வெள்ளி, 15 ஏப்ரல், 2022

இளையராஜா மீது வாரியிறைத்த வன்மச் சேறு!

இளையராஜா மீதான விமர்சனங்கள்!

இளையராஜா மோடியை அம்பேத்காரோடு ஒப்பிட்டு எழுதிவிட்டாராம்!

காலையிலிருந்து வன்மத்தை வாரியிறைத்து அரிப்பை சொறிந்துகொண்டிருக்கின்றன விஷ ஜந்துக்கள்!

அவர் அவ்வாறு எழுதியதற்கான கற்பிதக் காரணங்கள்தான் இவர்களின் தரத்தைச் சொல்லும் விஷயம்!

இன்கம்டாக்ஸ் ரைடிலிருந்து தப்பிப்பதற்காக, பத்மஶ்ரீ அவார்ட் வாங்குவதற்காக, கவர்னர் பதவி கிடைக்கும் என்பதற்காக!

இவர்கள் எந்த நோக்கத்துக்காக மற்றவர்கள் காலைக் கழுவிக் குடிப்பார்களோ, அதையெல்லாம் அவர் நோக்கமாக சித்தரித்து தங்கள் தரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது மூடர் கூட்டம்!

தேர்தல் தோறும் கூட்டணி மாறுவதும், பதவிப் பிச்சைக்காகவும் பசையான இலாகாக்களுக்காகவும் காவடி தூக்குவது கேவலமான அரசியல்வியாதிகளின் தொழில்!

இசைராஜன் கொஞ்சம் பல்லிளித்துக் குழைந்திருந்தால் அடைந்திருக்கக்கூடிய வசதிகள் என்ன என்பது எல்லோருக்குமே தெரியும்!

சிங்கம் நாய்களைப்போல் ஆதாயத்துக்கு வாலாட்டாது!

இப்போதே அது பத்மவிபூஷன் - பாரத ரத்னா மட்டுமே பாக்கியிருக்கும் அடுத்த படி!

தகுதியேயற்ற சிலருக்குக் கொடுக்கப்பட்டு ஏற்கனவே ஒளியிழந்துபோன பாரத ரத்னா வழங்கப்பட்டால் பெருமை இசைராஜனுக்கல்ல - அரசியல் காரணங்களால் விநியோகிக்கப்பட்டு, களங்கப்பட்ட அந்த விருதுக்குத்தான்!

அவர் தானாகப்போய் மோடியைப் பாராட்டி பரிசில் வாங்கி கல்யாண மண்டபம் கட்டவில்லை!

Ambedkar and Modi - Reformer’s ideas, Performer’s implementation என்ற புத்தகத்துக்கு முன்னுரை எழுத ஒப்புக்கொண்டபோது, தானாகவோ, இன்னொருவர் எழுதிக்கொடுத்தோ இதை சொல்லியிருக்கிறார்!

இந்தப் புத்தகத்துக்கு முன்னுரை எழுத நேர்ந்திருந்தால், வங்கத்துச் சிங்கமோ, அன்னையோ, ஏன், தமிழக முதல்வராகவே இருந்தாலும், இருவரையும் ஒப்பிட்டே எழுத நேர்ந்திருக்கும்! அது அவை நாகரீகம்!

டிஆர் பாலு கிடைக்கும் சந்தர்ப்பத்திலெல்லாம் நாடாளுமன்றத்தில் மத்திய அரசை குளிர்வித்துப் பேசுவது அவைக் குறிப்பிலும் இருக்கிறது, ஊடகங்களிலும் வந்திருக்கிறது! உங்கள் பாஷைப்படி, அந்த சங்கி, தனக்காகவோ, தன் தலைமைக்காகவோ, நீங்கள் சொன்ன அந்தக் காரணங்களுக்காகத்தான் நாடாளுமன்றத்தில் குழைகிறதா? நீங்கள் குரைக்கும் காரணங்கள் அவருக்கும் பொருந்துமா இல்லை அது மட்டும் அவை நாகரீகம் என்ற பிரிவில் வருமா? சான்றிதழ் வழங்கிகள் என்ன சொல்லப் போகிறார்கள்?

உங்கள் தற்காலிகமான, அடுத்த தேர்தலில் எப்படி மாறும் என்று கணிக்கவே முடியாத, கருத்துக்களுக்கு மாறாக யாருமே பேசக்கூடாது என்று நினைப்பது அருவெறுப்பான மேட்டிமைத்தனம்! அசிங்கமான சர்வாதிகாரம்! மாற்றுக் கருத்தை மதிக்காத இடத்தில் ஜனநாயகம் மூச்சுத் திணறி செத்துப்போகும்!

இன்றைக்கு ராகதேவனின் சாதியை விளித்துப் பேசிய உங்களுக்கு சமூகநீதி, சமத்துவம், சுயமரியாதை என்ற சொற்களை உச்சரிக்கக்கூட அருகதை இல்லை!

எதற்கும் இப்போது வீசும் சேற்றை கொஞ்சம் அள்ளி வைத்துக்கொள்ளுங்கள்- 2024ல் அதையே முகத்தில் பூசிக்கொள்ளவோ, அள்ளித் தின்னவோ நேரக்கூடும்

உங்கள் அரசியல் அசிங்கங்களை, ஆபாச விமர்சனங்களை நீங்கள் ஒருவர் மீது ஒருவர் ஆட்டுக்குட்டி என்றோ அடிமைக்கூட்டம் என்றோ பிணம்தின்னி என்றோ அள்ளி வீசிக்கொள்ளுங்கள், காலம் மாறும்போது கட்டிப்பிடித்து கொஞ்சிக்கொள்ளுங்கள்!

