வெள்ளி, 9 செப்டம்பர், 2022

ஈங்கிவனை யான் பெறவே…

என்ன தவம் செய்துவிட்டேன்…

த்தா.. பார்த்துக்கலாம்..

இன்று காலை ஒரு ஸ்டாஃப் மீட்டிங்!

எடுத்தவுடனே நேரடியாக விஷயத்துக்கு!

Boys, you must be aware of the financial status of the firm.

There was no billing in the second quarter excepting the retrofitted machine.

First quarter and the previous couple of years were also not better.

Even much bigger MNCs were reluctant to go for capital Equipments for the past years and just now the market is limping back to the progressive path.

Our capital is almost eroded and luckily we don’t have any external borrowings and managing with our internal accruals.

This month, we couldn’t find any other source to fulfil the salary obligation on date except waiting for the scheduled payment on 15th. This month the salary may be paid in two instalments. We request your extended support at this unprecedented circumstances.

யோசிக்காமல் உடனடியாக வந்த பதில்!

Sorry sir, this meeting is not really called for.

We are not only ready for the postponement but to forgo the salary till the situation improves.

Ours is the only company which paid salary all through the lockdown months.

But more than that, here we are allowed to learn and implement our ideas with ease.

Would you mind if I continue in Tamil?

இல்லை, சொல்லுங்க!

தேங்க் யூ சார், தமிழ்ல சொல்லும்போது மனசுல நெனைக்கறத அப்படியே சொல்ல முடியுது!

நீங்க அதிகம் டெக்னிக்கல் டீமோட இண்டராக்ட் பண்றதில்லை! ஆனால், நம்ம மெஷின் எல்லாமே முழுக்க முழுக்க R&Dன்றதால, சமயத்தில் டிலே ஆகறதும், பல விஷயங்களை ரீடூ(redo) செய்யறதும், தவிர்க்கமுடியாதது. அந்த சமயத்தில் நீங்க சொல்ற ஒற்றை வார்த்தைதான் எங்களை ஃபர்தரா வெறியோட இன்வால்வ்டா வேலை செய்ய வைக்குது!

விடுங்க, பார்த்துக்கலாம்!

அந்த பார்த்துக்கலாம்தான் எங்களுக்கு டானிக்!

போஸ்ட் கொரோனால வர்ற ஆஃபர் எல்லாமே இப்போ நாங்க வாங்கற சம்பளத்தைவிட குறைந்தது இரண்டு மடங்கு!

ஆனால் எங்க யாருக்குமேநம்மகம்பெனியை விட்டு போற ஐடியா கொஞ்சம்கூட இல்லை!

நீங்க அடிக்கடி சொல்றமாதிரி நாலெட்ஜ் பேஸ்ட் இண்டஸ்ட்ரில ஒர்க் ஃபோர்ஸ்தான் அஸெட்!

ஆனா எங்களுக்கு இங்கே கத்துக்கறதுதான் அஸெட்!

இந்தமாதிரி எங்களை, எங்க ஐடியாவை சுதந்திரமா செய்யவிட்டு கத்துக்க வைக்கற காலேஜ் இது!

இப்படியெல்லாம் எங்களை கூப்பிட்டுவைத்து நீங்க பேசறதே எங்களை அவமானப்படுத்தறமாதிரி இருக்கு!

நாங்கபோய் டிவிஎஸ் டெமோ, சிவா இண்டஸ்ட்ரீஸ் ப்ரோட்டோ டைப் எல்லாம் ரெடி பண்றோம்! நீங்க நிம்மதியா மார்க்கெட்டிங் வேலையை பாருங்க!

We know the orders in the pipeline and could sense the turn around very close.

இப்போ எங்க டர்ன் சார்

விடுங்க, பார்த்துக்கலாம்!

நம்பமுடியாத ரிலீஃப்ல உட்கார்ந்திருந்தபோது,

மே கம்இன் சார்?

வாங்க பேச்சிமுத்து, என்ன, ஏதாவது சொல்ல விட்டுப்போச்சா?

ஆமாம் சார், ரங்கராஜன் மட்டும் ஏதோ ஸ்கூல் ஃபீஸ் கட்டணுமாம், தடுமாறிட்டிருக்கார், உங்ககிட்ட கேட்கவும் சங்கடப்படறார்!

ஸாரி பேச்சி, நாளைக்கு அரேஞ்ச் பண்ணிடறேன்!

அதுக்கு நான் வரல, இதைப் பிடிங்க!

அவர் நீட்டிய கவரில் ஐந்து லட்சம்!

என்ன இது பேச்சி?

எதுவும் சொல்லாம வாங்கி வைங்க சார்! இது நமக்குள் இருக்கட்டும்!

சேச்சே, நான் வேற ஏற்பாடு பண்ணிட்டேன். தேங்க்ஸ் பேச்சி!

சார், நீங்களும் சீனிவாசன் சாரும் எத்தனை வருஷமா சம்பளமே எடுத்துக்கலன்னு எங்களுக்குத் தெரியும்!

அதனால என்ன, அது எங்க கடமை இல்லையா?

இல்லை சார், எந்த முதலீடும் வாங்காம, எம்ப்ளாயீஸ்க்கு 5% ஷேர் ஒதுக்கி லாபத்தை எங்க அக்கவுண்ட்ல போட்டுட்டு வர்றீங்க, அதுக்கு ஒரு சின்ன கைமாறு!

அடுத்த ஆர்டர் வந்ததும் திருப்பிக்கொடுங்க! சந்தோஷமா வாங்கிக்கறேன்!

நாளைக்கு மத்தவங்களுக்கு சேலரி போட்றுங்க! எனக்கு இந்தமாசம் வேண்டாம்!

என்ன பதில் சொல்ல

மெதுவாக கேட்டேன்- ஏது இந்தப் பணம் பேச்சி?

இந்த ரெண்டு வருஷமா நீங்க கொண்டுவந்து போடற பணம் ஏதுன்னு நான் கேட்டேனா சார்? நீங்க எதையெதை வித்தீங்கன்னு எனக்குத் தெரியும்!

சொல்லிக்கொண்டே விடுட்டென்று வெளியே போனவர் மறுபடி உள்ளே வந்தார்!

சார், உங்க விஸில் சத்தம் கேட்டு ரொம்ப நாள் ஆச்சு!

நீங்க கேரளாவுக்கு ட்ரைவ் போயும்!

இந்த கவலை மூஞ்சி எங்களுக்கு பிடிக்கல! நாளைக்கு எங்காவது ஒரு லாங்க் ட்ரைவ் போய்ட்டு வாங்க!

அதுக்குள்ளே நாங்க ஏதாவது குளறுபடி செஞ்சு வைக்கிறோம், வந்த சொல்லுங்க, “விடுங்க பார்த்துக்கலாம்ன்னு!

பேச்சி, ஒரு நிமிஷம், நீங்க எல்லாம் இப்படி இருக்கும்போது எதுக்கு நாளைக்கு?

இப்போவே சொல்றேன்,

“விடுங்க..

த்தா.. பார்த்துக்கலாம்!”


நல்லவேளை, கசிந்த கண்கள் அவர் பார்வையில் படவில்லை!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக