேட் சம் அதர் சாய்ஸ்!"
ராகுல் முகம் வெளுத்து அமர்ந்திருக்க, ரவிதான் கத்த ஆரம்பித்தான்!
"அது எப்படிடி எல்லாப் பொம்பளைங்களும் இப்படியே இருக்கீங்க?
காஃபி குடிக்கலாமா, டீ குடிக்கலாமான்னு நூறுதடவை கேப்பீங்க ஆனா லவ்வுன்னு வந்தா
மட்டும் கமுக்கமா திருட்டுத்தனமா முடிவு செய்வீங்க?"
அதிலும் பஸ் கண்டக்டர், டூ வீலர் மெக்கானிக்ன்னு கொஞ்சமும்
சம்பந்தமே இல்லாதவன்கிட்ட போய் விழுவீங்க!
உனக்கு யார்? லிஃப்ட் ஆப்ரேட்டரா? என்ன, கைல பிளேடு வெச்சுக் கீறி லவ் யூ சொன்னானா?"
“ரவி, யூ சாவனிஸ்ட் பாஸ்டர்ட், மொதல்ல சத்தம் போடாதே, மெதுவா பேசு”
“இப்படி எல்லாப் பொண்ணையும் பொதுப்படையா பேசற புத்தியை முதல்ல
மாத்தித் தொலை!
எனக்கும் தெரியும், தான் விரும்பும் பெண்ணுக்கு நல்ல வாழ்வைக் கொடுக்க படிப்பையும்
வேலையையும் வசதியையும் பெருக்கிக்காம வெறும் ஸ்டண்ட் அடிக்கற பசங்ககிட்ட விழற அளவுக்கு
நான் இம்மெச்சூர் இடியட் இல்லை!
படிப்போட இம்பார்ட்டன்ஸ் உன்னைவிட எனக்குத் தெரியும்!
எல்லாப் பொண்ணுங்களும் ஸ்டுப்பிட் அப்படின்னு முடிவு செய்யற
அத்தாரிட்டியை உனக்கு யார் கொடுத்தது?"
ராகுல்தான் சுதாரித்துக்கொண்டு கேட்டான்!
"விடு சுதா, அவன் எப்போதுமே அப்படித்தான்! நீ நோ சொன்னது எனக்கு ஏமாற்றம்தான்!
இதை ஜஸ்ட் லைக்தட் கடந்துபோக என்னால முடியாது! ஆனா, நிச்சயம் கொஞ்ச நாள்ல சரியாகிடுவேன்!
இப்போ, சொல்லு, உனக்கு ஆட்சேபனை இல்லைன்னா, அது யாருன்னு தெரிஞ்சுக்கலாமா?"
"தேங்க்ஸ் ராகுல்! ஐ ம் ஹாப்பி தட் அட்லீஸ்ட் யூ ஆர் ரெடி டு
அண்டர்ஸ்டேன்ட்!"
"அவனும் புரிஞ்சுக்குவான் சுதா, அவனுக்கு நான் டிப்ரெஸ் ஆய்டுவேன்கற
பயம்! நீ சொல்லு!"
"முதல்ல அந்த முட்டாள்கிட்ட சொல்லு,
நான் யாரையும் லவ் பண்ணலேன்னு!
ஒருத்தனை பார்த்து, பழகி, அவனை பண்ணிக்கிட்டா நல்லா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன்!
தட்ஸ் ஆல்!
இது வெறும் இன்க்ளினேசன் மட்டும்தானே தவிர, காவியக்காதல் ஒன்னும் இல்லை.
ரவி, மரமண்டை, உனக்கு நான் சொல்றது புரியுதா?"
"சாரிடி, கொஞ்சம் எமோஷனல் ஆய்ட்டேன். சொல்லு!"
அது வேற யாருமில்லை முட்டாளே! நீதான்!
அப்பா அம்மாகிட்ட வந்து என்னை பொண்ணு கேட்கச் சொல்லு, உனக்கு ஆட்சேபணை இல்லைன்னா!
ஐ பிலீவ் தட் ஐ கேன் மேக் எனி ஒன் ஹாப்பி அண்ட் பீ ஹாப்பி வித்
எனி ஒன்!"
ஓகே! நான் கிளம்பறேன்!
நீங்க ரெண்டுபேரும் பேசி முடிவு செய்ங்க,
ரவி, இன்னொரு விஷயம்,
நீ நோ சொன்னா நான் ஒன்னும் பெருசா அலட்டிக்கமாட்டேன்.
அதனால, அனுதாபப்பட்டெல்லாம் முடிவெடுக்காதே,
இந்த அரேஞ்ச்மெண்ட் ஓகேன்னா
நீ எனக்குக்கூட சொல்லணும்னு அவசியம் இல்லை!
உங்க அப்பாவையே, அம்மாவையோ என் பேரன்ட்ஸ் கிட்ட
பேசச் சொல்லு!
அப்படிப் பேசினால், சம்மதம்ன்னு சொல்லச் சொல்லி அவங்ககிட்ட சொல்லிடறேன்!
சொல்லிக்கொண்டே நடந்த சுதா திரும்பிவந்து சொன்னாள்!
"ஸாரி! சொல்ல மறந்துட்டேன்!"
"ஹேப்பி வேலண்டைன் டே மை டியரஸ்ட் ஃப்ரெண்ட்ஸ்!"
actually its expected conclusion but the write uo is very superb and like to have more in coming days congratulation
பதிலளிநீக்குThank you
பதிலளிநீக்கு