அரசியல் தவிர்த்த ஏனையோரை, அது இளையராஜாவோ, வேறு யாரோ, விமர்சிக்கும்போது, கொள்கை ரீதியாக, கருத்து ரீதியாக விமர்சியுங்கள், உங்களுக்கு ஒரளவேனும் நாகரீகம் என்பது இருந்தால்!

உங்கள் அரசியல் சாக்கடைக்குள் நீங்களே புரண்டு களியுங்கள்! அவர்களை அங்கே இழுக்காதீர்கள், அவர்கள் தரம் வேறு!

இளையராஜாவாவது மயிராவது என்று ஹாஸ்டேக் போட்டு சந்தோஷப்பட்டிருக்கிறீர்கள்!

நல்லது!

மல்லாந்து படுத்து, நிலவைப் பார்த்து காறித் துப்புவதற்கு ஈடானது அது

இளையராஜாவின் கருத்தை நானும் ஆதரிக்கவில்லை, ஆனால் அவரது கருத்து அதுதான் என்பதற்கும் உத்தரவாதமில்லை! ஏனெனில், அது அந்தவிடத்து சொல்லியாகவேண்டிய நாகரீகம் - அவ்வளவே

பிரதமரை வரவேற்க விமானநிலையத்தில் முதல்வர் பூங்கொத்து கொடுப்பதைப்போல!

நன்றி!

செவ்வாய், 12 ஏப்ரல், 2022

நேற்றிரவு நான் பேயைப் பார்த்தேன்..

நேற்றிரவு நடந்ததென்ன….

நேற்று நடு ஜாமத்தில் பால்கனிக் கதவைத் திறந்தபோது அதை/அவரைப் பார்த்தேன்!

ஏறத்தாழ ஒரு மாசமாகவே தூக்கமும் என் மூஞ்சிலயே முழிக்கமாட்டேன்னு போயிடுச்சு! ஒரு வாரம் ஒரு மணிக்கே வாக்கிங் போய்ப்பார்த்தேன்! சி ப்ளாக்ல நாய் குரைக்க ஆரம்பிச்சதும், அலங்கோலமா ஒரு மாமா கதவைத் திறந்துட்டு பக்கத்து வீட்டுக்குள்ள பாஞ்சுட்டாரு. கதவை சார்த்த வந்த அட்டு ஃபிகர் என்னை பாதகான்னு மொறச்சுட்டு கதவை படார்ன்னு மூடும்போதுதான் கவனிச்சேன், பாப்பா முதல்மரியாதை ராதா கெட்அப்ல! யோக்கியனுக்கு இந்நேரத்தில பக்கத்து வீட்ல என்ன வேலைன்னு யோசிக்கும்போதே புரிஞ்சுது, நாளைக்கு வந்தா நாயை அவிழ்த்துவிட்டுடுவாங்கன்னு!

இது ஆகறதில்லை, பேசாம படிக்கலாம்ன்னு ஜெமோவோட புக் ஒன்னை எடுத்துவெச்சு உட்கார்ந்தேன்

வெள்ளத்தணைய மலர் நீட்டம்!

மத்தவங்களுக்கு யானை டாக்டர் கிடைச்சா, நம்ம கைக்கு உச்சவழுதான் கிடைக்குது!

சாரு, திஜாரா, கூடவே சரோஜாதேவியும் கொஞ்சம் கலந்துகட்டி, ஜெமோ அள்ளித் தெளிச்சிருக்காரு! நாலு பக்கம் படிக்கறதுக்குள்ள, சாமியார் என்ன பண்ணினார்ன்னு போய் அந்த முதல்மரியாதை கதவைத் தட்டலாமான்னு தோண ஆரம்பிச்சுடுச்சு! ரைட்டு! மடக் மடக்ன்னு ஒரு பாட்டில் தண்ணியை குடிச்சுட்டு, பொத்திக்கிட்டு படுத்தாச்சு!

இதுவும் சரிப்படாது, பேசாம பால்கனில ராக்கிங் சேர்ல உட்கார்ந்து இருட்டை வேடிக்கை பார்க்கலாம்ன்னா, அந்த சரக் சரக் சத்தம் கேட்டு செக்யூரிட்டிக்கு பேதி புடுங்கிக்கிச்சுன்னு மறுநாள் கம்ப்ளைண்ட்!

எதுக்கும் இருக்கட்டும்ன்னு பால்கனில ஒரு சேரை சாயங்காலமே எடுத்துப்போட்டா,

எதுக்கு அங்கே சேர்?

இல்லை, நைட் தூக்கம் வரலைன்னா உட்கார்ந்துக்கலாமேன்னு..

ஏன், ராப்பிச்சைக்காரன் மாதிரி காலனி முழுக்க சுத்துவீங்களே, அதையே செய்யலாமே, கொழுப்பாச்சும் குறையும்!

நாய் துரத்துது!

வேணும்ன்னா ஒரு குடுகுடுப்பை வாங்கிக்கங்க, நாய் பயந்துக்கும்! இல்லைன்னா, சிட்டி யூனியன் பேங்க் ஏடிஎம் செக்யூரிட்டி செத்துப்போய்ட்டாராம், நைட் ஷிஃப்ட்டுக்கு ஆள் வேணும்ன்னு சொன்னாங்க, போறீங்களா? அங்கே போய் உட்காந்தா, காசாவது கிடைக்கும்!

