ஞாயிறு, 31 ஜனவரி, 2021

இதுதான் காதலென்பதா?

 ‘Love is nothing but glorified physical urge”

என்ன எழவு ஸ்டேட்மெண்ட் இது?

Don’t be a cynical psycho Ravi. இப்படி ஃப்ராய்ட் தனமா பேசறதே பொண்ணுங்கள இம்ப்ரெஸ் பண்றதுக்கு உன்னோட குறுக்குவழின்னு எனக்குத் தோன்றது!

 இப்படி என்னை பிராண்ட் பண்றது உனக்குப் பிடிச்சிருக்குன்னா அதில் நான் தலையிட விரும்பல;. யூ  மே பீ ரைட் ஆல்சோ . பட் இப்ப நாம இங்கே கேரக்டர் அனலிசிஸ்க்கு வரலைன்னு நான் நினைக்கிறேன்!

ஓபன்லி சேயிங் ஐயம் டயர்ட் ஆஃப் யுவர் cynicism.”

ரொம்ப சிம்பிள் கீது. I'm not against romance but romanticizing anything is fucking stupidity”

யப்பா சாமி, உன்னோட இண்டெலக்சுவல் குப்பை எல்லாத்தையும் என் தலைல கொட்டாதே! எனக்கு ஒரே ஒரு பதில், டூ யூ லவ் மீ ஆர் நாட்!

நான் பதில் சொல்லிட்டதாதான் நினைக்கிறேன் கீது!

எனக்கு இந்த காதல், கருமத்திலெல்லாம் நம்பிக்கையே கிடையாது!

ஒருத்தியைப் பார்த்தவுடனே மண்டைக்குள்ள மணியடிக்கறது, வயித்துக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கறதெல்லாம் எனக்குக் கொஞ்சம் கோமாளித்தனமா படுது!

எந்நேரமும் மந்திரிச்சுவிட்டா மாதிரி சுத்தறதும், ஒரு நாள் பார்க்கலைன்னா தாடி வளர்த்திக்கிட்டு சுத்தறதும்தான் லவ்ன்னா எனக்கு அது செட்டே ஆகாது!

உங்க சினிமா, மில்ஸ் அண்ட் பூன் ல்லாம் இதைத்தான் புனிதப்படுத்தி வித்துக்கிட்டிருக்கு! பட் காண்ட் ஸ்டான்ட் தட் ரப்பிஷ்!

 சரி, நேரா கல்யாணம் பண்ணிக்கலாம்! அது உனக்கு ஓகேவா?

கீது, மை ப்யூட்டிஃபுல் இடியட், காதலே கோமாளித்தனம் அப்போ கல்யாணம்? அது இன்னொரு முட்டாள்தனம்!

லுக் டியர், எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு! ஆஃப்டர் ஆல், யூ ஆர் தி மோஸ்ட் ப்யூட்டிஃபுல் கேர்ள் ஹாவ் மெட் இன் ரீசண்ட் டைம்ஸ். கூடவே கொஞ்சம் புத்திசாலித்தனமும்!

அண்ட் பிரெஸ்யூம் தட் யூ வில் பீ குட் இன் பெட் டூ!

ஆனா எனக்கு இந்த காதல், கல்யாணம்ங்கற இடியாப்ப சிக்கல்ல எல்லாம் சிக்கிக்கற ஐடியா இல்லை!

என்னோட தாட் ப்ராசஸ் வேற! எனக்கு லிவிங் டுகெதர்ன்னா ஓகே!

ஆனா, யூ ஷுட் நெவெர் ட்ரை டு ரொமாண்டிசைஸ் தட்!

சேர்ந்து வாழ்வோம், லெட் அஸ் ஃபால் இன் லவ் வித் ஈச் அதர் இன் மெச்சூர்ட் வே! இன் பிட்வீன் நோ எமோஷனல் பாண்டிங்ஸ்! சந்தோஷமா இருப்போம், சகிச்சுக்கிட்டு இருக்கோம்ன்னு தோணும்போது, லெட் அஸ் பார்ட்!

