பத்து நாளாகவே வயித்தெரிச்சலோடு சுத்திக்கிட்டிருக்கேன்!
பக்கத்து வீட்டுக்காரன் பெண்டாட்டி ஊமையாய் போனால்கூட இவ்வளவு எரியாது!
இங்கேயாவது கொஞ்சம் புலம்பிக்கறேன்!
11.4.2021. எல்லா ஞாயிறு போலவும்தான் விடிந்தது அந்த நாளும்!
வழக்கம்போல் நாலரை மணிக்கு எழுந்து - (இந்த ஆளுக்கு நாள் கிழமை ஒன்னும் கிடையாது. ஞாயித்துக்கிழமைதானே, கொஞ்ச நேரம் தூங்கலாம்ல! சாமக்கோடங்கியாட்டம் ஏந்திருச்சு என்னதான் பண்ணுவாரோ! - போர்வைக்குள்ளிருந்து அசரீரி).
காலைக்கடன்லாம் ( இதை ஏன் கடன்னு சொல்றாங்க?) முடிச்சுட்டு, நம்மகிட்ட வசமா சிக்கியிருக்கும் சில அப்பாவிகளுக்கு மொக்கை தத்துவமும், குட் மார்னிங் போஸ்ட்டும் அனுப்பிட்டு, பாலையும், ஃபில்டரையும் அடுப்பில் வைக்கற வரைக்கும், அடுத்து நடக்கப்போறதுக்கு எந்த அறிகுறியும் தெரியல! டம்ளர்ல டிகாக்ஸன் ஊத்திட்டு, பாலை எடுக்கும்போது எப்படி நழுவுச்சுன்னு தெரியல!
அத்தனை எரிச்சலிலும், பாத்திரத்தை தவறவிட்டால், காஃபிக்கு சங்குதான்டின்னு மனசு சொல்ல, கை நடுங்க, பத்திரமா பால் பாத்திரத்தை வைச்சுட்டு பனியனை விலக்குறதுக்குள்ள, வயிற்றில் ஒரு கையகலம் கமலஹாசன் மாதிரி செக்கச்செவேல்ன்னு கலராய்ட்டேன்!
மாமனார் உபதேசம் பண்ணும்போது எரியுமே அதுமாதிரி நூறு மடங்கு எரியுது வயிறு!
கையை வெச்சு தேய்க்கத் தேய்க்க தோல் உறிஞ்சுக்கிட்டே போகுது பிராய்லர் கோழி மாதிரி! இன்ஸ்டன்ட் காதல் மாதிரி தீயா வளர்ந்துக்கிட்டே போகுது கலர்ஏரியா!
ஒரே ஒரு நிமிஷம், மொத்தமா தேய்ச்சு எடுத்துட்டா, தமன்னா மாதிரி கலர் ஆய்டலாம்ன்னு தோணுச்சு!
கொஞ்சம் ரிஸ்க் ஃபேக்டர் ஜாஸ்தின்றதுனால, பைப்பைத் திறந்து தண்ணியைப் பிடிச்சு குடம் குடமா ஊத்தி கொஞ்சம் நெருப்பை அணைச்சு ஆறவெச்சிட்டு,
கேமரா ஏங்கிள் எல்லாம் ப்ராப்பரா செட் பண்ணி, ஒரு ஃபோட்டோ எடுத்து மச்சனனுக்கு ( டாக்டர்) வாட்ஸாப் பண்ணிட்டு, கொஞ்சம் தேங்காய் எண்ணெய் ( சித்திரை தேங்காய் எண்ணெய்- தீக்காயத்துக்கு மிகச் சிறந்த நிவாரணி, டொய்ங், டொய்ங்டொடய்ங்... ன்னு விளம்பரம் நேரங்காலம் தெரியாம மனசுக்குள்ள ஓடுது) தடவிட்டு
கால் வர்ற கேப்ல கூகுள்ல பார்த்தா, தேங்காயெண்ணை தடவாதேன்னு கூகுளாண்டவர் உபதேசம்! காற்றோட்டத்தை அடைக்கும் அது இதுன்னு ஒரே காரணமா அடுக்கிவெச்சிருக்கு வேற!,
அவசரம் அவசரமா பதறிப்போய் அதைக் கழுவ, மச்சினன் கால்
-“ மாமா, மொதல்ல கொஞ்சம் தேங்காயெண்ணெய் தடவுங்க! அதுதான் நல்ல மருந்து!”
அடப்பாவி கூகுள்!! உன்னை நான் என்னடா பண்ணுனேன்?
அன்னைக்கு இப்படித்தான் பாண்டிச்சேரில வழி காட்றேன்னு கூட்டிட்டுப்போய், சுடுகாட்ல நிறுத்தி, " யூ ஹவ் ரீச்ட் யுவர் டெஸ்டினேஷன்"னு சொன்னே, இன்னைக்கு இது!
மாத்திரை லிஸ்ட் அனுப்பறேன், கடை திறந்ததும் வாங்கி சாப்பிடுங்கன்னு மச்சினன் கடமையை ஆத்திட்டு, வேலையைப் பார்க்கப் போயிட்டாப்ல!
காஃபி ஃபோட்டோ போட்டு ட்விட்டர் கடமையை ஆத்திட்டு,
(டைம் ஆய்டுச்சுன்னா டாக்டரும், பீட்டரும் வேற கெட்டவார்த்தைல திட்டுவாங்க) வயித்துல துணி படாம சிலுக்கு சுமிதா மாதிரி டீஷர்ட்டை முடிச்சு போட்டுக்கிட்டு ஃபேனை 250ல வச்சுட்டு டெலிவரி ஆன பசுமாடு மாதிரி களைச்சுப்போய் உட்கார்ந்துக்கிட்டிருக்கேன்!