எல்லாம் நேரம்

பல்லைக் கடிச்சுட்டு பாத்ரூம்க்குள்ள போனதும், நான் சேர் போட்டுவச்ச இடத்திலிருந்து பக்கத்து வீட்டு பெட்ரூம் தெரியுதான்னு செக் பண்ணினதா உளவுப்படை தகவல்!

நேத்து நைட்டும் பதினோரு மணிக்கு வலுக்கட்டாயமா கண்ணை இறுக்க மூடிட்டு படுத்து, எட்டுக்கோடியே எழுபது லட்சம் எண்ணிட்டு டைம் பார்த்தா மணி ஒன்னு! தூக்கம் வர்ற பாட்டைக் காணோம்!

சரி, பால்கனில உட்காரலாம்ன்னு கதவைத்திறந்தால், அதைப் பார்த்தேன்.

அதுவா, அவரா?

கருப்பு பேண்ட், ப்ளூ செக்ட் சர்ட், டக் இன், ஷூ, ஒரு ஆஃபீஸர் தோரணைல என் வீட்டு பால்கனில, அந்நேரத்தில் ராக்கிங் சேர்ல உட்காந்திருக்கார்!

குடல் வாய் வரைக்கும் வந்துடுச்சு! அடிக்க வாகா ஏதாவது கிடைக்குமான்னு தேடிக்கிட்டே, யோவ், யாருய்யா நீ?

ஐயம் சுந்தர வடிவேல்! நைஸ் மீட்டிங் யூ!

வெள்ளைக்காரனுக்கு பொறந்தமாதிரி நுனிநாக்கு ஆங்கிலம்!

எழுந்து நின்னாலும், நெஞ்சு உயரம்கூட வரல

யோவ், இங்க என்ன பண்றே?

உங்களுக்காகத்தான் வெய்ட் பண்றேன்! பைதவே, இந்த ராக்கிங் சேர் என்னால ஏறி உட்காரமுடியாத அளவு உயரமா இருக்கு, கொஞ்சம் உயரம் கம்மியா வாங்கிப்போடுங்க!

யாருங்க நீங்க, இங்கே எப்படி வந்தீங்க?

நான் எங்கே வேணும்னாலும், எப்போ வேணும்னாலும் வரமுடியும்!

ஏன் நீங்க கடவுளா?

காலைல கடவுளைப் பார்த்தேன்னு சொல்லிப் பாரு! உன் பெண்டாட்டி கூட நம்ப மாட்டா!

பேயைப் பார்த்தேன்னு சொல்லு, உலகமே நம்பும்!

யோவ், குடிச்சிருக்கியா? பைப்பைப் பிடிச்சு ஏறி வந்து உட்கார்ந்துட்டு கதை சொல்லிட்டிருக்க?

அதுக்கு என் வீடுதான் கிடைச்சதா?

உன் வீடா? அட முட்டாளே, உன்னுது என்னுதுன்னு ஏதாவது இருக்கா இந்த உலகத்தில்?

நேற்று என்னுடையதாக இருந்தது, இன்று உன்னுடையது, நாளை யாருடையதோ! கீதை படிச்சதில்லையா?

எனக்கிருந்த கொடூர மனநிலையில் ஓங்கி ஒரு அறை விட்டேன்!

அறைந்தேனா என்ன? கை எதிலுமே படாமல் காற்றில் அரைவட்டம் அடித்து ஓய்ந்தது!

ஃபர்ஸ்ட் டைம், முழங்கால் நடுங்க, சேரில் தடுமாறி உட்கார்ந்தேன்!

பேய் வெள்ளைக் கலர்லதானே இருக்கும்? நீங்க எப்படி டிப்டாப்பா இப்படி?

யோவ், நீங்களா சாமி இப்படி இருக்கும், பேய், பூதம் இப்படி இருக்கும்ன்னு கற்பனை பண்ணிக்கிட்டா நான் என்னய்யா பண்ண

யார் நீங்க? உண்மையை சொல்லுங்க!

சொன்னேனே, சுந்தர வடிவேல்!

ஆறு வருஷத்துக்கு முன்னே இதே வீட்ல குடியிருந்தேன்! ஒரு நள்ளிரவில் மூச்சுத் திணறி செத்துப்போனேன்!

ஆஸ்த்மாவா?

யோவ், பொண்டாட்டி கழுத்தை நெரிச்சாலும் மூச்சுத் திணரும்யா!

இந்த லட்சணத்தில பேயா வேற சுத்தறயா நீ?

அதைவிடு, நீ ஏன் தூங்காம இப்படி பேயாட்டம் அலையறே

சும்மா, வயசாச்சே!

மழுப்பாதே! லூசு மாதிரி பிஹேவ் பண்ணி எல்லாத்தையும் தொலைச்சுட்டு நிற்கறது எனக்குத் தெரியும்! இனி ஜென்மத்துக்கு நீ உருப்படப்போறதில்லை! அது எனக்கு வேண்டாத விஷயம்!

ஆனால் தகுதிக்கு மீறி ஆசைப்படறதும், எதையும் இறுக்கிப் பிடிச்சுக்க நினைச்சா இதுதான் நடக்கும்!

உறவுன்றது காத்து மாதிரி! இறுக்கிப் பிடிக்கப் பிடிக்க கைதான் வலிக்கும், காத்து கை நழுவி போய்க்கிட்டே இருக்கும்!