இதுக்கு ஓகேன்னா சொல்லு, நாளைக்கே பெட்டி படுக்கையோட என் அபார்ட்மெண்ட்க்கு வந்துடு!   ஹாவ் அன் அன்யூஸ்ட் பெட்ரூம்! பூஜையைப் போட்ருவோம்!

ஒரு நிமிஷம் மௌனமா உட்கார்ந்திருந்துட்டு ஒரு வார்த்தை பேசாமல் எழுந்து போன கீதா திரும்ப வருவான்னு ரவிக்கு தோணல!

சர்வர் கொண்டுவந்த பில்லுக்கு பணம் கொடுத்துட்டு வண்டியை எடுத்த ரவிக்கு கொஞ்சம் ஏமாற்றமாகத்தான் இருந்தது - அப்படின்னு நீங்க நினைச்சா,

ஸாரி யூ ஆர் ராங்!

ரவி அந்த மாதிரி ஆள் இல்லை!

அவனுக்கு லைஃப்ல எல்லாமே கெமிக்கல் ஃபார்முலா மாதிரிதான்!

அவனோட வார்த்தைல சொல்றதுன்னா,

இந்த காதல் பாசம் தாய்மை இந்தமாதிரி சோ கால்டு புனிதங்கள் எல்லாமே நம்மை நாமே முட்டாளாக்கிக்கறதுக்கு உருவாக்கிக்கிட்ட விலங்குகள்! இதில் சிக்கிக்கறது தற்கொலைக்கு சமம்!

ஒருவகைல ஒரு ஹோமில் வளரவேண்டிய அவன் வாழ்க்கைச் சூழல் அவனை இப்படி யோசிக்க வெச்சதோ, இல்லை கீதா நினைக்கிற மாதிரி அவன் படிக்கிற புத்தகங்கள் எல்லாமே இன்டலக்சுவல் குப்பைகளோ, யாருக்குத் தெரியும்?

ஆனா கொஞ்சம் வித்தியாசமானவன்தான் ரவி!

சமீபத்தில் எல்லோரும் உருகி உருகி பார்த்த ஒரு காதல் படத்தை ஐந்து நிமிடம் பார்த்துவிட்டு ரவி அடித்த கமெண்ட்!

இந்த ஹீரோ பண்றதெல்லாம் pure stalking. Don't glorify this trash!

எதிலும் பட்டுக்கொள்வதில்லை, எதுவும் புனிதம் இல்லை. தான் உண்டு, தன் வேலை உண்டுன்ற அவனோட ஒதுக்கம்தான் ஒருவேளை கீதாவை அவன் பக்கம் இழுத்ததோ என்னவோ!

பத்து நாளில் ஏறத்தாழ கீதாவோடு பேசியதையே மறந்துபோயிருந்தான் ரவி!

அன்றைக்கு சாயங்காலம்,

ரவி, நான் உன்கூட கொஞ்சம் பேசணும்ன்னுட்டு வந்தபோது கொஞ்சம் ஆச்சரியமாகத்தான் இருந்தது!

பெஸண்ட் நகர் பீச்சில் சம்பிரதாயமாக சுட்ட சோளம் வாங்கிக்கிட்டு கடலைப் பார்த்து உட்கார்ந்தபோது ரவிதான் கேட்டான்.

சொல்லு கீது, ஏதோ பேசணும்னியே?

ரவி, கல்யாணம் பண்ணிக்கறதைப் பத்தி என்ன முடிவு பண்ணுனே?

சாரி கீது. நான் அன்னைக்கு சொன்னதுதான்! எனக்கு உன்னைக் கண்டிப்பா பிடிச்சிருக்கு. திங்க் வில் பீ ஹாப்பி இஃப் யூ ஆர் வித் மீ!

ஆனால், கல்யாணம், செண்டிமெண்ட் எல்லாம் என் பர்வீயூலேயே இல்லை!

லெட் அஸ் லிவ் டுகெதர்!

ஆனால், நான் உனக்கு சலிச்சுப்போய்ட்டா?

நீ என்ன பண்டமா சலிச்சுப்போக? பீ குட் ஃப்ரெண்ட் கீது! நம்ம ஒருத்தர் எல்லையை ஒருத்தர் மீறாம சந்தோஷமா இருப்போம்!

பட் ஒன் திங் கேன் அஸ்யூர் யூ!

ஃபிஸிக்கலா, மெண்டலா நான் உனக்கு துரோகம் பண்ணமாட்டேன்! தோ இட் ஈஸ் நாட் லீகல் கமிட்மெண்ட், வில் நெவர் பெட்ராய் யூ!

உன்னோட இருக்கும் வரைக்கும் நான் வேறு துணை தேடமாட்டேன்! அந்த அஸ்யூரன்ஸ் மட்டும்தான் என்னால் கொடுக்கமுடியும்! மோர் ஓவர் ஐயம் நாட் ஸ்டார்விங் ஃபார் செக்ஸ்.

அதில் மட்டுமல்ல, எல்லாத்துலயும் எனக்கு ஒரு நல்ல கம்பேனியனா நீ இருக்கமுடியும்ன்னு நான் நம்பறேன்!

யாரு கண்டா, அப்படியே நாம் காலம் முழுக்க இருந்துடுவோமோ என்னவோ?

 ரவி, யூ ஆர் ஸச் மான்ஸ்டர்! உன்னை என்னால விட முடியல! அக்ரீ டு திஸ் அரேஞ்மெண்ட். ஆனா நீ எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும்.

சொல்லு கீது!

நீ ஒரே ஒருதடவை என் அம்மாவை வந்து பார்க்கணும்! அவ கொஞ்சம் அழுது புலம்பறா! நீ வந்து கன்வின்சிங்கா பேசினா அவ கொஞ்சம் சமாதானம் ஆவா!

ஸ்யூர் கீது! ஆனா, ரொம்ப ட்ராமா ஆகாம பார்த்துக்கறது உன் பொறுப்பு! ஃபிக்ஸ் தி ஸன்டே.

லன்ச் ஆன்?

ஸ்யூட்ஸ் மீ!

அப்புறம் கீது, எனக்கு உன்னோட பாஸ்ட் எல்லாம் கவலையே இல்லை! ஆனால், இருக்கும்வரைக்கும் அந்த உறவில் ஹானஸ்டி இருக்கனும்ன்னு நான் விரும்பறேன்! ஒருவேளை, உன் பாஷைல நான் உனக்கு சலிச்சுப்போய்ட்டா, யூ ஆர் அட் லிபர்டி டு டெல் மீ அண்ட் வேனிஷ்!

ரவி, ப்ளீஸ், ஆரம்பிக்கறப்போவே முடிவைப்பத்தி பேசி பயமுறுத்த வேண்டாமே!

ஓகே! என் பாஸ்ட்ல சொல்லிக்க ஏதுமில்லை! அப்பா அம்மா யாருன்னே தெரியாத கடவுளின் குழந்தை - அப்படித்தான் அந்த ஹோம் இன்சார்ஜ் எங்க எல்லோரையும் சொல்லுவார்!

என் அம்மா ஜீனோ, அப்பா ஜீனோ, நான் நல்லா படிச்சு இந்த நிலைக்கு வந்துட்டேன்! மாசம் என்னாலானது அந்த ஹோமுக்கு! அது ஒரு வளர்த்த கடன் மாதிரி!

மத்தபடி பெரிசா எந்த ஹேபிட்டும் இல்லை! அதெல்லாம் எனக்கு லக்ஸூரி!

அதனாலேயே ஏதும் பழக வழியில்லை!