படியிறங்கிவந்த மறுபாதி, “என்ன மாம்ஸ், காலங்கார்த்தால யாருக்கு ஷோ காமிச்சுட்டிருக்கீங்க?”
மொத்தக்கதையும் கேட்டுட்டு,
“இந்த ஓரத்தில் இன்னும் கொஞ்சம் உரிச்சு விட்டிருக்கலாம், ஷேப் நீட்டா இல்லை!”
மனைவி அமைவதெல்லாம் பாலச்சந்தர் கொடுத்த வரம்!
அடுத்து வந்தது அஜாத சத்ரு!
ஏப்பா ஸ்ரீப்ரியா காலத்து தமிழ்ப்பட ஹீரோயின் மாதிரி அசிங்கமா ப்ளவ்ஸ் போட்டுக்கிட்டே? முடிச்சை அவிழ்த்துவிடு - சகிக்கல!
போடா, இப்போதான் மாம்ஸ் செக்ஸியா இருக்காரு - கிச்சனிலிருந்து எசப்பாட்டு!
ஏப்பா, கொஞ்சூண்டு டிகாக்ஷன் சேர்த்து அந்தப் பாலை வாய்வழியாவே குடிச்சிருக்கலாமே, எதுக்கு டைரெக்ட்டா வயத்துல.. அப்படி என்ன அவசர பசி?
பூர்வஜென்ம வினை!
இதுக்கு நடுவுல, தோல் உறிஞ்ச இடம் போக பக்கத்தில் இன்னொரு கை அகலத்துக்கு குட்டி குட்டி பலூன் முளைக்குது! கண்ணை மூடித் தொறக்கறதுக்குள்ள கண்டைனர் லாரி வச்சு ப்ரோக்ராம் பண்ணுன மாதிரி சடசடன்னு பத்து பபுள்க்கு மேல வந்துடுச்சு!
“அப்பா வயத்துல சிக்ஸ்ட்டீன் பேக்ஸ் பாரும்மா!”
அண்ணன்கிட்ட அம்மணி கன்சல்டேஷன்!
“அவரு வழக்கமா பபுள் பேக் உடைச்சு விளையாடுற மாதிரி பண்ணிடப்போறாரு, பார்த்துக்க!”
பத்தவைக்க பத்து வருசமா காத்திருந்தார் போல மச்சினர்!
எப்போடா கடை திறப்பாங்கனு காத்திருந்து அரைடஜன் மாத்திரை வாங்கி அங்கேயே விழுங்கி, அரை லிட்டர் தேங்காயெண்ணெய் பூசிக்கிட்டு ரெண்டுநாள் ஓட்டியாச்சு! எரிச்சலா, வலியான்னு தெரியாத ஒரு ஃபீலிங் நாள் முழுக்க!
மாத்திரையும் தேங்காயெண்ணையும் தீர்ந்துச்சே ஒழிய, காயம் கொஞ்சம் கூட ஆறலை!
நாலாவது நாள்,
என்னங்க இது சீழ் பிடிச்ச மாதிரி இருக்கு, எனக்கு இப்படித்தான் கால்ல ஆகி, அழுகிப்போச்சு, அப்புறம் ஆபரேஷன் பண்ணித்தானே சரி பண்ணுனாங்க! உங்களுக்கு வயித்துல வேற! கல்லீரல், குடலெல்லாம் இன்ஃபெக்ட் ஆய்டப்போகுது!
கொஞ்சம் எதிர்பார்ப்போட சொல்ற மாதிரி பட்டுச்சோ? அப்படி ஒன்னும் ஹெவியா இன்ஸ்யூரன்ஸ் கூட இல்லையே?
- நல்வார்த்தை சொல்லவே தேடிப்போய் கூட்டிட்டு வந்திருக்கேன்!
மச்சனன் அட்வைஸ் படி, லோக்கல் டாக்டரை பார்க்க,
"நல்லவேளை, இன்னைக்கு வந்தீங்க, இனொரு நாலு நாள் கழிச்சு வந்திருந்தா சிசேரியன்தான்!"
அப்புறம் என்ன, தினம் ஒரு ஊசி, (கொஞ்சம் சின்ன வயசு நர்ஸ் இல்லையா டாக்டர்? சிஸ்டராம்ல, க்ராண்ட்மா மாதிரி இருக்கு), தினசரி அறுபது வேளைக்கு மாத்திரை,
இப்போதான் கொஞ்சம் மேல துணி போட ஒத்துக்கிச்சு வயிறு!
இதிலேயே, பொள்ளாச்சிவரைக்கும் ஸெல்ஃப் ட்ரைவிங்க்ல அலைஞ்சுட்டு வந்தாச்சு - ஆபீஸ் ஆணிகள்!
(ஏன் சார், புள்ளத்தாச்சி மாதிரி வயத்துத் துணியை தூக்கிப் பிடுச்சுட்டிருக்கீங்க, வயத்துப்பிள்ளை உதைக்குதா?)
- விதைச்சதெல்லாம் இப்படி மொத்தமா திரும்ப முளைக்குது!
மே ரெண்டாம் தேதிக்கு வெய்ட் பண்ற அரசியல்வாதி மாதிரி, லிட்டரலாவே வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டு காத்திருக்கேன் காயம் ஆற!
ஆகவே,
சான்றோர்களே, கமலஹாசன் மாதிரி கலர் ஆக இது ஒன்னும் அவ்வளவு சிறப்பான ஷார்ட்கட் அல்ல என்பதை தெரிவித்துக்கொண்டு….
LuckyClub Casino | Play at Online Casinos UK | LuckyClub
பதிலளிநீக்குLuckyClub Casino UK is a luckyclub licensed online casino that has a huge number of online casinos and bonuses to attract new players. This casino can be found at many of