இன்னொரு விஷயம், டோண்ட் புட் ஆல் யுவர் எக்ஸ்  இன் ஒன் பேஸ்கட் ன்றது ஷேர் மார்க்கெட்டுக்கு மாத்திரமில்லை, உறவுக்கும் பொருந்தும்!

இந்த சிங்கிள் ரோஸ் கேன் பி மை கார்டன் பாலிசியை உனக்கு யார் சொல்லித்தந்தது? ஒரு வேளைக்கு ஒருத்தர்தான் ஃப்ரண்ட் - இது என்ன இழவு பாலிசி?

ஐயா பெரிய ஹர்ஷத் மேத்தா மாதிரியும், விவேகானந்தர் மாதிரியும் பேசறீங்களே, உங்க ஒய்ஃப் ஏன் உங்க கழுத்தை நெரிச்சு கொன்னாங்க?

அதான் சொன்னேனே? ஒன் அட் ஒன் டைம் பாலிசி எனக்கு எந்த ரிலேசன்ஷிப்லயும் ஒத்துவராது! அதனால, கிடைச்ச ஸ்பேஸ்ல இன்னும் ரெண்டு பேரை ஸ்க்வீஸ் இன் பண்ணப் பார்த்தேன்!

போட்டுத் தள்ளிட்டா மகராசி!

நித்யானந்தா வேலை செஞ்சு செத்துப் போய்ட்டு ஃபிலாசஃபி வேற பேசறயே வெக்கமா இல்லை?

வாழும்போதே இருந்ததில்லை, இப்போ பேயா அலையும்போது எங்கிருந்து வரும்?

சரி, இப்போ எதுக்கு வந்து என் கழுத்தை அறுக்கறே?

நீ இந்த வீட்டை காலி பண்ணப்போறேன்னு கேள்விப்பட்டேன்!

அடப்பாவி, பேய்ங்ககூட காஸிப் பேசுவீங்களா?

யோவ், நீ உன் புக் செல்ஃப்ல இன்னும் எத்தனை புக் படிக்காம வெச்சிருக்கே, இன்னும் எதெதை யூஸ் பண்ணாம வெச்சிருக்கே, எல்லாம் எனக்குத் தெரியும், சொல்லவா?

மூடிக்கிட்டு வந்த வேலையை மட்டும் சொல்லு!

பேய்கிட்டயே இவ்வளவு தெனாவெட்டா பேசறே, அப்புறம் ஏன்யா இப்படி கழுத்தறுந்த கோழி மாதிரி சுத்தறே?

இதபார், நீ வந்த வேலையை சொல்லு, இல்லைன்னா பொத்திக்கிட்டு கிளம்பு!

சரி, சொல்றேன்! எனக்கு தனியா சுத்தி போரடிக்குது! ஒன்னு, நீ செத்துப்போய் எனக்கு துணைக்கு வா, இல்லைன்னா, யாரையாவது சாகடிச்சு அனுப்பு!

அட பரதேசி! என்னை கொலை செய்ய சொல்றியா?

உன்னை அதெல்லாம் செய்ய சொல்லல, தினம் ஒரு PBS பாட்டுப்பாடி அப்லோட் பண்ணச்சொல்லி உன் டிஎம்ல ஒருத்தங்க கேட்டாங்கதானே?

யோவ், அதெல்லாம் உனக்கெப்படி தெரியும்?

நீ டிஎம்ல யாருகிட்ட செருப்படி வாங்கினேன்னும் எனக்குத் தெரியும், சொல்லவா?

அப்பா, சாமி, இப்போ நான் என்ன செய்யணும் சொல்லித்தொலை!

நாளைல இருந்து தினம் ஒரு பாட்டுப் பாடி அப்லோட் பண்ணு!

அதால உனக்கென்ன லாபம்?

எப்படியும் பத்து நாளைக்குள்ள, பாட்டுக் கேட்டவரு தற்கொலை பண்ணிக்குவாரு, இல்லைன்னா, உன்னை போட்டுத் தள்ளிடுவாரு! ரெண்டில் எது நடந்தாலும் நல்லதுதான்! எனக்கு பேச்சுத்துணைக்கு ஆள் கிடைக்கும்!

உனக்கு பத்து நாள்தான்டி டைம், வர்ட்டா!

சொல்லிக்கிட்டே காணாம போய்ட்டாரு!

என்ன செய்யலாம்?

பாடிடலாமா?

திங்கள், 11 ஏப்ரல், 2022

கற்பெனப்படுவது யாதெனில்…

ஷிட், ப்ளடி ஷிட்!

கையிலிருந்த டிவி ரிமோட்டை தூக்கி எறிந்துவிட்டு ஃபோனை எடுத்தால் லதா!

தீபா, நியூஸ் பார்த்தயா?

என்னடி?

விருதுநகர் கேஸ்ல நாலு பசங்களுக்கு ஜாமீன் கொடுத்திருக்கு கோர்ட்!

மைகாட்! Justice goes to dogs in this bloody nation! 

இப்போ என்ன செய்யலாம்?

தேர் ஈஸ் நோ ப்ளான் பி, ஒன்லி ப்ளான் அண்ட் வீ எக்ஸெக்யூட் ஒன்லி தட்!

இரு, நான் அவளுக ரெண்டுபேரையும் கான்கால்ல எடுக்கறேன்!

வெய்ட்! ஸ்டுபிட்! எந்த நம்பர்ல இருந்து கூப்பிட்டிருக்கே, யூ இடியட்!

ஸாரி, ஸாரி, நியூஸ் பார்த்த பதட்டத்தில்.., இரு, கட் பண்ணிட்டு உடனே அந்த நம்பர்ல வர்றேன்!