அண்ட், இஃப் யூ ஆர் இன்டெரெஸ்ட்டட் இன் நோயிங், உங்க வார்த்தைல ஐயம் ஸ்டில் வெர்ஜின்! என்னோட அறுவை எந்தப் பெண்ணுக்கும் பிடிக்கல எனக்கும் அந்த ஜெண்டரோட டிராமா ஒத்துக்கல. நீ மட்டும் கொஞ்சம் ஸ்பெஷலா இருந்ததால, இதோ இப்போகூட நீ ரெடின்னு வந்து நின்னு என்னைக் கொஞ்சம் ஆச்சர்யப் படுத்தறதால, ஐம் இம்ப்ரெஸ்ட்!

வேற ஏதாவது சொல்லணுமா?

எஸ் ரவி, நீ கேட்கலைன்னாலும் நான் சொல்லியாகணும் - ஐம் நாட் வெர்ஜின்! லெய்ட் வித் மை ஃப்ரெண்ட் ஆன் ஃப்யூ அக்கேசன்ஸ் ட்யூரிங் காலேஜ் டேஸ்.

கீது, எனக்கு இந்த வர்ஜினிட்டின்ற வார்த்தையே குப்பை அண்ட் அது உடம்பு சம்பந்தப்பட்ட விஷயம்ன்னு நான் நம்பலை.

மனசு - அதுதான் சுத்தமா இருக்கணும்ன்னு நான் நம்பறேன்!

எய்தர் ஆஃப் அஸ் ஷுட் பீ சின்சியர் வைல் லிவிங் டுகெதர்! அவ்வளவே!

ஓகே! ஐம் டன்! கேட்ச் யூ ஆன் சண்டே!

ஓகே. ரவி. வில் பிக் யூ அப் அரௌண்ட் எலெவன்!

ஞாயிறு போய் கொஞ்ச நேரம் அரட்டை, லன்ச், அப்புறம்தான் இந்தப்பேச்சு ஆரம்பிச்சுது! நினைத்த மாதிரி கீதா அம்மா பெருசா கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணல! நிறைய கேள்வி கேட்டாங்க, சரி நான் கீதா கிட்ட சொல்றேன்!

மறுநாள் காலைலயே கீதா சொல்லிட்டா,

நானே எதிர்பார்க்கல, அம்மா ஓகே சொல்லிட்டாங்க! எப்படியோ அவங்களுக்கு உன்னை ரொம்ப பிடிச்சுப்போச்சு!

வாவ்! ஷீ லுக்ஸ் யங்கர் தேன் யூ! எனக்கு அவங்க வில் பீ பெட்டர் டு யூ!

ஒதைபடுவே நாயே! ரூமை ரெடி பண்ணிவை. நான் புதன்கிழமை வர்றேன்!

புதன்கிழமை படுக்கப் போகுமுன்பே தெளிவா சொல்லிட்டான் ரவி.

கீது,ஐம் நாட் இன்க்லைன்ட் டு ஹேவ் பேபி! அது ஒரு அன்வாண்டட் கமிட்மெண்ட். மேலும், நாளைக்கு நமக்குள்ள ஒத்துப்போகலைன்னா தட் வில் லீட் டு அன்னெசசரி லீகல் டேங்கில்ஸ். திங்க் தி சிட்டி ஹாஸ் இனாஃப் சில்ட்ரன்!

ஆறு மாசம் நல்லாத்தான் போச்சு! தேன் தடவிய வாழ்க்கை! ஒரு நாள் கீதா அம்மாவைப் பார்த்துட்டு வர்றேன்ன்னு சொல்லிட்டுப் போனபோது கொஞ்சம் ஏக்கமாகவே உணர்ந்தான் ரவி!

ரவியோட புக் ஸெல்ஃப்பை கீதா நோண்டுவதும், முகம் சுளிக்காமல் ரவி டீவி பார்ப்பதும்கூட சகஜமாச்சு!