யார் இவங்க? இந்த செய்தி எதற்கு இவங்களை பதட்டப்படுத்தணும்?

பல்லடத்தில் போன வருஷம் ஒரு பெண் தீக்குளித்து செத்துப்போனது, தினத்தந்தில ஒரு ஓரத்தில் ஒரு ரண்டு காலம் செய்தியாக வந்ததை எத்தனைபேர் பார்த்தீங்க, அப்படியே பார்த்திருந்தாலும் எத்தனைபேர் அதை மறக்காம இருக்கீங்க?

ஆனால், அந்த செய்தியை இவங்க நாலுபேராலும் மறக்கவே முடியாது! ஏன்னா, செத்துப்போனது ரமா, இவங்க நாலுபேருக்கும் பெஸ்ட் ஃப்ரண்ட்.

ஏன் தீக்குளித்தாள்?

தீராத வயிற்றுவலி

அப்படித்தான் எல்லா செய்திகளும் சொல்லுச்சு!

ஆனால், ஒரு கேவலமான கூட்டத்தால் வீடியோ எடுத்து மிரட்டப்பட்டு, சிதைக்கப்பட்டு பயத்தில், அவமானத்தில் கொளுத்திக்கொண்டு செத்துப்போனாள் ரமா!

நாலு பசங்க! ஒரு எக்ஸ் எம்எல்ஏ பையன், ஒரு டிஎஸ்பி பையன், மீதி ரெண்டுபேர் மில் ஓனர் பசங்க!

வயசு? பதினேழில் இருந்து முப்பது வரைக்கும்!

இதுவரைக்கும் அவனுக மிரட்டி, அனுபவிச்சு, தற்கொலை பண்ணிக்கிட்டவங்க ரெண்டுபேர்!

இன்னும் இணங்கியும் இணங்காமலும் நடைப்பிணமாய் பயந்து வாழ்றவங்க எத்தனைபேரோ!

லதா, தீபா, ரேஷ்மி, மைதிலி இவங்க நாலுபேரும்கூட அந்த வலையில் சிக்கியிருக்கும் பெண்கள்! அதுவும், நடந்த எல்லாவற்றையும் முந்தின நாள் இவங்ககிட்ட அழுகையும் குமுறலுமாய் சொல்லிவிட்டு, தைரியமா இரு, இதை வேற விதமா டீல் பண்ணலாம், பயப்படாதேன்னு அத்தனை தூரம் சொல்லி அனுப்பியும், மறுநாள் ரமா கொளுத்திக்கிட்டு செத்தபிறகு, வலியப் போய் சிக்கிக்கிட்டவங்க!

இவங்க அஞ்சுபேரையும் இணைத்த புள்ளி, டேக்வாண்டோ க்ளாஸ்!

எல்லோரும், கோவை எல்லையில் இருக்கும் இஞ்சினீயரிங் கல்லூரி மாணவிகள்! வெவ்வெற ப்ரான்ச்

ஆனால், கராத்தே க்ளாஸ் இவர்களின் இணைப்புப் பாலம்!

ஐந்துபேருமே ஒருமுறையாவது திரும்பிப் பார்க்கவைக்கும் அழகு! ஆனாலும் ரமாதான் பேரழகி!

கராத்தே க்ளாஸ் சேர்ந்து மூன்றே மாதத்தில் இவர்களுக்கு நெருக்கமானவள், அடுத்த நான்கு மாதங்களில் அநியாயமாய் செத்துப்போனாள்!

ரமா சொல்லிப்போன கதையை வைத்து அந்த நாலு பேரையும் கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமாக இல்லை.

நாலுபேரும் அழகிகள் என்பதும், அவர்கள் இதற்காகவே அலையும் பையன்கள் என்பதும் வெகு சாதகமாகவே இருந்தன!

இரண்டு தரப்பும் வலை விரித்ததில், யார் வலையில் யார் விழுந்தது என்பதை இனி நடக்கப்போகும் செயல்கள்தான் முடிவு செய்யும்!

லதாதான் திட்டங்களை வகுக்கும் டீம் லீடர்!

முதலில்எதேட்சையாகஅந்த ரமேஷ் வண்டியில் ஸ்கூட்டியால் மோதிய லதாவுக்கு அடுத்த வாரத்திலேயே, அவன் பெயரில் எடுத்த சிம்கார்டோடு ஒரு மொபைல்!

ஏறத்தாழ அதே காலகட்டத்தில் மற்ற மூன்று பேர் கையிலும் மற்ற மூன்று பேர் வாங்கிக்கொடுத்த மொபைல்!

பக்காவாக, ஒரு ஓட்டைகூட இல்லாமல், பலமுறை விவாதித்துத் தீட்டப்பட்ட திட்டம்!

அந்த மொபைலில் எக்காரணம் கொண்டும் லொகேஷன் ஆன் பண்ணி வைப்பதில்லை, அந்தந்த ஆண்களைத் தவிர வேறு யாரையும், எக்காரணம் கொண்டும் தொடர்பு கொள்வதில்லை!

தங்களுக்குள் பேசிக்கொள்ளக்கூட அந்த மொபைலை உபயோகிக்கக்கூடாது!

இப்போது லதா செய்த கால்தான் முதன்முறையாக இன்னொரு எண்ணை தொடர்பு கொண்டது- பதட்டத்தில் செய்த ஒரே பிழை!