சொல்லிக்கொள்ளும்படி ரெண்டுபேருக்கும் ஒரு சின்ன உரசல்கூட வரல!

ஆனாலும் கீதாவுக்கு ஏதோ ஒன்று குறைவதுபோல் தோன்றிக்கொண்டே இருந்தது!

அந்த ஞாயிற்றுக்கிழமை

"ரவி, நீட் டு டாக் டு யூ!"

இரவு மொட்டை மாடியில் உட்கார்ந்ததும் ரவி கேட்டான் சொல்லு கீது! எனிதிங் பாதர்ஸ் யூ?

ராஸ்கல்! இந்த அக்கறையிலதான் என்னை விழவெச்சே! செல்லமாய் கிள்ளின கீதா,

ரவி, இண்டெண்ட் டு ஸ்டாப் மை பில்ஸ்.

என்ன சொல்ல வர்றே கீது? குழந்தை வேண்டாம்ன்னு சொல்லித்தானே நாம் இந்த வாழ்க்கையையே ஆரம்பித்தோம்?

திடீர்ன்னு ஏன் காம்ப்ளிகேட் பண்றே?

ரவி, எனக்கு ஒரு குழந்தை வேணும்! இந்த வறட்டு வாழ்க்கை எனக்கு அலுக்க ஆரம்பிச்சுடுமோன்னு பயமா இருக்கு! என்னால உன்னையும் விடமுடியாது, ஆயுளுக்கும்!

உனக்கு இன்ட்ரெஸ்ட் இல்லைன்னா நான் உன்னை வற்புறுத்த மாட்டேன்! ஆனா, லெட் இட் பீ மை பேபி அண்ட் நாட் அவர்ஸ்.

கீது, இந்தக் குழந்தை அது இதுன்னு செண்டிமெண்டலிசம்லாம் வேண்டாமே ப்ளீஸ்! நீங்க புனிதமாக்கற  அளவுக்கு அது ஒன்னும் அவ்வளவு பெரிய விஷயம் இல்லை! இட் இஸ் ப்ராடக்ட் ஆன் ஹாவிங் செக்ஸ். தேவையில்லாம ஒன்னைப் பெத்து, நாளைக்கு அதை குப்பைல வீசிட்டுப் போகவேண்டாமே எங்க அம்மா செஞ்சமாதிரி!

எல்லோரும் அப்படி வீசிட்டுப் போறதில்லை ரவி!

லுக் கீது, வீ ஆர் ஜஸ்ட்   லிவிங் டுகெதர். இந்த இடத்தில் அது ஒரு வேண்டாத கமிட்மெண்ட்.

ரவி, நீதானே சொன்னே அது ஒரு ப்ராடக்ட்ன்னு! அந்த ப்ராடக்ட் இல்லாத ப்ராசஸ் வேஸ்ட்தானே பை லாஜிக்! அண்ட் வாண்ட் டு கேரி சைல்ட்! அது எந்த வகையிலயும் உன்னை பாதிக்காம நான் பார்த்துக்கறேன்! ப்ளீஸ்!

இந்த நாட்கள்ல உனக்கு என்னைப் புரிந்திருக்கும்ன்னு நினைக்கிறேன்! நான் எந்தக் காலத்திலும் எதுவும் காம்ப்ளிகேட் பண்ண மாட்டேன்!

வேணும்ன்னா லீகலா ஒரு ஒப்பந்தம் போட்டுக்கலாம்!

ஃபார் ஃபர்ஸ்ட் டைம் எனக்கு நான் தப்பான டெசிஷன் எடுத்துட்டேனோன்னு பயம் வருது கீது! நீயும் எல்லோர் மாதிரி பேச ஆரம்பிச்சுட்டே! எனி வே, கிவ் மீ சம் டைம் கீது! லெட் மீ திங்க்!

சரியா ஒருவாரம்! அடுத்த சனி மாலை, ரவி ஒரு டைப் செய்த பத்திரத்தை அவள் கையில் கொடுத்தான்!

படிச்சுப்பாரு கீது! இது உனக்கு ஓகேன்னா, கையெழுத்து போட்டுக்கொடு! ரெண்டு காப்பி இருக்கு - ஆளுக்கு ஒன்னு! தென் யூ கேன் ஹேவ் பேபி - இஃப் யூ ஆர் லக்கி!

சாரி கீது. எனக்கு கொஞ்சம் செக்யூர்டா லீகலா இதை எழுதிக்கறது பெட்டர்ன்னு பட்டுது!

எனக்கு இந்தக் குழந்தை மேட்டர் கொஞ்சம் அப்சர்டா படுது! ஆனாலும், உனக்காக இந்த இடைஞ்சலுக்கு நான் ஒத்துக்கறேன்! ஆனா, நான் இதில் துளிகூட இன்வால்வ் ஆக மாட்டேன்! இட் இஸ் யுவர் விஷ் அண்ட் யுவர் சைல்ட்! தட் இஸ் இட்! ஓகே?

தேங்க்ஸ் ரவி!

படிச்சே பார்க்காமல் கையெழுத்துப் போட்டாள் கீதா!

ரவி, ட்ரஸ்ட் யூ தேன் தீஸ் பேப்பர்ஸ்.

அவன் கண்ணெதிரிலேயே மாத்திரைக் குப்பியை டஸ்ட் பின்னில் தூக்கிபோட்ட கீதாவின் முகத்தில் ஒரு வெறுமையான புன்னகை!

சரியாக இரண்டாவது மாசமே நாட்கள் தள்ளிப்போக, பக்கத்து கிளீனிக் லேடி டாக்டர், கங்கிராட்ஸ் மிஸ்டர் ரவி, உங்க வைஃப் ப்ரக்னன்ட்டா இருக்காங்க!

சாரி டாக்டர் - ஷீ இஸ் நாட் மை வைஃப், வீ ஆர் ஜஸ்ட் லிவிங் டுகெதர்!

!

அதற்கப்புறம் அந்த டாக்டர் எதுவும் பேசவில்லை!

கீதா, தானே போய் பக்கத்து நர்ஸிங்ஹோமில் ரெஜிஸ்டர் பண்ணிட்டு வந்தா!

மாதாமாதம் செக்அப்புக்கு போகும்போதும் ரவியைக் கூப்பிடவோ, அவனிடம் பணம் ஏதும் கேட்கவோ இல்லை!

மூணாவது மாசம் வாய் ஓயாமல் வாந்தி எடுத்துக்கொண்டிருந்தவளை பரிதாபமும் எரிச்சலும் கலந்தே பார்த்தான் ரவி! சோர்ந்துபோய் படுத்திருந்தவகிட்டே வாஞ்சையோடு சொன்னான்! இதெல்லாம் தேவையா கீது? இப்போகூட லேட் இல்லைன்னு நெனைக்கிறேன்! பேசாம அபார்ட் பண்ணிட்டு  நிம்மதியா இரு!

உனக்கு கொஞ்சம்கூட இது நம்ம கொழந்தைன்னு தோணவே இல்லையா ரவி!

நோ வே கீது! எனக்கு அப்படி ஏதும் அஃபினிட்டி வரும்ன்னு நினைச்சேன்னா, பிட்டி யூ!

கொஞ்சம் கொஞ்சமா அவள் வயிறு பெருப்பதை, தள்ளாடித் தள்ளாடி அவள் சிரமப்பட்டு நடப்பதை பரிதாபத்தோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரவி! அத்தனை சிரமத்திலும் அவன் தேவைகள் எதையுமே நிராகரிக்கவில்லை அவள்!

ஆறாவது மாசம், ஒரு நள்ளிரவு, தளர்ந்துபோய் இருவரும் படுத்திருந்தபோது,  திடீர்ன்னு கத்தினாள்!