திட்டப்படியே எல்லாம் நடந்தது! போனவாரம்தான் நால்வரும், வெவ்வேறு இடத்தில் அந்த ஆண்களோடு தனித்து தங்க நேர்ந்தது! மற்ற மூவரும் ஃப்ளிர்ட்டிங், ஃபோர்ப்ளே என்று தப்பித்துக்கொள்ள, லதா முழுமையாக அவனுக்கு ஒத்துழைக்க நேர்ந்தது!

மற்ற மூன்றுபேரும் பதறிக் கேட்டபோதும், ஆறுதல் சொல்ல முனைந்தபோதும், லதா சொன்ன பதில்,

போங்கடி லூசுகளா! அந்த இடத்தில்தான் அந்த பாழாய்ப்போன கற்பு இருக்குன்னா அது போய்த் தொலையட்டும்! மாதமாதம் டாம்பூன் கூடத்தான் மணிக்கணக்கில் அங்கே உள்ளே ஊறிக்கிட்டுக் கிடக்கு! அப்போ அதுவும் என்னை மாசத்தில் மூணு நாள் கறபழிக்குதா?”

இந்த லெஃப்ட் ஹாண்ட் டீலிங்தான் லதாவின் பலம்!

சொல்லி வைத்தாற்போல் சம்பவம் நடந்த மறுநாளே நாலுபேருக்கும் ஃபோன்!

அவரவருடைய வீடியோக்கள் தங்களிடம் இருப்பதாகவும், வெள்ளிக்கிழமை யாருக்கும் சொல்லாமல் அவர்கள் சொல்லுமிடத்திற்கு வராவிட்டால் யூட்யூபில் ஃபோட்டோ, வீடியோ எல்லாம் அப்லோட் ஆகும் என்றும்!

சொல்லிவைத்ததுபோல், நாலுபேரும் வரச்சொன்னது ஊரைவிட்டு ஒதுங்கியிருக்கும் கெஸ்ட் ஹவுஸுக்கு!

என் ஃபரண்ட்ஸும் இருப்பாங்க, அவங்களுக்கும் கோஆப்பரேட் பண்ணணும்ங்கற மிரட்டலோடு!

அந்த நாலுபேரையும் இல்லாமல் அழிப்பது, தீபா பாஷையில் சொன்னால், வதம் செய்வது என்பதுதான் திட்டம்! ஆதாரங்களோடு சட்டத்தின் கையில் ஒப்படைப்பதுதான் நல்லது, கொலை செயதுவிட்டு நிம்மதியாய் வாழ நாமொன்றும் சீஸன்ட் கிரிமினல்கள் இல்லை! - இது மைதிலி!

அது ப்ளான் பி யாக இருக்கட்டும், ஆனால் சட்டம் எல்லோருக்கும் சமமில்லை, காசும், பவரும் அதை எப்படியும் வளைக்கும்! இந்த மிருகங்கள் உயிரோடிருப்பது சமூகத்துக்குக் கேடு! - இது மற்ற மூன்றுபேர்!

வெள்ளிக்கிழமை என்ன செய்வது என்ற திட்டங்கள் இருபுறமும் தீவிரமாக தயாராகிக்கொண்டிருக்கும்போதுதான் டிவியில் இந்த செய்தி!

மாலை கராத்தே வகுப்பில் மறுபடி திட்டம் ஃபைன்ட்யூன் செய்யப்பட்டபோது, மைதிலிதான் முதலில் சொன்னாள்இல்லப்பா, அவனுகள முடிச்சறலாம்

ஆனால், கொல்லப்பட வேண்டிய மிருகங்களைக் கொன்றுவிட்டு, தாங்கள் தண்டனை அனுபவிப்பதில் அர்த்தம் இல்லை! மாட்டிக்கொள்ளாமல் வதம் செய்து தப்பிப்பது எப்படி - பலமுறை விவாதித்து திட்டங்கள் தயாரானபோதுதான் இந்த வெள்ளிக்கிழமை அழைப்பு!

மூவரும் டவுன்பஸ்ஸில் ஏறி, முந்தைய ஸ்டாபிங்கில் இறங்கி, நடந்து வந்துவிடவேண்டியது, லதா மட்டும் ஸ்கூட்டியில்- ஏதாவது அவசரத் தேவைக்கு!

ரமேஷின் இன்னோவாவிலேயே எல்லோரையும் அள்ளிப் போட்டுக் கொண்டுபோய் ஏரியில் வீசிவிடவேண்டியது! பலமுறை ரிகர்சல் பார்த்தில் எல்லாம் சரியாக முடியும் என்றே பட்டது! மறக்காமல் எல்லோரும் ஹேண்ட்பேகை எடுத்துவரவேண்டும் என்பதுதவிர வேறு ஏதும் முன்னேற்பாடில்லை!

இன்னும் ரெண்டே நாள்

வழக்கம்போலவே விடிந்தது வெள்ளி!

தனித்தனியாக கிளம்பி பஸ்ஸடாண்டில் ஒன்று சேர்ந்து, கெஸ்ட் ஹவுஸ் போகும்போது அந்த நாலுபேரும் ஏற்கனவே வந்திருந்தார்கள்!

காலியாகக் கிடந்த ஒரு ஃபுல் பாட்டிலும், இன்னும் முழுதாக இருந்த மூன்று பாட்டில்களும் அவர்களும் ஓரளவு தயாராக வந்திருப்பதையே சொன்னது!

வாங்கடி, இளிப்போடு வரவேற்றான் ரமேஷ்!

ஆளுக்கு ஒரு பெக் சாப்பிடறீங்களா?