ரவி, பாப்பா உதைக்கிது!  சொல்லிக்கிட்டே அவன் கையை இழுத்து அடிவயிற்றில் வைத்துக்கொண்டாள்!

கொஞ்சநேரம் காத்திருந்து அந்த சலனத்தை உணர்ந்தான் ரவி! உள்ளங்கையில் யாரோ  தட்டியதைப்போல அவள் வயிற்றுக்குள் இருந்து ஒரு சலனம்!

பார்த்தியா, பார்த்தியா ரவி?

கொஞ்சம் அவள்  குதூகலம் அவனுக்கும் ஒட்டிக்கொண்டதுபோல் சின்னப் புன்னகை செய்ய ஆரம்பித்தபோது கீதா அவசரப்பட்டுவிட்டாள்!

டாய், அப்பாவை உதைக்கக் கூடாது!

சட்டென கையை விலக்கிக்கொண்டு எழுந்து போய்விட்டான் ரவி!

ஒருமணி நேரம் பால்கனில நின்னுக்கிட்டு இருந்தவன், வந்து படுத்தபோது ஏனோ மறுபடி அவள் அடிவயிற்றில் கைவைத்துப் பார்க்கவேண்டும் என்று தோன்றியது!

ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்த கீதாவை தொந்தரவு செய்யாமல் கையை எதேட்சையாக போடுவதுபோல வைத்தான்! காத்திருந்ததுபோல் ரெண்டு உதை! ஏனோ, தூங்கும்வரை கையை எடுக்கத் தோன்றவில்லை ரவிக்கு!

காலைல எழுந்ததும் காஃபியை கையில் கொடுத்த கீதா,

சாரி ரவி, நான் அப்படி சைல்டிஷ் நடந்திருக்கக் கூடாது! இனி அப்படி ஏதும் செய்யமாட்டேன்!

அடுத்தமாசம் அவள் செக் அப்புக்கு கிளம்பியபோது, ரவிதான் மனசு கேட்காமல் சொன்னான் - நானும் வரட்டுமா கீது!

டோண்ட் பாதர் யுவர்செல்ப் ரவி! நான் தேவைப்பட்டால் சொல்றேன்!

ஏழாவது மாதம் மெதுவாகக் கேட்டாள் " ரவி, நாம ஒரு மெய்ட் வெச்சுக்கலாமா?"

இதைக் கேட்கணுமா கீது? அடிபட்டவன் போல் கேட்டான் ரவி!

நாளாக நாளாக கீதாவின் அழகும் வயிறும் கூடிக்கொண்டே போனது!

துடைத்து வெச்ச குத்துவிளக்கு மாதிரி மின்னியவளைப் பார்த்து நம்ப முடியாமல் கேட்டான்

என்னடி இப்படி அழகாகிட்டே போறே?”

அது தாய்மை நான்சென்ஸ் ரவி, உனக்குப் புரியாது - புன்னகை மாறாமல் சொன்னாள் கீதா!

அடுத்த மாசம் மெதுவாக ஆரம்பித்தாள்

"ரவி, ஸாரி டு சே திஸ், வரவர எனக்கு முடியல! டோண்ட் திங்க் தட் குட் கேட்டர் யூ இன் தி பெட் ஃபார் ஃப்யூ மந்த்ஸ்!"

கீது, ஆர் யூ டேக்கிங் எனி ரிவென்ஜ்? ரொம்ப சீப்பா பேசாத ப்ளீஸ்!

அடுத்த மாதம் செக்கப்புக்கு வற்புறுத்தி தானும் கூடப்போனான் ரவி!

அந்த டாக்டர் ஆச்சர்யமாகப் பார்த்தார் - யங் மேன்! இப்போதான் உனக்கு வரத் தோணுச்சா!

எனக்கென்னவோ ஷீ வில் ஹாவ் நார்மல் டெலிவரின்னுதான் படுது! மே பீ ஸ்மால் இன்சிஷன்!