ரமேஷ், என்ன இது? நீ என்னை காதலிக்கறேன்னு சொன்னதை நம்பித்தானே என்னையே கொடுத்தேன், இப்போ உன் ஃப்ரண்ட்ஸ்கூட சேர்ந்துட்டு இப்படி எங்களை குரூப்பா வரச்சொல்லி அசிங்கப்படுத்தறயே?

இது மட்டும் இல்ல, இன்னும் எத்தனை பேர்கூட படுக்கச் சொல்லிக் கூப்பிட்டாலும் வரணும், படுக்கணும், பெரிய பத்தினி மாதிரி பேசுனா வீடியோ கோடிக் கணக்கில் பரவும், ஜாக்கிரதை!

மாப்ள, உனக்கு யாருடா வேணும் இப்போ?

ஏன்டி, நான் மட்டும் கெஞ்சிட்டிருக்கேன், நீங்க மரம் மாதிரி நிக்கறீங்க? வாங்க, அவரவர் லவ்வர் கால்ல விழுவோம்!

சொல்லிக்கிட்டே நகர்ந்த லதாவோடு மற்ற மூன்று பேரும் வந்து, காலைப் பிடித்ததுதான் தெரிந்தது அரைபோதையில் இருந்த நாலுபேருக்கும்!

எப்போது விழுந்தோம், எங்கே அடி பட்டது என்பது புரியறதுக்கு முன்பே நினைவு தப்பியிருந்தது!

நியாபகம் வந்தபோது, பொள்ளாச்சி ரோட்ல ஒரு க்வாரிக் குளக்கரையோர பாழ் மண்டபத்தில் நாலுபேரும் நிர்வாணமாகக் கட்டிப்போடப்பட்டிருந்ததும், வாயில் அழுத்தமாக ப்ளாஸ்டர் ஒட்டப்பட்டிருந்ததும் மசமசன்னு புரிய ஆரம்பிச்சது!

ஏன்டா நாய்களா, ஆம்பளயா பொறந்ததால நீங்க எந்த வகைலடா உயர்வானவங்க

உங்க வலைல நாங்க விழல! எங்க தூண்டில்ல நீங்க வசமா சிக்கினீங்க!

ஏய், அந்த ரமேஷ் பய வாயை மாத்திரம் அவிழ்த்து விடுடி!

வெடுக்குன்னு இழுத்ததில் ஒரு கொத்து மீசை முடியும் ப்ளாஸ்டரோடு வர, ரத்தம் தெரிக்க வாய் விட்டு அலறினான் ரமேஷ்!

வாவ், வாவ், இன்பமா இருக்குடா நீ இப்படி கதறுவதை கேட்க!

ஏய், நான் யாரோட மகன்னு தெரியுமா உனக்கு?

அதை நான் தெரிஞ்சு என்னடா பண்ணப்போறேன்? உனக்கு ஏதும் சந்தேகம் இருந்தா உங்க அம்மாகிட்ட கேளு!

இன்னும் அஞ்சு நிமிஷத்தில் சாகப்போற நாய் நீ!

என்னை மிரட்டிப் பார்க்கறயா?

யாருடி சாகப்போறாங்க? எட்டு மணிக்குள்ள நாங்க வீட்டுக்குப் போகலன்னா, ஆட்டோமேட்டிக்கா உங்க வீடியோ அப்லோட் ஆகிடும்!

பளீரென்று விழுந்த அறையில் ஒரு பல் தெரித்து விழுந்தது!

நாயே, எங்க எல்லோர் ஹேண்ட் பேக்கிலும் மொபைல் ஜாமர் இருக்கு! அன்னைக்கும், இன்னைக்கும் உங்களால ஒரு ஃபோட்டோ கூட எடுக்க முடியலன்னு எங்களுக்கு தெரிஞ்சுதான்டா வந்தோம், பயந்தமாதிரி நடிச்சுக்கிட்டு!

இப்படி வசமா வச்சு உங்களை கொல்ல ஒரு சந்தர்ப்பத்துக்காக!

எங்களை விட்டுடு, எத்தனை பணம் கேட்டாலும் தர்றோம்!

இதையேதான்டா ரமா கேட்டா, என்ன பண்ணீங்க அவளை?

நீங்க வீடியோவே எடுத்திருந்தாலும், அதை வெளியே விட்டாலும், எங்களுக்கு அசிங்கம்ன்னா உங்களுக்கும் அசிங்கம்தானேடா? என்ன, உங்க கால் சந்துல கொம்பாடா முளைச்சிருக்கு?

அதை வெச்சுத்தானே இத்தனை ஆர்ப்பாட்டமும்?

கேட்டுக்கொண்டே இறக்கிய கத்தியில், பக்கத்தில் இருந்தவன் ஆண்குறி அறுபட்டு விழுந்தது! ரத்தம் பீறிட, வாய் திறக்க முடியாமல் காட்டுப் பன்னிபோல அலறினான்!

அடுத்தது நீதான் ரமேஷ்

ஏய், எங்களை போலீஸில் ஒப்படைச்சுடுங்க! கொலைகாரியா ஜெயில்ல களி திங்காதீங்க!

எதுக்கு, ஆல்ரெடி பிரசிடென்ஸ் இருக்கு! உனக்கு பதினேழு வயசு, நீ அடுத்த வாரமே பெயில்ல வந்துடுவே, அதையே காரணம் காட்டி, அடுத்த மாசம் அவனுகளும் வந்துடுவானுக!