வாட்ச் ஹெர் கேர்ஃபுல்லி ஃபார் தி நெக்ஸ்ட் டூ மந்த்ஸ்!

வலி ஏதும் வந்தால், உடனே கூட்டி வந்துடு!

அப்புறம், டூ யூ வாண்ட் டு பீ வித் ஹர் ட்யூரிங் டெலிவரி?

நோ டாக்டர் என்று ஏதோ சொல்லவந்த கீதாவை கையமர்த்திவிட்டு சொன்னான்!

எஸ் டாக்டர் வுட் லவ் டு பீ!

ஆச்சர்யமாகப் பார்த்த கீதா முகத்தில் ஒரு புன்னகை! அன்றிரவு அவனைவிட்டு ஒரு இன்ச் நகரவில்லை!

ஜனவரி 29. திடீரென்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு சுருண்டு படுத்தாள் கீதா!

அவசர அவசரமாக இஸபெல்லா!

ரவி, லெட் மீ புட் ஹெர் சலைன். பெயின் இன்க்ரீஸ் ஆனா தியேட்டருக்கு கொண்டுபோய்டலாம். டோண்ட் ஒரி!

சொன்ன டாக்டரை கலக்கத்தோடு பார்த்தான் ரவி!

ரொம்ப வலிக்குதுன்றா டாக்டர்!

நான் பார்த்துக்கறேன்! புன்னகையோடு சொன்னார் டாக்டர்.

அடுத்த இரண்டு மணி நேரத்தில் தியேட்டருக்கு மாற்றப்பட்டபோது கீதா டாக்டர் கையை இறுக பற்றிக்கொண்டு சொன்னாள்!

டாக்டர், டோண்ட் செடேட் மீ ப்ளீஸ்!  வாண்ட் டு ஃபீல் மை சைல்ட்'ஸ் பர்த்!

புன்னகையோடு தலையசைத்த டாக்டர், ரவியிடம் சொன்னார், கம் ரவி, ஜாயின் வித் அஸ்!

கொஞ்சம் பதற்றத்தோடு பின்தொடர்ந்தான் ரவி!

பொசிஷன் பண்ணி, காலகட்டிப் படுக்கவைத்து டாக்டர் கீதாவின் வயிற்றை நீவிவிட, கத்தஆரம்பித்தாள்!

பத்து நிமிடம் முயற்சி, கதறலுக்குப்பின் மெதுவாக, அது என்ன, தலையா? கைகாலெல்லாம் உதற, விழி நகர்த்தாமல் பார்த்துக்கொண்டு நின்றான் ரவி!

சட்டென்று சின்ன பிளேடு மாதிரி இருந்த கத்தியை கையில் எடுத்த டாக்டர், சின்னதாய் கிழித்துவிட, சிதறிய ரத்தம், கீதாவின் அலறல், இவற்றுக்கிடையே, மந்திரம் போல் வெளியே வந்தது அந்தப் பிஞ்சு!

உச்சகட்டமாக அலறி, தளர்ந்தாள் கீதா!

தொப்புள்கொடியை லாவகமாக அறுத்து, நிணமும், நீரும் சொட்டச் சொட்ட குழந்தையை ரவி கையில் வைத்தார் டாக்டர்!

டேக் யுவர் டாட்டர் ரவி!

உதறும் கைகளில் கிடந்த குழந்தையை இமைக்காமல் பார்த்த ரவி, மெல்ல நகர்ந்து கீதா நெற்றியில் மெல்ல முத்தமிட்டுச் சொன்னான்

தேங்க்ஸ் கீது!

கண்ணகல அவனைப்பார்த்த கீதா மெலிதாகப் புன்னகைத்தாள்!

அப்படியே, அங்கேயே மடங்கி மண்டியிட்ட ரவி கேட்டான்

"வில் யூ  மேரி மீ கீது?"