நீ டிஎஸ்பி பையன், அவன் எம்பி பையன், எல்லோரும் அடுத்த ரவுண்ட் ஆரம்பிப்பீங்க

சொல்லும்போதே அடுத்தவன் அடிவயிற்றில் இறங்கியது கத்தி! மறுபடி ஒரு காட்டுப்பன்றி உறுமல்!

ஸாரி, ரமேஷ், எங்களுக்கு லேட் ஆச்சு, சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்! அடுத்தது நீதான்!

ரமேஷ் உடம்பு பயத்தால் நடுங்க ஆரம்பித்தது!

பயப்படாதே ரமேஷ், உனக்கு கத்தியெல்லாம் இல்லை, வேறொரு ஸ்பெஷல் ஐட்டம் இருக்கு!

அந்த விஸ்கி பாட்டிலை எடுங்கடி!

ரமாவுக்கு எப்படி எரிஞ்சிருக்கும்ன்னு உனக்குத் தெரிய வேண்டாமா?

அடிவயிற்றில் சில்லென்று ஏதோ நனைப்பதை உணர்ந்த அதே நொடி அந்த வெப்பமும்!

அனலில் குறி பொசுங்கும் வேதனையில் தொண்டை கிழிய ரமேஷ் அலறியது க்வாரி முழுக்க எதிரொலித்து அடங்கியது!

நாலு உடலையும் கனமான கல்லைக் கட்டி இருபதடி தண்ணீருக்குள் தள்ளிவிட்டு, மூழ்கி அடங்குவதை பார்க்கும்போதுதான் தீபா கேட்டாள், இந்த நாலையும் என்னடி செய்ய? போற வழில தெருநாய்க்குப் போடுவோம், ஏதோ ஒரு அதிர்ஷ்டசாலி நாய்க்கு மட்டும் வெந்த கறி கிடைக்கட்டும்!

அந்த நாலு மொபைலையும் தண்ணிக்குள்ள எறிஞ்சுட்டு கிளம்புங்க! நான் ஸ்கூட்டில வீட்டுக்குப் போறேன்! பொள்ளாச்சில ஒரு தோப்பு ஓரமா காரை நிறுத்திட்டு மூனுபேரும் காலேஜுக்கு வந்து சேருங்க!

நாளைல இருந்து படிக்க ஆரம்பிக்கணும்- செமஸ்டர் வருது!

அதுக்கப்புறம் பத்துநாள் ஆச்சு! பரபரப்பா எந்த தகவலும் இல்லை, எல்லோரும் மறந்துட்டாங்கன்னு நினைக்கும்போது, க்ளாஸுக்கு வந்த ப்யூன், மேடம், லதான்ற ஸ்டூடண்ட்ட ப்ரின்சிபால் கூப்பிடறார்!

அலட்சியமாகத்தான் போனாள், அங்கே காத்திருந்தது டிஎஸ்பி கோபாலகிருஷ்ணன்! ரமேஷோட அப்பா!

உங்க கிட்ட ஒரு சின்ன விசாரணை, ஒரு கேஸ் விஷயமா! வாங்க கேண்டீன்ல உட்கார்ந்து பேசுவோம்!

ஓரமாய் உட்கார்ந்ததும்,

சொல்லு! என் மகனை என்ன செஞ்சே?

ஒரே நிமிடம், மறைப்பதால் எந்த உபயோகமும் இல்லை என்பது புரிய, ரமா கதையிலிருந்து ஆரம்பித்து கோர்வையாக சொல்லி முடித்தாள்!

ப்ரில்லியண்ட்

எப்படி சார் கண்டுபிடிச்சீங்க

என் மகன் பெயரில் இன்னொரு மொபைல் நம்பர் இருந்ததை பார்த்து, அந்த கால் லிஸ்ட்டை எடுத்துப் பார்த்தால் ஸ்ட்ரேஞ்ச்லி எல்லாக் காலுமே என் பையன் நம்பருக்குத்தான் போயிருந்துச்சு ஒரு நம்பரைத் தவிர! அது உன் ஃப்ரண்ட் தீபாவநம்பர்!

அவன் காணாமல்போய் இன்னோவா அனாதையா பொள்ளாச்சில கிடைச்ச நாளின் பொள்ளாச்சி ரோடு கேமரா எல்லாத்திலும் அந்த வண்டிக்குப் பின்னாலோ, முன்னாலோ உன் ஸ்கூட்டர்

டூ ப்ளஸ் டூ!

யாருக்கும் தெரியாம செஞ்ச தப்பு இந்த உலகத்தில் ஏதுமில்லை பெண்ணே!

ஓகே சார்! அடுத்தது என்ன அரெஸ்ட்டா?

எழுந்தவளை கையமர்த்தி உட்காரச் சொன்னார்!

இந்தா, அந்த கால் லிஸ்ட், ரோட் கேமரா ரெக்கார்டிங் எல்லாமே இந்தக் கவர்ல இருக்கு! நீயே எல்லாத்தையும் அழிச்சுடு!

இது என்கிட்ட இருக்கறது ஆபத்து!

நான் ஒரு நல்ல போலீஸ்காரன், கூடவே ஒரு அப்பா! எப்போ என் புத்தி மாற ஆரம்பிக்கும்ன்னு தெரியாது!

தென்காசிக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கிட்டேன்! அடுத்த  வாரம் ட்யூட்டி ஜாயின் பண்றேன்!

டேக் கேர்!

கை குலுக்கி எழுந்தவர், திரும்பிப் பார்க்காமல் நடந்து, மறைந்துபோனார்!